நான் அப்போ எட்டாங்கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல் நிலைப்பள்ளி.. எங்க வீடு பிராட்டி அம்மன் கோவில் அருகே இருந்துச்சு.. எங்க வீட்டுக்குப்பின்னால ஆண்டவர் பவர் பிரஸ் என ஒரு அச்சகம் இருந்துச்சு.. ஸ்கூல்க்கு போக 3 கிமீ நடக்கனும். ஃபிரண்ட்ஸ் சிலர் சைக்கிள்லயும், சிலர் பஸ்லயும் அவங்கவங்க வசதிக்கு தக்க படி போய்ட்டு இருந்தாங்க.. டெய்லி அப் &; டவுன் நடக்க எனக்கு ரொம்ப போர் அடிச்சுது.. அதுக்கு ஒரு ஐடியா கண்டு பிடிச்சேன்.. ஆண்டவர் பவர் பிரஸ்ல ராஜாமணி அண்ணன் இருந்தார்.. அவரை ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்கிட்டேன்.. அங்கே பைண்டிங்க்கு வரும் லயன் காமிஸ், முத்து காமிக்ஸ் , அம்புலி மாமா, ரத்னபாலா, பால மித்ரா போன்ற புக்ஸ் எல்லாம் டெயிலி ஒண்ணா எடுத்துட்டு போய் வாக்கிங்க் ரீடிங்க் பண்ணிட்டு இருந்தேன்..
ஆர்ச்சி, ஸ்பைடர்மேன், இரும்புக்கை மாயாவி என்னை கவர்ந்த கதா பாத்திரங்கள்.. துப்பறியும் சாம்பு, சங்கர்லால் ரொம்ப பிடிக்கும்.. 3 வருடங்கள் ஏகப்பட்ட புக்ஸ் படிச்சாச்சு. பிளஸ் ஒன் படிக்கறப்ப சென்னிமலை லைப்ரரில தென்றல் என்ற பெயர்ல ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சோம்.. அதுக்கு கூட்டாளிங்க அய்யப்பன் ( இவர் பின்னாளில் ஆனந்த விகடன் சொல் வனத்தில் 6 கவிதைகள் , கணையாளியில் 4 கவிதைகள் எழுதினார்), அப்புறம் அங்குராஜ்.. இருவரும் கவிதை கார்னரை கவனிச்சுக்கிட்டாங்க. இதுல அங்குராஜ் பற்றி சொல்லியே ஆகனும்.. அவர் எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது போலவே இருக்கும்.. இவர் தான் புக்ல தென்றல் கை எழுத்துப்பிரதில எழுதுவாரு.. அங்குராஜ் காதல் கவிதைகள் எழுதுவாரு.. அய்யப்பன் மரணம், வறுமை இந்த மாதிரி வெரைட்டியா எழுதுவாரு.. அதுல பாதி கவிதைகள் எனக்கு புரியாது.. நான் பனிப்பூக்கள் என்னும் தொடர் கதை, இது மழைக்காலம் என்னும் கட்டுரைத்தொடர் எழுதி வந்தேன்
மாதம் ஒரு முறை வெளியிட்டோம்.. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை வெளீயிட அந்த புக்கின் கடைசியில் 10 பக்கங்கள் இடம் விட்டோம்.. வாரா வாரம் ஞாயிறு அன்று லைப்ரரி போய் யாராவது கமெண்ட்ஸ் போட்டிருக்காங்களா?ன்னு ஆர்வமா பார்ப்போம்.. 6 மாசம் இப்படியே போச்சு.. சக்திவேல் என்னும் நண்பர் வேர்கள் என்ற பெயரில் புதுசா ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பிச்சார்.அதே போல் ராஜ் மோகன் என்பவர் இதயம் என்னும் புக் ஆரம்பித்தார்.. இப்போ போட்டி வந்தாச்சு ஒரே லைப்ரரி 3 புக்ஸ் .. இதயம் ராஜ் மோகன் பற்றி ஒரு தகவல் உயிரின் எடை21 அயிரி என்னும் படத்தில் விதவை ஹீரோயினின். குழந்தையாக ஒரு மழலை வருமே அந்த பாப்பா ராஜ்மோகனின் வாரிசு..
