1. உங்க பையன் சபரி மலை போக மாலை போட்டிருக்கானா?
ஆமா, ஏன்?
இந்தாங்க ரூ 10,000 , கேரளா கவர்மெண்ட் வழங்கும் முன் கூட்டியே தரும் நிவாரண நிதி
--------------------------------------------------
2. அப்துல் கலாம் எதுக்காக கேரளா போறார்?
கேரளாவில் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு அறிக்கை தர..
----------------------------------------
3.சபரி மலைல ஏகப்பட்ட பக்தர்கள் இருக்காங்க.. இதுல தமிழர்களை எப்படி அடையாளம் காண்பது?
அடி வாங்கிட்டு இருக்கறது தமிழர்கள், அடி குடுக்கறது மலையாளிகள்
--------------------------------------
4. படு டப்பா படமான இதுக்கு ஏன் டேம்-னு டைட்டில் வெச்சீங்க?
படம் பார்க்கறவங்க டேமிட்-னு திட்ட வசதியா இருக்கட்டும்னு தான்
--------------------------------------------
5. பஸ் ஓனரா இருக்கற நீங்க ஒரே மாசத்துல எப்படி லட்சாதிபதி ஆனீங்க?
சபரி மலை டூ சிங்கிரி பாளையம் ஒரு பஸ் விட்டேன், செம வசூல்
----------------------------------------
6. சபரி மலைக்கு போனவங்களுக்கு செம அடியாமே?
ஆமா, பள்ளிக்கட்டு சபரி மலைக்கு, மாவுக்கட்டு சபரி மலைக்கு, சாமியே அய்யய்யோ-னு பாடறாங்களே?
------------------------------------\
7. விஜய்காந்த் நடிச்சு சபரி மலை-னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்கா? தகவலே வர்லை?
அது அவர் டாக்டரா நடிச்சு வந்த சபரி படம் தான், சீசனுக்கு ஏற்றபடி ரீ ரிலீஸ் பண்ணி இருக்காங்க..
-----------------------------------------
8. பிரபு தேவா ஏன் ஜாலி மூடுல இருக்காரு?
கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை முன்னிட்டு கேரளா நடிகைகள் யாரையும் மேரேஜ் பண்ணக்கூடாதுன்னு நடிகர் சங்கத்துல சொல்லீட்டாங்களாம்
---------------------------------------------
9. தலைவரே, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு பற்றி என்ன நினைக்கறீங்க?
சில்லறைத்தனமா இருக்கு.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
----------------------------------------------
10. இங்கே ஏ சி ரூம் கிடைக்கும்..
ஓஹோ சில் அறை ?? அதான் சில்லரை வியாபாரியா?
---------------------------------------------
11. டாக்டர் ஏன் கடுப்பா இருக்காரு?
நோயும் ஜாயும் பிறர் தர வாரா -னு க்ளினிக் ல யாரோ எழுதி வெச்சுட்டு போய் இருக்காங்களாம்..
---------------------------------------------
12. தலைவர் ஃபாரீன் பேங்க்ல ஏன் லோன் வாங்கனும்?
அந்நிய முதலீட்டுக்குத்தானே தடை? அந்நிய கடன் ஈட்டுக்குமா தடை?னு கேட்கறாரு..
------------------------------------------
13. நான் காந்தியையும் பின்பற்றுகிறேன், சாந்தியையும் பின்பற்றுகிறேன்-னு தலைவர் சொல்றாரே?
சாந்திங்கறது அவர் சம்சாரம்.
--------------------------------------------
14. தலைவர் பண்ற அலப்பறை தாங்கலை..
ஏன்?
முல்லை பெரியாறு பிரச்சனை தீரும் வரை மகளிர் அணித்தலைவிக்கு முல்லைப்பூ கூட வாங்கித்தர மாட்டாராம்..
----------------------------------------------
15 டைரக்டர் சார்.. உங்க சம்சாரத்தை புரொடியூசர் ஆக்கி அவங்க நெற்றில நாமம் போட்டிருக்கீங்களே? ஏன்?
மேரேஜ் ஆன பொண்ணு வெறும் நெற்றில இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதான்
-----------------------------------------------
16. யோவ், பிச்சை எடுக்கற நீ கைல 6 லட்சம் ரூபா வெச்சிருக்கியே?
ஆமாங்க எஜமான், மீதி வீட்ல பாதி, பேங்க்ல பாதி இருக்கு..
----------------------------------------
17. தலைவரே. உங்க பையனுக்கு படிப்பு மண்டைல ஏறலையா?
ஆமா, எப்படி கண்டு பிடிச்சிங்க?
இளைய தலை முறைக்கு வழி விடனும்னு அறிக்கை விட்டீங்களே?
------------------------------------------
18. உங்க கட்சில கொ ப செ பதவி இல்லையே?
கொள்கையே இல்லை , கொ ப செ பதவி எதுக்கு?
-----------------------------------------
19. தலைவர் சமாளிப்புல கில்லாடி
ஏன்?
பால் விலை ஏறுனதால லோக்பால் சட்டம் அமலுக்கு கொண்டு வர முடியலைன்ட்டாரே?
-----------------------------------------------
20. கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..
சாரி தலைவரே, கறுப்புப்பணம் எல்லாம் வெச்சிருக்க கூடாது
-------------------------------------