Monday, April 30, 2012

நரசிம்மன் ஐ பி எஸ் (Achante Anmakkal ) - மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4vyAdVeSudoVg4rxdKGw351LI7OZXI5STlc_0_b24iEdSkK9e3jKbKUPNiPQVdK3Z3qPe0sMT8ZTrxk7EW9v6b_oVx8F4-_cxnImT5-010Mj4zbFVtV5IkgNlbmwazHvvpN-le2EmzCw/s1600/Achante_Aanmakkal.jpg

கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் கதையை படமா எடுக்க டைரக்டர் நினைச்சிருக்காரு.. ஆனா என்ன பிரச்சனை வந்ததோ டக்னு கதையை டைவர்ட் பண்ணி ஆர்டினரி கொலை கேஸ் இன்வெஸ்டிகேஷனா மாத்திட்டாரு.திரைக்கதைல அண்ணன் இன்னும் நிறைய கத்துக்கனும்..

ஒரு ஊர்ல ஒரு  மாமனார்.. அவருக்கு அமைஞ்ச 2 மாப்பிள்ளைகளும் போலீஸ் ஆஃபீசர்ஸ். மாமனாரும் ஒரு போலீஸ் ஆஃபீசர் தான்.. அவர் ஒரு லாக்கப் டெத்ல ஒரு கைதியோட மரணத்துக்குக்காரணமானதா குற்றம் சாட்டப்படறார்.. அந்த  பொய்க்கேஸ்ல இருந்து எப்படி 2 மாப்பிள்ளைகளூம் விடுவிச்சாங்க என்பதே படத்தோட ஒன் லைன்.. டைட்டில் ஓக்கேவா? அதாவது மாப்ளைங்க 2 பேரும் மாமனார்க்கு மகன்கள் போல .. 

சரத்குமார் தான் ஹீரோ.. ஓப்பனிங்க் ஷாட்லயே  ஆள் ஜம்முன்னு ப்ளூ ஜீன்ஸ் , ஒயிட் சர்ட், கூலிங்க் கிளாஸ்னு கலக்கறார்.. ஆனா அவர் ஃபைட் போட ஆரம்பிச்சா  அதை முடிக்க 20 நிமிஷம் ஆகுது.. உஷ் அப்பா முடியல.. காது வலிக்குது.. சும்மா  ஃபைட் போட்டா பரவாயில்லை.. ஹேய் ஹேய் ஏய் ஏய்னு பேக் கிரவுண்ட் மியூசிக் வேற..

நெடுமுடி வேணுதான் மாமனார் கேரக்டர்.. நல்ல அனுபவம் வாய்ந்த நடிப்பு.. ஆனா போலீஸ் யூனிஃபார்ம்ல ஏன் ஆள் பம்முறார்னு தெரியல..  என்னமோ அவர் தப்பு பண்ணுன மாதிரியே ஒரு கில்டி ஃபீலிங்க்ஸ்டோட நடிச்சிருக்கார்.. ( ஒரு வேளை கதையை மாத்திட்டாங்களோ..)

http://cdn4.supergoodmovies.com/FilesFive/narasimhan-ips-6c113f88.jpg


மேக்னா ராஜ் தான் சரத்க்கு ஜோடி..  2 டூயட் இருக்கு. 1 அழுகாச்சி சீன் இருக்கு.. வேற சீன் ஏதும் இல்லை.. யுவராணி ஹீரோவுக்கு கொழுந்தியாவா வர்றார்.. நோ யூஸ். ( அதாவது படத்தின் கதைக்கோ திரைக்கதைக்கோ அவர் நோ யூஸ்னு சொல்ல வந்தேன் ஹி ஹி )


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  கோவைல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பாலக்காடு தான்..  ( அப்போ பாலக்காட்ல ஒருத்தன் தப்பு செஞ்சா அவன் ஓடி ஒளீயற முத இடம் பா கோவையா?)


2.  ஒரே மாசத்துல அந்த குற்றவாளீகளை நான் அரெஸ்ட் பண்ணிடுவேன்

 போ போ எல்லாரும் பஸ் ஸ்டேண்ட்ல தான் வெயிட்டிங்க்.. போய் அரெஸ்ட் பண்ணிட்டு வந்துடு..


