Monday, December 19, 2011

சசிகலாவை கழட்டி விட்ட ஜெ - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf7Awrr-3YJbN1IJ8vMiZ0-3lmPGQFVreYYhDE-AzUl6FBSWeErQ1HpW4dAFakhDyVJi7wsGL0XDuW-BfimkHnx7rr2dwrV4TX12cxi5KQjcW2WEutADWdd7P8X1CLXBfZ5VaEdGu7a9u0/s1600/jj-sasikala.jpg
அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி), பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


சி.பி - அடேங்கப்பா, இவங்க எல்லாம் அதிமுகல இருந்தாங்கண்ணே இப்போத்தானே தெரியுது.. 


ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் ஜெ., இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .


சி.பி - உள்ளடி வேலைகள் என்ன நடந்ததோ, என்ன மர்மமோ யாருக்குத்தெரியும்?  


சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

சி.பி - இப்படித்தான் 2001 ல ஒரு தடவை டிராமா போட்டாங்க 


.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

 சி.பி - இனிமே ஆரும் அவங்க கூட சேரக்கூடாது, ஆரும் புழங்கக்கூடாது - நாட்டாமை

கடந்த 15 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லால் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தனர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.பி - நடராஜன் மட்டும் ஜாலியா இருப்பார் ஹி ஹி


சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ]


அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். 


சி.பி - ஓஹோ, ஓ பன்னீர் செல்வம் மாதிரி ஆல்டர்நேடிவ் சி எம் ஆகலாம்னு கனா கண்டாங்களோ?


இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன. 

http://tamil.oneindia.in/img/2011/07/14-sasi-jaya300.jpg


 1.நம் கண்ணுக்குத்தெரியாத, நம் அறிவுகுப்புலப்படாத ஏதோ ஒரு மர்மம் போயஸ் தோட்டத்தில் ஒளிந்து கிடக்கிறது


------------------------------------------------
2. 18 - கூட்டுத்தொகை 9 - ராசியான எண் வர்ற தேதில தனக்கு ராசி இல்லாதவங்களை ஜெ ஒதுக்கி இருக்காங்களே?

-------------------------------------------------
3. ஏட்டிக்குப்போட்டியாக கலைஞர் தன் மகன் ஸ்டாலின், அழகிரி, கனிமொழியை கட்சியை விட்டு நீக்கீட்டால் இன்னும் நல்லாருக்கும்

----------------------------------------------
4. தமிழ்நாட்டில் யாருக்கும் தோழிகளே இருக்கக்கூடாது, ஜெ அதிரடி அறிவிப்பு , இளைஞர்கள் திகைப்பு @இமேஜினேஷன்


-----------------------------------------
5. கலைஞர் டி வி மானாட மயிலாட ஜட்ஜ் பதவியில் இருந்து கலா மாஸ்டர் நீக்கம் - ஏட்டிக்குப்போட்டி , தானிக்கு தீனி @ இமேஜினேஷன்

----------------------------------------
6. சசிகலா உச்ச நீதி மன்றத்தில் மனு - திடீர் என கழட்டி விட்டதுக்கு காம்பன்சேஷன் எதிர்பார்ப்பு ஹி ஹி ஹி

------------------------------------------
7. கல்தா கொடுத்தது கட்சிக்கு மட்டும்தான், மற்றபடி நட்பு நீடிக்கிறது - ஜெ???

--------------------------------------
8. எதிரிக்கூடாரத்திலிருந்து யார் வந்தாலும் கழகம் மானம் , ரோஷம் எல்லாம் பார்க்காமல் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் - கலைஞர் அழைப்பு ஹி ஹி

------------------------------------
9. ஹலோ,  நண்பா!! நாடே பரபரப்பா இருக்கு, முதல்ல உங்க தோழியை கூப்பிட்டு டூ சொல்லுங்க, அதான் ஃபேஷன்

---------------------------------------
10. நான் திருவள்ளுவரின் கூடாநட்பு பற்றி இப்போதான் படிச்சேன் - ஜெ விளக்கம், சசிகலா கலக்கம்

-----------------------------------
11. இனி வருடா வருடம் டிசம்பர் 18 கழட்டி விடும் நாளாக அறிவிக்கப்படுகிறது, எல்லாரும் நைஸா யூஸ் பண்ணிக்குங்கப்பா

--------------------------------
12. நான் ஜெவுக்கு புதிய தோழியாக இருக்க ஆசைப்படுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த் பேராசை அறிக்கை # கற்பனை

---------------------------------
13. சசிகலா நீக்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் ஆலோசனை ஏதும் கூறவில்லை, இது ஜெ எடுத்த முடிவு # அடுத்த வார துக்ளக் தலையங்கம்

----------------------------------