Tuesday, July 10, 2012

DERAILED - 18 + ஹாலிவுட் க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 http://swesub.tv/uploads/images/83290.jpg

படத்தோட கதைக்கு போறதுக்கு முன்னால கதைக்கு சம்பந்தமான பிரபுதேவா பேட்டியில் ஒரு லைன் - நான் எனது மகனின் மறைவில் இருந்த துக்கத்தில் ஒரு ஆறுதலாக நயன் தாரா வந்தார், அதனால் தான் நெருக்கம் ஆச்சு..” நான் கேட்கிறேன், அதே சோகம் தானே ரம்லத்க்கும் இருந்திருக்கும்? அவரும் சோகத்தை பகிர்ந்துக்க ஒரு மடி தேடி இருந்தா நீங்க ஒத்துக்கிவீங்களா?சபலத்தால் வேலி தாண்டிட்டு அதுக்கு ஒரு வியாக்கியானம் வேற. இது செல்வராகவன் உட்பட எல்லாருக்கும் பொருந்தும்.. 


அட்வர்ட்டைசிங்க் கம்பெனில ஹீரோ ஒரு எக்ஸிகியூட்டிவ். மிடில் கிளாஸ் ஃபேமிலி.. மனைவி ஹவுஸ் ஒயிஃப்.. இவங்களுக்கு டீன் ஏஜ்ல ஒரு பொண்ணு.. சின்ன வயசுலயே சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டதால  அந்த பொண்ணு மேல கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல்.. ஏகப்பட்ட செலவு அவங்க பொண்ணோட மருத்துவத்துக்கு ஆகுது,.. 

ஹீரோவோட மனைவிக்கு எப்பவும் தன் பெண்ணைப்பற்றியே சிந்தனை.. ஹீரோவுக்கும்.. ஆனா ஹீரோ நைட் ஆனா  சி எம் ஆன கலைஞர் ஊழல் பண்றதுக்கு டக்னு ரெடி ஆகற மாதிரி கில்மாவுக்கு ட்ரை பண்றாரு.. மனைவிக்கு அது பிடிக்கலை.. தவிர்க்கறா..


இனித்தான் கதைல கிளு கிளு போர்ஷன்.. ஹீரோன்னா வழக்கமா கார்லயோ, பைக்லயோதானே சுத்தனும்? ஆனா இந்தக்கதைக்கு அந்த மாதிரி ஹீரோ தேவை இல்லை.. அதனால ஹீரோ ட்ரெயின்ல தான் போறார்.. ஆஃபீசை விட்டு வீட்டுக்கு வரும்போதும் ரயில் தான்/.. அங்கே தான்  இன்னொரு  ஜிகிடியை மீட் பண்றாரு.. பாப்பா ரொம்ப பாந்தமாத்தான் இருக்கு..தனியார் கம்ப்பெனில  ஃபைனான்ஸியல் அட்வைஸரா ஒர்க் பண்ணுது.. 

 எப்பவாவது ஒரு நல்ல ஃபிகரை பார்த்தாலே நம்மாளு விடமாட்டாங்க.. டெயிலி ரெகுலரா பார்த்தா சும்மா விடுவானா? 2 பேரும் பேசி பழகறாங்க. அடுத்த கட்டம்./. அதாவது ரொம்ப டீப்பாஆஆஆஆஅ பேசி பழகலாம்னு ஒரு ஹோட்டல்ல ரூம் போடறாங்க.. 


http://cdn102.iofferphoto.com/img/item/141/463/119/0ntdHefnaUpsFM1.jpg


 ரூமை மட்டும் தான் போடறாங்க.. மேட்டர் எதும்  நடக்கலை.. அதுக்குள்ள சிவ பூஜைல கரடி மாதிரி வில்லன் வந்துடறான்.. வந்தவன் ஹீரோவை கட்டிப்போட்டுட்டு ஹீரோயினை கதறக்கதற ரேப்பிடறான் ( நன்றி - தினத்தந்தி)

அவங்க 2 பேரும் புருஷன் பொண்டாட்டிதான், ஆனா அவனோட பொண்டாட்டி வேற, இவளோட புருஷன் வேற என்பதை வில்லன் தெரிஞ்சுக்கறான். கரும்பு தின்னுட்டு கூலி வாங்கற மாதிரி வில்லன் மேட்டரையும் முடிச்சுட்டு ஹீரோ கிட்டே 20,000 டாலர் பணம் கேட்கறான்.. 


ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் அவங்கவங்க வாழ்க்கைத்துணைக்கு இந்த மேட்டர் வெளில தெரிஞ்சுடக்கூடாதுன்னு அதுக்கு ஓக்கே சொல்லிடறாங்க , ஹீரோ பணத்தை ரெடி பண்ணி வில்லனுக்கு குடுத்துடறான்.. 

 கொஞ்ச நாள் கழிச்சு வில்லன் மறுபடி பணம் கேட்கறான்.. இந்த தடவை 100,,000  டாலர்.. அவ்ளவ் பணத்துக்கு எங்கே போக? ஹீரோ தன் மகளின் ட்ரீட்மெண்ட்டுக்காக வைத்திருக்கும் சேமிப்புப்பணத்தை எடுத்து தர்றான்.

 ஒரு கட்டத்துல ஹீரோ தன் மனைவி கிட்டே மேட்டரை எல்லாம் சொல்லிடறான்.. 

எல்லா களேபரமும் முடிஞ்ச பின் ஒரு டைம் ஹீரோ எதேச்சையா தன்னோட ரயிலில் வந்த மயிலை பார்க்கறான்.. அடங்கோ.. அவளும் அவளை ரேப் பண்ணானே வில்லன் அவங்க 2 பேரும் ஆல்ரெடி தம்பதிகள் போல.. எல்லாம் நாடகம்..

அவங்க பார்ட் டைம் ஜாப்பே இதான்.. அதாவது இந்த மாதிரி ஒரு இ வா ஆளை பிடிக்க வேண்டியது.. அவனுக்கு வலை வீச வேண்டியது.. பணம் பிடுங்குவது..
 இந்த மேட்டர் ஹீரோவுக்கு தெரிய வந்ததும் தான் விட்ட பணத்தை மீட்க நினைக்கறான்.. அவங்களை ஃபாலோ பண்றான்.. அதுக்குப்பிறகு
 நடக்கும் சில அதிரடி சம்பவங்கள் தான் படத்தோட பர பர நிமிஷங்கள்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcHuZVA6uK8LHfvCvBadQyJZTFhud0v30IUDpEUBylgUDD_UM1ICOP6qk9J70oAbf0F4kN1aVwoLaxW_6i3N9d2uwc4cPHgDO7ZPxI5o8MC4vsIjNztgZEbCC66xF0yNYjg1EjrujJG2Q/s1600/derailed~0.jpg


 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. கெட்டவங்களுக்குத்தான் கெடுதல் எல்லாம் வரும், நல்லவங்களுக்கு எதுவும் வராதுன்னு எங்காவது எழுதி வெச்சிருக்கா?



2. டெயிலி ஒரே டைம்ல ஆஃபீஸ்க்கு போறது, ரொட்டீன் ஒர்க் பண்றது இதெல்லாம் போர் அடிக்கலை?

 ஆமா.. ஆமா .. நான் கூட அதைப்பற்றி திங்க் பண்றது உண்டு.. வாழ்க்கைன்னா விறுவிறுப்பா இருக்கனும்,..




3.  கில்மா லேடி - வழக்கமா நான் யார் கிட்டேயும் பேச மாட்டேன்.. ஆனா உங்க கிட்டே பேசனும்னு தோணுச்சு


4. வேற ஒரு ஆள் கூட நான் இப்படி எல்லாம் பேசறேன்னு தெரிஞ்சா என் கணவர் என்னை கொன்னே போட்டுடுவார்.. 


 அப்போ ஏன் பேசறீங்க?

ம் ம் 


5. உங்க மனைவி சோ க்யூட்.. நீங்க ரொம்ப லக்கி.. நீங்க லக்கியா? அவங்க லக்கியா?  ( 2ம் இல்லைம்மா, யுவகிருஷ்ணா தான் ரொம்ப வருஷமா லக்கி )


6. உங்க  கண்ல ஒரு மென் சோகம் எப்பவும் இருந்துட்டே இருக்கேன்னு நான் யோசிச்சேன்.. இப்போத்தான் புரியுது.. 



7. ஆம்பளைங்கன்னாலே பொதுவா முரட்டுக்குணம் தான், அப்பா, அண்ணன், கணவன்,. இப்படி. ஆனா நீங்க பேசுனாக்கூட கேட்க மாட்டேங்குது.. அவ்ளவ் சாஃப்ட்டா இருக்கீங்க.. 


