Thursday, December 15, 2011

சி.பி வழங்கும் கம்மாக்கரை ஓரம் ஃபிகர் பார்க்கும் நேரம் ( வெள்ளிக்கிழமை விருந்து)

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3707.jpg 

1. மம்பட்டியான் - மலையூர் மம்பட்டியான் - ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இசையமைப்பு இளையராஜா வழங்க பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே , சின்னப்பொண்ணு சேலை செண்பகப்பூ போல போன்ற சூப்பர் ஹிட் பாட்டுக்கள் இருந்த படம்..  பட வெற்றிக்கு தியாகராஜனின் நடிப்பும், திரைக்கதையும் இளையராஜாவின் இசையும் முக்கிய காரணங்கள்..

இப்போ ரீமேக் படத்துல பிரசாந்த் ஹீரோ.. க்ளைமாக்ஸ்ல துரோகம் பண்ற கேரக்டர் யார்னு சஸ்பென்ஸ்..ஈரோடு அபிராமில ரிலீஸ் ஆகுது.. பார்ப்போம் எப்படி இருக்குன்னு.. 


http://mimg.sulekha.com/tamil/mouna-guru/stills/mouna-guru-film-047.jpg

2. மவுன குரு - டைரக்டர் தரனியிடம் தில்,தூல்,கில்லி படங்களில் உதவியாளராக இருந்த சாந்தகுமார்,அருள்நிதி நடிக்கும் மவுனகுரு படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். மாறுபட்ட குணாதிசயம் கொண்ட கல்லூரி மாணவன் எதிர்பாராமல் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.


முதலில் இந்தக்கதையில் நடிக்க பயந்திருக்கிறார், நாயகன் அருள்நிதி.அதுபற்றி அவரே சொல்கிறார்; டைரக்டர் சாந்தகுமார் என்னிடம் மவுனகுரு படத்தின் கதையை சொன்னார்.பாதிக்தை கேட்டதும் ஒருவித பயம் வந்துவிட்டது. ( ஏன்? பேய்க்கதையா? )அதனால் மீதியை அப்புறம் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

அதற்குப் பிறகு 6 மாத காலம் டைரக்டரை நான் சந்திக்கவில்லை. ( நைட் பார்ட்டிகள்ல அண்ணன் பிசி போல)திடீரென ஒருவிழாவில் அவரை பார்த்தேன். மீதிக்கதையை சொல்லுங்கள் என்றேன்.கதையை கேட்டு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள இந்தக்கதைக்கு அதிகமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாகவேக்கிற படமாகவே உழைத்தேன்.நடிப்பிலும் என்னை பேசவைக்கிற படமாக இது இருக்கும்.( படம் பூரா பேசிட்டே இருப்பீங்களோ?)

படத்தில் அருள்நிதியின் ஜோடியாகிஇருப்பவர்,வாகை சூடவா இனியா.( ஃபிகரு இதுலயாவது கிளாமர் காடுதான்னு பார்ப்போம்). ஈரோடு ஆனூர்ல ரிலீஸ்

http://www.puthinamnews.com/wp-content/uploads/2011/09/UCHITHANAI.jpg
3. உச்சிதனை முகர்ந்தால் - ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.



தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!

http://larryfire.files.wordpress.com/2011/06/mission-impossible-ghost-protocol.jpg

 4. GHOST PROTOCALL ( MISSION IMPOSSIBLE)-  டாம் க்ரூஸ் நடிச்ச ஆக்‌ஷன் படம். ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ். வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் பாணி கதைதான்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் உளவு நிறுவனம் அதை வைத்தவர்களை  கண்டறிய தன் ஏஜண்ட்ஸை அனுப்புகிறது.. ஹீரோ அண்ட் வில்லன் மோதல்

http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/12/mi-ghost-protocol-still09.jpg