Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 
 மேலே இருக்கும் மேடம் பொதிகை சேனல்ல செய்தி வாசிக்கறவங்களாம்


ஈரோட்டில் பதிவர் சந்திப்பு இன்று 18.12. 2011 ஞாயிறு வெற்றிகரமாக நடந்தது, 210 பேர் மொத்தம் வந்திருந்தாங்க.. அதுல வலைப்பதிவர்கள், ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்கள் அனைவரும் அடக்கம்.. சென்னையிலிருந்து ஜாக்கிசேகர், கே ஆர் பி செந்தில், ஃபிலாஷபி பிரபாகரன், தண்டோரா மணீ ஜி , உண்மைத்தமிழன் , மெட்ராஸ் பவன் சிவகுமார்.. என நீளும் லிஸ்ட்.. வரிசையா பார்ப்போம்..

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபோன், நாய் நக்ஸ் நக்கீரன் என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு மிரட்டுனாரு.. நான் சிதம்பரத்துல ரயில் ஏறிட்டேன்.. ஈரோடு 8 மணிக்கெல்லாம் வந்துடுவேன், என்னை வரவேற்க ரெடியா இருந்துக்கோ என்றார்... அடங்கொன்னியா.. இவர் பெரிய சீமை சரக்கு ஷில்பாஷெட்டியா?ன்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு ஓக்கே டன் அப்டினு ஃபோன்ல சொன்னேன்.. 

அடுத்து ஆரூர் மூனா செந்தில்... 24 மணி நேரமும் மப்புல இருக்கற மாதிரியே டி பி ல ஃபோட்டோ வெச்சிருப்பாரே அவர் தான்..அவர், அண்ணே, நான் சேலம் தாண்டிட்டேன் ( அவ்வளவு பெரிய ஊரை எப்படித்தாண்டுனாரோ..?). 7.30 மணிக்கெல்லாம் ஈரோடு வந்துடுவேன்னாரு..இவர் எஸ் எம் எஸ் ல, ரொம்ப சிக்கனமாம், அடங்கொய்யால, சரக்கு அடிக்கறப்ப மட்டும் அந்த சிக்கனம் தெரியாதா?  ( ஆனா ஆள் தான் தாதா மாதிரி மிரட்ற டைப்ல உருவம், பச்ச மண்ணுய்யா .. செம ஜாலி டைப்)


சொன்ன படி 8 மணிக்கு டான்னு வந்த நக்கீரன் மிஸ்டு கால் குடுத்தார்.. நாமே மிஸ்டு கால் மன்னன், நம்ம கிட்டேயேவா?அப்டின்னு நானும் பதில்க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன்.. அவர் சொல்ல வந்த தகவல் நான் ஈரோடு வந்துட்டேன்.. நான் சொன்ன தகவல் நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன்.. வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் பண்புக்காக 80 பைசா செலவானாலும் பரவாயில்லைன்னு நானே அவர்க்கு கால் பண்ணி ?”யோவ் , எங்கேய்யா இருக்கே?” ந்னு கேட்டேன்.. அவர் நீங்க சொன்ன படி ரயில்வே ஸ்டேஷன் ஆர்ச் வந்துட்டேன்..ப்ளூ கலர் சர்ட் போட்டிருக்கேன்னு அடையாளம் சொன்னாரு.. 

ஆளை கண்டு பிடிச்சு அவரை பிக்கப் பண்ணிட்டு ( பாருங்க மகா ஜனங்களே.. நான் எந்த ஃபிகரை யும் பிக்கப் பண்ணலை, ஒன்லி ஆண் பதிவர்) பழைய பாளையம் பஸ் ஸ்டாப்க்கு போனோம்.. ரோட்டரி சி டி ஹால் தான் ஸ்பாட்.. அங்கே போய் விசாரிச்சோம்.. அப்போ நக்கீரன் கேட்டார்..

யோவ், நீங்க லோக்கல் தானே.. எங்கே மீட்டிங்க்னு கூட தெரியாதா?


