Thursday, December 22, 2011

நளன் கதையை படிச்சா சனி தோஷம் நீங்கி விடுமா?எதுக்குய்யா வம்பு ?படிச்சுடுவோம்!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoH-CPA_VwSlkMrcLvK6FLduvdxlK53y1WQ-lCoaCPHDUVx6dGmG-JQ1-4vr8-D3fshrfYy3FM6UkDFkWDo-8eWJfydUPBRPvszpcxr2VQUI9k8oYy1HiGW-tX9wyWh9GCU9hWEe6PfnM/s1600/saneeswaran1.gif

கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் 21.12 .2011 காலையில் இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கணக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். 


சி.பி - எல்லா பாவிகளும் இங்கே வந்து நீராடி புனிதர்கள் ஆகிட்டா நாட்ல பாவிகளுக்கே பஞ்சமா போயிடுமே? 

. திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். 


சி.பி - சசிகலாவுக்கு துலாம் ராசியா? அய்யோ பாவம்


 அதிகாலை 3 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.

சி.பி - மனிதர்கள் மனோபாவம் என்னான்னா நமக்கு ஒரு கஷ்டம் வருதுன்னு தெரிஞ்சா ஓடி ஓடி சாமி கும்பிடுவான், அதுவே ஒரு நல்லது நடந்தா கடவுள்க்கு நன்றி சொல்லவெல்லாம் நேரம் இருக்காது..

நளன்கதை: இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

சி.பி -ஞாயிற்றுக்கிழமைல எனக்கு என் சம்சாரத்தால ஏகப்பட்ட பிரச்சனை , அந்த வேலை செய்ங்க , இந்த வேலைக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு ஒரே டார்ச்சர்.. இந்த பிரச்சனைக்கு என்ன கதை படிச்சா சரி ஆகும்?


http://www.newsfirst.lk/tamil-news/Uploads/Gallery/232685723045.jpg

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார்.


சி.பி - நான் தெரியாமதான் கேக்கறேன், முற்றும் துறந்த முனிவர் என்ன பண்ணனும்?, சின்னஞ்சிறிசுக , மேரேஜ் ஆன கப்பிள் ( மேரேஜ் ஆனாத்தானே கப்பிள்? ஹி ஹி ) ஜாலியா இருக்கட்டும்னு அவர் திண்ணைல படுத்திருந்தா அவர் யோக்கியம், நல்லவர்னு சொல்லலாம்.. அடங்கோ.. 

அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

 சி.பி - துறவி கம் சக்தி மான் உடனே கமண்டலத்துல இருந்து புனித நீர் எடுத்து உயிர்ப்பிக்கலையா? அடப்பாவமே? பவர் போயிடுச்சு போல சசிகலா போல..  

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன், என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

சி.பி - ஒரு துறவி செய்யற வேலையைப்பாருங்க மகா ஜனங்களே.. லவ்வுக்கு தூது போய் இருக்கார்.. சரி போன ஜென்மத்துல செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் போல..


 இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர்.

சி.பி - க்ளோனிங்க் ஐடியாக்கு அப்போவே முன்னுதாரணமா இருந்திருக்காங்க இந்த தேவர்கள்.. ஃபிகர் மேல ஆசைப்பட்டா அவங்க தேவர்கள் , அதே நாம ஆசைப்பட்டா தேவாங்குகள் !!?? அவ்வ்வ்வ்வ்
 http://mmimages.mmnews.in/Articles/2011/Feb/20d414f9-5e1a-402d-a6ee-2f6f3494ef3d_S_secvpf.gif
நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள்.


சி.பி - ஹி ஹி கேடி லேடி , கரெக்டா கண்டு பிடிச்சுட்டாளா? அண்ணன் கண் அடிச்சு சிக்னல் குடுத்திருப்பாரு.. 

அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர்.


தமயந்தியை பெற முடியாத தேவர்கள் -   என்பதை விட தமயந்தியை அடைய முடியாத தேவர்கள் என்பதே சரி.. ம் ம் .ஆஹா, மனுஷங்க மாதிரியே தேவர்களிடமும் பொறாமை இருந்திருக்கு போல
 

கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.


சி.பி - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் ஒரு பேச்சிருக்கும் கடமை அது கடமை - இந்த பாட்டுதான் சனி  பகவான் விரும்பி கேட்கும் பாடல் போல அவ்வ்வ்வ்வ்


 ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்? என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.


 சி.பி - ரைட்டு, நான் ரொம்ப சின்னப்பையனா இருக்கறப்ப ( இப்போ சின்னப்பையன்) எங்கம்மா கூட சொல்வாங்க  கால்களை வாஷ் பண்றப்ப ஃபுல்லா நனையனும்னு அதுக்கு இதுதானா அர்த்தம்?

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது.

சி.பி - தமிழனுக்கு  சூதாட்டம்கறது தொன்று தொட்டு இருக்கு.. தருமர்ல இருந்து பல வி ஐ பிங்க இதுல வீக் போல.. 

ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான்.


சி.பி - கதைல வில்லன் வர்லையேன்னு பார்த்தேன், பொண்ணுங்களை காப்பாத்தறப்ப நம்ம ஆளுங்க எம் ஜி ஆரா இருக்காங்க, காப்பாத்துன பிறகு நம்பியார் ஆகிடறாங்க , அவ்வ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0cp7TIwnE3adFjnAEqeAMWKCNtJ_Y6sSFJaNChTak3BLZ-o1U0kUyuCaxBDEq_HTKesn7tEmDkoJKonMwVDYaDO5AbrWTQZ9u4KH5a73-cWXDwFW1ftEUw59bOyKdsVjxsy3jRoQ1Ibet/s1600/kuchanoor_saneeshwaran_aalayam.jpg

தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது.

சி.பி - ஏம்ப்பா அவ்ளவ் கஷ்டம்? ஓப்பனிங்க்லயே பிரச்சனை வந்ததும் அப்பா வீட்டுக்கு தமயந்தி தானா போய் இருக்கலாமே? எல்லாம் ஒரு கவுரம்தான். போல.. 


அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள்.


சி.பி - அடப்பாவி.. ஹீரோ தேரோட்டி.. வில்லன் ஹீரோ சம்சாரத்தை ஓட்டிட்டு போலாம்னு ஐடியா பண்ணி இருக்கான் போல..  

நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.


சி.பி - சரி, ஒரு ஆர்கியூமெண்ட்டுக்காக கேட்கறேன், இந்த நாட்டுல படிக்காதவங்க தான் அதிகம், அப்போ பாவம் பண்ணுற ஆளூங்க இந்த கதையை படிச்சு பரிகாரம் தேடிக்குவாங்க, ஓக்கே, படிக்காத பாவத்துக்கு பாமர ஜனங்கள் சனி கிட்டே லோல் படனுமா? நல்லாருக்குடா உங்க நியாயம்..