Friday, May 04, 2012

வழக்கு எண் 18 / 9 - சினிமா விமர்சனம்

http://www.cinemapoomi.ithayapoomi.org/images/articles/1332090993valaku%20en_002.jpg

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு பணக்கார வீட்ல வேலை செய்யற வேலைக்காரப்பொண்ணு மேல யாரோ ஆசிட் வீசிடறதா காட்டறாங்க .. அந்த வேலைக்காரப்பொண்ணை ஒருதலையா லவ்வின ஒரு பிளாட்ஃபார்ம் கேஸ் பையன் தான் அந்த வேலையை செஞ்சிருக்கனும்னு அவனை விசாரணைக்கு கூட்டிட்டு வர்றாங்க.. படத்தோட முதல் பாதி அந்தப்பையனோட ஃபிளாஸ் பேக்ல சொல்லப்படுது..

கிராமத்துல விவசாயக்குடும்பம் அவனுது.. விளைச்சல் இல்லாம கந்து வட்டிக்கு பணம் வாங்கிப்பையனைப்படிக்க வைக்கறாங்க.. ஒரு கட்டத்துல கடனை திருப்பிக்கட்ட முடியாத சூழ்நிலைல பணம் கொடுத்த ஆள் ரொம்ப நெருக்குனதால  பையன் வட மாநிலத்துல வேலை செய்ய கிட்டத்தட்ட விற்கப்படறான்.. 6 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சு கடனைக்கட்டி ரிட்டர்ன் வர்றப்போ அவன் பேரண்ட்ஸ் ஆக்சிடெண்ட்ல இறந்துடறாங்க.. இப்போ இவன் அநாதை.. 

 கையேந்தி பவன்ல வேலைக்கு சேர்றான்.. ரோட்டோர வாழ்க்கை.. அந்த வழியா போக வர இருந்த வேலைக்காரப்பெண்ணை  பார்த்து லவ்வறான்.. ஆனா பாப்பாவுக்கு அவனைக்கண்டாலே பிடிக்கலை.. ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை, நேர்மையான காதல் நெஞ்சங்களை பிடிக்காது.. பன்னாடைப்பசங்களை, பன்னாடுகளில் இருந்து இறக்குமதி செஞ்ச ஜீன்ஸ் போட்டுட்டு பொய் சொல்லி ஏமாத்துற பசங்களைத்தான் உருகி  உருகி காதலிப்பாங்க.. அவன் மேட்டரை முடிச்சுட்டு கழட்டி விட்ட பின் அம்மா, அப்பா பார்த்த பையனை கமுக்கமா மேரேஜ் பணி செட்டில் ஆகிடுவாங்க..




http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=2686&option=com_joomgallery&Itemid=140


அதனால நிராகரிக்கப்பட்ட வேதனைல அவன் தான் ஆசிட் ஊற்றி இருக்கனும்னு அவன் மேல கேஸ்.. 

 இப்போ இடை வேளை.. 2 வது கோணம்.. இப்போ அந்த வேலைக்காரப்பொண்ணு வேலை செய்யற பணக்கார ஃபிகரு போலீஸ் ஸ்டேஷன்ல  வாலண்ட்ரியா ஆஜர் ஆகி சாட்சி சொல்லுது.. அந்த பாப்பாவோட பார்வைல வழக்கின் இன்னொரு கோணம்.. 

அந்த பணக்கார ஃபிகரை கரெக்ட் பண்ண நல்ல நோட் பண்ணுங்க.. நோ காதல் ஜஸ்ட் கரெக்‌ஷன்... சிம்ப்பிளா சொல்லனும்னா சிம்பு- நயன் தாரா மாதிரி ட்ரை பண்றான்..  அவ கூட ஊரைச்சுத்தறப்ப... அவ கடல்ல குளிக்கறப்ப செல் ஃபோன்ல ஃபோட்டோ , வீடியோ எடுத்து வெச்சு அதை ஃபிரண்ட்ஸ்க்கெல்லாம் காட்டிட்டு இருக்கான்.. 

 அந்த மேட்டர் அந்த ஃபிகருக்கு தெரிஞ்சுடுது... தூ-ன்னு கேவலமா துப்பிட்டு கட் பண்றா.. அந்த கோபத்துல அந்தப்பையன்  அவ மேல ஆசிட் ஊற்ற வீட்டுக்கு வந்தவன் கதவை திறந்த வேலைக்காரி மேல ஊத்திடறான்.. 

