Friday, May 18, 2012

ராட்டினம் -சினிமா விமர்சனம்



http://moviegalleri.net/wp-content/gallery/raattinam-movie-posters/raattinam_movie_posters_lagubaran_swathi_7789.jpg

ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு 65 மார்க் ஃபிகரை 2 வருஷமா லவ்வறான், ஆனா அவ கிட்டே சொல்லலை.. ஹீரோ கடுப்பாகி  ஹெல்மட் போட்டுட்டு ரோட்ல அந்த வழியா வர்ற முகம் தெரியாத ஒரு ஃபிகர்ட்ட ஐ லவ் யூ சொல்லி அவ கிட்டே திட்டு வாங்கி “ பார்த்தியா.. இந்த மாதிரி டக்னு காதலை சொல்லிடனும்”கறான்.. அப்புறம்  பார்த்தா அந்த ஹெல்மேட் பார்ட்டி தான் ஹீரோயின்.. பாப்பாவுக்கு 60 மார்க் தான்.. ஹீரோயின் தோழியை விட ஹீரோயின் ஒரு மாற்று கம்மியா இருக்கனும் என்பதே தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.

 எல்லா படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயின் பின்னால அலைஞ்சு அவளையும் லவ் பண்ண வெச்சுடறான்..  2 பேர் வீட்டுக்கும் மேட்டர் தெரியுது.. இடைவேளை.. 

 ஹீரோவோட அண்ணி கவுன்சிலர்.. அண்ணன் தான் அந்த பதவிக்கு காரணம்.. மேலிடம் மூலமா பிரஷர்.. ஹீரோயின் அப்பா பெரிய அரசியல்வாதி.. பயங்கர பிரஷர் குடுக்கறாங்க.. ஹீரோ , ஹீரோயின் ஓடிப்போய் மேரேஜ் பண்ணிக்கறாங்க.. ஆனா சேஸ் பண்ணி பிடிச்சிடறாங்க .. என்ன ஆச்சுங்கறதுதான் க்ளைமாக்ஸ்.. 

 படத்தோட இயக்குநர்தான் ஹீரோவோட அண்ணன்.. படத்தோட ஹீரோதான் உதவி இயக்குநர்.. ரொம்ப சவுகர்யமா போச்சு.. ஹீரோவுக்கு நடிப்பு சரியா வர்லைன்னாக்கூட அண்ணன் கேரக்டர் தம்பியை அடிக்கற மாதிரி 2 சீன் வெச்சு பளார் பளார்னு அடிச்சுக்கலாம்.. 

ஹீரோ பேரு லகுபரன்.. ரொம்ப சாதாரண , எளிமையன முகம்.. யதார்த்தமான நடிப்பு. மனதில் தங்கும்படி உழைப்பு..  காதல் காட்சிகளில் வேதியியல் சரியா வேலை செய்யலைன்னாலும்  நல்ல எதிர்காலம் இருக்கு.. 

 ஹீரோயின் பேரு ஸ்வேதா .. பாந்தமான முகம்.. வட்ட முகம்.. புருவம் ரொம்ப அடர்த்தி.. பாப்பாவுக்கு என் தனிப்பட்ட அட்வைஸ் அதை கொஞ்சம் ட்ரிம் பண்ணிக்கிட்டா  நல்லாருக்கும்.. பிளஸ் டூ படிக்கற மாணவி மாதிரி ரொம்ப இளமையா இல்லை.. கொஞ்சம் முதிர்ச்சி தெரியுது.. முகத்துல ..  சிரிக்கும்போதும் அழும்போதும் சம அழகு.. வெட்கப்படும்போது செம அழகு. கண்கள் ரொம்ப பெரிசு. கண் மட்டும் தான் .. ஆடை உடுத்தி வரும் நளினம், காட்சி அமைத்த விதத்தில் கண்ணியம் காட்டி சமீபத்தில் வந்த எந்த தமிழ்ப்படத்திலும் இவ்வளவு  கண்ணியமாக நாயகியை காட்டலை.. வெல்டன்.. 


