Wednesday, July 11, 2012

THE TAKING OF PELHAM 123 - ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் - - சினிமா விமர்சனம்

http://5wordmoviereviews.files.wordpress.com/2012/01/pelham-123.jpgநியூயார்க்ல Manhattan பகுதில இருக்கற சப்வே ரயில் ஒண்ணை 4 பேர் ஹை ஜாக் பண்ணிடறாங்க.. என்னமோ வீரப்பன் ராஜ்குமாரை கடத்துன மாதிரி எப்படி அவ்வளவு சுலபமா அதை அவனால செய்ய முடிஞ்சது? அதுக்கு எல்லாம் விடை படத்துல இருக்கு.. 4 பேர்ல மெயின் வில்லன் பேரு ரைடர்.. அவன் ரயிலை ஹை ஜாக் பண்ணிட்டு முதல் வேலையா டிபார்ட்மெண்ட்டுக்கு ஃபோனை போட்டு அவனோட டிமான்ட்ஸ் என்ன?ங்கறதை சொல்றான்.. 

100 கோடி ரூபா கேட்கறான்.. அவன் கைல 37 பயணிகள் பணயக்கைதியா இருக்காங்க.. வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துபவர் தான் ஹீரோ.. இவர் என்ன போஸ்ட்ல இருக்கார்னா கவர்மெண்ட் யார் கிட்டே ரயிலை வாங்கலாம்னு அப்ரூவல் தர்ற அதிகாரி.. டிசைடிங்க் அத்தாரிட்டியே அண்ணன் தான்.. ஆனா அவர்  ஆல்ரெடி ஆ ராசா மாதிரி சாரி அவர் லெவலை விட கம்மியா 50 லட்சம் ரூபா லஞ்சம் வாங்குன வழக்குல சிக்கி விசாரணை நடந்துட்டு இருக்கு.. ஆனாலும் அண்ணன் டியூட்டில தான் இருக்கார்..


வில்லன் முதல் கட்ட பேச்சு வார்த்தைல அவ்ளவ் பணம் கேட்டதும் அந்த நகரத்தை மேய்க்கற மேயர் அங்கே ஆஜர் ஆகறார்.. இனிமே பேச்சு வார்த்தையை நான் பார்த்துக்கறேன்.. நீ கிளம்புன்னு டகார்னு ஸ்ருதி கமல்  சித்தார்த்தை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்டு அனுப்பிடறார்.. 


மேயர் வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தும்போது வில்லன் எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்கறான்.. அதாவது ஹீரோ கிட்டே தானே ஆல்ரெடி பேசினேன்.. அவர் கிட்டேதான் பேசுவேன்.. குறுக்கால எந்த நாயும் வரக்கூடாதுன்னு மேயரை கேவலமா திட்டிடறான்.. 


 அவசர அவசரமா ஹீரோவை போய் கூட்டிட்டு வந்து அவன் கூட பேச விடறாங்க.. இதுல என்ன பிரச்சனைன்னா வில்லன் முன் கோபக்காரன்.. ஆன்னா ஊன்னா பயணிகள்ல ஒரு ஆளை ஷூட் பண்ணி மிரட்றவன்.. அதனால அவன் சொல்றதை கேட்டுத்தான் ஆகனும், வேற வழி இல்லை.. காங்கிரசை பகைச்சுக்கிட்டா சி பி ஐ நெருக்கும்னு கலைஞர் பயந்துக்கறாரே, அது மாதிரி./.. 
 
 
ஹீரோவும், வில்லனும் பேச்சு வார்த்தை நடத்தறதை  மேயர் டேப் பண்ணி கவனிக்கறார்.. அவருக்கு என்ன டவுட்னா ஊர்ல இத்தனை பேர் இருக்கும்போது வில்லன் ஏன் ஹீரோவை பேச்சு வார்த்தைக்கு கூப்பிடறான்னு.. வில்லனுக்கு தேவை பணம்.. அதை குடுத்தா சரி.. பேச்சு வார்த்தை யார் செஞ்சா என்ன? ஹீரோவும் இந்த கடத்தல்ல பங்கு வகிச்சிருக்காரா? இதான் அவர் டவுட். 
 
 
http://goodfilmguide.co.uk/wp-content/uploads/2010/01/Pelham-123-Denzel-Washington.jpg

 ஹீரோ வீட்டுக்கு ரெயிடுக்கு ஆள் அனுப்பறார்.. ஹீரோ கிட்டே தகவல் சொல்லிடறார் மேயர்.. ஹீரோ அவர் மனைவிக்கு ஃபோன் பண்ணி ரெயிடு வருது, கோ ஆபரேட்  பண்ணுங்கறார்.. 