3.  என் புருஷன் மப்புல இருக்காரா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கு.. பேரு கொக்கு டெஸ்ட். அதாவது அவரை ஒரு காலை தூக்கி ஒரு கால்ல நிக்க சொல்லி 10 வரை எண்ணூவேன்// 8 வரை நின்னா அவர் ஒரு ஆஃப் குவாட்டர் மட்டும் தான் அடிச்சுருக்கார்னு அர்த்தம்


4.  உங்களூக்குத்தெரியாதா? ஒரு சுப்பீரியர் ஆஃபீசர் இன்சார்ஜ்ல இருக்கற கைதி இறந்துட்டா ஸ்பாட்ல அவர் இல்லைன்னாலும் அதுக்கான மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி அவருக்கு உண்டு

5.  தப்பை எப்படி செய்யனும்? அதை எப்படி மறைக்கனும்னு போலீஸ் தான் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கும்.. அதனால இந்த கொலையை போலீஸ் தான் செஞ்சிருக்கும்..

6.  ஒரு கேஸ் துப்பறீயும் போது இன்னொரு கேஸ் துப்பு துலங்கறது ஒண்ணூம் பெரிய அதிசியம் இல்லை.. மாமூலா நடக்கறதுதான்


7.  இந்தப்பொண்ணை இதுக்கு முன்னால எங்கயாவது பார்த்திருக்கீங்களா?

 ம்.. ஆனா இவ்வளவு பக்கத்துல இல்லை..


http://moviegalleri.net/wp-content/gallery/narasimhan-ips-movie-stills/sarathkumar_meghana_raj_narasimhan_ips_movie_stills_1723.jpg


 இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ்.. , அவரிடம் சில கேல்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு சீன்ல சரத் தன் சகலை கிட்டே நான் பாலக்காட்ல இருக்கேன்.. நீ கோவைல இருக்கே.. அதனால அந்த விசாரனையை நீ பார்த்துக்கோ அப்டிங்கறார்.. ஆனா அவர் ஃபோனை வெச்ச அடுத்த சீன்ல யே சகலை கூட நடந்து பேசிட்டு இருக்கற மாதிரி சீன் வருது.. எப்படி?

2.  சரத் பெரிய ஆக்‌ஷன் ஹீரோ தான் ஆனா அதுக்காக கூலிங்க் கிளாஸ் கூட கழட்டாம 24 பேரை உதைக்கறது ரொம்பவே ஓவர்.. கண்ணே தெரியாது.. எப்படி ஃபைட் போடுவாரு?

3.  லாட்டரி டிக்கெட்சை பதுக்கி போற வேனை சரத் மடக்கி பிடிக்கறார்.. அப்போ வேன்ல இருக்கற ஆளூங்க சும்மா கீழே குதிச்சா போதாதா? டாய்னு கத்திக்கிட்டே அந்த லாட்டரி டிக்கெட்ஸை எல்லாம் ஏன் வானத்துக்கு தூக்கி எறியறாங்க? மறுபடி அடுக்க சிரமம் ஆச்சே?

4. படம் ஆக்‌ஷன், த்ரில்லர், இன்வெஸ்டிகேஷன்னு ஸ்பீடா போற டைம்ல சரத் மலையாளம் கத்துக்கற போர்ஷனை காட்ட ஒரு பாட்டு, சம்சாரத்தை சமாதானப்படுத்த ஒரு பாட்டு தேவையா?


5. படத்தில் ஒரு சீன்ல மார்ச் 20 ல எலக்‌ஷன் வெச்சிருக்கறதா டயலாக் வருது.. டென்த் , பிளஸ் டூ எக்சாம் எல்லாம் முடிஞ்ச பின் எப்பவும் மே மாசம் தானே பொதுத்தேர்தல் வரும்? ( கேரளாவுல மாறி இருந்தா டப்பிங்க்ல மாத்தி இருக்கலாமே/)



http://nowrunning.com/content/movie/2012/NarasimhanIPS/stills/NarasimhanIPS6.jpg
6. போலீஸ் ஒரு சீன்ல பொட்டிக்கடைல கில்மா புக்ஸ் சீஸ் பண்ணுது.. ஓக்கே ஆனா எவனாவது பப்ளீக்கா என்னமோ வெத்தலை வெச்சிருக்கற மாதிரி ஓப்பனா கடை வாசல்ல கில்மா புக் போட்டு விப்பானா? மறைவா வெச்சிருப்பான்.. அப்புறம் கஸ்டமர்ஸ் கேட்ட பின் எடுத்து தருவான்