8.  ஹாய்.. எப்படி இருக்கீங்க?


 மீட் பண்ணி ஒன் ஹவர் தான் ஆகுது,, அதுக்குள்ளே ஃபோன் போட்டு நலம் விசாரிக்கறீங்களே.. 


 ஈவ்னிங்க் மீட் பண்ணலாமா? 


ட்ரெயின்ல தானே?


 ம்ஹூம், வெளீல எங்காவது.. 

 லேட் ஆகிடாது?

 நான் சமாளிச்சுக்குவேன்.. நீங்க?


9.  வீட்ல என்ன சொன்னீங்க? 

 அழகான பொண்ணோட வெளில போய்ட்டு வர்றேன்னு.. 


 நானும் அதே தான் சொன்னேன்.. ஆனா என் கணவர் அதை ஏத்துக்கிட்டார். உங்க மனைவி நிஜமா அதை ஏத்துக்கிட்டாங்களா?


ஹி ஹி ஹி 


 10. நம்ம 2 பேருக்குள்ளே என்ன நடக்குது?

நத்திங்க்.. 2 பேரும் ஹோட்டல் போய் சாப்பிடறோம்.. 

 தென்?

  காஃபி ஆர் டீ குடிக்கறோம்.. 

 அப்புறம்?


------


http://www.hotflick.net/flicks/2005_Derailed/fhd005DRL_Jennifer_Aniston_025.jpg


11.. ஹீரோ - இப்போ வேணாம்.. 

 கில்மா லேடி - ஆனா எனக்கு நீங்க வேணும்.. எப்பவும் வேணும்னு கேட்க மாட்டேன்..  ஆனா நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்க வேணும்.. 


12. எனக்கு இனிமே நீங்க தான் ஹீரோ.. இனிமே சில்வஸ்டர் ஸ்டோலன் படம் எல்லாம் பார்க்க மாட்டேன்.. 


13. நாளைக்கு நாம 2 பேரும் வருத்தப்படற மாதிரி இன்னைக்கு ஏதும் செய்ய வேண்டாம். 


14.. ஹலோ.. டாக்ஸி வருமா? 

 இங்கே லொக்கேஷன் பிராப்ளம்.. நீங்க வேற வண்டி பாருங்க.. 



15. உங்க மனசு வேற, என் மனசு வேற .. உங்களை அளவுக்கதிகமாவே காதலிச்சுட்டேன்.. 


16.  மேரேஜ்க்கு முன்னாடியே உங்க கிட்டே சொல்லி இருக்கேன். வேற ஒரு பொண்ணு கூட நீங்க நெருக்கமா இருந்தா ஐ வில் லீவ் யூன்னு.. 

17. என் பர்சனல் லைஃப்ல உங்களை ஓவரா நம்பிட்டேன்..  உங்களுக்கு சந்தோஷம் தானே..?


 18. ஒரு பிரச்சனைன்னு வர்றப்போ உயிரைக்குடுப்பேன்னியே?இதானா?


19. நீ ஆம்பளை.. அதான் அவ பின்னாடியே போய்ட்டே,.. பைத்தியமா உன் மேல இருக்காளா? அப்டினு சொன்னாளா? நான் எத்தனை டைம் சொன்னேன்.. ஐ மேட் ஆன் யூ.. என.. 

 நான் மனசறிஞ்சு செஞ்ச தப்புக்கு மன்னிப்பு  இல்லை.. கேட்கவும் மாட்டேன்.. 


20. உங்க கூட இருந்த வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்ததுன்னு 40 வருஷம் கழிச்சும் நீ சொல்வே.. அந்த மாதிரி ஒரு லைஃபை நான் வாழ்ந்து காட்டறேன்.. 


21.. ஹூம். ஒரு நரகத்துல இருந்து இன்னொரு நரகம்.. 


 http://i124.photobucket.com/albums/p26/tortured_clown/melissa_george_4.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. 20,000 டாலர் பணத்தை கேட்டாலும், ஒரு லட்சம் டாலர் கேட்டாலும் தர தயாரா இருக்கற ஹீரோ ஏன் எலக்ட்ரிக் ட்ரெயின்ல ஆஃபீஸ் போறான்?


2. ஹீரோயின் எங்கே ஒர்க் பண்றான்னு ஒரு டைம்  கூட செக் பண்ண ஹீரோ முயற்சிக்கவே இல்லையே?


