Thursday, August 09, 2012

JULAYI - தெலுங்கு சினிமா விமர்சனம்

 http://telugu.way2movies.com/wp-content/uploads/2012/08/julayi_film_review_Allu_Arjun_movie_julayi_review.jpg

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.. இத்தனை நாளா மகேஷ் பாபுவோட ஜெராக்ஸ்தான் விஜய்னு நக்கல் அடிச்ச அஜித் ரசிகர்கள் முகத்துல இனி கரியை பூசிடலாம்.. ஏன்னா அண்ணன் இந்தப்படத்தை ரீமேக்கப்போறார்.. அதுக்கான எல்லா குவாலிஃபிகேஷனும் இதுல இருக்கு.. அதனால விஜய் மகேஷ் பாபு மட்டும் இல்லை, நல்ல படம் எங்கே சிக்குனாலும் அதை நாஸ்தி சாரி ரீமேக் பண்ணிடுவார்னு அடிச்சு சொல்லிக்கலாம்.. 


ஹீரோ அல்லு அர்ஜூன் மிடில் கிளாஸ்ல வாழும் பையன்.. நோகாம நோம்பி கும்பிடனும்.. கஷ்டப்படாம சம்பாதிக்கனும் அப்டினு நினைக்கறவர்.. இவர் ஒர் டைம் வில்லன் கார்ல லிஃப்ட் கேட்டு ஏறி போறார்.. அவங்க பேங்க் கொள்ளை அடிக்கற பார்ட்டி.. அதை பற்றி ஒரு க்ளூ கிடைக்குது.. 


ஹீரோ ஒரு க்ளப்ல பெட்டிங் கட்றாரு.. அப்போ போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணுது.. அப்போ அவர் இந்த பேங்க் கொள்ளை பற்றி துப்பு குடுத்து போலீஸ் இன்ஃபார்மரா ஆகறாரு.. 


 கிறீஸ்டோபர் நோலன் எடுத்த டார்க் நைட் ரைஸஸ் பார்த்த பாதிப்புல வில்லன் அதே பாணில பேங்க்கை கொள்ளை அடிக்கறான்.. திருடா திருடா படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய லாரில அதை கடத்தறான்.. போலீஸ்ல மாட்டிக்கறான்.. 

 வில்லனுக்கு செம கடுப்பு.. ஹீரோ மேல.. மாட்டி விட்டானே?அவனை எப்படியாவது பழி வாங்கத்துடிக்கறான்.. 


சைக்கிள் கேப்ல ஹீரோ ஹீரோயினை லவ் பண்றாரு.. ஏன்னா ஹீரோவுக்கு வேலை ஹீரோயினை லவ் பண்றது, வில்லனுக்கு வேலை ஹீரோயினை ரேப் பண்ண ட்ரை பண்றது.. வில்லன் ஹீரோ பின்னாலயும் , ஹீரோ ஹீரோயின் பின்னாலயும் சுத்தறாங்க.. சாதாரண மிடில் கிளாஸ் ஹீரோ போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கே கோச்சிங்க கிளாஸ் நடத்தறார்..  என்ன நடக்குதுங்கறது மிச்ச சொச்ச கதை.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQShKFk1YZEXehCVvcTkBlXPI0icic09ALrUuIVY6wtB37F2kOKjoGPAxiMBK7-eUl3Mpj8onZZnxn_hYmAfQLBb4eVk36oHmaPQNLDI15kl79zELL50JZ_QvEitYhWGJR3nulbo7n6AA/s1600/julayi-movie-stills-11.jpg


 சும்மா சொல்லக்கூடாது. திரைக்கதை செம ஸ்பீடு.. பர பர என ஓடுது.. எனவே முதல் ஹீரோ இயக்குநர் தான்.. 


ஹீரோ அல்லு அர்ஜூன் செம ஸ்மார்ட்..  கார்த்திக் விஜய் இருவரும் சேர்ந்த கலவையாய்  ஜொலிக்கிறார்.. நடனக்காட்சிகளில் நல்ல சுறு சுறுப்பு,, பிரபு தேவா , விஜய் மேனரிசம் காப்பி பண்றார்..  ஆனாலும் ரசிக்க முடியுது. வெல்டன்.. 


 ஹீரோயின் இலியானா- சோகை விழுந்த இளமை குன்றிய ஜாகை..  டென்னிஸ் கோர்ட்டின் கன்னிஸ் மன்றத்தலைவி.. முப்பது லெமனை ஒரே குண்டாவுல பிழிஞ்சு சாப்பிட்டாக்கூட அவர் முகத்துல ஒரு புத்துணர்ச்சியே வராது போல.. போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட் எல்லாம் பாப்பா சாப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ( எல்லாம் ஒரு சுயநலம் தான்.. சுயநலத்தில் பொது நலம்,.,.லோகட் காட்ட இவர் குனியும் காட்சிகளில் நெஞ்சாங்கூட்டில் எலும்புகள் வரிசையா உள்ளேன் அய்யா சொல்லுது.. நாய்ங்க பார்த்தா கவ்விட்டு போயிடும்.