7. லாட்டரி டிக்கெட் பிரின்ட் பண்ணுன கேஸ்ல பிரஸ் ஓனர் அண்னனிடம் விசாரிக்கறப்ப மாறூவேஷத்துல விசாரிக்கறாங்க.. பிரஸ் ஓனர் நெம்பர் வேணூம்.. நாங்க அவனோட அண்ணன்ங்க அப்டினு சொன்னதும் அவன் எப்படி ஏமாறுவான்? ஏன்னா அதுக்கு முந்தின நாள் தான் போலீஸ் வந்து விசாரிச்சப்போ எனக்குத்தெரியாதுன்னு சொன்னான்.. அப்பொ அவன் என்ன சொல்லனும்? எனக்கு தெரியலை. உங்க ஃபோன் நெம்பர் குடுங்கனு வாங்கி வெச்சிருந்து அனுப்பி இருக்கனும்.. 

8. பெரிய இடத்துப்பெண்ணை அந்த பொடியன் லவ் பண்றதா ஒரு கிளைக்கதை வருது.. அந்த கோடீஸ்வர ஃபிகரு கழுத்துல 10 ரூபா பாசி, 35 ரூபா தாவணி போட்டுட்டு பரிதாபமா வருது.. ( ஆன ஃபிகர் சூப்பர் தான் பணக்காரக்களை இல்லீங்கொவ்)


9. மம்முட்டி நடிச்ச சி பி ஐ டைரி குறிப்பு படம் மாதிரி எடுக்கனும்னு நினைச்சு வேணும்னே தேவை இல்லாம ஃபிளாஸ் பேக் சீன்ஸ் மட்டும் 18 தடவை வருது... ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்பிட மாட்டாங்க?

10.  ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைல தேவை இல்லாம எதுக்கு செண்டிமெண்ட், அழுகை காட்சிகள்.. அதுவும் கதைக்கு சம்பந்தம் இல்லாம சர்த் மனைவி தன் அப்பா பற்றி அழுவது?

http://thebollywoodgallery.com/wp-content/uploads/2012/02/Meghana-Raj-Hot-In-Narasimhan-IPS-10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஆடை வடிவமைப்பு அருமை.. அதுவும் குறிப்பா சரத்க்கு ஜோர்.. அவர் அன்யூனிஃபார்மில் வரும் அனைத்துக்காட்சிகளும் கம்பீரம்..


2. பட போஸ்டர், விளம்பரம், புரோமோட் வேலைகளீல் இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போல் பார்த்துக்கொண்ட சாமார்த்தியம் அழகு.. டப்பிங்க் படம்னு நிறைய பேருக்கு தெரில..


3. இடைவே:ளை வரை கொஞ்சம் இழுத்தாலும் அதுக்குப்பின் திரைக்கதை ஸ்பீடா போவது பிளஸ்

4. படத்தின் கதை வாய்ப்பு கொடுத்தும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் அனைவரையும் கண்ணியமாக காட்டியது

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhksttrsgFqdZdesa8-1N3HrBA-etqJoDeZLQAHclUIoYmjJ8X-6mxA10J2JxCUVnkhlShsB_asI2ghfvLtr72VrBEIE6rZOLTHzWjQgBXmRFmmvq3qlp_OP4p-U1r7fFBqvKNKfPx8800/s1600/Megna_Raj_Hot_Stills_11.jpg


சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பட விரும்பிகள், இன்வெஸ்டிகேஷன் டைப் படங்களை ரசிக்கும் பெண்கள் பார்க்கலாம்..


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு விகடன் நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்.

நரசிம்மன் ஐ பி எஸ் ஆன் லைனில் ஓ சி யில் பார்க்க 

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்

http://cinemabucket.blogspot.in/2012/03/achante-aanmakkal-new-malayalam-full.html


http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0050.jpg