Saturday, December 17, 2011

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்

http://pirapalam.com/wp-content/uploads/2011/12/2-SHEET-1-1-1024x756.jpgஈழத்தில் நம் ரத்தங்கள் பட்ட கஷ்டங்களை பிரச்சார நெடி இன்றி ஒரு உண்மை சம்பவத்தின் திரைக்கதை ஆக்கல்  மூலம்  படம் ஆக்கும் முயற்சியில் ,எந்த விதமான வியாபார நோக்கம் இல்லாமல், கமர்ஷியல் சேர்ப்பு இல்லாமல்  கண்களை நனைக்க வைத்து , இதயத்தை கனக்க வைக்கும் ஒரு செல்லுலாயிடு சிறுகதை இந்த உச்சிதனை முகர்ந்தால்...

ஈழத்தில் நடக்கும் அநியாயங்களை கண்ணுற்று தமிழ்நாட்டு மீடியாக்களுக்கு தகவல் சொல்லும்  சமூக ஆர்வலரான சத்யராஜ் - உயிர் சங்கீதா தம்பதியிடம் தஞ்சம் அடைகிறாள் 13 வயது சிறுமியும், அவள் அம்மாவும்.அவர்கள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக தமிழகம் வர்றாங்க.. காரணம் அந்த 13 வயது குழந்தையின் வயிற்றில் இன்னொரு 5 மாத குழந்தை.... 

சிங்கள வெறியர்களால் கேங்க் ரேப் செய்யப்பட்ட அந்த புனிதா தான் கர்ப்பம் ஆனதே தெரியாமல் இருக்கார்.. ஹாஸ்பிடல்ல செக் பண்ணி அபார்ஷன் பண்ண ஆலோசனை கேட்கறப்ப அது முடியாது, ஆபத்துன்னு தெரியுது.. புனிதாவோட அம்மாவே தன் மகளுக்கு விஷம் வெச்சு கொல்ல முயற்சி செய்யறார்.. ஆனா காப்பாத்திடறாங்க.. 
இப்போ இலங்கைல இருந்து தகவல்,சிங்களர்களால் புனிதாவோட அப்பா கொல்லப்பட்டதா .. புனிதாவோட அம்மா மட்டும் கிளம்பி போறாங்க.. அப்பா இறந்த மேட்டர் குழந்தைக்கு(புனிதா) தெரியாது.. 

விமான சத்தம் கேட்டாலோ, பூட்ஸ் சத்தம் கேட்டாலோ புனிதாவுக்கு பயம். அந்தளவு பாதிக்கப்பட்டிருக்கா. சங்கீதாவின் அம்மா ஊர்ல இருந்து மாசமா இருக்கற மகளை பார்க்க வீட்டுக்கு வர்றாங்க, சங்கீதா நிறை மாச கர்ப்பிணி.. அவங்க வீட்ல ஈழப்பொண்ணு இருக்கறது அவங்களுக்குப்பிடிக்கலை..



http://cinesouth.com/images/new/09122011-THN10image1.jpg

ஒரு சமயம் சத்யராஜ்-சங்கீதா தம்பதி பீச்சுக்கு புனிதாவோட போறப்ப புனிதா மிஸ் ஆகி 4 ரவுடிங்க கிட்டே மாட்டிக்கறா.. அவ கர்ப்பம்னு தெரிஞ்சும் அவங்க ரேப் பண்ண ட்ரை பண்றப்ப ஒரு திருநங்கை அவளை காப்பாத்தறாங்க.. 

புனிதாவுக்கு  இப்போ ஹாஸ்பிடல்ல டெஸ்ட் எடுக்கறப்ப ஒரு அதிர்ச்சி செய்தி.. ஹெச் ஐ வி பாசிட்டிவ்.. அதாவது புனிதாவுக்கு எய்ட்ஸ்..  இடைவேளை
சங்கீதாவோட அம்மா  பயங்கர ஆர்ப்பாட்டம் பண்றாங்க.. எய்ட்ஸ் உள்ள பொண்ணு நம்மோட இருக்கக்கூடாதுன்னு.. அவங்க வாக்குவாதத்தை கேட்டு புனிதா  தன்னை காப்பாத்துன திருநங்கை கிட்டே தஞ்சம் புக , இங்கே இவங்க அவளை தேடி பரி தவிக்கறாங்க

சங்கீதாவுக்கு சுகபிரசவம் ஆகிடுது.. புனிதாவுக்கு குழந்தை பிறக்குது, ஆனா புனிதா தன் புனித பயணத்தை பூமில இருந்து சொர்க்கத்துக்கு தன் அப்பா போன இடத்துக்கு போயிடறா.. அவ குழந்தையை சத்யராஜ் - சங்கீதா தம்பதி வளர்க்கறாங்க..