தமிழ்வாசி பிரகாஷ் , மீ, நாய் நக்ஸ் பிளாக் நக்கீரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார்

 ஹி ஹி எனக்கு கோயில், ஸ்தலம், தியேட்டர்  மட்டும் தான் தெரியும், இந்த கிளப் மேட்டர் எல்லாம் நமக்கு தெரியாது”

சரின்னு சித்தோடு சங்கவிக்கு ஃபோனை போட்டேன்.. நிற்க.. சங்கவின்னா ஃபிகர்னு யாரும் நினைச்சுடாதிங்க, சங்கவி வலைப்பூ  சதீஷ் , இவருக்கும் கில்மாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.. கில்மா படத்துக்குப்பேர் போன மலையாளப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி,  கில்மா போஸ்ட்க்கு பேர் போனது அஞ்சறைப்பெட்டி ஹி ஹி . நிறைய பேருக்கு குழப்பம் வரும் , ஈரோடு மாவட்டத்துலயே 3 சதீஷ் இருக்காங்க.. 1. நல்ல நேரம் சதீஷ் ( ஜோதிடர்) 2. சங்கவி ( சதீஷ் ,சித்தார், பவானி) 3. ஜேம்ஸ்பாண்ட் 007 சதீஷ் ( டெக்னிக்கல் & இமேஜ்  ஃபோட்டோஸ் கலெக்‌ஷன்ஸ் போடற சதீஷ் )

கோமாளி செல்வா , வெங்கட் , மீ

சித்தார் சதீஷ்கிட்டே மண்டபம் எங்கேன்னு கேட்டா அவர் நமக்கும் மேலே இருப்பார் போல.. பழைய பாளையம் பஸ் ஸ்டாப்ல யாரையாவது விசாரிங்க, சொல்வாங்கன்னாரு.. அடங்கோ , அது எங்களுக்குத்தெரியாதாய்யா.. நீங்க வேணும்னா ஈரோடு  கதிர்க்கு ஃபோன் போட்டு கேளுங்களேன்.. இதுல ஒரு ரகசியம், நான் அவுட் கோயிங்க் கால் பேசறதுன்னா ஏர் செல் நெம்பரா இருந்தா மட்டும் தான் பேசுவேன், ஏன்னா எனக்கு ஏர் செல் டூ ஏர் செல் ஃப்ரீ.. இண்ட்டர் நேஷனல் ஃபிகரா இருந்தாலும் வேற கம்பெனி ஃபோன் என்றால் மீ பேச லேது ஹி ஹி , கதிர்ட்ட இருக்கற ஏர்செல் பிசியாவே இருந்துச்சு.. இன்னொரு பி எஸ் என் எல் நெம்பர் எனக்கு தெரியாது.. 

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ,
 அப்புறம் டீக்கடைல விசாரிச்சு ஸ்பாட்டை கண்டு பிடிச்சு மண்டபம் போனா அங்கே ஆல்ரெடி 8 பேர் இருந்தாங்க.. ஒரு அவசர அறி முகம்.. யார் யார்னு எல்லாம் நினைவில்லை.. அப்போ ஈரோடு கதிர் முதுகை தொட்டார் ( என் முதுகைத்தான் ) டக்னு திரும்பறப்ப அவர் செல் ஃபோனை தட்டி விட்டுட்டேன்.. ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கும் , நல்ல வேளை பிடிச்சுட்டாரு..

ஆரூர் மூனா செந்திலை பிக்கப் பண்ணிட்டு  வர்றேன் -னு கிளம்புனேன்.. அப்புறம் பார்த்தா அவர் பாட்டுக்கு இங்கே மண்டபம் வந்துட்டு மெசேஜ் அனுப்பறார்.. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா ஆன் த வே-ன்னு சொன்னாங்க. நைட் 11 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தாங்க போல..

நான் சென்னிமலை கிளம்பி போய்ட்டேன், இன்னைக்கு காலைல 9.00 மணிக்கு பிரகாஷ் ஃபோன் பண்ணி நாங்க ஹால்க்கு வந்துட்டோம், நீங்க எப்போ வர்றீங்க?னு கேட்டாரு.. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்னேன்..

