Thursday, December 22, 2011

குத்து ரம்யாவுக்கு மார்க்கெட் டவுன் ஆகிடுச்சா? எவன் சொன்னது? ( ஜோக்ஸ்)


شنا





1.தன்னிடம் பேசாத, பழகாத ,பழக விரும்பாத பெண்ணிடம் வேறு யாரும் பேசக்கூடாது ,பழகக்கூடாது என ஆண் நினைக்கிறான் # நீதி - ஆண் ஒரு சமத்துவாதி

------------------------------------

2. பாமரன் என்பவன் படிக்கத்தெரியாதவன் அல்ல,மெத்தப்படித்தவர்களுடன் பழகத்தெரியாதவன்,குறுக்கு புத்தி அறியாதவன்,மொத்தத்தில் நல்லவன்

------------------------

3. அறியாமல், புரியாமல், தெரியாமல் தவறு செய்தால் அவன் பாமரன்,திட்டம் போட்டு ,மாட்டிக்கொள்ளாதபடி தப்பு செய்பவன் படித்தவன்

------------------------

4. சின்ன தவறு செய்தாலும் மனைவியால் அதை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை, என்ன தப்பு செய்தாலும் அம்மா மட்டும் மகனை( ளை)  வெறுப்பதில்லை.

------------------------------------

5. ஒவ்வொரு பூவாக சென்று வண்டு தேன் தேடுவது போல உன் ஒவ்வொரு தோழியிடம் சென்று உன்னைப்பற்றிய தகவல்களை திரட்டிக்கொள்கிறேன்

----------------------------

بدون شرح


6.நயன்தாரா தான் எனக்கு முன்னோடி : அமலா பால் பெருமிதம்!! # அய்யய்யோ! அப்போ நீங்களும் ஒரு குடியை கெடுக்கப்போறீங்களா?

---------------------------------

7. ஐ டி நிறுவனங்கள், கால் செண்ட்டர்களில்  வேலை பார்க்கும் ஆண்கள் ஃபுல் ஹேண்ட் சர்ட்டிலும், பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டிலும் வருகிறார்கள் # அவதானிப்பு

---------------------------------

8. உன் மனசைக்காயப்படுத்தும் சொற்களுக்கு நான் என்றும் உடந்தையாய் இருந்ததில்லை,அப்படி ஒரு தருணம் ஏற்பட்டால் பேசா மடந்தையாய் ஆகிவிடுவேன்

--------------------------------------

9. தினமும் காலை பஸ்ஸில் ஏறியதுமே அதீத ஒப்பனை,வாசனைத்திரவியங்களின் தெளிப்பு இவைகளை வைத்தே குளிக்காத குமரிகள்,குமரன்கள் சாயம் வெளுக்கிறது

----------------------

10. காதல் என்பது மிக அழகானது,அதை வெளிப்படுத்தும் விநாடி வரை

----------------------------



11. உண்மையான காதல் என்பது செஸ் கேம் போல, ராணியை இழந்து விடுவோமா? என்ற பயத்துடன் விளையாட வேண்டி இருக்கிறது

-------------------

12.ஸ்பீடா நடக்கும் ஃபிகரை இன்னும் ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம். ஸ்லோவா நடக்கற ஃபிகரை இன்னும் ஸ்லோவா போய் ஓவர் டேக்க முடியுமா? # பொழுதுபோகல

----------------------------------------

13. எல்லோரும் தயங்கும் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்! - சோனம் கபூர் # சென்சார் போர்டே மயங்கும் கேரக்டராத்தான் அமையும் அப்புறம் !

--------------------------------

14. கண்ணில் பட்ட அனைவரும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை, இதயத்தில் இடம் பிடித்த அனைவரும் நம் அருகில் இருப்பதில்லை

-------------------------------------

15. தனிமையில் அழும்போது அவரவர் கண்களுக்கு அவரவர் விரல்களே துணை

---------------------------------



16. யாராலும் மறக்க முடியாதவர்கள்

1. சிக்கலான சூழ்நிலையில் உதவுபவர்கள்

2.  சிக்கலான சூழ்நிலையில் நம்மை விட்டு விலகுபவர்கள்

------------------------------------

17. நர்ஸ்! நான் அர்ஜெண்ட்டா போகனும், டாக்டரைப்பார்க்க சீக்கிரம் விடுங்க. 

லைஃப்ல ஏன் சார் அவ்வளவு விரக்தி?

---------------------------------

18. சந்தோஷத்தைக்கொண்டாட, துக்கத்தை மறக்க குடிப்பவன் இருவரையுமே பாகுபடு பார்க்காமல் குடி குப்புறத்தள்ளுகிறது,ஆரோக்யக்கேட்டை ஏற்படுத்துகிறது

-----------------------------------

19. அம்மா என்பது மிதப்படுத்த உதவும் மனம், மம்மி என்பது பதப்படுத்தப்பட்ட பிணம் # மழலைகளை அம்மா என்றே அழைக்கச்சொல்வோம்

---------------------------

20. இளைஞர் காங். தலைவர் பதவிக்கு 'குத்து' ரம்யா குறி! # ஆஹா! பாப்பாவுக்கு மார்க்கட்டு  இல்லை,கட்சிக்கு மார்க்கெட்டு இல்லை,நல்ல ஜோடி

------------------------