Wednesday, December 14, 2011

ஈரோடு - தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , ஃபேஸ்புக் நண்பர்கள் சந்திப்பு

ஒரு சந்தோஷமான செய்தி.. ஈரோட்ல  பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது.. போன வருஷமே ரொம்ப பிரம்மாண்டமா செஞ்சாங்க.. ஆனா அப்போ நான் கலந்துக்க முடியாம போச்சு.. இந்த வருஷமும் கரெக்டா ஒரு தடங்கல் வந்தது.. சவால் சிறு கதை போட்டி பரிசளிப்பு விழா சென்னைல அதே நாள்.. இந்த முறையும் நான்  ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்துக்கலைன்னா சொந்த ஊர்ல நடக்கற சந்திப்புல கலந்துக்காம அப்படி என்ன வேலை?ன்னு கேள்வி வரும் என்பதால் இந்த வருடம் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.. 

ஈரோட்டில் கசியும் மவுனம் கதிர்  இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளூம் செய்யறார்.. வர விருப்பம் உள்ளவங்க நாளை இரவுக்குள் பதிவு செஞ்சுக்குங்க.. ஏன்னா சாப்பாடு ஏற்பாடுகள் செய்ய லிஸ்ட் விபரம் தேவை.. எத்தனை பேர் வர்றாங்கன்னு தெரிஞ்சாத்தான்  சாப்பாடு ரெடி பண்ண முடியும்.. 

ஈரோட்டில் உள்ள பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார் , சித்தோடு நல்ல நேரம் சதீஷ்,  சித்தார் சங்கவி சதீஷ்.. கோபி கோமாளி செல்வா , அது போக இன்னும் பல ட்வீட்டர்கள், ஃபேஸ் புக் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடலாம்.. 

இது ஈரோடு மாவட்ட அளவிலான சந்திப்பு அல்ல.. தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து பிரபல பதிவர்கள், ஆரம்ப நிலை பதிவர்கள்,சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லாமல் வருவாங்க.. வந்தா அனைவரையும் சந்திக்கலாம்.. 

 பதிவர்கள் இதையே அழைப்பாக கருதவும்.. தனித்தனியாக சொல்லவில்லையே என்ற எண்ணம் ஏதும் இன்றி நம் விழா போல் பாவித்து வந்து விழாவை சிறப்பிக்கவும்..  விழாவில் கலந்து கொள்ள எந்த கட்டணமும் இல்லை.. இலவசம்

இது குறித்து கதிர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

சங்கமம்-2011
இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

எங்கு, எப்போது, என்ன?
சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:
முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011  நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
 
தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம். 

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விபரங்களுக்கு:

தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி   (செயலர்) 90037-05598,
கார்த்திக்
  (பொருளர்)  97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707

நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்
 
 
 டிஸ்கி - ஈரோடு பஸ் ஸ்டேண்டில் இருந்து பெருந்துறை செல்லும் டவுன் பஸ் நெம்பர் 12, 18 போன்ற பஸ்ஸில் ஏறினால்  பழைய பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கவும், இது கலெக்ட்டர் ஆஃபீஸ் ஸாப்புக்கு அடுத்த ஸ்டாப்