பிளஸ் டூ படிக்கறப்ப ஸ்கூல்ல லஞ்ச் டைம்ல க்ளாஸ் போர்டுல கவிதை எழுதறது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.. அவனவன் அவன் ஆள் பேர் சொல்லி அவளுக்கு புரியற மாதிரி கவிதை எழுத சொல்லுவான். நானும் போர்டுல ஏதாவது கிறுக்குவேன். அப்போ எல்லாம் ஜோக் எழுதற ஐடியா எல்லாம் வர்லை. கவிதை, கட்டுரை, தொடர் கதை மட்டும் தான்..
கே எஸ் சண்முக சுந்தரம் என் பிளஸ் டூ கிளாஸ் மேட்.ஆள் செம ஷோக்குப்பேர்வழி. இவர் யார்னா தென்றல் பத்திரிக்கையோட தூண்களான அங்குராஜ், அய்யப்பன் இவங்களோட அண்ணன்.. ( மூவரும் சகோதரர்கள்) ஈரோட்ல தேவி ஹாஸ்பிடல்ல ( சவீதா பஸ் ஸாப் அருகே, மாமன் பிரியாணி ஸ்டால்) ஒரு மெடிக்கல் ஷாப் ஓனர் அவர்.. அவர் கே பாக்யராஜின் தீவிர ரசிகர்.. பாக்யா வார இதழ் ரெகுலரா வாங்குவார்.. அதுல அட்டைப்பட கமெண்ட் போட்டி வைப்பாங்க.. அதுல கலந்துக்குவார்.. மாசம் 4 புக் வருதுன்னா அதுல 2 புக்ஸ்ல இவர் கமெண்ட் வந்துடும்..
நாங்க எப்போ அவர் கடைக்குப்போனாலும் அந்த புக்கை காட்டி அவர் கமெண்ட்டை சிலாகிச்சு ஏதாச்சும் சொல்வார்.. ஆரம்பத்துல எனக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்ல. போகப்போக கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு.நாங்களே வாலண்ட்ரியா அவரை கேட்க ஆரம்பிச்சோம். ஒரு தடவை பேச்சு வாக்குல அவர் ஒரு சவால் விட்டார். பாக்யா வார இதழ்ல உன்னால ஒரு அட்டைப்பட கமெண்ட் வர வைக்க முடியுமா?ன்னார். நான் சிரிச்சுக்கிட்டே இதெல்லாம் நமக்கு ஜூஜூபி மேட்டர் அப்டின்னேன் ( ஜூஜூபின்னா என்ன அர்த்தம்னு எனக்கு சரியா தெரியாது.. இருந்தாலும் சொல்லி வெச்சேன்.)
அப்போ இருந்து 6 மாசங்கள் தொடர்ந்து முயற்சி செஞ்சும் ஒண்ணு கூட வர வைக்க முடியல.. அப்புறமாத்தான் பாக்யாவை நுணுக்கமா கவனிக்க ஆரம்பிச்சேன். இத்தனை நாளா சித்தன் போக்கு சிவன் போக்குன்னு எழுதிட்டு இருந்தேன்.. இப்போதான் அவங்க என்ன ஸ்டைல்ல கமெண்ட்சை பிரசுரம் பண்றாங்கன்னு நோட் பண்ணேன்.. அப்புறம் அதே ஸ்டைல்ல எழுத ஆரம்பிச்சேன். 4 வது வாரமே ஒரு கமெண்ட் வந்தது.