3. பொதுவா இந்த மாதிரி சீட்டிங்க்கையே தொழிலா இருக்கறவங்க அப்பப்ப இடம் மாறிடுவாங்க.. உதாரணமா எங்க ஊரு நித்யானந்தாவை எடுத்துக்குங்க, பெங்களூர், மதுரைன்னு ரவுண்ட்ஸ்ல இருப்பார்.. ஆனா படத்தோட வில்லனும், வில்லியும் அது பற்றி கவலை இல்லாம எனமோ கவர்மெண்ட் ஜாப்ல இருக்கற மாதிரி அசால்ட்டா இருக்காங்க.. ஆல்ரெடி அவங்களால ஏமாற்றப்பட்டவங்க அவங்களை பார்க்க வேண்டி வரும்னு தெரியாதா?


4. வில்லன் ஹீரோ முன்னால ஹீரோயினை ஏன் ரேப் பண்ணனும்? அதனால என்ன யூஸ்? ஹீரோ வில்லியை கில்மா போஸ்ல பார்த்ததை தவிர? வில்லனோட நோக்கம் ஹீரோ கிட்டே பணம் பிடுங்குவதுதான்.. அதுக்கு தன் மனைவியை ஏன் அடுத்தவங்க முன்னால ரேப்பனும்? ( அப்பத்தான் நாடகத்துல நம்பகத்தன்மை வருமோ?)


5. ஹீரோ வில்லியை ஃபாலோ பண்ணி மறுபடி அந்த ஹோட்டலுக்கு போறப்ப  பலியாடா மாட்டிக்கிட்ட அந்த புது ஆளை ரிவால்வரை காட்டி போடான்னா போயிடரான்.. அவன் கிட்டே எதுக்கு இல்லாத ராமாயணம் எல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கனும்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKYFkcLtCefHIbz8JDd1yUSFHaTE_bDUuIFLA2U9rjpKmKfzoY54NebBePSuq3XvjdT4z2637oFRushp0dYPS7kWIA03QitFmN_uZR02O3hrtWbR6aMBif4Wiq4NYefv9K4sfJgI6NLv8/s320/pachii.jpg



இதே படத்தை அழகாக சுட்டு பச்சைக்கிளி முத்துச்சரம் ஆக்கிய கவுதமிடம் சில கேள்விகள்


1. குமுதம் பேட்டில “ எனக்கு ஒரு புது நாட் கிடைச்சிருக்கு,, என் கேரியர்ல வித்தியாசமான படமா அது அமையும்னு புரூடா விட்டீங்களே..  ஹாலிவுட் படத்தோட இன்ஸ்பிரேஷன்னு சொன்னா குடும்ப கவுரவம் குறைஞ்சுடுமா?


2. படத்தோட டைட்டில்ல வசனம்-உங்க பேரு போட்டா போதாதா? கதை திரைக்கதைன்னு அநியாயமா உங்க பேரை போட்டிருக்கீங்களே?


3. சேரன் அல்லது பிரசன்னா மாதிரி சாஃப்ட் ஹீரோ பண்ணி இருந்தா  நல்லா எடுபட்டிருக்கும் கதையில் சரத்குமார் மாதிரி ஆக்‌ஷன் கம் பாடி பில்டரை போட்டதால அவர் வில்லன் கிட்டே அடி வாங்கற சீன்ல எல்லாம் ஆடியன்ஸ் கத்தறாங்களே..


http://www.thedipaar.com/pictures/resize_20110531182346.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. உருப்படியா தமிழ் இயக்குநர் செஞ்ச ஒரே விஷயம் அட்டகாசமான மெலோடி சாங்க் ரெடி பண்ணுனதுதான்.. உன் சிரிப்பினில்..  பாட்டு கலக்கல் ஹிட்டு..


2. ஆண்ட்ரியாவின் அமைதியான நடிப்பும், ஜோதிகாவின் மாறுபட்ட இரு வேறு கோணங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் அவர் காட்டும் முக பாவனைகள் மொழி, சந்திரமுகி வரிசையில் சேர்க்கும்.
 சி.பி கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் அனைவரும் பார்க்கலாம்..
படத்தோட திரைக்கதை ஆசிரியர்கள் - Stuart Beattie (screenplay), James Siegel (novel)
டைரக்டர்- Mikael Håfström
நடிப்பு - Clive Owen, Jennifer Aniston and Vincent Cassel