 இதுதான் கேஸ்.. இதுக்குப்பிறகு இந்த கேஸை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் என்ன பண்றார்.. ஆசிட் ஊத்துன பையனோட அம்மா ஒரு கேஸ்.. அதாவது  ஒரு மினிஸ்டரோட சின்ன வீடு.. அவ கிட்டே பணம் வாங்கிட்டு, கேஸை திசை திருப்பி அந்த ஏழைப்பையனை பிரெயின் வாஸ் பண்ணி குற்றத்தை ஒத்துக்க வெச்சு தண்டனை வாங்கி குடுக்கறார்.. 

 அதுக்குப்பின் என்ன ஆகுது என்பதை வெண் திரையில் காண்க.. 

கமல் நடிச்ச விருமாண்டி படத்தோட, மற்றும் ,ROSHOMAN போல் ஒரே சம்பவத்தை இரு வேறு நபர்களின் பார்வையில்சொல்லும்  திரைக்கதை உத்தி தான் இதுலயும்.. ஆனா அபாரமான உழைப்பு.. பக்காவான ஸ்கிரிட் நாலெட்ஜ் இல்லாம இதை பண்ண  முடியாது...

 தன்னோட வழக்கமான பாணியான  உண்மைச்சம்பவம்.. நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி.. அதை வெச்சு டெவலப் பண்ற சாமார்த்தியம் இதை பக்காவா யூஸ் பண்ணி இருக்கார்

ஹீரோவாக வரும் புதுமுகம் ஸ்ரீ அலட்டல் இல்லாத நாயகன்.. எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கிறது.... பல காட்சிகளில் நிஜமாவே இவருக்கு இது முதல் படம் தானா ? என அசத்துகிறார். அழுகைக்காட்சிகளில் கூட ரசிக்க வைக்கிறார்..





http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-1.jpg
ஹீரோயின் வேலைக்காரியாக வரும் ஊர்மிளா மகந்தா கிட்டத்தட்ட பாவனா அல்லது அனன்யா மாதிரி முகபாவனை, நடிப்பு எல்லாம்.. மிக அமைதியான அண்டர் ஆக்டிங்க் நடிப்பு.. படம் முழுக்க அவர் வரும் போர்ஷனில் ஒரு சீனில் கூட பிசிறு தட்டாத நடிப்பு.. 


பணக்கார ஃபிகராக வரும் மனீஷா ஓக்கே.. படத்தில் ஓரளவு கிளு கிளு கேரக்டர் இவர் மட்டும் தான்.. டீன் ஏஜ் ஃபீலிங்க்சை மிக அழகாக வெளிக்கொணர்கிறார்.


ஹீரோவுக்கு கூட மாட ஹெல்ப் செய்யும் அந்த கூத்துப்பட்டறைப்பையன்  சின்னச்சாமியின் நடிப்பு கிளாசிக்.. பல இடங்களில் அப்ளாஸ் வாங்கிகிறான்.. 

 பணக்காரப்பெண்ணை  கரெக்ட் பண்ணும் அந்த பையனை பற்றி சொல்ல பிரமாதமாக ஏதும் இல்லை.. கொடுத்த வேலையை கரெக்டா செஞ்சு இருக்கார்.. அவ்ளவ் தான்..  .


இன்ஸ்பெக்டராக வரும் குமார்வேல் நடிப்பும் பிரமாதம்.. அசால்ட்டாக ஒரு போலீஸின் தெனாவெட்டை, நரியின் நய வஞ்சகத்தை முகத்தில் கொண்டு வருகிறார்..


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=4336&option=com_joomgallery&Itemid=141


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் ( அப்ளாஸ் அள்ளிய இடங்கள்)



1.  கந்து வட்டிக்கு  பணம் வாங்கிய விவசாயி பணம் வசூலிக்க ஆள் வந்ததும் வீட்டில் ஒளிந்து கொள்வதும், தன் மனைவியை தகாத வார்த்தையில் கேள்விகள் கேட்ட ஆளை அரிவாளுடன் பாய்வதும் பின் அடிப்பட்டு வீழ்வதும் உருக்கமான காட்சிகள்

2. பவர் ஸ்டாரை  நக்கல் அடிப்பது போல் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டிங்க் சீன் செம காமெடி.. இறுக்கமான திரைக்கதையில் ஒரு ரிலாக்ஸ்.. ..

3. கையேந்தி பவன் ஓனர் காலடியில் ஃபிளாட் ஃபார்ம் இளைஞன் காதலியின் ஃபோட்டோ.. அதை அவருக்குத்தெரியாமல் எடுக்க 2 பேரும் செய்யும் ஐடியா சிம்ப்பிள் அண்ட் சூப்பர்.. 