இப்போ நான் பாக்யா சர்க்குலேஷன் எவ்ளவ்னு கடைக்காரர்ட்ட விசாரிச்சேன்.. அப்போ 3 லட்சம் சொன்னாங்க.. 3 லட்சம் பேரு இதை பார்க்கறாங்க அப்டின்னு அவர் கிட்டே சொன்னேன்.. அப்போ அவர் சொன்னாரு. இதென்ன பெரிய அதிசயம்? ஆனந்த விகடன்,குமுதம் இந்த ரெண்டும்தான் லீடிங்க் புக்ஸ்.. 8 லட்சம் டூ 10 லட்சம் சேல்ஸ்.. அதுல வர வைக்க முடியுமா?ன்னு சவால் விடும் தோரணைல கேட்டார்.. ஓக்கே வர வைக்கறேன்னு சொல்லிட்டு நேரா லைப்ரரி போனேன்..
ஒரு ரஃப் நோட்ல எல்லா வார இதழ்கள், மாத இதழ்கள் முகவரியை குறிச்சுக்கிட்டேன்.. எல்லா புக்ஸும் என்ன ஸ்டைல்ல படைப்புகள் வெளியிடறாங்கன்னு நோட் பண்ணேன்.. லைப்ரரிக்கு வர்றவங்க எந்த படைப்புகளை அதிகம் படிக்கறாங்கன்னு பார்த்தேன்..
சினிமா, அரசியல் கட்டுரை முதல் இடம் பிடிச்சது-- சிறுகதைகள் சிலர் தான் படிச்சாங்க.. அதிகம் பேர் வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதியை படிச்சாங்க. கிசு கிசு செய்திகள் விருப்பமா படிச்சாங்க.. அப்போவே முடிவு செஞேன் , நம்ம படைப்புகள்ல சினிமா மேட்டர் , நடிகைகள் சம்பந்தப்பட்ட யூகங்கள்,. கிசு கிசுக்கள் இருக்கனும்னு..
எஸ் பி ராமு விவேக் பப்ளிகேஷன்ஸ் ல சூப்பர் நியூஸ் ல ஒரு ஜோக் போட்டி வெச்சிருந்தார். அந்த டைம்ல நக்கீரன் கோபால் வீரப்பன் விவகாரத்துல அரசுத்தூதரா போன நேரம்.. அதை வெச்சு ஒரு ஜோக்
இண்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்க எல்லாம் அரிவாள் மீசையோட இருக்காங்களே..ஏன்?
அரசுத்தூதர் வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம்.. ( இதுதான் நான் எழுதி பிரசுரம் ஆன முதல் ஜோக்)
இந்த ஜோக் முதல் பரிசு வாங்குச்சு ரூ 15 பரிசு .. ( பொதுவா சன்மானத்தொகை கம்மியா இருந்தாலும் போட்டில கலந்துக்கிட்டு ஜெயிக்கற சந்தோஷம் தான் டாப்பா இருக்கும்)
ஆனந்த விகடன் ல ஜோக் வர வைக்க தலை கீழா நின்னு தண்ணி குடிக்க வேண்டியதா இருந்தது
ஏன்னா அந்த காலத்தில் பாஸ்கி, ( ஜெயா டி வி அரி கிரி அசெம்ப்ளி ) மிமிக்ரி சேகர், சிம்பு தேவன் ( இம்சை அரசன் 23ம் புலிகேசி இயக்குநர்) இந்த மாதிரி ஆட்கள் தான் ரெகுலரா எழுதிட்டு இருந்தாங்க.. வி சாரதி டேச்சு என்பவர் ஜோக்ஸ் 2 பக்கம் வரும்.. வார்த்தை ஜாலம் தான் இருக்கும், ஆனா சிரிப்பு அதிகம் வராது.. ஆனாலும் தொடர்ந்து அவருது வந்துட்டே இருந்துச்சு.. நான் ஆனந்த விகடன் ஸ்டைல்ல பல ஜோக்ஸ் அனுப்பினேன் எதும் வர்லை.. 6 மாசம் வாரா வாரம் 20 ஜோக்ஸ் அனுப்புவேன். ம்ஹூம் வந்த பாட்டை காணோம்.. அப்புறம் 6 மாசம் கழிச்சு அத்தி பூத்தது போல் ஒரு ஜோக் வந்துச்சு .. அப்போ அத்திப்பூ ஆறு மாசத்துக்கு ஒரு தடவை தான் பூக்குமா?ன்னு கேட்கக்கூடாது. சும்மா ஒரு பேச்சுக்கு..
