மகளிர் மட்டும் காமெடி படத்துக்குப்பிறகு நாசருக்கு கிடைச்ச அல்வா மாதிரி ஒரு சப்ஜெக்ட்..ஆனா படத்துக்கான கதைல மெனக்கெட்ட அளவு விளம்பரம் , மார்க்கெட்டிங்க்ல சரியா கவனம் செலுத்தாததால பலருக்கும் இந்தப்படம் சென்று சேரலை..
கதை என்ன? நாசர் ஒரு வயசான பெருசு.. வயசானாத்தானே அது பெருசுன்னோ, ஒரு வயசு ஆனது எப்படி பெருசுன்னோ கடி ஜோக் அடிக்காம கவனமா கதை கேளுங்க.அவருக்கு நயன் தாராவோட லோஹிப் மாதிரி எப்பவும் ஒரு தாழ்வு மனப்பான்மை ( நயன் தாராவை நான் பார்க்கலை, பார்த்தவங்க சொன்னாங்க ), சாதாரண ஆஃபீஸ்ல சாதா கிளார்க்கா நாம ஒர்க் பண்றோம்..நமக்குப்பிறகு வந்த யூத்ங்க எல்லாம் கம்ப்யூட்டர் , ;லேப் டாப்னு கலக்கறாங்களேன்னு.. அவருக்கு ஒரு ஆதங்கம்
செகண்ட் ஹீரோ சத்யா , ஆனா டைரக்டர் கதை சொல்றப்ப இவர் தான் மெயின் ஹீரோன்னு சொல்லி டபாய்ச்சிருப்பாரு ஹி ஹி .. இவர் கணினித்துறைல ஒர்க் பண்றவரு, உம்மணாம்மூஞ்சி அஞ்சலியை டாவ் அடிக்கறாரு ஒரு தலையா.. எல்லாரும் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், பாப்பா அஞ்சலிக்கு முகம்தான் உம்முனு இருக்கு.. மற்றதெல்லாம் கும்முனு ஹி ஹி ஐ மீன் அவங்க நடிப்பு, கலர், இதை எல்லாம் சொன்னேன்பா..
நாசரோட தாழ்வு மனப்பான்மையை அகற்றி சத்யா அவரையும் தன்னோட கம்ப்யூட்டர் கம்பெனிலயே ஒர்க் பண்ண வெச்சு லட்சக்கணக்குல சம்பளம் வாங்க வைக்கறார்..
நார்மல் மேன் நல்லசாமியா இருந்த நாசர் இப்போ வாரம் ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ற மாடர்ன்மேன் மாடசாமியா மாறிட்டாரு.. இவரோட மருமகன் தான் ஹீரோ சத்யா..
இப்போ நாசருக்கு ஒரு ஜிகிடியோட அறிமுகம் கிடைக்குது.. ஜிகிடின்னா இன்னான்னு அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க .பொண்ணுங்களை ஏதாவது ஒரு வித்தியாசமான பேர் வெச்சு கூப்பிடனும்னு சென்னிமலை சித்தர் என் கனவுல வந்து சொல்லி இருக்கார்.. என்ன நம்ப மாட்டீங்களா? என்னய்யா இது ? கலைஞர் கனவுல அறிஞர் அண்ணா, பெரியார், எம் ஜி ஆர் எல்லாரும் டைம் டேபிள் போட்டு வந்து பேசிட்டு போறதா அவர் சொல்றதை நம்பறீங்க, நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்க.. ( கலைஞர் கனவுல நல்ல வேளை கரண்ட் சி எம் வர்லை ஹி ஹி )
வருஷமெல்லாம் வசந்தம்னு ஒரு டப்பா படத்துல எங்கே அந்த வெண்ணிலா ,எங்கே அந்த வெண்ணிலா? அப்டினு ஒரு பாட்டுக்கு வாயை ( மட்டும்) அசைச்சுதே ஒரு ஜிகிடி பேரு அனிதா அந்த ஜிகிடிதான் நாசரோட கில்மா லேடி.. ( ஆனா டைட்டில்ல புதுமுகம் -அனிதா அப்டினு போடறாங்க ஹே ஹே ஹேய், நாங்க எல்லாம் 89 குரூப்டேன்சர்ஸ்க்கு மத்திலயும் நல்ல ஜிகிடி எது , நொள்ள ஜிகிடி எதுன்னு கண்டு பிடிக்கற ஆளுங்க , ஹி ஹி )
மயக்கம் என்ன படத்துல வர்ற ரிச்சா மாதிரி அனிதாவுக்கு ஒரு லவ்வர் ஆல்ரெடி இருக்கான், ஆனா நாசரை பார்த்ததும் ஜிகிடி மனசு மாறிடுது. இந்தக்கதை ஒரு டிராக்ல ஓடுது
செகண்ட் ஹீரோ சத்யா ஆடம்பரமான ஆளு.. லைஃப்ஃபை லைட்டா எடுத்துக்கறவர். அவர் அஞ்சலியை மடக்கலாம்னு ஆனானப்பட்ட பல வேலைகளையும் ட்ரை பண்றார் , முடியல.. அஞ்சலி ஒரு கட்டத்துல , சதுரத்துல, செவ்வகத்துல சத்யா கிட்டே மற்றவர்களுக்காக வாழறதுதான் வாழ்க்கை, தியாகியா இருக்கனும், அன்னை தெரேசாவா மாறிடனும்னு என்ன என்னமோ சொல்லுது.. அண்ணன் மனசு மாறிடறார்.. ஆடம்பரத்தை தவிர்த்து சாதா ஆள் ஆகிடறார்..