பேச்சு வார்த்தைல சம்பந்தமே இல்லாம வில்லன் ஹீரோ கிட்டே ஹீரோ லஞ்சம் வாங்குன வழக்கு பற்றி விசாரிக்கறான்,.. லஞ்சம் வாங்குனதை ஒத்துக்கோங்கறான்.. கோடிக்கணக்குல ஊழல் பண்ணுன பெரிய தலைங்க எல்லாம் கமுக்கமா இருக்கும்போது ஊழலே பண்ணாம பண்ணுனேன்னு எப்படி ஒத்துக்க? ஹீரோ தான் எந்த லஞ்சமும் வாங்கலைங்கறார்.. 

 உடனே வில்லன் இப்போ உண்மையை சொல்லலைன்னா பயணி ஒருவரை ஷூட் பண்ணிடுவேன்கறான்.. உடனே ஹீரோ  உண்மையை ஒத்துக்கறதா சொல்லி பொய்யா தான் லஞ்சம் வாங்குனதா சொல்றார்..  மாற்றுத்திறனாளியா இருக்கும் தன் மகனுக்கான ஆபரேஷன் செலவுக்காக அந்த லஞ்சத்தை வாங்குனதா சொல்றாரு.. 


 இப்போ ஆடியன்ஸுக்கும், மேயருக்கும் டவுட்  வந்துடுது.. நிஜமாவே ஹீரோ லஞ்சம் வாங்குனவரா?


ரயில்ல பயணக்கைதில நம்ம கடலை மன்னன் கட்டதுர மாதிரி ஒரு ஆள் அவன் லவ்வர் கிட்டே லேப் டாப்ல கடலை போட்டுட்டு இருக்கான்.. சேட்டிங்க் நடக்கறப்ப இந்த ஹைஜாக் நடக்கறதால ரயில்ல என்ன நடக்குதுன்னு வெப் காமரா மூலம் அரசுக்கு தெரிய அந்த கடலை ராணி ஹெல்ப் பண்றா - நீதி - கடலை வறுப்பதிலும்  நாட்டுக்கு உபயோகம் உண்டு..  
 
 
வில்லனை பற்றி விசாரிக்கறப்ப  தெரிய வரும் உண்மைகள் - வில்லன் ஆல்ரெடி 200 கோடி ஊழல் வழக்குல மாட்டினவன்.. கோர்ட்ல 100 கோடி திருப்பி கொடுத்து மீதி 100 கோடியை பதுக்கிட்டான்.. அதுக்கு ஜெயில் தண்டனை அனுபவிக்கும்போது அதுல இருந்து தப்பினவன்.. இந்த ரயிலை ஹை ஜாக் பண்ணுனதால  ஷேர் மார்க்கெட் எல்லாம் பயங்கரமா டவுன் ஆகிடுது..அவன் பிளான் என்னன்னா விட்ட 100 கோடியை இதுல பிடிக்கலாம்னு.. 


 உதாரணமா ஒரு ஷேர் விலை ரூ 100 அப்டின்னா  இந்த ஹைஜாக்கால அதன் விலை ரூ 50 ஆகும்.. எல்லா பணத்துக்கும் , அதாவது 100 கோடிக்கும் அந்த ஷேரை வாங்கிப்போட்டா மீண்டும் ஷேர் ரேட் ஏறும்போது அவன் விட்ட 100 கோடி கிடைச்சுடும்.. பணயத்தொகை மிச்சம்.. போனஸ் மாதிரி.. 

 இதான்  வில்லன் பிளான்


பணயத்தொகையான ரூ 100 கோடியை நானா இருந்தா டி டியா வாங்கி இருப்பேன், அல்லது என் அக்கவுண்ட் நெம்பர் சொல்லி அதுல பணம் போடச்சொல்லி இருப்பேன் ஹி ஹி .. ஆனா வில்லன் கேஷா வேணும்கறான்..


 அந்த பணத்தை எடுத்துட்டு ஒரு வேன் கிளம்புது.. அதுக்குப்பாதுகாப்பா 6 பைக் , 2 போலிஸ் ஜீப்.. இதைத்தான் எங்க ஊர்ப்பக்கம் தண்டம் வேற முட்டுக்கோல் வேறம்பாங்க.. அதாவது அந்த நாய்க்கு 100 கோடி கொடுக்கறதே  தண்டம் தான்.. இதுல  செக்யூரிட்டி செலவு வேற.. 


 பணம் கொண்டு போற வழில ஆக்சிடெண்ட்.. பட்ட காலிலே படும், கெட்ட ஃபிகரே மேலும் மேலும் கெடுவாள்னு சொல்ற மாதிரி  விபத்து நடந்த வேன் கவிழ்ந்து கிடக்கு.. இந்த வில்லன் அதை புரிஞ்சுக்காம  என்னை ஏமாத்த பார்க்கறீங்க.. எந்த போலீசும் வேணாம்.. பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்புங்கறான்.. 


