Tuesday, December 20, 2011

சசிகலா மாட்டியது எப்படி? சென்னையை விட்டே துரத்த ஜெ முடிவெடுத்தது ஏன்?

http://i51.tinypic.com/33e7m7q.jpg

சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 


 சி.பி - கலைஞர் தான் பாவம் கதி கலங்கி இருக்காராம், ஜெ மீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டே சசிகலா ஆதிக்கம் தான், அதுவும் உடைஞ்சுடுச்சேன்னு அய்யா கலக்கமாம்..
.

.

அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்;

சி.பி - ராஜினாமா செஞ்சாரா? செய்ய வைக்கப்பட்டாரா?நம்மாளுங்க உயிரை விட்டாலும் பதவியை விட மாட்டானுங்களே? 


இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.


சி.பி - அதாவது வர்ற வருமானத்துல 10% எடுத்துக்கிட்டு மீதி 90% ட்டை மேலிடத்துக்கு குடுத்திருந்தா பிரச்சனையே வந்திருக்காது, அண்ணன் 90 %ட்டை ஆட்டையை போட்டுட்டு `10%ட்டை மட்டும் தள்ளி விட பார்த்திருப்பார்.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடுச்சு

http://itsmeena.files.wordpress.com/2011/03/cartoon.gif

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது. 

சி.பி - பரபரப்பா பேசப்படுதோ இல்லையோ, இப்படி நியூஸ் போட்டே பர பரப்பு பண்ணிடுவாங்க, நம்மாளுங்க 


அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

சி.பி - அதை காலம் தான் முடிவு செய்யும், எப்போ வேணாலும், எப்படி வேணாலும் ஜெ மனசு மாறிடும், அதுக்கு வரலாற்றில் சான்று இருக்கு.. 



கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

சி.பி - ஒரு சின்ன கரெக்‌ஷன்,  ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது என்பது தவறு, ஏற்பட்ட அவப்பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பதே சரி.. ஆல்ரெடி அம்மா பேரு சசிகலாவால கெட்டுப்போச்சே..

24 மணி நேரம் கெடு?சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி - சென்னைல இருந்து ஏன் வெளியேறனும்? மன்னர் காலத்துல நாடு கடத்தும் திட்டம் இருந்துச்சு, இப்போ மம்மி ரிட்டர்ன்?ஒரு வேளை ஜெ வே நாடகம் போட்டு இன்கம்டாக்ஸ் ரெயிடு, சொத்துகுவிப்பு வழக்குல இருந்து தப்பிக்க இப்படி ஒரு டிராமா போடராறோ என்னவோ?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3DWpkZa-2dRWUE4FZ-01LCEEPtJ0GGHtZmcfYz_jz4AUKaG4rl8SFWnfHby9ycqOCS2XyFXcTb05Re1OuBDrp7sBtZlGvNLf8nIjNQyrGtCW7982xg1QQSdrunhc0mHyKbLhXtD8lwZWw/s1600/jayalalitha-cartoon.jpg

கட்சியில் இருந்தாரா நடராஜன்? : ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். 

 சி.பி - ஆமா, ஜெவைத்தவிர வேற யாரும் தொடர்பு வெச்சுக்கக்கூடாது ஹி ஹி

அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும் கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார். 

 சி.பி - இதுல என்ன மர்மம் வேண்டிக்கிடக்கு? ஜெவுக்கு சசி பிடிக்கும், ஆனா நடராஜனை பிடிக்கலை, அவரை 100 % விரட்ட வழி இல்லை, அது சசிக்கு பிடிக்காது ஹி ஹி இதான் சிக்கலே..


சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.

