1.மிரட்டல் - மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், ‘மிரட்டல்’. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: வாலி, பா.விஜய், கபிலன். இப்படத்தின் பாடல் சி.டியை வெளியிட்ட இயக்குனர் ஆர்.மாதேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:
விநய்க்கு இருக்கும் ‘சாக்லெட் பாய்’ இமேஜை இப்படம் மாற்றும். ஷர்மிளாவுக்கு கூத்துப்பட்டறையில் நடிப்பு மற்றும் தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. சந்தானம், கஞ்சா கருப்பு கூட்டணி சிரிக்க வைக்கும். லண்டன் பாராளுமன்றம் மீது விமானம் பறந்து செல்ல விசேஷ அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம்.
மேலும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மத்தியிலும், ஐதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான பிரமாண்ட பங்களாவிலும், சென்னையில் சிவாஜி வீட்டின் உட்புறமும் முக்கிய காட்சிகள் படமானது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிரச்னையையும் சுலபமாகவும், காமெடியாகவும் எடுத்துக்கொண்டு அணுகினால் அது காணாமல் போய்விடும் என்ற மெசேஜை சொல்லுது இப்படம்
இதில் பொண்டாட்டி பற்றி சந்தானம் வழமையான கிண்டலுடன் ஓர் பஞ்ச் சொல்வார் பாருங்க…
“கிடைச்சா கேத்ரீனா கைப் போல வைஃப் கிடைக்கணும்… எனக்கும் கிடைச்சிருக்கிறாளே… துருப்பிடிச்ச நய்ஃப் போல…!’
2. மதுபானக்கடை - படத்தில் கதை ஏதும் கிடையாது. அதையும் மீறி கதை… அது இது என்று ஏதாவது எழுதப்பட்டால் அது எழுதுபவருடைய சொந்த கற்பனையாகத்தான் இருக்க முடியும் என்கிறார் மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன்.
புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இவர் இயக்கினாலும் படத்தைப் பொறுத்தவரை படத்தின் ஹீரோ மதுபானக்கடைதானாம். ஈரோடு பக்கத்தில் இவர்கள் போட்ட மதுபானக்கடை செட்டைப் பார்த்து நிறைய பேர் அங்கு மது வாங்க வந்திருக்கிறார்கள்.
அவர்கள் பாட்டில் கேட்ட போது படக்குழுவினரோ இது ‘படப்பிடிப்பு நடக்கிற இடம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் நம்ப மறுத்துவிட்டார்களாம் அந்த பகுதி குடிமகன்கள். சில குடிமக்களோ மதுபானக்கடை பார் செட்டின் உள்ளே உட்கார்ந்து நன்றாக தண்ணி அடித்துவிட்டு போனார்களாம்.
நிஜ டாஸ்மாக் கடை என்று எண்ணி குடிமகன்கள் வந்து போனதில் மதுபானக்கடை டீமினர்க்கு ரொம்பவே சந்தோசம். பட்ஜெட் படமாக இருந்தாலும் படம் பேசப்படுகிற அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது என்கிறது மதுபானக்கடை படக்குழு.
3. யுகம் - இந்தப்படத்தை பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்கலை
4. JISM 2 - ஜிஸ்ம் 2 படம் ஒரு பக்கா ஏ படம். வயசு வந்தவர்களால், வயசு வந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இது, என நடிகையும் இயக்குநருமான பூஜா பட் கூறியுள்ளார்.
கனடிய பலான பட நடிகை சன்னி லியோன் முதல் முறையாக கொஞ்சூண்டு உடையுடன் நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு வருகிறது ஜிஸ்ம் 2.
இந்தப் படத்துக்கான விளம்பரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.
பட் கேம்பிலிருந்து வரும் ரொம்ப போல்டான படம் என்றுவேறு மார்த்தட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பூஜா பட் கூறுகையில், "இந்தப் படம் வயசு வந்தவங்களுக்காக வயசு வந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறேன். ஏ சான்றிதழ் வாங்கியாச்சு.
படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது. டாய்லெட் சீனெல்லாம் இல்லை. அதையெல்லாம் மற்றவர்கள் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்த மாதிரி படங்கள் பார்க்கத்தான் எக்கச்சக்க ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பித்தான் எடுத்திருக்கேன்," என்றார்.
சன்னி லியோனுக்கு ஜோடியாக அருணோதய் சிங், ரன்தீப் ஹூடா நடித்துள்ளனர். இந்த பக்கா கில்மா படம் ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்
5.VEERA ( TELUGU) - தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் கலக்கிய காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸி இருவரும் இணைந்து கவர்ச்சியில் கலக்கிய தெலுங்குப் படமான வீரா அங்கே செம ஹிட்..( ஹிட்டுன்னா செம உதைன்னும் அர்த்தம் உண்டு )
இப்படத்தின் ரவிதேஜா மற்றும் ஷாம் இருவரும் ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சிவன் அசோசியேட்ஸ் சார்பில் சுந்தரலட்சுமி தயாரித்திருக்கிறார். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கியிருக்கிறார்.
அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, கடமை தவறாத போலீஸ் அதிகாரியான ஷாம் மகளிர் விடுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ரவுடியை என்கவுன்டரில் போட்டு தள்ளுகிறார். அந்த ரவுடி மிகப்பெரிய தாதாவின் தம்பி என்பதால் ஷாமை பழிவாங்குவதற்காக ஷாமின் மகனை கொன்று எரித்து விடுகிறார். மேலும் ஷாமின் மகளையும் கொல்ல நினைக்கும் ரவுடியின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகும் ஷாம் மற்றும் அவருடைய குடும்பத்தை காப்பாற்ற, காவலாளியாக வரும் ரவிதேஜா உண்மையான காவலாளி இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது.
ரவிதேஜா யார்? ஏன் ஷாமின் குடும்பத்தை அவர் காப்பாற்ற வேண்டும். என்ற திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் இப்படத்தில், காஜல் அகர்வால் மற்றும் டாப்ஸின் கலக்கல் கவர்ச்சி ஆட்டங்கள் என தூக்கலான மசாலாப் படமாக உருவாகியிருக்கிறது.
டாப்ஸி இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.75 லட்சத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். அதேபோல சண்டைகாட்சி ஒன்றில் ஆயிரம் கார்கள் வரிசையாக அணிவகுப்பட்ட கார் சேசிங் காட்சியும் ரசிகர்களை மிரளவைக்கும் அளவுக்கு இருக்கிறதாம். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
6. TOTAL RECALL -பழைய படங்களின் தழுவலாகவோ நகலாகவோ மீண்டும் படமெடுப்பது நம்மவர்களின் வழக்கம்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, வெளிவந்த படங்களை காலத்துக்கேற்ப தொழில்நுட்ப அலங்காரம் செய்து வெளியிடுவது ஹாலிவுட்காரர்களின் பாணியாகும்.
ஏற்கனவே வெளியான ஒரு படத்தை மறு உருவாக்கம் செய்ய, அதுவும் அதே பெயரில் உருவாக்க தனி தில் வேண்டும், தெளிவும் வேண்டும்.
இந்தத் துணிவுக்குக் காரணம் அவர்கள் மீண்டும் எடுக்கும் போது அவ்வளவு தூரம் சிந்திக்கிறார்கள், உழைக்கிறார்கள், மெருகேற்றுகிறார்கள்.
காலமாற்றம் படைப்புதிறனில் தெரிகிறது. தொழில் நுட்ப நிபுணத்துவம் உருவாக்கத்தில் உணர வைக்கிறது. ஆகவேதான் அதே படத்தை மீண்டும் படைக்கும் போது புதிய படம் போல அவதார அனுபவத்தைத் தருகிறது.
அப்படி ஒரு படமாக மறு அவதாரம் எடுக்கும் படைப்புதான் “TOTAL RECALL “.
கடந்த 1990ல் வெளியாகி பரவலான கவனத்தையும் பரபரப்பான வெற்றியையும் பெற்ற படம் தான் இந்த “TOTAL RECALL “. இப்படம் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் 2012ல் புதிய பிறப்பெடுத்து வெளியாகிறது.
இது ஒரு அமெரிக்கப் படம். அறிவியல் படைப்பு, ஆக்ஷன் படமும் கூட. கடந்த 1966ல் வெளியான ஒரு சிறுகதையை மையாமாக வைத்து எடுக்கப்பட்டது.
அப்போது அதை எழுதியவர் பிலிப்கே டிக். ஒரு சிறுகதை இவ்வளவு காலம் கடந்தும் மறுதிரை வடிவம் பெறுவதைப் பார்க்கும் போது அதன் செறிவும் தொழில் நுட்ப சாத்தியங்களை விவரிக்கும் தன்மையும் புரியும்.
இப்புதிய படைப்பில் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் நிறமும் படத்துக்குப் பூசப்பட்டுள்ளது.
இந்த உலகம் கீழைநாடுகள், மேலைநாடுகள் என்கிற பாகுபாட்டால் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மேற்கும் கிழக்கும் ஒன்றை ஒன்று சாப்பிட நினைக்கின்றன. அதாவது ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செய்யவும் ஆளுமை செலுத்தவும் எண்ணுகின்றன.
நியூ ஷாங்காயும் யூரோ அமெரிக்காவும் அரசியல் அதிகார சக்திக்காக சண்டை போடுகின்றன. இந்நிலையில் கடந்த காலத்தில் நடந்ததை காட்சிகளாக்குவதை விட எதிர்காலத்தில் நடப்பதை கற்பனை செய்வதும் காட்சிகளாக்குவதும் கடினம்.
காரணம், நடந்தது யாருக்கும் தெரியக் கூடும் நடப்பது யாருக்கும் தெரியாது இப்படி எதிர்காலத்தில் நடப்பது பற்றிய கற்பனைதான் “TOTAL RECALL “. அதாவது 2084ல் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.