 எல்லாருக்கும் டவுட்.. ஹீரோ மேல.. பார்ட்னர்னு நினைக்கறாங்க.. ஆனாலும் வேற வழி இல்லை..  ரிஸ்க் எடுத்து தான் ஆகனும்/./  அதனால பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்பறாங்க.. என்ன நடக்குது? என்பது க்ளைமாஸ்ல.. படம் மொத்தம் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடுது.. விறு விறுப்புதான்.. ஆனா பெரிய பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. 
 
 
http://mimg.ugo.com/200906/9874/pelham-123-review-2.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. என்னப்பா, ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணூனியே எ, என்னாச்சு?
 
  அவ மேட்டர் முடிஞ்சதும் பணம் கேட்டா.. அப்போதான் அவ ஒரு மேட்டர்னே எனக்கு தெரிஞ்சது
 
 
2. கண்டக்டர் ( டி டி ஆர்?)  கிட்டே ஃபோனைக்குடம்மா.. உன் பேர் என்ன?
 
 ரேஜினா ( நல்ல வேளை.. ஹி ஹி )
 
 
நீ எதா வேணாலும் இருந்துட்டுப்போ .. நான் சொல்றதை  கவனமா கேட்டுக்கோ.. 



3. சரி.. உன் பேர் என்ன?
 
 ம்.. உங்கம்மாவோட புருஷன்.. 
 
 
 
4.  நீ சொல்ற படி பணத்தை அடுத்த வியாழக்கிழமைக்குள்ளே குடுக்கவா?
 
 வாரக்கணக்குல  அவகாசம் கேட்டா எப்படி? மணிக்கணக்குல சொல்லு



5. இருக்கறதுலயே பெரிய சுகம் பதவி சுகம் தான்.. என் பதவி காலாவதி ஆகி புது மேயர் வந்தா அவன்  நல்லவனா இருந்தா என் சாயம் வெளுத்துடும்.. 
 
 ஏன் அவ நம்பிக்கையா பேசறீங்க? நீங்க அடுத்த மேயரா வர மாட்டீங்களா? 
 
 மக்களுக்கு ஏதாவது செஞ்சு இருந்தாத்தானே?


6.  குடும்பம், குட்டி இருக்கறவன் தான் சாவைப்பற்றி கவலைப்படுவான்.. நான் ஏன் கவலைப்படனும்?



7. வில்லன் -இங்கே இருக்கும் பயணிகள் எல்லாரும் இப்போ என் பணயக்கைதிகள்... அவங்களுக்கு நான் தான் ஃபாதர்.


 ஓ! நீ கத்தோலிக் கிறிஸ்டினா?



8. உன் பேரென்னா?


 ரைடர் 

 ஓட்டறவனா? ( RIDER?)


 நோ, RYDER
 
 
9.  சார்.. ஹைஜாக்கர் ரொம்ப பிரில்லியண்ட்டா இருக்கான்.. 
 
 
 அப்படி பிரில்லியண்ட்டா இருந்தா ஏன் முட்டாளான உன் கிட்டே பேசனும்?


10. உங்க மேயர் வேஸ்ட்./. எங்காவது போய் மேய்ஞ்சுட்டு வரச்சொல்லு
 
http://0.tqn.com/d/movies/1/0/L/b/T/pelhampic3.jpg



11. இந்த உலகத்துல தப்பு பண்னாதவன் மனுஷனே இல்லை.. 


12. நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு 


 ஓவர் கற்பனை உடம்புக்கு ஒத்துக்காது



13.  ஒரு வருஷம் மேயரா இருதுட்டு வெறும் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்கிக்கறியாமே?இவ்வளவு காஸ்ட்லி கோட் போட்டிருக்கியே? இதுக்கு பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா? 


14. நான் என் மனைவி மேல உயிரையே வெச்சிருந்தேன்.. அவளும் உயிரை வெச்சிருந்தா.. ஆனா வேற ஒருத்தன் மேல 


15. என்னைப்பொறுத்த வரை பணம் தான் உலகம்


16. அரசியல்வாதிங்க தப்பு பண்ண காரணமே  அரசாங்கம் தான், தப்பு பண்ணுனவன், ஊழல் பண்ணுனவனை  நிக்க வெச்சு சுடாம விசாரனை,  வழக்கு கோர்ட்னு  இழுத்தா அவன் நெஞ்சு வலின்னு போய் படுத்துக்கறான்


17.  மாமு.. எனக்கே வைக்கனும்னு நினைக்காத பாமு


18. ஒரு தனி மனுஷன் பணத்துக்காக  ஒரு கவர்மெர்ண்ட்டையே ஆட்டிப்படைச்சுட்டு இருக்கான்.. என்னய்யா பண்றீங்க?


