Sunday, January 08, 2012

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://bollywoodtadka.com/wp-content/uploads/2011/12/players-new-poster.jpg

THE ITALIAN JOB (2003) என்ற ஆங்கிலப்படத்தின்  தழுவல் தான் அபிஷேக் நடிச்ச ப்ளேயர்ஸ் படக்கதை, அது போக OCEAN ELEVEN படத்தை அங்கங்கே ஞாபகப்படுத்துது, அது பார்க்காதவங்களுக்கு மங்காத்தா நினைவு வரும்.. படத்தோட ரெண்டே பிளஸ் இதுவரை யாருமே போகாத வெர்ஜின் ப்ளேசஸ் ( லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் இன் நியூ ) பிபாஸா பாஸா,சோனம் கபூர் கிளாமர் ..

மணிரத்னத்தின் திருடா திருடா படத்துல ஒரு ட்ரங்க் நிறைய கோடிக்கணக்கில் பணம் ஒரே இடத்துல பிரமிப்பா பார்த்தமே அதே போல். இதுல 10,000 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் ( கோல்டு பிஸ்ட்கெட்).. அதை ஆட்டையை  போட அபிஷேக் & கோ போடற திட்டமும், ஸ்டைலிஸான ஒளிப்பதிவும்  படத்தை போர் அடிக்காம கொண்டு போகுது..

ஓடும் ரயில்ல 10 நிமிஷ கேப்பில் அதுல இருக்கற கோல்டு பிஸ்கெட்டை அபேஸ் பண்ணனும். அதுக்கு அபிஷேக் தன் கூட்டாளிகளா சிலரை செலக்ட் பண்ணிக்கறார்.. வெடிகுண்டு ஸ்பெஷலிஸ்ட் சிகந்தர் கர், குறி பார்த்து ஷூட் பண்ணுவதில்,மேஜிக்கில்  கேடியான பாபி தியோல், ஆட்டோ மெக்கானிஸத்தில் அலப்பறை செய்யும்  ஜானி லீவர், மேக்கப் ஸ்பெஷலிஸ்ட் ஓமி வைத்யா ஆகிய கில்லாடி கேடிகளை பார்ட்னரா சேர்த்துக்கறார்.

சோனம் கபூர் தன் அப்பாவை கொலை செஞ்சவனை பழி வாங்க கொலையாளியை தேடறவர். அவர் படத்தோட செகண்ட் ஆஃப்ல அபிஷேக் கூட சேர்ந்துக்கறார் ( முதல் பாதில 2 சீன் மட்டும் வர்றார்),அவர் கம்ப்யூட்டர்ல எதையும் ஹேக் பண்ணும் நாலெட்ஜ் உள்ளவர்..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு நகைக்கடை எக்ஸிபிஷன்ல அபிஷேக் வைர நெக்லஸை அபேஸ் செய்யும் அமர்த்தலான சீனோடு குதூகலமாய் படம் துவங்குது.. அப்புறம் போகப்போக எதிர்பார்க்கப்பட்ட ஃபார்முலாவில் கதை ஒரே மாதிரி மூவ் ஆகுது..



http://cdn.wewomentoday.com/wp-content/uploads/2012/01/Players-movie-Sonam-Kapoor-hot-picture.jpg

அபிஷேக் இளம்பெண்கள் விரும்பும் ஆகிருதியான தோற்றம், 6 அடி உயரம், அலட்டிக்கொள்ளாத முகம் என பர்சனாலிட்டியாக இருந்தாலும்  அண்ணனுக்கு நடிப்பு சரியா வர்லையே? ,மங்காத்தா, பில்லால தல காட்டிய கம்பீரத்துல பாதி கூட இவரால காட்ட முடியல.. எல்லா சீனுக்கும் ஒரே மாதிரி முக பாவனை.. அப்பா அமிதாப் கிட்டே இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. 

பிபாஸா பாஸூ இவர் நடிப்பை பற்றி யாரும் கவலைப்படலை.. ஒரு சீனில் ஸ்விம்மிங்க் பூலில்  சிங்கிள் பீஸ் டிரஸ்ஸில் ஹீரோவை எகத்தாளமாய் வரவேற்கும் அந்த ஒரே சீனில் ஸ்கோர் பண்ணிடறார்.. ரம்பா பார்த்தால் பொறாமைப்படுவார்.. அழகிய கால்கள்

சோனம் கபூர் க்கு நடிப்பு சுமாரா வருது.. அவர் ஒரு சீன்ல வில்லனோட ஆட்கள்ட்ட ஹாலிவுட் வில்லன் மாதிரி நடு விரலை காட்டி கிண்டல் பண்றதெல்லாம் ஓவர்.. மாடர்னா, வித்தியாசமா காட்டனும்கறதுக்காக இப்போவெல்லாம் பெண்களை ஓவர் அலப்பறை செய்வது மாதிரி காட்றது ஃபேஷன் ஆகிடுச்சு.. அப்போதான் தியேட்டர்ல ஆண்களோட கை தட்டல் கிடைக்கும்னு நினைக்கறாங்க போல..