ஹீரோவின் அண்ணியா வர்ற கேரக்டர் செம .. ஷேப்... எதிர்காலம் உண்டு.. ஹீரோவின் நண்பன், ஹீரோயின் அண்னன், இன்ஸ்பெக்டர் என பெரும்பாலான கேரக்டர்கள் புதுமுகங்களே.. அவர்களிடம் இயல்பாக நடிப்பு வாங்கிய இயக்குநருக்கு ஒரு சபாஷ்

http://l.yimg.com/bt/api/res/1.2/8MRT_77VWp8Rgcm0dGTZcQ--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/16485969033.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் பேங்க் வந்து அங்கே செல்லான் ஃபில்லப் பண்ற மாதிரி அதுல தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் எதார்த்தமான காட்சி


2. ஒரு பாடலில் ஹீரோ கடல் கரை ஓரம் நிற்க கடல் அலைகள் அவரை சுற்றி ஒரு வட்டம் போட்டு ஓடும் அழகுக்காட்சி


3. ஹீரோயின் தர்பூசணிப்பழம் ( கோஷாப்பழம்) சாப்பிடும் காட்சியில் அவரது உதட்டு நிறமும், பழ நிறமும் மேட்ச்சுக்கு மேட்ச்.. ( ஹீரோயின்  பக்கத்துல இருந்தா சேம் பிஞ்ச்-னு சொல்லி கன்னத்தை கிள்ளி இருக்கலாம்)

4. அசத்தும் நிலவு அப்படியே அழகு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கவிதை.. செம ஹிட் ஆகிடும்..  ஏத்து எத்து இது ஏற்றுமதி ஊரு பாடலும் ஓக்கே ரகமே 

5. நீட்டி முழக்காமல் படத்தை கனகச்சிதமாக 2 மணி நேரத்தில் முடித்தது ( கட் அடிச்சுட்டு போறவங்களுக்கு ரொம்ப ஈசி)

 6. எளிமையான காதல் கதை,கண்ணியமான நெறியாள்கை, நேர்மையான, யதார்த்தமான முடிவு



http://dinamani.com/Images/article/2011/8/17/cin4.jpg

இயக்குநரிடம்  சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஹீரோ ஹீரோயினுக்கு பரிசா குடுத்த ஃபோன் பற்றி பெண் வீட்டுக்கு தெரிஞ்சுடுது.. நான் பெண்ணோட அப்பாவா இருந்தா முதல் வேலையா அந்த ஃபோனை தூக்கி எறிஞ்சிருப்பேன்.. அல்லது அட்லீஸ்ட் சிம் கார்டையாவது கடாசி இருப்பேன். ஆனா ஹீரோயின் அப்பா ஏன் லூஸ் மாதிரி அந்த ஃபோனை ஒளிச்சு வைக்கறார்? ( அந்த ஃபோன் இருந்தாத்தானே ஹீரோயின் காண்டாக்ட் பண்ற ஒரே சோர்ஸ்?)

2. ஹீரோயின் வீட்டை விட்டு வெளீல  போகக்கூடாதுன்னு தடை விதிச்சு டென்ஷன், டெம்ப்போ எல்லாம் ஏத்தி விட்டு கேனத்தனமா எந்த அப்பாவாவது தன் மகள் காதலன் பரிசாக்குடுத்த செல் ஃபோனை அவ கண்ல படற மாதிரி ஹால்ல சோபா மேல வெச்சிருப்பாரா?


3. ஹீரோயினை சொந்தக்காரங்க வீட்டுக்கு லீவ்ல  ஒரு மாசம் கூட்டிட்டு போய் டேரா அடிக்கறப்ப ஹீரோயினால ஹீரோ கூட நோ காண்டாக்ட்.. ஏன்னு ஹீரோ மறுபடி கேட்கும்போது “ நீ வாங்கிக்குடுத்த செல் ஃபோன் எங்கேன்னு தெரியலை, காணோம்கறா ஹீரோயின்.. நான் கேட்கறேன்.. ஒரு மாசத்துல பக்கத்துல ஏதாவது ஒன் ருப்பி காயின் பூத்ல இருந்து கூட பேச முடியலையா? அட்லீஸ்ட் ஏதாவது ஒரு ஜொள் பார்ட்டி இருந்தான்னா அவன் கிட்டே ஃபோன் வாங்கி ஜஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் பண்ணி இருக்க முடியாதா?


