Thursday, January 12, 2012

குறும்படம் எடுக்கும் குறும்பு பதிவர்கள் - ஒரு கலக்கல் காமெடி டிஸ்கஷன்

http://tamilmovies.skynyxonline.com/myimages/actress/anjali/anjali.jpg

ஒரு நாள் காலை உணவு உலகம் சாரோட போன் அடிக்குது. தூக்கக்கலக்கத்தோடவே போன் எடுத்து பேசுறார்.

உணவு உலகம்: ஹலோ! யார் பேசுறது?
சிபி: சார், நான் சிபி செந்தில்குமார் பேசுறேன்.
 உணவு உலகம்: என்னப்பா! என்ன விஷயம்?
சிபி: சார், பொங்கல் லீவுல  நான் ஒரு குறும்படம் எடுக்க போறேன் சார். அதை உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் போன் பண்ணேன்.

உணவு உலகம்: அப்பிடியா!  ரொம்ப நல்ல விஷயம்தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இப்பதான் கைக்கூடி இருக்கு. வாழ்த்துக்கள்.

சிபி: நன்றி சார்.
உணவு உலகம்: பணம்லாம் ஏற்பாடு பண்ணிட்டியா?
சிபி: பண்ணிட்ட்டேன். சம்பளத்துல மிச்சம் பிடிச்சு சீட்டு போட்டு 1 லட்சமும். மிச்சத்துக்கு ஆபீசுல  லோன் போட்டுக்கலாம்னு இருக்கேன் சார்.  

உணவு உலகம்: பணம் ஓக்கே. கதை?
சிபி: கதைலாம் கூட ரெடி...
சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட ஆபிசர்
உணவு உலகம்: நீ எப்படி கதையை ரெடி பண்ணி இருப்பேன்னு எனக்கு தெரியும். குறும்படம் எடுக்க சொன்னால்..., எதாவது நடிகையை வச்சு குறும்பு படம் எடுத்தாலும் எடுப்பே. நீ ஒண்ணு பண்ணு. ஈரோடுல ஒரு கல்யாண மண்டபத்தை புக பண்ணு.
சிபி: கல்யாண மண்டபமா? எதுக்கு?
உணவு உலகம்: நான் நம்ம பதிவர்களையெல்லாம் கூட்டிக்கிட்டு ஈரோடு வந்துடுறேன். அங்க வச்சு கதை டிஸ்கஷன் வச்சுக்கலாம்.
சிபி: (இவரு நம்மளை வச்சு பதிவர் சந்திப்பு தேத்த்லாம்னு பார்க்குறாரோ) சரிங்க சார்.
உணவு உலகம்: எல்லா பதிவர்களும் வெவ்வேற இடத்துல இருந்து  வருவதால், சாப்பாடெல்லாம் சூப்பரா அரேஞ்ச் பண்ணிடு. மனோ ஆமைக்குஞ்சு வறுவல் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கான். அதை ரெடி பண்ணிடு. அப்பிடியே விக்கிக்கு பிடிச்ச பிராண்ட் சரக்குலாம் வாங்கி வச்சுடு.
சிபி: சரிங்க சார்.


மண்டபத்துல கசமுசான்னு ஒரே சத்தம். என்ன இங்க சத்தம்ன்னு உணவு ஆபிசர் சார் சத்தம் போடுறார்.
மனோ: இங்க பாருங்க சார், எல்லாரும் வேலைவெட்டி, புள்ளைகுட்டிலாம் விட்டுட்டு சிபிக்கு ஹெல்ப் பண்ணாலாம்ன்னு வந்தால், அவனை ஆளை காணோம் 
விக்கி: கில்மா படம் பார்க்க போயிருப்பானோ?
ஆபீசர்:சேச்சே அப்படியிருக்காது. புதுப்படம் எதாவது ரிலீஸாகியிருக்கோ?
சௌந்தர்: இல்லை சார்.
ஆபீசர்: உனக்கெப்படி தெரியும். எல்லா பயலுகளும் இப்போ விமர்சனம் போட ஆரம்பிச்சுட்டீங்களா? என் பொண்ணு கல்யாண வேலை முடியட்டும். அப்புறம் பெல்ட்டை கழட்டிட வேண்டியதுதான்.

