1. மிஸ், நீங்க ஐ டி ல ஒர்க் பண்ற கேர்ளா இருக்கலாம், 24 மணி நேரமும் கம்ப்யூட்டர்லயே குடி இருக்கலாம், அதுக்காக கீ போர்டு டிசைன் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வந்தா எவன் ஒழுங்கா வேலை செய்வான்?
---------------------------------
2.டியர்,வழக்கமா லவ்வர்னா சாக்லெட் தருவாங்க, நீ இஞ்சு மொரப்பா தர்றியே?
இப்போ நான் 1 சொல்வேன், அதைக்கேட்டு என்னால இதை ஜீரணிக்கவே முடியலைன்னு நீங்க சொல்லிடக்கூடாதே?
----------------------------------
3. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
பசியே எடுக்க மேட்டேங்குதுன்னு சொன்னா கரும்பு ஜூஸ் சாப்பிட்டு பாருங்க அப்டிங்கறாரே?
------------------------------
4. ஜோசியர் - உங்களுக்கு ஜாதக்கட்டம் சரி இல்லை..
அப்டியா? சரி, அதை ரவுண்ட் பண்ணிடுங்க
-----------------------------------
5. என் கனவு இல்லம் இதுதான்
எங்கே? காணோமே?
யோவ் லூசாய்யா நீ? என் கனவு எனக்கு மட்டும் தானே தெரியும்?
---------------------------
6. நிருபர் - மேடம், திடீர்னு 20 கிலோ வெயிட் எப்படி உங்களால குறைக்க முடிஞ்சுது?
நடிகை - நீங்க வேற , என் படம் எதுவும் ஓடலைங்கற கவலைல இளைச்சுட்டேன்
----------------------------
7. தலைவர் எதுக்காக சட்டசபைக்கு தன் சம்சாரத்தையும் கூட்டிட்டு போறார்?
மழைக்கால கூட்ட தொடர் ஆச்சே? குளிருக்கு இதமா கட்டிப்பிடிக்கத்தான்
------------------------------
8. ஜட்ஜ் - மேட்ச் ஃபிக்சிங்க்ல உங்களுக்கு தொடர்பு இருக்கா?
கைதி - கடுப்பைக்கிளபாதீங்க யுவர் ஆனர், மேட்ச் காலைல 10 மணிக்கு ஸ்டார்ட் பண்ணலாம்னு டைம் ஃபிக்ஸ் பண்ணேன், அவ்ளவ் தான்
-----------------------------
9. தலைவருக்கு பொது அறிவு கம்மி
எப்டி சொல்றே?
செண்ட்ரல் பரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்னா (CBI) சென்னை செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கற ஆஃபீசா?ன்னு கேட்கறாரே?
-----------------------
10. சின்ன வயசுல நான் செரி “லாக்ஸ்” தான் சாப்பிடுவேன்
ஓஹோ! லாக்ஸ் கணக்குல சம்பாதிக்க அதுதான் காரணமா?
---------------------------------------
11. டீச்சர் - நியூட்டனின் 3 ஆம் விதி பற்றி சொல்லு
மாணவன் - அவருக்கு 3 சம்சாரம்கற மேட்டரே இப்போதான் தெரியும் மிஸ்
----------------------------
12. வள்ளுவர் - தன் மனைவி வாசுகியை ரொமான்ஸ்க்கு அழைக்கும்போது வாசுகி . வா சுகி என்றிருப்பாரோ?
---------------------------
13. ஆட்டோ டிரைவரின் லொள் வாசகம் - கர்ப்பிணிப்பெண்களுக்கும்.அப்படி ஆக நினைக்கும் பெண்களுக்கும் இலவசம்
--------------------------------
14. அத்தான் நமக்கு சிறந்த தம்பதி விருது கிடைச்சிருக்கு
.அட நிஜமாவா? யார் அந்த லூஸ் செலக்டர்?
-----------------------------
15. மிஸ்டர் வள்ளுவர்! உங்க மேலே ஒரு குற்றச்சாட்டு.ஹிட்ஸ்க்காகவும் பிரபலத்துக்கும் ஆசைபட்டுத்தான் காமத்துப்பால் எழுதுனீங்களாமே?
-------------------------------
16. அத்தான் லவ் பண்றப்ப வீனஸ் சிலை மாதிரி இருக்கறதால என்னை உங்க வாழ்வின் விடி "வெள்ளி"ம்பீங்களே.இப்போ?
மேரேஜ் ஆகிட்டாலே சனிதான்
------------------------------
17. மிஸ் லிப்ட் ப்ளீஸ்.
இது லேடீஸ் காலேஜ் பஸ்.
தெரிஞ்சுதான் கேட்டேன்
------------------------------
18. காலனோட காலக்கணக்கையும் , இன்செப்ஷன் புகழ் கிறிஸ்டோபர் நோலனோட திரைக்கதை முடிச்சையும் புரிஞ்சுக்கறது கஷ்டம்.ஆனாலும் சுவராஸ்யமே்
---------------------
19. எங்க வீட்ல வாட்ச் இல்லை டி வி செல் ஏதும் இல்லை டைம் ப்ளீஸ் என தினமும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டால் நீயும் கடலை மன்னனே!
----------------------------
20. வர மிளகா ஸாப்பிட்டா கடவுள் வரம் கிடைக்குமா? கொட மொளகா சாப்ட்டா கொட கிடைக்குமா? பை அல்சர் வந்தாக்கூட விடாம பல்சரில் போய் டாக்டரை பார்த்து வருவோர் சங்கம்
--------------------------------
21. எவரெஸ்ட் சிகரம் போய் குங்குமம் படிச்சா அது ஹையர் எஜுகேஷனா?
------------------------------
22. காலேஜ் போகும் டீன் ஏஜ் பெண்ணே! ஐஸ் ஏஜ் 4 சினிமா போலாமா?
ம் உன் ஐஸ் 2ம் டேமேஜ் ஆகிடும் பீ கேர்புல்
----------------------
23. இண்ட்டர்வியூவில் -டேக் யுவ்ர் சீட்.
தாங்க்ஸ் ஸார் போறப்ப எடுத்துக்கறேன்
-----------------------------
24. உங்க பேசிக் சேலரி 15000 ரூபா.
ஓக்கே அப்போ கோபால் ,சி ,போர்ட்்ரான , டிபேஸ் சேலரி எல்லாம் எவ்ளவ்?்
-------------------------
25. டியூட்டில ஜாயின் பண்றதுக்கு முன்னே கம்பெனியை சுத்தி பார்த்திடுங்க.
ஆல்ரெடி பார்த்தாச்சு.34 பெண்கள் 12 டீன் ஏஜ் கேர்ள்ஸ் இருக்காங்க
-------------------------------
26.சம்பளம் எவ்ளவ் எதிர்பார்க்கறீங்க?
குடுக்கறதைக்குடுங்க.கிடைச்ச வரை லாபம்.எப்படியும் வெட்டியாத்தான் இருப்பேன்
--------------------------
27. ஸ்கூல்ல எல்லா சப்ஜெக்ட்லயும் ஒரு பொண்ணு பூஜ்யம் (சூன்யம்)வாங்கி இருந்தா அவங்க சூன்யக்காரியா? # எம் பி ஏ கேள்வி
---------------------------