Friday, July 20, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20.7..2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

http://api.ning.com/files/hbHc6RC2MZAcgOsm0e9MSIxxvK1JOHPfKjNVgoJUn5oBXQ71nHlnpyVhLfKKMcBHuJ03OzmnE--G6WYFlOvFa07mM18wRYx1/the_dark_knight_rises_poster_catwoman.jpg 

1.THE DARK KNIGHT RISES - இந்தப்படத்தோட டைரக்டர் யார் தெரியுமா? கஜினி படத்தோட ஒரிஜினல் என சொல்லப்பட்ட மெமெண்ட்டோ டைரக்டர் தான்././கிறிஸ்டோபர் நோலன்.. அண்ணன் எடுத்த 7 படங்களும் மெகா ஹிட்.. இன்செப்ஷன் படம் இன்னும் புரியாம பார்த்துட்டே இருக்கறவங்க தான் அதிகம்.. அண்ணனுக்கு கே பாக்யராஜ் மாதிரி தெளிவா திரைக்கதை அமைக்க பிடிக்காது. செல்வராகவன் மாதிரி மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே டெக்னிக் தான்.. செம டேலண்ட்.. 


ஹாலிவுட்டிலும் , அனைத்து சினிமா வலைதளங்களிலும், வலைப்பூக்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் The Dark Knight Rises படம் தான். பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதை விட Dark Knight Rises ஜுரம் பரவிக்கொண்டு வருகிறது என சொல்லலாம். மெல்ல பரவி வந்த இந்த ஜுரம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுக்கு பின் படுவேகமாக பரவி வருகிறது.

இதற்கு காரணம் இதன் முந்தைய பாகங்களான Batman Begins படத்தின் வெற்றியும், The Dark Knight படத்தின் பிரமாண்டமான வெற்றியும் தான் . The Dark Knight படம் ரிலீஸ் ஆகும் போதே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு பல மடங்காக அதிகரித்து விட்டது. The Dark Knight படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் போது இந்தியாவில் இவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. காரணம் பலர் முதல் பாகமான Batman Begins பார்க்காததே. எனக்கு The Dark Knight படம் பார்த்த பிறகே இதற்கு முதல் பாகம் இருப்பது தெரியும். ஆனால் தற்போது அப்படியில்லை முதல் இரு பாகங்களை பார்த்த நிலையில் ஹாலிவுட்டில் இருக்கும் அதே ஜுரம் இங்கேயும் இருக்கிறது.

இந்த ஜுரம் மேலும் அதிகரிக்க காரணம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுவுக்கு பின் வந்த விமர்சனங்களே. வந்த விமர்சனங்களும் படத்தின் வெற்றியை உறுதிபடுத்த, முதன்முதலாக வந்த ஒரு நெகடிவ் விமர்சனம் இப்படங்களின் ரசிகர்களின் பட வெறியை துல்லியமாக காட்டிவிட்டது. Marshall Fine என்பவர் படத்தை பற்றி நெகடிவ்வாக விமர்சனம் எழுத , அவர் பட ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார். இவரது விமர்சன சுட்டியை பிரபல சினிமா ரேட்டிங் தளமான Rotten Tomatos வில் போட வந்தது பிரச்சனை. Rotten Tomatos வில் சுட்டியை போட்ட பின் இவரை திட்டி இவரது தளத்துக்கு வரும் கொலைவெறி கமெண்ட்டுகள் அதிகரித்து விட்டன. எந்தளவுக்கு என்றால் அவரது வலைதளத்தின் சர்வரையே முடக்கிக்போடும் அளவுக்கு டிராபிக் சென்று விட்டன.இதன் பின் அவர் கேட்டு கொண்டதுக்கு இணங்க Rotten Tomatos தளம் அவரது சுட்டியை நீக்கி விட்டது.