 4.  பணக்கார ஃபிகர் சைக்கிள் பஞ்சர் ஆனதும் காரில் வந்த கரெக்ட் பண்ற பையன்  அசடு வழிவதும், அப்போ கடைக்காரர் சைக்கிள் டியூப்பை காத்து பிடுங்கி விட்டு அந்த சத்தத்தை நக்கல் சத்தமாக காட்டுவதும் காமெடி

5. ஃபிகர் கால் பண்ணா “ ஏய் மாமோய் நிங்க எங்கே இருக்கீங்க ?” என்ற ரிங்க் டோனையும், ஃபிரண்ட்ஸ் கால் பண்ணா “ அய்யோ ராமா.. என்னை ஏன் இந்த கழிசடைப்பசங்களோட எல்லாம் சேர வைக்கறீங்க? ‘ என்ர கவுண்டமணீயின் காமெடியை  ரிங்க் டோனாக வைக்கும் சாமார்த்தியம் செம.. 

6. திரைக்கதையில், எடிட்டிங்கில் . ஒளிப்பதிவில் அதகளம் பண்ணி விட்டு இசையில் அடக்கி வாசித்தது குட் ஒன்.. 


7. 'வழக்கு எண் 18/9' படத்தை வழக்கமான சினிமா விடியோ கேமராவில் எடுக்கவில்லை. Canon EOS 7D என்ற கேமராவிலேயே எடுத்துள்ளார்கள். இது ஒரு சாதனை. - தருமி
 



http://cinecentral.in/wp-content/uploads/2012/04/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg

வலம் இருந்து இடமாக இரண்டாவதாக இருக்கும் ஃபிகர் (கையில் செல் ) படத்தில் வரும் 2 ஹீரோயின்களை விட அழகு ஹி ஹி 


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அம்மா , அப்பா வீட்ல இல்லாதப்ப அந்த பணக்காரப்பையன் முதன் முதலா வீட்டுக்கு வந்து ஏதோ டவுட்  கேட்கறேன்னு சொல்றப்ப “ அம்மா வந்த பின் வா-ன்னு சொல்லாம எப்படா வருவான்னு காத்துட்டு இருக்கற மாதிரி ஏன் அவனை உள்ளே வரச்சொல்லனும்? ( அவளுக்கு அவன் மேல காதல் ஏதும் இல்லை.. பின் ஏன்?)

2. பொதுவாவே லேடீஸ்க்கு விழிப்புணர்வு ஜாஸ்தி.. அந்த ஃபிகரு பாடம் சொல்லித்தர்றப்போ அவன் செல் ஃபோன்ல அவ தொடைக்கு நேரா செல்லை வெச்சு 4 நிமிஷம் வீடியோ எடுக்கறான்.. அந்த லூசு.. அதெல்லாம் தெரியாம பேசிட்டு இருக்கு.. அவ்ளவ் கேனையா? இந்தக்கால பொண்ணுங்க?

3. அந்தப்பையன் செலவுக்குப்பணம் குடுன்னு அம்மாவை மிரட்றான்... எதுக்குன்னு கேட்டா சொல்லலை.. அப்புரம் பார்த்தா அவன் பர்த்டே பார்ட்டிக்காம்.. அதை ஏன் சொல்ல தயக்கம்? பணக்காரப்பசங்க 20000 ரூபா செலவு பண்ணி பார்ட்டி கொண்டாடுறது சகஜம் தானே?


4. படத்துல ரொம்ப முக்கியமான மைனஸ்.. ஃபிகரை கரெக்ட் பண்ண ஐடியா பண்ற எந்தப்பையனாவது ஃபிகரோட பேரை போடாம ஐட்டம்னு செல்ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வைப்பானா? அந்த ஃபிகர் அவன் கூடவே எப்போ பாரு குடி இருக்கு.. தன் ஃபோன் நெம்பர் என்ன பேர்ல ஸ்டோர் பண்ணி இருப்பான்னு பார்க்க மாட்டாளா? அந்த பயம் அந்தப்பையனுக்கு வராதா?