19.. டேக் திஸ் கன் ஃபார் யுவர் செக்யூரிட்டி 

 சப்போஸ் அவங்க செக் பண்ணா?

 மேலே போய்ச்சேர வேண்டியதுதான்
 
 
http://carlosdev.files.wordpress.com/2009/11/the_taking_of_pelham_1_2_3_19.jpg?w=500


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இடையே நடக்கும் டெலிஃபோன் கான்வர்சேஷன் கலக்கல்.. ஹீரோ எகிறும்போது வில்லன் இறங்கி வருவதும், வில்லன் கோபமாக பேசும்போது ஹீரோ பம்முவதும்.. நல்ல காம்பினேஷன்


2. வில்லன் கிட்டே ஹீரோ தான் ஊழல் வாதி என பொய்யா ஒத்துக்கும் சீன்.. அதனால தான் வில்லன் இவன் நம்ம இனம் என நம்பி ஹீரோவை வர சொல்வது,,. அந்த ஐடியா சூப்பர்.. 


3. ஒண்ணே முக்கால் மணி நேரப்படத்துல  விறு விறுப்பு குறையாம படம் ஸ்பீடா போகுது.. வன்முறை, ரத்த தெறிப்பு எல்லாம் இல்லாம.. 


4. படத்துல முக்கியமான கேரக்டர்கள் மொத்தமே 5 பேர் தான்.. ஹீரோ, வில்லன், மேயர், ஹீரோ மனைவி,மகன்.. கனகச்சிதமான பங்களிப்பு..
 
 
http://collider.com/wp-content/image-base/Movies/T/Taking_of_Pelham_1-2-3/Movie_Images/The%20Taking%20of%20Pelham%20123%20movie%20image%20(5).jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ டியூட்டி முடிஞ்சு கிளம்பிடறார்.. அடுத்து டியூட்டிக்கு வர்ற ஆள் பேச்சு வார்த்தை யை டீல் பண்றார்.. ஆனா அதுக்கு வில்லன் ஒத்துக்கலை.. ஹீரோட்ட தான் பேசுவேன்னு அடம் பிடிச்சு தன் கருத்தை வலியுறுத்த, மற்றவர்களை பயமுறுத்த பயணிகள்ல ஒரு ஆளை ஷூட்  பண்ணிடறார்.. அதுக்கு என்ன ரீசன்? அதை கடைசி வரை சொல்லவே இல்லையே?


2. வில்லன் எதுக்காக ஹீரோ கிட்டே தேவை இல்லாம கடலை போட்டுட்டு இருக்கான்? ஹீரோ பேசறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. டைம் பாஸ்.. இன்னும் டைம், கெடு டைம் வாங்க பேசறார்.. வில்லன் அதுக்கு ஈடு கொடுத்து பேச என்ன அவசியம்?


3. லேப்டாப்ல கடலை போடும் பார்ட்டி தன் ஃபிகர் கிட்டே நியூஸ் சேனல்ல கனெக்ட் பண்ணுனு சொல்றான்.. அவ அப்படியே செய்யறா.. லேப் டாப் ஓப்பன் பண்ணுன பொசிஷன்லயே இருக்கு.. அதை கிராஸ் பண்றப்போ 4 தத்திங்கள்ல ஒருத்தனுக்குக்கூட டவுட் வராதா?


4. ஒரு பணயக்கைதி வில்லன் கிட்டே மாட்டறார்.. ஆம்பளையா இருந்தா நீ ஷூட் பண்ணி பாரு என வம்பை விலை கொடுத்து வாங்கறார்.. அது ரொம்ப செயற்கையான சீனா இருக்கு.. இந்த மாதிரி கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல யாரா இருந்தாலும் பம்முவாங்க.. அவன் ஏன் வாயைக்கொடுத்து உயிரை விடனும்?

5. 100 கோடி பணத்தை முதல்ல ஒரு ஜீப்ல கொண்டு வர்றாங்க.. விபத்து நடந்ததும்  அதை ஹீரோ ஒரே ஆளா தூக்கிட்டு வர்றார்.. வில்லனும் அதை வாங்கறான்.. 100 கோடி ரூபாயை ஒரு ஆள் தனியா தூக்க முடியுமா?



 http://images.starpulse.com/pictures/2009/06/06/previews/Aisha%20Tyler-SGG-087809.jpg

Director:

Tony Scott

Writers:

Brian Helgeland (screenplay), John Godey (novel)

Stars:

Denzel Washington, John Travolta and Luis Guzmán
 
 
 
 
 

Box Office

Budget:

$100,000,000 (estimated)

Opening Weekend:

$23,373,102 (USA) (14 June 2009) (3 Screens)

Gross:

$65,247,655 (USA) (16 August 2009) 
 
 
சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் .2009ல ரிலீஸ் ஆச்சு
 
 
http://i.ytimg.com/vi/BuHSJDS07gI/0.jpg