4.  ஹீரோயின் படம் பூரா ரொம்ப பயந்த சுபாவமா கம்மிய குரல்ல மென்மையா பூனை மாதிரி பேசுது , ஆனா ஓப்பனிங்க் ஷாட்ல முத முத ஹீரோ கிட்டே பேசறப்போ  வைஜய்ந்தி ஐ பி எஸ் மாதிரி மிரட்டலான குரல்ல பேசுது ( 2 குரலும் வேற வேற, தொனியும் 100% மாறுது )


5. ஹீரோ ஓப்பங்க்ல தன் நண்பன் காதல்க்கு உதவறப்போ சைக்கிள்ல போறாரு.. தன் காதல்னு வந்ததும் பைக்ல போறாரு... அது ஏன்?


6.  ஓப்பனிங்க்ல அந்த 65 மார்க் ஃபிகர் தான் லவ்வற பையன் தண்ணி அடிக்கற பார்ட்டின்னு தெரிஞ்சதும் உடனே அவனை வெறுக்கறா.. இந்தக்காலத்துல 98 % பசங்க சரக்கு சங்கர லிங்கங்களாத்தான் இருக்காங்க.. இதெல்லாம் ஒரு காரணமா/ ?


7. வீட்ல ஏகப்பட்ட பிரச்சனையா இருக்கு... எல்லாருக்கும் காதல் விஷயம் தெரிஞ்சுடுது.. பலத்த காவல் வேற .. இந்த டைம்ல மிட் நைட்ல ஹீரோ பைக்ல வந்து  ஹீரோயின் வீட்டுக்கு முன்னால நின்னு  கேனம் மாதிர் ஹாரன் குடுக்கறார்..அப்போ ஹீரோயின் அப்பா போலீஸ்க்கு ஃஃபோன்  பண்ணி 2 நிமிஷத்துல வர வெச்சுடறாரே அது எப்படி? வா வா என்னை வந்து பிடிச்சுக்கோன்னு ஹீரோ அங்கேயே நிக்கறாரு.


8. ஹீரோவோட அண்ணன் கொலை செய்யப்பட்டது தெரிஞ்சதும் ஹீரோ மட்டும் தனியா இழவு வீட்டுக்கு போகாம ஹீரோயினையும் கூட்டிட்டே போறாரே? அடியாளுங்க வந்து கூட்டிட்டு போவாங்கன்னு தெரியாதா?


9 . ஹீரோயின் யூஸ் பண்ற  ஸ்கூட்டி ஓப்பனிங்க் ல ஆரஞ் கலர்.. அப்புறம் சில சீன்ஸ் சிவப்பு கலர், அப்புறம் மறுபடி ஆரஞ்ச் கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?


10. க்ளைமாக்ஸ் யதார்த்தம் ஓக்கே, ஆனா என்ன சூழ்நிலைல அப்படி ஆச்சுன்னு அவங்க தரப்பு விள்க்கத்தை இன்னும் விபரமா காட்டி இருக்கலாம். ( ஏன்னா படம் தான் 2 மணி நேரம் மட்டும் ஓடற சின்னப்படமா இருக்கே?)


http://www.haihoi.com/Channels/cine_gallery/Raattinam-Tamil-Movie-Stills-05_S_158.jpg
a


மனம் கவர்ந்த வசனங்கள்


1. யோவ்.. போலீஸ்.. நான் ஒரு டிக்கெட் தான்யா.. ஆனா நீ பொழைக்கற இந்த பொழப்புக்கு என் கூட வந்தீன்னா இதை விட அதிகமா சம்பாதிக்கலாம்



2. சார்... அந்த பொண்னுகிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்கோ?

 எதிர்த்து பேசறியா? பேண்ட்டை கழட்டுடா


 அய்யய்யோ, நான் ஜட்டியே போடலையே?


3. சார்..சார்.. என் வண்டியை இங்கே நிறுத்திட்டு போறேன்.. கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?


டேய்./. இது என்ன பைக் ஸ்டேண்டா-? போலீஸ் ஸ்டேஷனா?


4.  டிக்கெட் -ஊர்ல லவ் பண்றவங்க எல்லாரும் என் கிட்டே வந்துட்டுதான்யா இருக்கானுங்க..

5. இப்பவெல்லாம் பொண்ணுங்க நீட்டா டிரஸ் பண்றவங்களை கண்டுக்கறதே இல்லை -கசக்கு முசக்குன்னு ஒரு சர்ட், கிழிஞ்ச அல்லது கிழிச்சு விட்ட ஜீன்ஸ் பேண்ட் போட்டாத்தான் பாக்குதுங்க.