5. அந்த பணக்கார ஃபிகர் அந்தப்பையன் கூட பீச்சுக்கு போனதும் ஐ கடல் அப்டினு பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி.. பொம்பளையையே பார்க்காதவன் அனுஷ்காவை பார்த்த மாதிரி குதிப்பது ஏன்?அவளும் சிட்டில தானே வசிக்கறா? இதுக்கு முன்னால கடலை பார்த்ததில்லையா?


http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120407154122000000.jpg

 6. குரூப் ஸ்டடினு சொல்லிட்டு வீட்டை விட்டு  வந்த  பெண் எங்காவது கடல்ல குளிக்குமா? விதி படத்துல தான் விபரம் இல்லாம பூர்ணிமா பாக்யராஜ் குளிச்சுதுன்னா இத்தனை வருஷம் கழிச்சும் அதே படத்தின் அதே சீனை அட்டக்காப்பி அடிக்கனுமா?

7. கடல்ல அவ குளீக்கறப்ப அவன் பப்ளிக்கா செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறான்.. அந்த ஃபிகரு  எது வேணாலும் எடுத்துக்கோன்னு பெப்பரெப்பேன்னு குளிக்குது. 

8.  அம்மா கிட்டே குரூப் ஸ்டடின்னு பொய் சொல்லிட்டு வர்றவ கைல ஒரு நோட், ஒரு புக் தான் எடுத்துட்டு வருவா.. நைட்டி, மாத்திக்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வருவாளா?

9. மொபைல் ஃபோன்ல சார்ஜ் போடறேன்னு அந்தப்பையன் சொல்லி ரூம்ல அவ கண் முன்னால செல் ஃபோனை வெச்சுட்டு போறான்.. அந்த பேக்கு டிரஸ் மாத்தி செல் ஃபோன்ல பதிவாகரது தெரியாம இருக்கு.. 

10.. செல் ஃபோன் அந்த இடத்துல ஸ்க்ரீன்  பாப்பாவைப்பார்த்த மாதிரி வெச்சுட்டு போறான்.. குப்புற திருப்பி வெச்சாத்தானே படம் பிடிக்கும்?



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/15313162973.jpg

11. ஆல்ரெடி பிளான் பண்ணி ரூம் போட்டவன் அவளுக்குத்தெரியாம செல் ஃபோனை ஃபிக்ஸ் பண்ணி இருக்கலாம்.. 

 12. செல் ஃபோன்ல சீன் படம்  பார்த்து அவ ரசிக்கறா.. அவளை சூடேத்தி மேட்டர் முடிக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கலை.. அவன் அவ்ளவ் கேனையா?

13.  தன் செல் ஃபோன்ல அவளை கில்மா போஸ்ல எடுத்த ஸ்டில் இருக்குன்னு தெரிஞ்ச பையன் எவ்ளவ் ஜாக்கிரதையா இருப்பான்? 2 மெம்மரி கார்டுல பதிவு பண்ணி ஒரு காப்பியை வீட்ல வெச்சிருப்பான்.. மதுரை டாக்டர் ரியாஸ் அப்டித்தான் பண்ணுவாராம்.. ஆனா இந்த லூஸ் ஏன் அவ கிட்டே கொடுத்துட்டு வர்ற மாதிரி அவளுக்கு முன்னாலயே கார்ல வெச்சுட்டு மெக்கானிக்கை பார்க்க போறான்?

14. முதல் முதலா சந்தேகம் கேட்க வரும்போது அந்தப்பையன் கொண்டு வரும் புக் காலேஜ் புக். அவன் டவுட் கேட்கற கெல்வி பிளஸ் ஒன் ல வர்ற கேள்வி.. ஆனா 2 பேரும் படிக்கறது  பிளஸ் டூ


15. ஹீரோவை போலீஸ் ஏமாத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குது,.. அவங்க குடுத்த வாக்குப்படி ஹீரோயினுக்கு மருத்துவச்செலவுக்கு பணம் தர்லை.. அந்த மேட்டரை ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயிண்ட்ட சொல்றான்,, ஓக்கே அதை ஏன் ஹீரோ கிட்டே சொல்லலை? அவன் கோர்ட்ல மறுபடி மாத்தி ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கலாமே?




http://mimg.sulekha.com/tamil/vazhakku-enn-18-9/stills/vazhakku-enn-18-9-pictures-078.jpg

16. கோர்ட் வாசல்ல ஹீரோயின் வந்தமா  இன்ஸ்பெக்டர் மேல ஆசிட் ஊத்துனமா?போனோமா?ன்னு இல்லாம ஒரு லாங்க் லெட்டர் குடுக்கறா.. அந்த பேக்கு இன்ஸ்பெக்டர் அதை  படிச்சுட்டு இருக்கு.. அது வரை வெயிட் பண்ணி நிதானமா ஆசிட் ஊத்துறா.. 