ரவி, ஜேம்ஸ் பாண்ட் சதீஷ், மீ, உண்மைத்தமிழன்

9.40 க்கு ஹால்க்கு வந்துட்டேன்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் எண்ட்ரன்ஸ்ல ஒரு குரூப்போட பேசிட்டு இருந்தாரு. புதிய தலை முறை தலைமை நிருபர் அதிஷா இருந்தாரு.. அவர் கேட்ட கேள்வி என்னை அதிர வெச்சுட்டுது.. “ ஏன் என் ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க? ஃபாலோ பண்ண முடியலை? உங்க பிளாக் எல்லாம் ரெகுலரா படிப்பேன், மொக்கை படமா விமர்சனம் போட்டு கொலையா கொல்வீங்களே?ன்னார்.. 
அய்யய்யோ, நான் எதும் பிளாக் பண்ணலை, என்னையும் அறியாம எதையாவது க்ளிக் பண்ணி இருப்பேன், நான் டெக்னிக்கல் மேட்டர்ல ரொம்ப வீக் ( மேட்டர்ல ரொம்ப ரொம்ப வீக் ), உடனடியா பார்க்கறேன்ன்னேன்.. 

யுவ கிருஷ்ணா அவர் பக்கத்துலயே இருந்தாரு.. ட்விட்டர்லயும் சரி, பிளாக்லயும் சரி 15 வருஷம் முன்னால எடுத்த ஃபோட்டோவை வெச்சிருக்காரு ஜனங்களே..  யாரும் ஏமாந்துடாதீங்க.. ( நாம எவ்வளவோ தேவலை , 4 வருஷம் முந்திய ஃபோட்டோ தான் வெச்சிருக்கோம்.. ) அவர்ட்ட கேட்டேன், 




அண்ணே, ஏன் பழைய ஃபோட்டோ வெச்சீருக்கீங்க?

 எனக்கு பழசுதான் ரொம்ப பிடிக்கும்னாரு ( இவர் நடு நிசி கீச்சு மன்னன் போல - மிட் நைட்ல கில்மா ட்வீட் தான் நநிகீ )

நக்கீரன், நான் 2 பேரும் அப்படியே கீழே இறங்கி வந்தோம், எதிர்ல கோகுலத்தில் சூரியன் வெங்கட், சேலம் தேவா வந்தாங்க

எனக்கு அடையாளம் தெரியலை.. நக்கீரன் தான் சொன்னாரு.. வர்றது வெங்கட் போல? 

இருக்காது, அவர் டி பி ல சிந்தாமணி கலர் சட்டை தானே போட்டிருப்பாரு?இதுல வேற கலர் போட்டிருக்காரு.. அதுவும் இல்லாம டி பி ல சிவப்பா இருக்காரு, இதுல கலர் கம்மியா இருக்கே?

கே ஆர் பி செந்தில் ,(எங்கே செல்லும் இந்தப்பாதை) , மீ


அப்புறம் பார்த்தா ஆள் வெங்கட் தான்.. சேலம் தேவா ட்விட்டர் டி பி ல குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்காரே.. ஆள் ஆறரை அடி , ஓங்காம அடிச்சாலே ஒன்றரை டன் வெயிட் வரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் என்னை காட்டி என்னமோ மிரட்ற மாதிரி என்னமோ சொன்னாரு.. கிட்டே போய் என்னண்ணே? அப்டின்னேன்
தம்பி.. ரொம்ப ஓவரா ஆடாதே, உன் பிளாக்ல இனிமே ஃபிகருங்கற வார்த்தையே வரக்கூடாது, எந்த விமர்சனம் எழுதுனாலும் நீ ஹீரோயினை ஃபிகர்னு தான் வர்ணீக்கறியாம், நிறைய புகார் வருது.. அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா நாங்க காப்பாத்த மாட்டோம்னாரு.. 

லக்கி லுக் மப்பு கிக் யுவ கிருஷ்ணா, மீ

ஃபிலாசபி பிரபாகரன் கிட்டே மெட்ராஸ் பவன் சிவக்குமார் வந்திருக்காரா?ன்னு கேட்டு செம பல்பு வாங்குனேன்.. அடப்பாவமே , அரை மணி நேரமா பேசிட்டு இருந்திங்களே. அவர் தான் சிவக்குமார்னார். அடங்கோ

மணி காலை 10.45  விழா ஆரம்பிச்சுது.. சிறப்பு விருந்தினர் புத்தகத்திரு விழா புகழ் ஸ்டாலின் குணசேகரன்....

தொடரும்