வில்லன் Sonu Sood ( தமிழ்ல உச்சரிக்கவே பயமா இருக்கு ) நடிப்பு கலக்கல்.. இவர் கேரக்டரைசேஷன் செம.. செம மிடுக்கு. கம்பீரம்.. ஆனால் க்ளைமாக்ஸ்ல அப்படி கீழே இறங்கி இருக்க வேண்டாம்.. ஹீரோவை தூக்க வில்லனை இறக்கனும்னு கட்டாயம் இல்லையே?


 பிரம்மானந்தா காமெடி 5 சீன் வந்தாலும் நச்.. பஸ் ஸ்டாப்பில் இவர் பேக்கை அபேஸ் பண்ணும் காட்சி, குண்டு லேடியின் 40 பவுன் செயினை அடிக்க முயன்று தோற்கும் காட்சி செம கல கல,,.அவளுக்கும், எனக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு சொல்லி அவரை விட  2 அடி உயரமான ஆண்ட்டி பக்கத்துல ஸ்டூல் போட்டு ஏறி பேசும் சீன்,ஹோட்டல்ல நடக்கும் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட்ல இருந்து சொல் எனக்கு காது கெட்காது என வெறுப்பேற்றும் சீன் , பஸ்சில் டெரரிஸ்ட் மாதிரி டெமோ காட்டும் சீன் என அனைத்து காட்சிகளும் கலக்கல்.


பாடல்கள்ல 2 சூப்பர் ஹிட் ஆகிடும்..பக்டோ பக்டோ செம குத்து


http://www.chitramala.in/photogallery/d/627165-1/Julayi-Movie-Working-Pics-in-Dubai+_2_.jpg


மனம் கவர்ந்த வசனங்கள் ( ஒரு உத்தேசமான மொழிபெயர்ப்பு)


1. காபி  குடிக்கிறாயாப்பா? 


 அட போடி.. எல்லாத்துக்கும் மரியாதை குடுத்துட்டு... அவன் ஒரு கைதி.. 

ம்க்கும், வீட்டுக்கு வந்தவங்களை உபசரிச்சது ஒரு தப்பா?



2.  ஏன் இப்படி முரட்டுப்பிடிவாதம் பிடிக்கறே? 

 இது பிடிவாதம் இல்லை.. ஈகோ.. 



3. நீ குடுக்கற 2 ரூபா தட்சணை எதுக்கு யூஸ் ஆகும்? டீல் போட்டுக்கலாமா?


4. எப்பவாவது ஸ்விம்மிங்க் பூல்ல சுனாமி வந்து பார்த்திருக்கியா? ( இருங்க.. சைக்கோ ஸ்டார்  எங்கண்ணன், 2வது படத்துலயே தன் முன்னாள் அண்ணி கூட  டூயட் பாடுன தனுஷ் கிட்டே கேட்டுச்சொல்றேன்)


5.  நான் இப்போ  என்ன செய்ய?

 லைஃப்ல சில டைம் நாம என்ன பண்றோம்? என்ன பண்ணனும்?கற குழப்பம் வரும்.. புரியாத நேரம் வரும். அது இப்போ உனக்கு வந்திருக்கு.. யோசி



6.  எனக்கு பேப்பரும் பேனாவும் வேணும்.. 

 எதுக்கு? நீ ஒரு கைதி


 ஏன்? காந்தி கேட்டப்ப கொடுத்தாங்களே? அவர் சுய சரிதை எழுதுன மாதிரி நான் ஏதும் எழுதக்கூடாதா? 



7. ஜெயில்னா  ஏன்  இவ்ள்வ் பயம்?  அங்கே மணி அடிச்சா சோறு ( யார்றா அந்த மணி.. அவன் ஏன் எல்லாரையும் அடிக்கறான்?) வாரம் 2 நாள் மட்டன் சிக்கன் எல்லாம் உண்டு.. அப்புறம் என்ன? 

 அய்யய்யோ, நான் சைவம் ஆச்சே?


http://www.stillsindia.com/gallery/thumbs/lrg-8081-illiana-028.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.எங்கள் ஆருயிர் அண்ணன் விஜய் நடிச்ச யூத் படத்துல பாஸ்கி த மொட்டை பாஸ் கூட சேர்ந்துக்கிட்டு காமெடிங்கற பேர்ல அவர் அடிச்ச லூட்டியை அப்படியே காப்பி அடிச்சு இருக்கீங்க.. அதாவது ஆல்ரெடி பிளான் பண்ணி புது பைக்கை அங்கே கொண்டு வரச்சொல்லி ஃபோன்ல சொல்லி வெச்சு ஹீரோயின் கிட்டே இப்போ புது பைக் வரும்பாருன்னு உதார் விடறது.. அது ஆல்ரெடி விஜய் & பாஸ்கி , டைரக்டர் அந்த காட்சிகளை Life Is Beautiful (1997) என்ற இத்தாலிய படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.அப்படி இருக்க நீங்க ஏன் அதே படத்தில் இருந்து அதே சீனை சுடறீங்க.. வேற படமா இல்லை..



