1.புத்திசாலித்தனமாக முடிவெடுத்தாலும் பெண் அடிக்கடி தன் முடிவை மாற்றிக்கொள்கிறாள்,முட்டாள்தனமாக முடிவெடுத்தாலும் ஆண் தன் முடிவில் நிலையாய்!
-----------------------------------
2. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் - கருணாநிதி # காதலில் தோல்வி ஏற்படுவது பெண்ணுக்கு சகஜம் - நயன் தாரா
--------------------------------
3. எப்படி இருந்தாலும் நான்உன் காலில் விழுந்துதான் ஆக வேண்டும் என நீயும், எங்கே சென்றாலும் என்காதலில் நீ நெகிழ்ந்துதான் ஆகவேண்டும் என நானும்
------------------------------------
4. என் அன்பில் நீ உருகிவிடக்கூடாது என வெறுப்பு முகமூடியை அணிந்து கொள்கிறாய்! என் அன்பு நேரடியாய் உன் உள்ளத்தில் வந்து இறங்கி விடுகிறது
-------------------------------------
5. மழைக்காலங்களை, மழலைக்காலங்களை மறக்க முடிவதும் இல்லை, மறைக்க விரும்புவதும் இல்லை
-----------------------------------
6. தியானம் செய்யும்போது மனதை ஒரு முகப்படுத்தச்சொன்னார்கள், அந்த ஒரு முகம் உன் முகம் ஆனது
----------------------------
7. கல்லால் கட்டப்பட்ட கோட்டை தி.மு.க.-கருணாநிதி # பாளையங்கோட்டை ஜெயில் கூட கல்லால் கட்டப்பட்டதுதான் - ஜெ
-------------------------------
8. உன் உதட்டிலிருந்து வரும் பொய்கள் கூட அழகிய கவிதை ஆகிவிடுகிறது, நான் எழுதும் கவிதைகள் உன் பார்வையில் பொய் ஆகிவிடுகிறது
--------------------------------
9. பகலில் மழை வரும்போது நம் இணைந்த கைகள் நினைவும், இரவில் மழை வரும்போது உன் நனைந்த கூந்தலும் நினைவில் வரும்
-------------------------------
10. நேசம் வீசும் ஒரு மழை நாளில் என்னிடம் உன் வாசனைப்பூக்களை கொடுத்து விட்டு நறுமணத்துடன் நீ போய் விட்டாய்!!
--------------------------------
11. உள்ளாட்சித்தேர்தல் தேதி ஏன் அஷ்டமி,நவமி நாளா பார்த்து வெச்சாங்க?
தலைவரே, அதுக்காக கவுதமி நாளா பார்த்து வைக்க முடியும்?
-------------------------------
12. டைரக்டர் எஸ் ஜே சூர்யா அரசியல்லயே இல்லையே, எப்படி நில அபகரிப்பு கேஸ்ல மாட்னாரு?
அது “நிலா” அபகரிப்பு கேஸ்!
-------------------------------------
13. நாடோடி மன்னன், உத்தம புத்திரன் மாதிரி டபுள் ஆக்ஷன் படங்களா பார்க்கறாரே, தலைவர்.ஏன்?
அரசியல்ல ரெட்டை வேஷம் போட வேண்டி இருக்காம், ட்ரெயினிங்க் எடுத்துக்கறாராம்.
------------------------------------
14. இனி எல்லா தேர்தலிலும் தனித்து போட்டி: தங்கபாலு # இனி எல்லா படங்களிலும் நான் குணச்சித்திரமாக நடிக்க முடிவு - மல்லிகா ஷெராவத்
---------------------------------
15. விஜயகாந்த்துக்குப் பிறகுதான் அன்னாவே குரல் கொடுத்தார்- பிரேமலதா # பேகனுக்கு முன்பே மயிலுக்கு போர்வை குடுத்தது பாரதிராஜா தான் - ஸ்ரீதேவி
----------------------------
16. ஏய், மிஸ்டர்,நான் தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே? எதுக்கு என்னையே சுத்தி சுத்தி வர்றே?
மிஸ், +2 ல பாஸ் பண்ணவே 4 அட்டெம்ப்ட் ஆச்சு, லவ்ல முதல் முயற்சிலயே ஜெயிக்க முடியுமா?
------------------------------
17. XQS மீ மிஸ்.இந்த CD பாருங்க.
யோவ்!அய்யோ, தப்பா நினைக்காதீங்க, லவ் லெட்டர் குடுக்கறது ஓல்டு ஃபேஷன், இது லவ் சி டி # வீட்டுக்குப்போய் பார்டி
------------------------------------
18. என் காதலை ஈரோட்ல இருக்கற 58,430 சொந்தக்காரங்க கிட்டேயும் சொல்லிட்டேன்..
டேய், நாயே, முதல்ல நீ லவ் பண்ற ஃபிகர்ட்ட சொல்டா.
----------------------------------
19. ஸாரி மிஸ்டர்! எனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை.
. அட!! எனக்கு கூட மேரேஜ்ல நோ நம்பிக்கை. நமக்குள்ள எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?
-------------------------------------
20. உன் மனைவிக்கு சமையலோட அரிச்சுவடியே தெரியாதாமே?
அப்டி சொல்ல முடியாது, நல்லா பத்தவைப்பா..
------------------------------