சி.பி - அட விடுங்கப்பா பாவம் சொந்த சம்சாரத்தை சந்திச்சதை என்னவோ சீக்ரெட் ஏஜண்ட் ஜேம்ஸ்பாண்ட் வில்லியை ஹோட்டல்ல சந்திச்ச மாதிரி பில்டப் குடுக்கறீங்க?  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKaT9PRyh4FvmTbG_ndqT2xeo9P_1PIqy1_B6T3Nvy2t-HIO9JsYQIYpp-vgR8W9Ot01MxDjn274NVs5iOxOzhqfcpPIJ1lQil42UB5lk4lrTScXuFlPRdFMJ-bEgh_auFVURhnJdYA4nN/s1600/jayalalitha.jpg

கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். 

சி.பி - தங்கமலை ரகசியம் கூட கண்டு பிடிச்சுடலாம், போயஸ் தோட்ட மர்மத்தை கண்டுபிடிக்கவே முடியாது.. 

டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.


சி.பி - அதென்ன ஃபைல்? கடைசி வரை ரகசிய ஃபைலாவே இருந்துடுமோ?

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

சி.பி - ஜெ ஜெயிச்சதே எம் ஜி ஆர் செல்வாக்க்குலதான் என்பதை யாரும் மறந்துடக்கூடாது.. விதை விதைச்சவர் எம் ஜி ஆர் , அறுவடை பண்றது ஜெ

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.


சி.பி - மிரட்டியவர்கள் விரட்டப்பட்டுள்ளனர் ம் ம் குட்

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

சி.பி - என்னைக்கேட்டா கவர்னர் தலையிட்டு ஜெ மேல கேஸ் போட வைக்கனும். ஒரு அரசாங்கமே தனி நபர் பிடில சிக்கிட்டு இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு நிர்வாகத்தை  பலவீனம் ஆக்குனதே ஒரு குற்றம் தான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXAqUa3AgLzKLSACm5ed3EBGF1_xn-WgHZDqyLlO8X-Bvu-MChJynz6XI1BwIaCwP22zkK928cwEPZkSry7jE8Z4RjORXw68spj4b-5aZ8wTPCjWD7k8M0ZYO8nK_s_jSyUF1xhZg7ycY/s640/82687605.preview.jpg

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.


சி.பி - எல்லாம் ஜெவுக்கு தெரிஞ்சே தான் நடந்திருக்கும், பங்கு பிரிக்கும்போது சண்டை வந்திருக்கும்

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.

 சி.பி - கூட இருந்த ஜெவுக்கே அதிர்ச்சின்னா மக்கள்க்கு எப்படி இருக்கும்? அதெல்லாம் என்னா மேட்டர்னு கண்டு பிடிச்சு வெளீல விடுங்கப்பா. 


திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

 சி.பி - எலக்‌ஷனுக்குப்பிறகு ஜெ எடுத்த பல வெட்டி அதிரடி அறிவிப்புகளூக்கிடையே , இருப்படியான உத்தரவு இது ஒண்ணுதான்.. அவர் இமேஜ் இதனால மக்கள் மத்தியில் உயரும் என்பதில் ஐயம் இல்லை.. கீப் இட் அப்.. 

கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சி.பி - மேடம், யாரையும் விடாதீங்க, அவங்க வெச்சிருந்த  பணத்தை எல்லாம் கைப்பற்றிடுங்க.. ஆனா அந்த விபரம் எல்லாம் ரகசியமா நடக்கட்டும் ஹி ஹி 




சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சி.பி - ஜெ கோர்ட் விசாரணைக்காக பெங்களூர் போனப்பவே சசி குரூப் செமயா குஷில இருந்திருப்பாங்க.. ஆல்டெர்நேட் சி எம் ஆகலாம்னு பிளான் பண்ணி இருப்பாங்க.. 


சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.

 சி.பி - எவ்வளவு சுருட்டுனாரோ யாருக்குத்தெரியும்? எல்லாம் மக்கள் பணம் தான் அவ்வ்வ்

அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு

 சி.பி - எப்படியோ நல்லது நடந்தா சரிதான் 

http://deco-01.slide.com/r/1/0043/dl/TtO0gTpF0z_n99lbQr_Tbkp62gm8slz3/watermarksm