டொக் டொக்

சிபி வந்துட்டான் போல. கதவு திறந்துதான் இருக்கு வா. உள்ள வா சிபி.
எலேய், இங்க நாங்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ எங்கேடா போய் தொலைஞ்ச மூதேவி இது மனோ 

ஹி ஹி  பதிவு ஒண்ணு போட்டுட்டு வந்தேன்.அதான் லேட்டு.

ஆபீசர்: என்ன நடந்தாலும் காரியத்துலயே கண்ணா இருப்பியே. 
சரி சரி கதை டிஸ்கஷனை ஆரம்பிக்கலாம்.

மனோ: சார்,
 
ஆபீசர்: வெயிட், முதல்ல கருண், சௌந்தர், ராஜாலாம் கதையை சொல்லட்டும். என்ன இருந்தாலும் வாத்தியாருங்க. நம்மைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சு இருக்கும்

கருண்: கதை ஒரு பஸ்ஸுல ஆரம்பிக்குது. பஸ்ஸுல ஒரு காலேஜ் பையன், ஒரு பொண்ணை டாவடிக்குறான். 
சௌந்தர்: டேய் கருண்உன் சொந்த கதையை நிப்பாட்டு.
கருண்: அடப்பாவி சௌந்தர் இது ஒண்ணும் என் சொந்த கதை இல்லை. இப்படி ஏடாக்கூடமா சொல்லி பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்க விட்டுடாதே.

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/Anjali_Stills_004.jpg
சௌந்தர்: அப்பிடி வா வழிக்கு இனி பேருந்து, கடைக்கண்-ன்னு சொல்வியா?
ஆபீசர்: வாத்தியாருங்களாச்சே நம்மைவிட விஷயம் தெரியும்ன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா ஸ்கூல் பிள்ளைங்களை பார்த்து பார்த்து சின்ன பிள்ளைகளாட்டம் சண்டை போடுறீங்களா? இனி நான் சொல்றவங்க தான் வாயை திறக்கனும் மத்தவங்கள்லாம் அமைதியா இருக்கனும். சூர்யஜீவா நீ சொல்லு..,
சூர்யஜீவா:சார், கூடங்குளம் பிரச்சனை தான் இப்போ ஹாட் டாபிக் நாம அந்த சப்ஜெக்ட் எடுத்டுக்கலாம். 
சிபி கொஞ்சம் டெர்ரராகி... சார் கூடங்குளமா? அங்கெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்களே.

சூர்யஜீவா:  கதை சொல்ல போற நான் தமிழன், கதை ஓக்கே பண்ணும் நம்ம பதிவுலக சகாக்கள் தமிழர்கள், படம் எடுக்க போற நீங்க தமிழன் அப்புறம் எப்படி படம் எடுக்க விட மாட்டாங்க. ஏற்கனவே சீனாவுல இருக்குற அணு உலையில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்த்திருக்காங்க. அதோட லிங்க் வேணும்ன்னா நான் தரவா? கோர்ட்ல கேஸ் போடலாமா?

சிபி: சார், அதெல்லாம் லேட்டாகும். ஆபீசுல 3 நாள்தான் லீவ் தந்திருக்காங்க அதுக்குள்ள முடிக்கனும் சார்.
சூர்ய ஜீவா: அப்பிடின்னா, செட் போட்டுக்கலாம் சிபி
சிபி: என்னது சார்ட் ஃபிலிம்க்கு அணு உலை போல செட்டா?னு பரிதாபமாக விழிக்க..,
மனோ: சார் என்கிட்ட ஒரு கதை இருக்கு நான் சொல்லவா?
ஆபீசர்: ம்ம் சொல்லு பார்க்கலாம்.
மனோ: ஹீரோவுக்கு சொந்த ஊர் திருப்பாச்சி. அவரு அருவா செய்ற வீட்டுல பிள்ளையா பொறந்திருக்காரு. அவருக்கு ஒரு தங்கச்சி..தங்கச்சியை பஹ்ரைன்ல கட்டி குடுக்குறார். தன் தங்கச்சியை பார்க்க பஹ்ரைன் வரும் ஹீரோ எங்க ஹோட்டல்ல தங்கறார்...
சிபி: டேய் தம்பி இது ஹீரோவா விஜய்  நடிச்ச  திருப்பாச்சி படத்தோட கதை போல தெரியுது.
மனோ: முழுசா சொல்றதுக்குள்ள நீ எதுக்குடா வாயை திறக்குறே. மூதேவி அடங்குடா.
விக்கி: சார் இவனுங்க ரெண்டு பேரும் அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இனி நிறுத்த யாராலும் முடியாது.