இங்கே தான் இயக்குநர் நிக்கறார். அது என்னான்னா 2 கதை குழப்பம் இல்லாம .ஒண்ணு அடக்கமா இருக்கறவன் ஆர்ப்பாட்டம் பண்ற தறுதல ஆகரான், ஆர்ப்பாட்டம் பண்றவன் அடக்கம் ஆகிடறான்.. இந்த நல்ல கதையை சுமாரான திரைக்கதைல சொல்லி இருக்கார்..
நாசர் கமல்ஹாசனே பாராட்ன அற்புத நடிகர், அவருக்கு சொல்லியா தரனும்.. செம ஆக்டிங்க் பர்ஃபார்மென்ஸ் ஸ்கோப் உள்ள கேரக்டர்.. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வர்ற போது, அனிதாவை பார்த்து ஜொள் விடரது எல்லாம் ஓக்கே ..
செகண்ட் ஹீரோ சத்யா சுமார், மோசம் இல்ல..
ஹீரோயின் அஞ்சலி படம் பூரா மாடர்ன் டிரஸ்ல தான் வர்றார், ஆனா நெற்றில பொட்டு இல்லை ( அப்பதான் மாடர்ன் பொண்ணுனு அர்த்தமாம் ) பாடல் காட்சிகள்ல கலக்கறார்.. மற்றபடி அவர் நடிக்க அதிக ஸ்கோப் இல்லை.. கதைக்கு தேவையே இல்லாம அவர் உர் என்ற முக பாவம் காட்டுவதும் திடு திப்பென்று ஜெ சசிகலாவை விரட்டுனது மாதிரி சத்யாவை அவர் லவ் பண்றதும் படு செயற்கை..
ஓ பேபி பாட்டு, வாராய் வாராய் வெண்ணீலா பாட்டு சுமார் ரகம்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படம் நெடுக காமெடி வசனங்கள், மொத்தம் 48 ஜோக்ஸ் தேறுச்சு.. அதுல 32 நினைவிருக்கு, தனி பதிவு போடறேன்
2. மெயின் ஹீரோ நாசர்னு முடிவு பண்ணீட்டதால தேவை இல்லாம சத்யாவுக்கு முக்கியத்துவம் எல்லாம் தராம கதையின் ஓட்டத்துல சீரான வேகம் காட்டுனது
3. அஞ்சலியை புக் பண்ணுனது ஹி ஹி
இயக்குநர் சறுக்கிய இடங்கள்
1. ஓப்பனிங்க்ல நாசர் “உங்களுக்காகத்தானே பேசறேன்”னு ஒரு டயலாக் சொல்றப்ப அவர் லிப்ஸ் மூவ்மெண்ட்டே தர்லை, அதாவது டப்பிங்க் பேசறப்ப படத்துல இல்லாத ஒரு வசனத்தை சேர்த்து இருக்காங்க.. காட்சியின் தேவை கருதி
2. ஹீரோ சத்யா எப்போ பாரு ஒரு பனியன் போட்டுக்கிட்டுபட்டனே போடாத சட்டை போட்டுக்கிட்டே படம் பூரா சுத்தறாரே? ஐ டி கம்பெனில இப்படி கேனத்தனமா டிரஸ் பண்ணிட்டு பிச்சைக்காரன் கூட உள்ளே வர மாட்டானே?
3. குடிகாரங்களை காட்றப்ப நிறைய பேரு படத்துல வாமிட் பண்ற சீன் காட்றப்ப நேரடியா கேமராவைப்பார்த்தே வாமிட் பண்றாங்க, நமக்கு குமட்டுது.. இந்த மாதிரி சீன்ல ரியாலிட்டி எதுக்கு? நாசுக்கா ,வாமிட் பண்றார்னு பேக் ஷாட்ல காட்னா போதாதா? இப்படி விலாவாரியா காட்டனுமா?
4. ஹீரோயின் அஞ்சலிக்கு அவ்ளவ் செலவு பண்ணி டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்தவங்க ஒரு நாலணாவுக்கு ரப்பர்பேண்டோ, 2 ரூபாய்க்கு ஹேர் பின்னோ வாங்கித்தந்திருக்கக்கூடாதா? பாப்பா பாவம் படம் பூரா தலையை விரிச்சுப்பொட்டுக்கிட்டு சுத்துது..
5. க்ளைமாக்ஸ்ல நாசர் அனிதாவை கொலை செய்யற மாதிரி காட்னதோட படத்தை முடிச்சிருக்கலாம், அனிதா திடீர்னு தப்பிக்கறது, அப்புறம் அவர் வில்லி ஆகறது , சேசிங்க், ஃபைட் எல்லாம் செம போர் ..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி .பி கமெண்ட் - டி வி ல போட்டா பாருங்க ஹி ஹி
ஈரோடு சண்டிகாவுல பார்த்தேன்