அந்த ஜோக்
கோர்ட்டில் ஜட்ஜ் - மணிபர்சை அடிச்சது நீங்க தானே?
இல்லை யுவர் ஆனர், மணி பர்சை பாலு அடிச்சான். கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்
இந்த ஜோக் வந்தது சென்னிமலை சி .பி செந்தில்குமார் என்ற பெயரில். ஒரே சந்தோஷம் .. காம்ப்ளிமெண்ட்ரி காப்பி வீட்டுக்கு வந்துச்சு . செம ஜாலி தான்.. ஒரு படைப்பாளியின் உச்ச பட்ச சந்தோஷம் அவன் பெயரை அச்சில் பார்ப்பதும், அவனது படைப்புகளை மற்றவர் அதுவும் முகம் தெரியாதவர்கள் பாராட்டுவதும் தான். சன்மானம், காசு பணம் எல்லாம் சும்மா.. அங்கீகாரம் தான் ரொம்ப முக்கியம்..
அந்த சந்தோஷத்துல ஒவ்வொரு சண்டேயும் ஜோக்ஸ் எழுத ஆரம்பிச்சேன்.. வாரா வாரம் 50 ஜோக்ஸ்.. இந்த ஜோக்குக்கான KNOT எங்கே பிடிப்பது? அதுக்கு ஒரு ஐடியா செஞ்சேன்.. எல்லா புக்ஸூம் வாசிப்பது.. அதுல வர்ற ஏதாவது ஒரு வரில இருந்து ஜோக் எடுப்பது.. அல்லது ஆல்ரெடி வந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி உல்டா பண்ணுவது.. சில ஜோக்ஸ் படிச்சா சிரிப்பே வராது.. அதை சிரிப்பு வர்ற மாதிரி கொஞ்சம் மாற்றி போடுவது என ஆரம்பிச்சேன்.
இந்த சமயத்துல சில நண்பர்கள் வெறும் ஜோக்னே போய்ட்டு இருந்தா உன் படைப்புத்திறன் மழுங்கிடும் , இலக்கியப்பத்திரிக்கைகளில் கவனம் செலுத்துன்னாங்க.. சரின்னு பல பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பிச்சேன்.. கணையாளி -ல வந்த என் முதல் கவிதை..

ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.
சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.
பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.
நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.
ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.
தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.
பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.
இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.
குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.
நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
ஒரு இதயம் இருக்கும்.
அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?
- தொடரும்..
டிஸ்கி - 1 அட்ரா சக்க லே அவுட் டிசைன், டைட்டில் டிசைன் வீடு சுரேஷ் குமார் செஞ்சு குடுத்தார், அவருக்கு நன்றிகள்.. மற்ற எல்லா வேலைகளையும் தமிழ் வாசி பிரகாஷ் செஞ்சிட்டு இருக்கார்.. அவருக்கும் நன்றிகள்.. ஏதாவது ஆலோசனைகள், மாற்றங்கள் வேணும்னா சொல்லுங்க..
டிஸ்கி -2 இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்
டிஸ்கி -3 - அட்ரா சக்க லே அவுட்ல காலியான இருக்கைகள் கொண்ட சினிமா தியேட்டர் ஏன்?னு கேட்டதுக்கு சுரேஷ் சொன்னாரு.. நீ போற படம் எல்லாம் மொக்கையாத்தானே இருக்கு.. அந்தப்படத்துக்கு கூட்டம் எப்படி வரும்?னு கேட்டு என்னை கேவலப்படுத்திட்டாரு சுரேஷ் அவ்வ்வ்
டிஸ்கி 4 - நேற்று மாலை 6 மணிக்கு சேட்டிங்க் வந்து லே அவுட் மாற்றித்தர்றேனு வாக்கு குடுத்து சரக்கு அடிச்சு மட்டை ஆன விக்கி தக்காளிக்கு என் கண்டனங்கள்.. ஹி ஹி ஹி