Ramesh Subburaj shared I Can't Believe It's photo.
1. டாக்டர், என் கணவர் சரியான உம்மணாம்மூஞ்சியா இருக்கார், அதுக்கு என்ன காரணம்னு செக் பண்ணுங்க..
யார் காரணம்னு கேளுங்க ,சொல்றேன்
------------------
2. டாக்டர், உங்க ஃபீஸ் ரூ 100 தானே, எதுக்கு ரூ 120 வாங்குனீங்க?
அரை மணி நேரம் வெயிட் பண்றப்போ ஹால்ல டி வி பார்த்தீங்களே அதுக்கு 20 ரூபா
----------------------------
3. காலைல வெறும் வயிற்றுல 4 டம்ளர் தண்ணீர் குடிக்கனும்
டாக்டர், ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சதும் அது எப்படி வெறும் வயிறு ஆகும்;?
------------------------------
4. டாக்டர், நான் சுத்த சைவம்
ஸோ வாட்?
மீன் மாத்திரை சாப்பிட மாட்டேன்
----------------------------
5. டாக்டர், 5ஆம் வார்டு பேஷண்ட் கிட்டே மட்டும் பாசமா பேசறீங்களே, ஏன்?
பாவம், கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்காரு
---------------------
6. டாக்டர், க்ளினிக் வாசல்ல ஒரு பவுன் = ரூ 25,600 என எழுதி இருக்கீங்களே, ஏன்?
தங்கப்பல் கட்ட வர்றவங்க கோல்டு மார்க்கெட் ரேட் தெரிஞ்சுக்காம இருக்கக்கூடாதே?
----------------------
7. அந்த பல் டாக்டர் ரொம்ப பொஸசிவ் டைப்னு எப்படி சொல்றே?
எந்த பேஷண்ட்டும் நர்சுங்க கிட்டே பல்லைக்காட்டி பேசிட்டு இருந்தா அவருக்கு பிடிக்காது
------------------------------
8. கண் டாக்டரை விட பல் டாக்டருக்கு வருமானம் ஜாஸ்தி.
எப்படி சொல்றே?
கண் ஒரு மனுஷனுக்கு 2 தான் இருக்கு, ஆனா பல் - 32 இருக்கே?
---------------
9. பல் டாக்டர் பரமசிவம் காதல் மேட்டர்ல கேடி போல
எப்படி சொல்ரே?
பல்லவ மன்னன் - பல லவ் கண்ணன் அப்டினு நேம் போர்டு வெச்சிருக்காரே?
-------------------
10. டாக்டர், நர்ஸோட அழகைப்பார்த்து உலகையே மறந்துட்டேன்
ஃபீஸ் குடுக்க மறந்துடாதீங்க
----------------
11. டாக்டர், நான் ஈ பட போஸ்டரை ஏன் க்ளினிக் உள்ளே வெச்சிருக்கீங்க?
பேஷண்ட் கிட்டே ஈன்னு பல்லை காட்டச்சொல்ல தேவை இல்லை.. போஸ்டரை காட்னாலே புரிஞ்சுக்குவாங்க
------------------------
12.கொக்கோ கோலா மதி - டாக்டர், என் தலைல பேனும், ஈறும் இருக்கு
ஏம்மா ,பல் டாக்டர்னா நான் பார்க்கற ஈறு வேற , இது வேற
----------------------
13. டாக்டர், எப்பவும் உங்க மனைவிக்கு கனகாம்பரப்பூ தான் வாங்கித்தருவீங்களா?ஏன்?
அதுதான் பல் ஈறு போல் கலரில் இருக்கும்
----------------------
14. அய்யய்யோ தமிழச்சி -டாக்டர், பச்சரிசி மாதிரி பல் வரிசை கொண்ட எனக்கு பல்லுல சொத்தையா?
ஆமா, ரேஷன் பச்சரிசியா இருக்கும்
--------------------------
15. டாக்டர் - 6 மாசத்துக்கு ஒரு தடவை டூத் பிரஸ் புதுசு யூஸ் பண்ணனும்
நான் டெயிலி புதுசுதான் யூஸ் பண்றேன் ( எல்லாமே!)
எப்படி?
இலவசமா விட்டுட்டே இருக்கும் அங்கிள் - வேப்பங்குச்சில தானே பல் துலக்கறேன்
-------------------------