முதல்வேளையா புனிதவதியாக நடித்த நநிகாவுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.. ஈழப்பெண்ணை கண் முன் நிறுத்தும் நிறம், நடிப்பு, வெள்ளந்தி சிரிப்பு என மனசுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவர் தெருவில் சின்னக்குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும்போதும் சரி,சத்யராஜ் வீட்டு நாய்க்கு அமுதன் என தமிழ்ப்பெயர் வைத்து இன்றி விடும்போதும் சரி. இன்ஸ்பெக்டர் சீமான் வீட்டுக்குழந்தைகளுடன் பழகும்போதும் சரி கலக்கலான நடிப்பு.. 


விமான சத்தம் கேட்டால் பயந்து நடுங்குவது, ரவுடிகளை பார்த்து மிரள்வது என நவரச நடிப்பை அள்ளித்தெளித்து இந்த ஆண்டின் சிறந்த மழலை விருதுக்கு தகுதி பெறுகிறார்.. 

அவர்க்கு எயிட்ஸ் நோய் முற்றி  ரத்த வாந்தி எடுக்கும்போதும், பிரசவ வலியில் துடிக்கும்போதும் ஆண்களின் கண்களையும் கலங்க வைக்கிறார்.

2வது பாராட்டு வசன கர்த்தா தமிழருவி மணியன்க்கு..  வாள் முனையை விட கூர்மையான , வேல் முனை போல் குத்தும் கருத்தான் வசனங்கள்.. பல இடங்களில் இலங்கை அரசை பழிக்கும்போது ஏன் தேவை இல்லாமல் சென்சார் வெட்டோ?இலங்கையில் வெட்டினால் ஓக்கே, இங்கே ஏன் வெட்ட வேண்டும்?

3 வது பாராட்டு சத்யராஜ் சங்கீதா ஜோடிக்கு.. ஏற்ற பாத்திரம் அறிந்து இருவரும் அடக்கி வாசித்து பாந்தமாக நடித்திருக்கிறார்கள்.. அம்மாவுடன் வாதிடும் காட்சியில் சங்கீதா பெண் புலியாக சீறுவது அற்புதம்... சீமான் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவு..

திருநங்கையாக வருபவர், க்ளை மாக்சில் ஆட்டோ டிரைவராக வருபவர்,டாக்டர் கேரக்டர் , நாசர் என பட்டியல் இட்டால் ஏகப்பட்ட பேர் வருவாங்க.. எல்லார் நடிப்பும் கன கச்சிதம்.

இமானின் இசையில் 4 பாடல்கள் அருமை.. அதுவும் இருப்பாய் தமிழா நெருப்பாய். இழிவாய் கிடக்க நீ என்ன செருப்பா பாடல் தமிழனின் தன்மானத்தை, இனமான உணர்வை தூண்டும் காசி ஆனந்தனின் வரிகள் கலக்கல்.. படமாக்கப்பட்ட விதம் அருமை.. 

ஏனோ ஏனோ இது ஏனோ , உச்சிதனை முகர்ந்தால், சுட்டிப்பெண்ணே ,சுட்டிப்பெண்ணே ஒரு கட்டுக்காவல் காற்றுக்கு இல்லை  பாடல் காட்சியில் போன்ற பாடல்கள் அழகிய கவிதை.. 



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=12502&option=com_joomgallery&Itemid=77

 இயக்குநர் தவிர்த்திருக்க வேண்டிய சில தவறுகள்

1. எயிட்ஸ் நோய் வந்தால் நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தால் 10 வருடங்கள் வரை குறைந்தபட்சமும், அதிக பட்சம் 30 வருடங்கள் வரை உயிர் வாழலாம் என  மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் படத்தில் புனிதா எயிட்ஸால் இறப்ப்பதாக வருகிறது.. பிரசவத்தின்போது இறப்பதாக காட்டி இருக்கலாம்.. இன்னும் 2 நாள் தான் அவருக்கு கெடு என டாக்டர் சொல்வது எயிட்ஸ் நோயாளிகளுக்கு பீதியை அளிக்கும்.. 

2. அதே போல் எயிட்ஸ் உள்ள ஒரு நபரால் உறவு கொள்ளப்படும் ஒருவர் 3 மாதங்களூக்குள் எயிட்ஸால் பாதிக்கப்படுவது உறுதி.. நோயால் பாதிக்கப்பட்ட அறி குறிகள் 2 வது மாதத்தில் இருந்தே தெரிய ஆரம்பிக்கும், ஆனால் நோய் வந்த 5 மாதம் கழித்தும் புனிதாவை 3 வெவ்வேறு தருணங்களில் செக் செய்யும் டாக்டர்கள் நோய் பற்றி அறியாமல் 4 வது தடவை செக் செய்யும்போதுதான் நோய் இருப்பதை அறிகிறார்கள்.. அது எப்படி? கர்ப்பிணி பெண்ணுக்கு பிளட் செக்கப் முதல்ல செய்வாங்களே?

