Wednesday, January 11, 2012

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம்  பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன்  1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்..  4 மிதி தறிகள்.. 

அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே  கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு.. 

எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்.. 

எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்.. 

எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின்  சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.. 

எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம்  சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்.. 

எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்..  தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு.. 

எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க.  ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க  ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். 

எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில  மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. 

கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது.. 

அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில்  சுத்தி 4  ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..

எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..

எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்..  எங்கப்பா இறந்த பிறகு  எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்.. 

இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..

இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என்  வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfh1PEkDqHAsu386lDGyL5NPmCbC5i1tJ1NZZclEQs0okdh2WwwfhsiWtXmpdWDAynIlYWINuqN4V7KF_aRrgyCgkWBUrjSEe4z1Py4Nw7zfBKXWlYT7F6JtAqiq6R_BsNtem12A5vfz1P/

ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்..  இப்போ  பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்..  அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு... 

எங்க வீட்ல நெட் கனெக்‌ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..

அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின்  டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711

நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம்  டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..



அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்கு



சினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..


எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..

பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?

ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்





விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)

ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது..  ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..