அது 2084 ஆம் ஆண்டு, பூமி ஒரு பேரழிவை உருவாக்கிய போருக்குப்பின்பு இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. அதாவது இந்தப் பூமியும் மண்ணும் இரு அதிகார மையங்களால் இரு அதிகார சக்திகளால் பிளவுபட்டு நிற்கிறது.
பிரிட்டனின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பும் புதிய ஆசியா என்கிற அமைப்புமாக பிரிந்தவை சிக்குண்டு கிடைக்கின்றன. காரணம் எல்லாமே யார் பெரியவன். யாரை யார் ஆளுகைக்குட்படுத்துவது என்கிற அதிகார வெறிதான்.
இப்படிப்பட்ட நாடுகள் அரசியல் பின்னணியில் டக்ளாஸ் குவாய்ட் போன்ற தொழிற் சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளியையும் அமானுஷ்யங்களையும் கலந்து கதை செய்திருக்கிறார்கள்.
காலின் ஃபேரவல்தான் நாயகன், சாமான்ய மனிதராக வந்து சாகசமனிதராக மனதில் அமர்கிறார் மற்றும் ப்ரியான் க்ரான்ஸ்டன்,கேட் பெகின்செல், ஜெஸிகா பீல், பில் நைட்டி, ஜான் ஜோ போன்ற பெரிய தலைகளும் நடித்துள்ளனர்.
லென் வைன்மேன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை செதுக்கியவர்கள் மார்க் பாம் பேக், ஜேம்ஸ் வாண்டாபிட்.
திரைக்கதை அமைக்கவே போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டது. திரைக்கதை உருவான ஓராண்டுக்குப் பின்புதான் இயக்குநர் வைன்மேன் ஒப்பந்தமானார். பால் கேமரூன் தான் ஒளிப்பதிவு பொறுப்பேற்றார். கிறிஸ்டியன் வேக்னர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஏற்கனவே தான் நடித்த பாத்திரத்தில் நடிக்கும் இப்போதைய நடிகர் யார் என்பதை அறிய அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் ஆர்வமாக இருந்தார்.
பலரைத் தேடி தெரிவு செய்து இறுதிக்கட்ட சிறு பட்டியலிலும் வென்று தெரிவானவர்தான் காலின் பெரல். நாயகன் தெரிவானதும் படிப்படியாக மற்ற நட்சத்திரங்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டொலர்கள். முதல் படப்பிடிப்பு 2011 மே 16ல் டொரண்ட்டோவில் தொடங்கப்பட்டு 2012 செப்டம்பர் 20 ஆம் திகதி முடிவடைந்துவிட்டது.
டொரண்டோவில் பல ஸ்டுடியோக்களில் படமானது. இப்படம் ரெட்கமெராவின் லேட்டஸ்ட் வரவு ரெட் எபிக் டிஜிட்டல் கமெராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. 113 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை உலகெங்கும் கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. நம் தமிழ் பேசியும் படம் வெளியாகிறது. ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்
7. கோகுலத்தில் கண்ணன் - ரிலையன்ஸ் குரூப்பின் அனிமேஷன் படம்.. குழந்தைகளுக்கானது.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
8. ஆசாமி - ஆன்மீக படம். ராமநாராயணன் டைப் ப்டம் போல.. தெலுங்கு டப்பிங்க்கா இருக்க்லாம்.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
7. கோகுலத்தில் கண்ணன் - ரிலையன்ஸ் குரூப்பின் அனிமேஷன் படம்.. குழந்தைகளுக்கானது.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
8. ஆசாமி - ஆன்மீக படம். ராமநாராயணன் டைப் ப்டம் போல.. தெலுங்கு டப்பிங்க்கா இருக்க்லாம்.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
நன்றி - யாழ், சினிமா உலகம், சினி பிலிட்ஸ்,கூகுள்
விரைவில் வர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரைலர்
A
08/blog-post_5452.htmlடி வி யில்் இன்று pic.twitter.com/zgWy5qZy
விரைவில் வர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரைலர்
A
ஈரோடு நகர படங்கள் 1. அபிராமி 70 MM AC DTS -மிரட்டல் 2. தேவி அபிராமி AC - சகுனி 3. ராயல் - மனங்கொத்தி பறவை 4. வி எஸ் பி AC DTS - TOTAL RECALL 5. ஆனூர் AC DTS - நான் ஈ 6. ஸ்ரீ சண்டிகா - மிரட்டல் 7. ஸ்ரீ கிருஷ்ணா DTS-VEERA ( TELUGU) 8. அன்ன பூரணி -மிரட்டல் 9. ஸ்ரீ லட்சுமி DTS- நாடோடி மன்னன் 10. ஸ்டார் - BLOOD MARY 11. பாரதி - கொஞ்சும் இளமை 12. அண்ணா DTS - சுழல் 13. ஸ்ரீநிவாசா DTS -JISM 2 ( HINDI) 14. சங்கீதா DTS- திருடி திருடன் 15. மாணிக்கம் - பாட்ஷா டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/