3. மிக இள வயதுப்பெண்ணான புனிதா தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாதவராக காட்டப்படுகிறது.. 8 மாதம் வரை கூட அப்படி அறியாமல் இருந்த நபர்கள் உண்டு, ஆனால் புனிதா  ஆல்ரெடி கர்ப்பமாக இருக்கும் சங்கீதா வீட்டில் தான் வளர்கிறார்.. தன் வயிறு பெரிதாக இருக்கு என புலம்புகிறார்.. சங்கீதா கர்ப்பம் என்பதை அறிகிறார், ஆனா அவர் கர்ப்பம் என்பது மட்டும் தெரியாதா?



http://pirapalam.com/wp-content/flagallery/uchithanaimuharnthaal/18.jpg

4. சங்கீதாவுக்கு குழந்தை பிறந்த 5 வது நிமிஷத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருமிக்கொண்டு இருக்கும் புனிதா அந்த குழந்தை அருகில் செல்ல டாக்டர்கள் விடுவது எப்படி? ( நோய்த்தொற்று அட்டுக்குழந்தைக்கு ஏற்படும் என சாதா தும்மல், இருமல்வாலாக்களையே அனுமதிக்க மாட்டாங்க)

5. சுட்டிப்பெண்ணே ,சுட்டிப்பெண்ணே ஒரு கட்டுக்காவல் காற்றுக்கு இல்லை  பாடல் காட்சியில்  பெண் விடுதலைப்புலிகள் 10 பேரை குரூப் டேன்சர்ஸ் ரேஞ்சுக்கு ஆட விட்டதை தவிர்த்திருக்கலாம்.. 

6.  அப்புறம் எல்லா சீன்களீலும் காமிரவும் சரி, எல்லா கேரக்டர்களும் சரி புனிதாவை ஃபோக்கஸ் பண்ணி, அதீத இரக்கம் வரவழைக்க பிரம்மப்பிரயத்னம் செய்யறாங்க, இயல்பா விட்டிருக்கலாம்.. 

7. இலங்கையில் இருந்து இந்தியா வரும் பெண் ஒரு பணக்கார வீட்டில் தங்குவதால் அவருக்கு எல்லா வசதியும் கிடைத்து விடுகிறது, ஆனால் உண்மை வாழ்வில் அவர்களுக்கு போக்கிடம் கிடையாது.. ஒரு ஏழை தம்பதியாக சத்யராஜ் - சங்கீதாவை காட்டி இருந்தால் புனிதாவின் மேல் இரக்கம் வர இன்னும் நல்ல சந்தர்ப்பங்கள்...



http://eelamstar.com/wp-content/uploads/2011/10/ochithanai_mugarnthal.png


வணீக ரீதியாக இந்தப்படம் வெற்றி அடைய தமிழனாய் உணர்வு கொண்ட அனைவரும் பார்க்க வேண்டும்.. ஈழத்தமிழர்கள் வாழ்வை, அவர்கள் படும் கஷ்டங்களை நாம் உணர நல்ல வாய்ப்பு..

ஈழப்பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் கழற்றி வைத்திருக்கும் தங்கள் மன்சாட்சியை மீண்டும் பொருத்தி தங்கள் குடும்பத்துடன் இப்படத்தை காண வேண்டும், சொல்ல முடியாது கல்லுக்குள் ஈரம் கசியலாம்

பாலை போல இந்தப்படம் மதிப்பெண்ணுக்கு  அப்பாற்ப்பாட்டுத்தான் விகடன் கிரீடம் சூட்டும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 50

குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று

சி.பி கமெண்ட் -  கண்களை நனைய வைக்கும் அற்புத சிறுகதை

 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

 டிஸ்கி -வசன கர்த்தா தமிழருவி மணியன்-ன் கலக்கலான வசனம் திங்கள் கிழமை தனிப்பதிவு-

தமிழருவி மணியன் -ன் எழுச்சியான ,உருக்கமான வசனங்கள் இன் உச்சிதனை முகர்ந்தால்



http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Uchithanai%20Mukarnthal-reel.jpg

டிஸ்கி 2 -

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

 

GHOST PROTOCOL -MISSION IMPOSSIBLE -4 -4 - ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் பிரம்மாண்டம் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்