 17.. படத்தோட மெயின் மேட்டர் எல்லாத்துக்கும் காரணமான அந்த பையனுக்கு தண்டனை தந்த மாதிரியே த்தெரில.. அந்த பெண்ணூக்கு அவன் மேல கோபமே வர்லையா? அவன் தண்டனை வாங்கறது அழுத்தமா பதிவு பண்ணப்படலை.. அது மாபெரும் மைனஸ்.. சுருக்கமா சொல்லனும்னா இன்ஸ்பெக்டர் சசிகலா மாதிரி..  அந்தப்பையன் ஜெ மாதிரி. பெங்களூர் கோர்ட்ல  சசி டிராமா போட்டு தண்டனையை வாங்கிட்டா சரி ஆகிடுமா? உண்மை குற்றவாளீக்கு தண்டனை வேண்டாமா?

18. திரைக்கதையில் பின் பாதியை முதலிலும், முன் பாதியை பின்னாலும் காட்டி இருக்கலாம்.. ஏன்னா பின் பாதில அவனவன் கிளு கிளு கில்மா  மாதிரி பார்த்து அந்த ஏழைப்பையன் தாக்கத்தை, பாதிப்பை மறந்துடறாங்க.. அதனால அதை முதல்ல காட்டி ஏழைப்பையன் ஃபிளாஸ் பேக்கை 2 வதா காட்டி இருந்தா இன்னும் உருக்கமான பாதிப்பை மக்களிடம் உருவாக்க முடியும்..


http://www.mysixer.com/wp-content/gallery/vazhakku-enn-189/vazhakku-enn-18-9-11.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ஏண்டி.. நேத்து உன் ஆளோட படம் பார்க்கப்போனியே.. எப்படிடி இருந்துச்சு>

படத்தை எங்கே பார்க்க விட்டான்? அது பெரிய கூத்துடி..


2. உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா?

 ம் ம் ம்

 தெரியுமா? தெரியாதா? குழப்பாதே/!


3. ஏண்டா.. அடி வாங்கிட்டு உன்னால எப்படி சிரிக்க முடியுது?

 அது கூட பெரிசு இல்லை... அந்த ஹீரோ கடைசி வரை  தன் லவ்வை ஹீரோயின் கிட்டே சொல்லவே இல்லை.. செம சொதப்பல்


4.  இவ்ளவ் திறமையை வெச்சுக்கிட்டு  ஏண்டா இந்த மாதிரி பிளாட்ஃபார்ம் வேலைக்கெல்லாம் வர்றே?

 ஹூம்.. விதி தான்.. ஒரு நாள் கூத்துன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே..

5.  கலையை ரசிக்கற வயசான பெருசுங்க எல்லாம் மண்டையை போட்டுட்டே இருக்குங்க.. இனி என்னாகப்பொகுதோ கூத்துத்தொழிலுக்கான எதிர்காலம்.. ?


6. ஆம்பளை இல்லாத வீட்ல பொட்டைப்புள்ளையை அப்படித்தான் வளர்த்தி ஆகனும்..


7. அவன் தான் கஞ்சா விக்கற பார்ட்டியா இருக்கும்.

 எப்படி கண்டு பிடிச்சே?

 அதோ போலீஸ் அவன் கிட்டே பிச்சை எடுத்துட்டு இருக்கு பாரு

8. அந்த அக்கா என்ன கலெக்டர் வேலையா பார்த்துட்டு இருந்துது? சட்டு புட்டுனு விசாரிக்க? டிக்கெட் தானே? என்ன?னு போய்க்கேட்க?

9.  டேய்.. ஃபோட்டோவுல என்னை கட் பண்றியா? அவளை கட் பண்றியா? ஓஹோ/.. என்னை கட் பண்ணிட்டு அவளை மட்டும் வெச்சுக்கறியா...


10. யார்? என்ன?னு விசாரிக்காமயே அந்த சின்னப்பையனுக்கு அவ உதவி செய்யறாடா.. எங்கம்மா கூட அப்படித்தான்.. அவ எனக்குகிடைச்சா எங்கம்மாவே கிடைச்ச மாதிரி..


http://www.thehindu.com/multimedia/dynamic/00954/18_CP_still_jpg_954603f.jpg

11. எப்படிடா போய் சொல்ல சொல்றே.. அவங்கம்மா இன்னும் என்னை விளக்கு மாத்தால அடிக்கலாமா? செருப்பால அடிக்கலாமா?ன்னு நினைச்சுட்டு கோபமா இருக்காங்க.. எப்படி லவ்வை சொல்ல?