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8pct2DPG08xSsBsTLi8FFoRvq7BAmIaYQfbKLY7Wl2Vs5kjWnR6b9c6lGA_ioHjYwYPz7fnorV94AuNo95NSv-hrofo3PYLL1m0yMTUbjfqEk1WY3BJR0EQOvZ2LYlNYUUHaAIcVh9jVf/s550/sonam_kapoor_players_movie_wallpaper-2012.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்

1. என் கணவர்ட்ட எவ்ளவ் பணம் இருக்கும்னு நினைக்கறே?

தெரிலங்க, ஸ்விம்மிங்க் பூல்ல இருக்கற தண்ணியை கூட அளந்துடலாம்,ஆனா உங்க கணவர்ட்ட இருக்கற பணத்தை எண்ணிட முடியுமா?

2. நாம ஜெயிச்சுட்டோம், இனியாவது நீங்க வாயைத்திறந்து ஏதாவது பேசுவீங்களா? இல்ல, சைலண்ட் மொடுல தான் இருப்பீங்களா?

3.  நீங்க தான் இந்த உலகத்தின்  பெஸ்ட் டீம்னு சொன்னீங்க ,உங்களையே நாங்க ஜெயிச்சுட்டோம். அப்போ நாங்க யாரு?

4.  ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு முடிவு வந்தே தீரும்.. ( ஜெ சசிகலாவை அதிரடியா நீக்க முடிவு எடுத்தாரே அந்த ரகசியத்துக்கு மட்டும் முடிவே வர மாட்டேங்குதே/)

5. அடுத்தவன் பொண்டாட்டியை அளவுக்கதிகமா வர்ணிக்கறவங்க தன் மனைவியை கண்டுக்காம இருக்கறது ஏனோ?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqCXQcQoi_QsTriDiufPA3RWtHO7qJni99YYM5JTt-bf46I_gZBWE0mptkXhNbDUZegsQoSapG9aGItXc97nKa99ffFiX0qagqfw_cN4btOq3S6fO9-YQLdufXzwgr9vDdr_Kd81QZ-Ef8/s550/sonam_kapoor_glamour_in_players.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. திரையில் படம் நெடுக பிரம்மாண்டம்.. பெரும்பாலான காட்சிகள் ஏரியல் வியூ என சொல்லப்படும்  ஹெலி காப்டர் ஷாட்டாக இருப்பது செம பிளஸ்.. ஆம்ஸ்டர்டாம்,ரஷ்யா-ஷிட்னி, என ஏகப்பட்ட லொக்கேஷன்கள்  கண்ணுக்கு குளுமையான ஒளிப்பதிவில்..

2. அனைத்து நடிகர்களின் ஆடை வடிவமைப்பு கன கச்சிதம்.. பிபாஸா பாஸு, சோனம் கபூர் இருவரையும் சம்பளம் குடுத்த அளவு யூஸ் பண்ணிக்கிட்டது..

3. படத்தின் முக்கிய காட்சிகளான ரயில் கொள்ளை, 3 கார்கள் தங்கத்துடன் எஸ் ஆகும் சீன்கள் பரபரப்பு குறையாமல் படமாக்கப்பட்டது..



http://youngindiainformation.com/wp-content/uploads/2011/12/Players-movie-wallpaper.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய லாஜிக் மிஸ்டேக்ஸ்..

1.  ஓப்பனிங்க்‌ஷாட்ல ஹீரோயின் கவுனுக்குள் ஹீரோ கொள்ளை அடிச்ச நகையை போட்டுட்டு எஸ் ஆகறார்.. பொதுவா இந்த மாதிரி கொள்ளை நடந்தா உடனே அங்கே இருந்தவங்களை செக் பண்ணூவாங்க.. கோடிக்கணக்கான நகை கொள்ளை போயும் எந்த செக்கிங்கும் இல்லாம ஹீரோயின் அசால்ட்டா எஸ் ஆவது எப்படி?

2. படத்தில் 3 காட்சிகளில் ஹீரோயின் செம ஸ்பீடாக டைப் அடிக்கும் காட்சிகள் வருது.. பொதுவா வேகமா டைப் அடிக்கும் டைப்பிஸ்ட்கள் தன் வேகத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாதுன்னு நகங்களை கட் பண்ணி வெச்சுக்குவாங்க.. ஆனா க்ளோசப்ல ஹீரோயின் டைப் அடிக்கறதை காட்றப்ப அவர் நீளமா நகம் வெச்சிருக்காரு.