இவருக்கு அடுத்து Eric D Snider என்ற Rotten Tomatos வின் பிரபல விமர்சகர் Rotten Tomatos வில் இதுவரை வந்த படங்களில் மோசமான படம் என்று குட்டி கமெண்ட் போட்டு விட்டு அதில் முழு பதிவை படிக்க தனது தளத்திற்கு வருமாறு சுட்டியை போட்டு விட்டார். அந்த சுட்டியை கிளிக் செய்து அவரது தளத்திற்கு சென்றால் நான் இன்னும் படமே பார்க்கவில்லை,நெகடிவ்வாக விமர்சனம் எழுதுபவர்களை படம் பாக்காமலே திட்டும் ரசிகர்களை ஏமாற்றவே இப்படி செய்தேன் என பதிவு இருக்க ரசிகர்கள் கொலைவெறி அதிகமாகி விட்டது. இவர் ஏற்கனவே இது போல் The Dark Knight  படம் ரிலீஸ் ஆகும் போதும் இப்படி செய்தாராம்.

இவரின் இச்செயலால் Rotten Tomatos தளம் இவரை தள விமர்சகர் அக்கவுண்டை தூக்கிவிட்டது.இதோடு பிரச்சனை முடியவில்லை யார் யார் நெகடிவ்வாக விமர்சனம் போடுகிறார்களோ அவர்கள் எல்லாம் ரசிகர்களின் கொலைவெறி கமெண்டுக்கு ஆளானார்கள். ஏன் பிரச்சனை என்று Rotten Tomatos தளம் படம் ரிலீஸ் ஆகும் வரை கமெண்ட்டோ , விமர்சனமோ போடுவதை தடை செய்து விட்டது. Rotten Tomatos இதற்கென தனி பதிவே இட்டு ஏன் தடை செய்யப்பட்டது என கூறியுள்ளார்.இதிலிருந்து ஜுரம் மேலும் அதிகமாகி விட்டது.
http://images.contactmusic.com/newsimages/the_dark_knight_rises_director_christopher_nolan_1211356.jpg

ஏற்கனவே முந்தைய பாகங்களை பார்த்தவர்களுக்கு தான் இந்த ஜுரம் பரவியிருக்கிறது என்றால் பார்க்காதவர்களையும்,சூப்பர்ஹீரோ படங்களை வெறுக்கும் ரசிகர்களையும் வலைத்தளங்களும்,வலைப்பூக்களும் படத்தை பற்றி எழுதி அவர்களுக்கும் பரவி விட்டது. எப்படியோ படம் வந்த பின் பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். ( படத்திற்கு இன்னுமொரு எதிர்பார்ப்பு இந்த வருடம் ஏற்கனவே வெளியாகி வசூலை வாரி குவித்த Avengers படத்தின் வசூலை முறியடிக்குமா என்பது தான்.

இப்பதிவின் தாயகம் : லக்கி லிமட்



http://static.ibnlive.in.com/pix/slideshow/07-2012/the-dark-knight/dark2.jpg
Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas

Charles Roven
Screenplay by Jonathan Nolan
Christopher Nolan
Story by Christopher Nolan
David S. Goyer
Based on Characters by
Bob Kane
Starring Christian Bale
Michael Caine

Heath Ledger

Gary Oldman

Aaron Eckhart

Maggie Gyllenhaal

Morgan Freeman
Music by Hans Zimmer
James Newton Howard
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films

DC Comics
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
  • July 14, 2008 (New York City)
  • July 18, 2008 (United States)
Running time 152 minutes[1]
Country United States
United Kingdom[2]
Language English
Budget $185 million[3]
Box office $1,001,921,825[3]


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 


 

 2. மயக்கும் மன்மதன்- இது ஏதோ கில்மாப்படம் போல , மலையாள டப்பிங்க் மாதிரி தெரியுது. இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் காணோம்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.. 


3. தற்கொலைப்படையும் கூலிப்படையும்   - இது  ஏதோ பழைய சைனீஸ் படம் போல .. போஸ்டர் பார்த்தாலே படம் படு திராபைன்னு தெரிஞ்சிடுச்சு, ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்