Thursday, May 17, 2012

ஆனந்த விகடன் VS ஹாய் மதன் - பிரச்சனை - குற்றம் நடந்தது என்ன?

மதன் கேள்வி! விகடன் பதில்!

க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர். 


உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? 


ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான்.


 பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!


மேற்கண்ட கேள்வி - பதில் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம் பெற்ற படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் அனுப்பியுள்ள கடிதம்... 







...பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.


2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!


ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.


முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.


...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


- மதன்

தன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.


'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.


அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.


இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.


எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://nannool.in:8080/nannoolimages/product_images/2564.jpg


- ஆசிரியர்


எனது கேள்விகள் டூ ஹாய் மதன்  



1. சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடன் இணை  ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகும்போதும் இதே போல் தான் ஒரு சால்ஜாப்பு சொன்னீங்க.. அதாவது உங்க கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுதுன்னு.. அதனால இனி ஹாய் மதன் கேள்வி பதில் மட்டும் வரும், ஆனா மற்ற படைப்புகள் வராதுன்னு சொன்னீங்க.. யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது.. 




2. வெளியேறிய நீங்கள் சக  போட்டி பத்திரிக்கையான குமுதம் இதழில் போய் சேர்ந்தீங்க.. 2009 -ன் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் உடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில்  சந்தித்த நினைவு இருக்கிறதா? அதில் அந்த கூட்டத்தில் ஜோக் எழுத்தாளர்களுக்கு சில அட்வைஸ் பண்ணி இனி புதிய குமுதத்தை பார்க்கப்போகிறீர்கள் என சொல்லி எப்படி எழுத வேண்டும் என எங்களுக்கு சொல்லிக்கொடுத்து சில டாபிக் கொடுத்து அதை பேஸ் பண்ணி ஜோக்ஸ் அனுப்ப சொன்னிங்க.. 10 பேருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் கொடுத்து அந்த அட்ரஸ்க்கு அனுப்ப சொன்னீங்க.. ஆனா 4 வாரங்கள் மட்டுமே அது நடை முறையில் இருந்தது.. பிறகு அது மாறி விட்டது.. உங்கள் எண்ணம் பலிக்கவில்லை.. உங்கள் கைகளை குமுதம் நிர்வாகம் கட்டிப்போட்டது..




3. பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகள் அவர்களுக்கென்று சில கொள்கைகள்  வைத்திருக்கும்..  அனுசரித்துத்தான் போக வேண்டும்..  ஏன்னா நீங்க உலகத்துக்கு ஃபேமஸ் பர்சனாக இருக்க ஆனந்த விகடன் முக்கிய காரணம். 


4.  ஆனந்த விகடனில் இருந்து வெளியேறி குமுதம் இதழில் பணி ஆற்றி பின் ஏதோ சில காரணங்களால் அங்கே இருந்தும் வெளியேறிய நீங்கள் விண் நாயகன் என்ற   பத்திரிக்கையில் கவுரவ ஆசிரியராக பணி ஆற்றினீர்கள்.. புக் குவாலிட்டிதான்.. ஆனால் சேல்ஸ் 70,000.. தான். பின் கஷ்டப்பட்டு அதை ஒரு லட்சம் ஆக்கினீர்கள்.. ஆனால் தொடர முடியவில்லை.. அந்த புக் நிறுத்தப்பட்டது.. 




5. கமிங்க் டூ த பாயிண்ட் .. ஹாய் மதன் கேள்வி பதிலில் காலில் விழும் கலாச்சாரம் என்ற கேள்வி வரும்போதே உங்களுக்குத்தெரியாதா? இந்த மாதிரி தான் ஃபோட்டோ அட்டாச் பண்ணுவாங்கன்னு?  பொதுவாக சாதாரண வாசகனிடம் இந்த கான்செப்ட்க்கு எந்த ஃபோட்டோ வைக்கலாம் என்றால் கூட அவன் ஜெவை அடி பணியும் முட்டாள் சுயநல அமைச்சர்  ஃபோட்டோவைத்தான் ரெகமண்ட் செய்வான்.. அப்படி இருக்க  பல வருடங்கள் ஆனந்த விகடனில் பணணி ஆற்றிய  நீங்கள் யூகிக்க முடியவில்லையா? 




6.  ஆனந்த விக்டன் இதழை பார்த்தால் ஜெ தப்பா நினைச்சுக்குவார் என்பது சிறு பிள்ளைத்தனம்.. அவர் என்ன அழகிரியா? ஒண்ணும் தெரியாமல் இருக்க? நீங்கள் ஜெவிடம் “ இந்த மாதிரி மேட்டர்.. எனக்கும் அந்த ஃபோட்டோவுக்கும் சம்பந்தம் இல்லைன்னா   மேட்டர் ஓவர்.. அல்லது விகடன் ஆசிரியரிடம் ஒரு எழுத்துப்பூர்வமான  கடிதம் விளக்கம் வாங்கி ஜெவிடம் சேர்த்தால் பிரச்சனை ஓவர்.. 


7. ஆனந்த விகடன் 6 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது... உங்களை அத்தனை பேரிடம் சேர்ப்பித்து உங்களுக்கு சம்பளமும் தருது.. என்னமோ நீங்க தான் ஓனர் மாதிரி விக்டனை கேள்வி கேட்பது சிறு பிள்ளைத்தனம்.. 


8. இப்படி செய்தால் ஜெ விடம் அனுதாபம் கிடைக்கும், ஜெயா டி வியில் ஏதாவது எக்ஸ்ட்ரா ஸ்லாட் கிடைக்கும் என எதிர்பார்த்து நீங்கள் இருந்தால் அய்யோ பாவம்.. நீங்க ஏமாறப்போறீங்க.. 



http://www.koodal.com/cinema/gallery/events/2011/656/simran-for-teenage-bonanza-jaya-tv-pressmeet-stills_3_103823123.jpg

 டிஸ்கி - இது குறித்து வாசகர்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன