Wednesday, May 02, 2012

ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா.. அலப்பறை அபிசேக் மாட்டினாரு - சி டி ரிலீஸ். ஜூ வி கட்டுரை

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அபிஷேக் சிங்வி, இப்போது தலைப்புச் செய்தி ஆகிவிட்டார். அதுவும் கிளுகிளு செய்தி​யாக!         


சி.பி - அப்போ அவர் பேரு இனிமே ஜிஞ்சனுக்கு சிங்க்வீ?

உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்​திலும்  முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் என்கிற முறையில் தினமும் மீடியாக்களில் இவரது முகத்தைப் பார்க்கலாம். மாநிலங்கள் அவையின் உறுப்பினர் என்கிற வகையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடா​ளுமன்ற நிலைக் குழுவின் தலைவர். 



முதன்முதலில், ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பேசியதோடு, 'லோக்பால்’ என்ற வார்த்தையைக் கொடுத்தவர் இவருடைய அப்பா. அதனால்தான், லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் குழுவில் இவர் இடம் பிடித்தார். இவரைத்தான் சீண்டிப் பார்த்துள்ளது ஒரு சி.டி.


அபிஷேக் சிங்விக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு சேம்பர் உள்ளது. இங்கு ஒரு மொபைல் (போன்) கேமராவைப் பொருத்தி சிங்வியின் நடவடிக்​கைகளைப் படம் பிடித்து இருக்கிறார், அவரது டிரைவர் முகேஷ்குமார். சிலரது உதவியுடன் கம்ப்யூட்டரில் அந்தக் காட்சிகளைப் பதிவிறக்​கம் செய்து சி.டி-யாக​வும் தயாரித்து உள்ளார். அதைக் காட்டி சிங்வியை மிரட்டவும் செய்திருக்கிறார்.



சிங்வி ஒரு பெண்ணோடு உரையாடுவது மட்டுமின்றி உற​வாடும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் மிகத்தெளிவாக இல்லை என்​றாலும், சில அங்க அசைவுகளும் ஆடையைக் களையும் காட்சிகளும் இருக்கிறது. 


இந்த வீடியோ தன்னிடம் இருப்பது குறித்து, கடந்த மார்ச் மாதமே எஸ்.எம்.எஸ். மூலம் முகேஷ்குமார் தகவல் கொடுத்திருக்கிறார். தனக்குக் குறைவான ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு சிங்வியின் நாய்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார் முகேஷ். அதனாலேயே, கேமராவைப் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து சி.டி-யாக தயாரித்து உள்ளார்.


அபிஷேக் சிங்வி இந்த விவகாரத்தில் போலீ​ஸுக்குப் போகவே, பத்திரிகைகளுக்கும் சில அரசியல்வாதிகள் கைக்கும் சி.டி. போய்ச் சேர்ந்தது. உடனே, சிங்வி டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'இந்த சி.டி. காட்சிகளை பத்திரிகைகள் வெளியிடவோ... ஒளிபரப்பு செய்யவோ கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். கூடுதலாக, தன்னுடைய டிரைவர் பிளாக்மெயில் செய்ததையும், இது சம்பந்தமாக டெல்லி போலீஸில் புகார் கொடுத்து இருப்பதையும் மனுவில் குறிப்பிட்டார்.


 இதையட்டி, இந்த சி.டி-யை ஒளிப்பரப்பத் தடை விதித்ததோடு, சி.டி-க்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கோர்ட் உத்தரவு போட்டது. இந்த சி.டி குறித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஒருசில பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதன்படி, பத்திரிகை நிறுவனங்கள் ஏப்ரல் 17-ம் தேதி சி.டி-யை நீதிமன்றத்தில் ஒப்படைத்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த சி.டி-யில் இருந்த காட் சிகள் யுடியூப் மூலமாக ஒளி பரப்பானது. இதனை சிங்வி தரப்பு எத்தனையோ முயற்சி செய்து ரிமூவ் செய்தாலும், மீண்டும் மீண்டும் அப்லோடு செய்யப்பட்டது. 


அதனால், உலகம் முழுவதும் லட்சக்​கணக்​கான பார்வை​யாளர்கள் இந்த ஆபாசத்தைக் கண்டு களித்தனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எந்த பத்திரி​கையும், தொலைக்காட்சியும் தொடவே இல்லை. ஏனென்றால், நீதிமன்றத் தடை இருந்தது​தான்.


நிலைமை அளவுக்கு மீறிப்போகவே, அபிஷேக் சிங்வி தனது நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, சி.டி குறித்து அவரே அறிக்கையும் கொடுத்தார். இதன்பிறகுதான் இந்த சி.டி விவகாரம் அச்சுக்கு வந்தது. மறுநாள் தொடங்க இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வெடிக்கலாம் என்று கருதியே, சிங்வி முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது.



''இந்த வீடியோ என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இதில் உள்ள காட்சிகள் ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது  டிரைவர் பிளாக்மெயில் செய்தது குறித்து காவல்துறையில் ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்று விளக்கம் சொல்கிறார் சிங்வி.


''மத்தியத் தடய அறிவியல் துறைக்கு இந்த சி.டி.யை அனுப்பி, உண்மையைக் கண்டறிய​வேண்டும். அப்​போது​தான் சி.டி-யில் இருப்பது உண்மையா அல்லது ஜோடிக்கப்​பட்டதா என்பது தெரியும். அதை ஏன் செய்யவில்லை?'' என்று கேட்கிறார் பி.ஜே.பி. தலைவர் அருண்ஜெட்லி. 


ஆனால், ஏனோ இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி. இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பவே இல்லை. சிங்வியின் தந்தை எல்.எம். சிங்வியும் பிரபலமான வழக்கறிஞர், அரசியல்வாதி. அவர் முதல் முறையாக பி.ஜே.பி. சார்பில்தான் மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த அபிமானம்தான் சிங்வியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.


மகனுக்குத் தந்தை ஆற்றும் உதவி!