ஆபீசர்: அடப்பாவி திருப்பாச்சியை சுட்டு கதையை சொன்னால் எங்களுக்கு தெரியாதா? நீ போய் அந்த ஆமைக்குஞ்சு கறியை சாப்பிடு. விக்கி நீ சொல்லு..,
 விக்கி: ஒரு பையனும் பொண்ணும் கலயாணம் கட்டிக்கிடாமல் ஒரே வீடுல வாழுறாங்க. ஆனால் அவங்க லவ்வர் இல்லை.
சிபி: அப்ப அண்ணன் தங்கச்சியா?
விக்கி: இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHcygp7d1ZA0ehhqyk95HCAAiaYnTTrif-EFqV_12HRciLR8yc0HIQo5us-QFVMlIXP3aFn5I05Dk6GgdXlRUNiPJkFZ5nwQida9m-b0A8yvZb5EdQB3ayBYp16nWuE5rpFUwjHfMPJ35V/s1600/parvathi-melton-hot-stills+(2).jpg
சிபி: ஃப்ரெண்ட்சா
விக்கி : இல்லை
சிபி: அடங்கோ, ஏண்டா நாயே இப்படி போட்டு குழப்புறே. அண்ணன் தங்கச்சி இல்லை, லவ்வர் இல்லை, புருசன் பொண்டட்டி இல்லை, அட ஃப்ரெண்ட்சும் இல்லை அப்புறம் எப்படி ஒண்ணா இருப்பாங்க. எந்த ஊருலயும் இந்த அநியாயம் நடக்காதே.
விக்கி: சமீபத்துல நான் ஆப்பிரிக்கா போனேனே அப்போ அங்கே ஒரு பழங்குடி இனத்தவர்கள்ல ஒரு பிரிவினர் இப்படித்தான் இருக்காங்க.

சிபி: சார், விக்கி என் செலவுல ஆப்பிரிக்க சுத்தி பார்க்க முடிவு பண்ணிட்டான் போல.படம் எடுக்க  ஆப்பிரிக்கா கூட்டி போக சொன்னாலும் சொல்வான். இவனை கதை சொல்ல வேணாம்ன்னு சொல்லுங்க சார். இது மயக்கம் என்ன கதையை உல்டா செஞ்சது போலவே இருக்கு

ஆபீசர்: விக்கி சிபி, சின்ன பட்ஜெட்ல சாட் ஃபிலிம்தான் எடுக்க போறான். அது பெரிய அளவுல பேசப்பட்டால், சினிமா எடுக்க பெரிய பெரிய ப்ரொடியூசர் வருவாங்க. அப்போ உன் ஆப்பிரிக்கா கதையை எடுக்கலாம். இப்போ நீ போய் உன் ஃபேவரிட் நெப்போலியனை உள்ளே தள்ளு.

பிரகாஷ் நீ சொல்லு இப்போ..,

தமிழ்வாசி பிரகாஷ்: சார் ஹீரோ எஞ்சினியர் காலேஜ் ஸ்டூடண்ட், ஹீரோயினும் அதே காலேஜ்லதான் படிக்குறாங்க. ரெண்டு பேரும் பார்க்க மூலைல தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க. 
சிபி: நீங்க ஒருத்தர்தான் நல்ல கதையா சொல்றீங்க. ரெண்டு பேருக்கும் லவ்தானே.கிஸ் பண்ணிக்குறாங்களா?மேட்டர் நடக்குமா? சீன் தேறுமா?

தமிழ்வாசி பிரகாஷ்:  ஐயையோ அதெல்லாம் இல்லை சிபி சார், ரெண்டுபேரும் CN++, JAVA, PGDCA இதுல எது படிக்கலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

சிபி: அடிங்கொய்யால அப்புறம் என்ன இதுக்கோசரம் பார்க் மூலையில உக்காந்துக்கிட்டு பேசனும்
தமிழ்வாசி பிரகாஷ்: இப்படிலாம் கோவப்பட்டா அப்புறம் நான் கதை சொல்ல மாட்டேன்.
சிபி: நீ ஆணியே புடுங்க வேணாம் கிளம்பு ராசா.

மகேந்திரன்: சார் நான் ஒரு கதை சொல்றேன்.
ஆபீசர்: சொல்லுங்க,
மகேந்திரன்: ஒரு வயல்ல பெண்கள் எல்லாரும் நடவு நட்டுக்கிட்டு இருக்காங்க
சிபி: மொத்தம் எத்தனை பொண்ணுங்க. 
மனோ: ஆபிசர் சார், இவன் படம் எடுக்க போறானா இல்லை சைட்டடிக்க போறானா? மொத்தம் எத்தனை பொண்ணுங்கன்னு ஜொள் வடிக்க கேட்குறான்.
http://www.glamsham.com/movies/scoops/09/aug/united-six.jpg
விக்கி: மகேந்திரன் சொல்லும் கதை மட்டும் கிளிக்கானால் நட்றதுலாம் கிழவிங்கன்னு கதையை சேஞ்ச் பண்ணிக்கனும் சார்.
ஆபீசர்: ஓக்கே. எல்லாரும் அமைதியா இருங்க நீங்க சொல்லுங்க மகேந்திரன். 

 மகேந்திரன்: அப்போ ஒரு நூறு மாட்டுவண்டி வருது. கூடவே உருமி மேள சத்தமும், நூறு பெண்கள் அந்த மாட்டு வண்டியில் குலவை போட்டுக்கிட்டே வராங்க.  


ஆபீசர்: இருங்க மகேந்திரன், தம்பி ராஜா!
ராஜபாட்டை ராஜா: தீவிரமா எதையோ யோசித்துக்கிட்டு இருந்தவர், ஆபீசர் குரல் கேட்டு திடுக்கிட்டு
ராஜா: என்ன சார்?
ஆபீசர்:ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டு இருக்கியே தவிர, வாயை திறக்க மாட்டேங்குறியே. நாம சிபிக்காக கதை டிஸ்கசனுக்காக வந்திருக்கோம். நினைவிருக்கா உனக்கு?

ராஜா: இருக்கு சார்.
ஆபீசர்: அப்போ உன் கருத்தை சொல்லு.
ராஜா: கதை எதுவானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க ஆனால் ஹீரோவா யாரை போடப்போறீங்க ஆபீசர் சார்?

ஆபீசர்: கதை சொல்லாட்டி பரவாயில்லை. ஹீரோ யாருன்னு நீயே சொல்லேன்.
ராஜா: அஜீத் கிட்ட கேளுங்க அவர் மறுத்தா விஜய், விஜய் கால்ஷீட் கிடைக்கலைன்னா சூர்யாவை கேளுங்க. சூர்யாவும் ஒத்துக்கலைன்னா நானே ஹீரோவா நடிச்சுடுறேனே.
ஆபீசர்: டேய் சிபி நில்லு ஓடாதே. 
மனோ: டேய் அண்ணா ஓடாதே. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்டா நாதாரி.

விக்கி: அடிங்கொய்யால வறுத்த கறிக்கும், குடிச்ச சரக்குக்கும் யாருடா துட்டு தரது நில்லுடா ங்கொய்யால.
 
சிபி: நான் ஏதோ லைஃப்ல முன்னேறலாம்னு ஷார்ட் பிலிம் எடுக்கலாம்ன்னு யோசிச்சு, நல்ல ஐடியாலாம் தருவீங்கன்னு உங்களை கூப்பிட்டால் என் உயிரையாடா எடுக்குறீங்க. நான் படமே எடுக்கலை போங்கடா நீங்களும் உங்க டிஸ்கஷனும்