12. உனக்குத்தான் பொய் சொல்ல வராதே.. எப்படி வெளில போய் வேலை கேப்பே?

13.  ஃபிகரு -  நான் சின்ன வயசுல  இருந்தே சைக்கிள்ல தான் ஸ்கூல் வர்றேன்..

டகால்டி - அதான் இவ்ளவ் நல்லா ஓட்டறீங்க.. ஹி ஹி


14. எங்கம்மா அப்பா கிட்டே செல் ஃபோன் வாங்கிக்குடுத்தாத்தான் நல்லா படிப்பேன்னு ஒரு பிட்டை போட்டேன்..

15.  ம்க்கும்.. இவ்ளவ் கண்டிஷன் போடறாங்களே.. அவங்க காலத்துல செல் ஃபோன் இருந்திருந்தா அவங்க யூஸ் பண்ணாமயா இருப்பாங்க?

16.   என்னது? வாத்து வரும்னு மொட்டை மாடில வெயிட் பண்ணுனா அவங்க ஆத்தா வருது..?


17.  ஃபிகரு - ( மனசுக்குள்) ஹூம்.. சரியான மொக்கையா இருக்கான்.. நம்பிட்டான்..


டகால்டி - தக்காளி.. ஏண்டி கில்மா எம் எம் எஸ் பார்த்துட்டு சிரிச்சுட்டு சமாளீக்கறியா?

18.  நீங்க. என் பர்த்டே பார்ட்டிக்கு வரனும்..

 ம் ரொம்ப முக்கியம்.

19.  டேய் ,மச்சான்.. போன மாசம் தானே டா பர்த்டே பார்ட்டி வெச்சே? மாசா மாசம் ஒரு டைம் பிறந்த நாள் வருமாடா?

20. ஏண்டா ராஸ்கல்? பிளஸ் டூ படிக்கற பொண்ணை மிட் நைட்ல பார்ட்டிக்கு கூப்பிடறியே.. உனக்கு என்ன தைரியம்?


http://citricice.com/wp-content/uploads/2012/02/Vazhakku-Enn-18-9.jpg


21. வசதியான பையன் தானே.. ஓக்கே டெல்டி..

எப்படிடி?

 இப்போதைக்கு ஓக்கே சொல்லு.. அப்புறம் பிடிக்கலைன்னா கழட்டி விட்டுடலாம்.. ( அடங்கோ)


22.  வீட்ல பொய் சொல்லிட்டு வந்துட்டேன்.. இதுதான் என் முதல் பொய்..

 எனக்கு இதுதான் 2வது பொய்ங்க ஹி ஹி


23.  மினிஸ்டருக்கு அவ லாபம்.. அப்போ எனக்கு?  எப்படியும் அவ மினிஸ்டர்ட்ட போவா... அவர் நமக்கு கால் பண்ணுவாரு.. அப்போ டீலை முடிச்சுக்கலாம்..

24.  அந்த பொண்ணு ஒரு டிக்கெட்டுய்யா..  இப்போ ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட்..  விளக்குமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஹூம்


25. கொலைக்கேசையே ஒண்ணும் இல்லாம ஆக்குன ஆள் நீங்க.. இது ஒருசாதாரண கேஸ்.. நீங்க நினைச்சா முடியாதா?

 26. மேடம்.. இனிமே ஏதாவது பிரச்சனைன்னா டைரக்ட்டா என் கிட்டேயே வரலாம்.. மினிஸ்டரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க.. வாங்க நான் ஹெல்ப் பண்றேன் ஹி ஹி


http://www.accesskollywood.com/akd-images/preview/vazhakku-enn-movie-preview.jpg


எதிர்பார்க்கப்படும்  ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று

 சி,பி கமெண்ட் - டீன் ஏஜ் பெண்களூக்,கான விழிப்புணர்வுக்கருத்துள்ள படம் என்பதால் அனைத்து பெண்ணை பெற்றவர்களூம் பெண்ணுடன் காண வேண்டிய படம்.. அது போக மசாலா படங்கள் பார்த்துச்சலித்த  வித்தியாசமான நல்ல படங்களை பார்க்கும் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .. 

 ஈரோடு தேவி அபிராமியில், ஆனூரில், அண்ணாவில் படம் ஓடுது...




http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/p480x480/564936_10150693164320666_128920130665_9833491_520616476_n.jpg

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள்.