3.  என்னதான் படத்தோட டைரக்டருக்கு 16 வயதினிலே பட கமல் கெட்டப் பிடிச்சிருந்தாலும் ஹீரோயினுக்கு அதே மாதிரி கோவணத்தை மாட்டி விட்டு விழாவில் கலந்துக்கறதா காட்றது ரொம்ப ஓவர்.. கண்ணியமாக ஆடை வடிவமைப்பு ஸ்டைலிஸா காட்டி இருக்கலாம்.

4. ஹீரோயின் ஒரு ஷாட்ல  ஒயினில் மயக்க மருந்து கலக்கறாரு.. தன் வலது கை விரலாலே கலக்கறாரு.. ஏன்? ஸ்பூன் இல்லையா?




http://www.movieplaner.com/wp-content/uploads/2011/10/players-movie-sonam-kapoor-pictures.jpg

5.  ஓஸன்ஸ் லெவன்  மேலும் மங்காத்தா படத்துல வர்ற கார் பஞ்சர் ஆகும் காட்சி அப்படியே சுட்டிருக்காங்க.. கொஞ்சம் மாற்றி இருக்கலாம்..

6.  க்ளைமாக்ஸ்க்கு முந்திய ரயில் ஃபைட்ல எல்லாத்தையும் வீடியோ பண்ணும் கேமரா சிஸ்டம் குளறு படி ஆகறதால ரயிலில் என்ன நடக்குதுன்னு ஹெட்குவாட்டர்ஸ்க்கு தெரியாம இருக்கு.. ஆனா ஹீரோ ஃபைட் போட்டு ஆளுங்களை மானாவாரியா ரயிலை விட்டு கடாசிடறாரு. அந்த அடியாளூங்க மேட்டரை செல் ஃபோன் மூலமா சொல்ல மாட்டாங்களா?

7.  கண்காணிப்பு கேமரா ரும்ல இருக்கா? இல்லையா?ன்னு ஹீரோ தேடறார். ஏன் அவ்லவ் கஷ்டம்? தன் செல்ஃபோன்ல  ஒரு அவுட் கோயிங்க் கால் போட்டாலே ர்ர்ர்ர்ர்னு ஒரு சத்தம் வருமே அதை வெச்சு கண்டு பிடிச்சிடலாமே?

8. ரூ 10000 கோடி மதிப்புள்ள தங்கத்தை வெறும் 3 தங்க கார்ல செஞ்சு சரி பண்ண முடியுமா? ஏன்னா சமீபத்துல ஈரோட்ல நடந்த கோல்டு பிளஸ் ஜூவல்லரி நடத்துன கோல்டு கார் எக்ஸிபிஷன்ல ஒரு தங்க கார்  50 கிலோ தங்கத்துல செய்யப்பட்டதுன்னு சொல்றாங்க, அதிக பட்சம் 100 கிலோ தங்கம்னாலும்  3 கார்க்கு 300 கிலோ தங்கம் தானே வருது?அப்போ 30,000 பவுன்.. அதன் மதிப்பு சராசரியா பவுன் ரூ 25,000னாலும்  75 கோடி தானே வருது? கதைப்படி 10,000 கோடி மதிப்புள்ளதுன்னா 112 கார் வரனுமே?

9. கொள்ளை நடந்ததும் போலீஸ் எந்த இடத்திலும் செக் போஸ்ட் வைக்கலையா? அந்த 3 காரும் கேட்பார் இல்லாம போய்ட்டே இருக்கே?



http://heroinespicsx.files.wordpress.com/2010/06/bipasha-basu-hot-unseen-stunning-spicy-masala-wallpapers.jpg

சி.பி கமெண்ட் - படம் போர் அடிக்காம த்ரில்லிங்கா போகுது.. ஆக்‌ஷன் ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆனா ஆல்ரெடி மங்காத்தா, இத்தாலியன் ஜாப், ஓசன் லெவன் பார்த்தவங்க இதை பார்க்க தேவை இல்லை

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVNx0KQZe3yZAQ_jdYFPMCyk1OWjys9qb1P80nd7Gidi94AgpUsENcgqMVtRzXqY2_SVB8_KkeuzfWbgsMnIOna0Cx1hJTikP7mXvUDh3GJZ4zpE_v3qpDxecykXR4B4R_fWH0Xsjsj2I/s1600/sonam_kapoor_players_movie-wallpaper.jpg