2.  ஹீரோ  பஸ் ஸ்டாப்ல நிக்கறார்.. ஹீரோயின் பஸ் வந்ததும் போய் பஸ்ல ஏறப்போறார்.. உடனே ஸ்லிப் ஆகி கீழே விழறார்.. ஐ மீன் விழப்போறார்.. இதுக்கு ஜஸ்ட் 2 செகண்ட் தான் ஆகும்.. ஆனா ஹீரோ ஓடிவந்து ஹீரோயினை தாங்கிப்பிடிச்சுடறார். பென் ஜான்சனே வந்தாலும் முடியாது.. 


3. டூயட் காட்சிகள், குத்தாட்டப்பாட்டில் எல்லாம் போலீஸ் ஆபீசர்ஸை யூனிஃபார்ம் போட்டு ஆட விட்டு ஏன் அவங்களையும், டிபார்ட்மெண்ட்டையும் கேவலப்படுத்தனும்?


4. ஒரு சீன்ல கார் 35 கிமீ வேகத்துல ஓடுது.. ஹீரோ 40 கிமீ வேகத்துல ரோட்ல ஓடி வந்து அந்த கார்ல இருக்கற டிரைவரை பிடிச்சு வெளீல எரியறார்.. அதுக்குப்பிறகும் அந்த கார் 2 பர்லாங்க் போகுது.. எப்படி? அவர் ஜம்ப் பண்ணீ அதை கண்ட்ரோல்க்கு கொண்டு வர்றதெல்லாம் ஹீரோயிஸமா?  கேனயிஸமா?


5. அது கூட பரவாயில்லை, இன்னொரு கார் 70 கிமீ வேகத்துல வருது. அண்ணன் ஒரு பிளாட் ஃபார்ம் கத்தி வெச்சு அதை பஞ்சர் பண்றார்.. காரோட ஸ்பீடு என்ன? கை அப்புறம் காங்கிரஸ் கை மாதிரி டேமேஜ் ஆகிடும் சாரே.. 


6. க்ளைமாக்ஸ்ல அந்த வில்லி ஹீரோயினை பிணையக்கைதியா கூட்டிட்டு போறா... ஹீரோ அதிபுத்திசாலியா போலீஸ் ஆஃபீசர் கையை மாத்தி கோர்த்து விட்டுட்டு ஹீரோயினை காப்பாத்திடறார்.. ஆனா அதுக்குப்பின் அந்த விலிக்கு தான் கையை பிடிச்சுட்டு இருக்கறது ஒரு ஆம்பளை கைன்னு கூடவா தெரியாது.. ஒரு வேளை அவர் ஆம்பளை வாசமே படாம வளர்ந்தவரா?


7. படத்துல  இடைவேளை வர்ற முக்கியமான சீன்.. ஹீரோயினை குறி பார்த்து வில்லனோட ரிவால்வர்.. வில்லனை குறி பார்த்து ஹீரோவோட ரிவால்வர்..  2 பேரும் கன்னை கீழே போடுன்னு பரஸ்பரம் சொல்றாங்க.. எல்லா படத்திலும் வர்ற சீன் தான்.. ஆனா வில்லன் அவனுக்குப்பின்னால நிக்கற வில்லி கூப்பீட்டு ஏதோ சொல்ல அவ கிட்டே பின்னால திரும்பி 10 நிமிஷம் கடலை போடற வரை ஹீரோ தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கார்.. அது ஏன்? செயல்படாத பிரதமர்னு நக்கல் அடிக்கப்படும் நம்ம சிங்க் கூட அந்த பிளேஸ்ல இருந்திரு்ந்தா ஷூட் பண்ணி இருப்பாரு.. 


சிபி கமெண்ட் - படம் ஜாலியா காமெடி ஆட்டம் பாட்டம்னு போறதால எல்லாரும் பார்க்கலாம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjdfjblApUNUJpn2ChQy11QJOl4ftfcPG9cvq0f2fOSqliKYIdfpkVzTvYOtJ76GTkFdLVaX2aVHuiwM-gkc8S3-6Bd_pfaBs6-IbxQfOx2XtxOxQnORODC1gUGdLb1LYMqmeJHu5QY7Oh/s1600/i1.jpg




டெக்கான் கிரானிக்கல் - 7 /10



Directed by Trivikram Srinivas
Produced by S. Radha Krishna
D.V.V. Danayya
(presenter)
Written by Trivikram Srinivas
Screenplay by Trivikram Srinivas
Starring Allu Arjun
Ileana D'Cruz

Rajendra Prasad

Sonu Sood
Music by Devi Sri Prasad
Cinematography Chota K. Naidu
Shyam K. Naidu
Editing by Prawin Pudi
Studio Haarika & Hassine Creations
Distributed by Siri Media
(Andhra Pradesh)

Ficus Inc.
(Overseas)
Release date(s)
  • August 9, 2012
[1]
Country India
Language Telugu