6. டேய்.. அது என்னை பார்த்து சிரிக்குதுடா..

 அந்த ஆண்ட்டி உன்னை பார்த்து மட்டும் இல்லை, ஊர்ல இருக்கற எல்லாரையும் பார்த்துத்தான் சிரிக்குது


7. பொண்ணை பார்த்தா உடனே ஐ லவ் யூ சொல்லனும்.. 2 நிமிஷத்துல ஓக்கேவா? இல்லையா?ன்னு ரிசல்ட் தெரிஞ்சுக்கனும்.. அதை எல்லாம் விட்டுட்டு பொழப்பை கெடுத்துட்டு இப்படி 2 வருஷமா அவ பின்னால சுத்திட்டு இருக்கியே?


8. இவளுக்காகவா இவ்ளவ் சீன் போட்டே?2 ரூபாக்கு குச்சி ஐஸ் வாங்கி குடுத்திருந்தாலே வந்திருப்பாளே?5 ரூபா சிகரெட்டை வேஸ்ட் பண்ணிட்டியே?






http://tamilmaxs.in/wp-content/gallery/raattinam-movie-press-show-function-photos/actress_-swathi_-at_-raattinam_-movie_-press_-show-10.jpg

9. சுமாரா இருக்கற என் பின்னாலயே பசங்க வர்றப்போ சூப்பர் ஃபிகரா இருக்கற உன் கிட்டே பசங்க வர மாட்டாங்களா?


10. அவனவன் ஆள் கையை காட்டிட்டா எல்லாரும் அமீர் கான் தான்


11. லவ் மேட்டர்ல எல்லாம் எடுத்தோமா? கவிழ்த்தோமா?ன்னு இருக்கக்கூடாதுடா.. முதல்ல பார்க்கனும், அப்புறம் சிரிக்கனும், அப்புறம் இம்ப்ரஸ் பண்னனும், கடைசியா டைம் பார்த்து லவ்வை சொல்லனும்..

 இதே எழவைத்தான் என் லவ் மேட்டர் ஓடிட்டு இருக்கறப்ப சொன்னேன்


12. பொண்ணை பெத்தா மட்டும் போதாது.. ஒரு வயசு வந்த பின் அவளை கண்காணிக்கனும்.. கண்ல விளக்கெண்ணெய் ஊத்தி பார்க்கனும்


13. அங்கே இருக்கறது எங்கண்ணண்டா..

 அதனால என்ன?

 அவன் கூட இருக்கறது ஒரு டிக்கெட்


 அப்போ உங்கண்ணன் தான் உன்னை பார்த்து பயப்படனும்.. நீ ஏன் பயப்படறே? வா, பில்லை அவன் தலைல கட்டலாம்


14. இப்போ நாம என்ன தான் அக்கறையா  பேசுனாலும் அது அவளுக்கு கேட்காது எதிரியாத்தான் நம்மை பார்க்கத்தோணும்


15. ஆம்பளை நமக்கே இவ்ளவ் பிரச்சனைன்னா அவளுக்கு என்ன பிரச்சனையோ? எப்படி இருக்காளோ? உடனே அவளை பார்க்கனும் போல இருக்குடா..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEwdwtmsJ1SHGv0RzvYq5zvFqOeX2kEf7X51CEXoqbjb-7UtMY7RSW5gq_vTzHRkguAOLi3JBjTx7Xk8RsBaLIXgw892G5lTiTaTeH4-4O_Ohc7CZID2nVkUwxi5JEWLPR5_QDBLwT8Sk/s1600/Raattinam+Heroine+Swathi+Cute+Photos+Stills+Tamil+Actress+Swathi+New+Photoshoot+images+(3).jpg

 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மதிப்பெண் - 42

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று



சி.பி கமெண்ட் - காதலர்கள் , பெண்ணை பெற்றவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய  படம்

ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் பார்த்தேன்





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyYAkGe7_uwjoPE6H9xHJP6fefe62qGdBJ4fomCYNVO6kCpNTB_UTP0fPcbOQSE8rYO6OigORlrrC44u2uwfTyV3VpT6FhfbltzjUeBSnzXUSGJA6OQ0hswYdDaUb-z1dl17W9qROTVJY/s1600/Raattinam+Latest+Movie+Stills+Photos+%25281%2529.jpg