Monday, December 12, 2011

என் புருஷன் சிங்கம் மாதிரி.. நான் புலி மாதிரி ( ஜோக்ஸ்)

1.மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்! # ஏன் மேடம் இவ்ளோவ் லேட்? குழந்தை பிறந்த அன்னைக்கு சாயங்காலமே உங்களை எதிர் பார்த்தோம்!

----------------------------

2. ஹலோ மிஸ்டர், ட்வீட்ஸே போடாதவங்களை பெண் என்ற ஒரே காரணத்துக்காக ஃபாலோ பண்றீங்களே? ஏன்?

மேடம் , உங்க கேள்விலயே பதில் இருக்கு ஹி ஹி

----------------------------------

3. டிசம்பர் 17 முதல் திருப்பதி மலையில் திருப்பாவை பாடப்படும் # ஆந்திராவில் தமிழ்ப்பாட்டு கூடாதுன்னு யாரும் கலாட்டா பண்ணலையா?- கொளுத்திப்போடு

----------------------------

4. திருவேற்காடு-பாலியல் தொல்லைக் கொடுத்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் மனைவி#குடும்பக்குத்து விளக்கு போல, குத்திடுச்சு, அவ்

--------------------------------------

5. தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்சன் ஹீரோ சசிகுமார் : பாலா பாராட்டு! # அய்யய்யோ, அப்போ போராளி அடுத்த படத்துல ஜெட்லீயா?புரூஸ்லீயா?தமிழா!சமாளி

-------------------------------------------


6. மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா கங்கோபத்பாய் # அப்போ அடுத்த சோனா இவர் தான் - கையை பிடிச்சு இழுத்துட்டான் சார்

-------------------------------------

7. தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தேமுதிக எம்எல்ஏக்கள் கமிஷன் வாங்கக் கூடாது-கேப்டன் # ஆல் டீலிங்க் ஐயா பார்த்துக்குவார், ஆல் அல்லக்கைஸ் ப்ளீஸ் கப் சிப் 

------------------------------------

8. முல்லைப் பெரியாறு: திமுக., சார்பில் நாளை மறுநாள் உண்ணாவிரதம் # ஏன்? சண்டே மட்டன் டே வா?

-------------------------------------

9. ஒஸ்தி ஒரு 5 டி படம் # வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி

------------------------------

10. சபரிமலைக்கு காட்டு வழியே  செல்லும் பக்தர்கள், இனிமேல், காலை 6 மணி டூ 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் # ஹூம் , சாமிக்கே ரேஷனா?

--------------------------------


11. மதுரையில் நடக்கும் மனிதச் சங்கிலியில் அழகிரி வர்லை, பார்லிமென்டில்   பொறுப்பு இருப்பதால்-கலைஞர் # அப்போ வர்றவங்க எல்லாம் பொறுப்பு இல்லாத பருப்பா?

------------------------------------

12. தந்தையோ, கணவனோ இல்லாவிட்டால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான்

--------------------------------

13. பெரியவங்க முன்னாடி இந்த பொண்ணுங்க எல்லாம் அடக்கமானவங்க மாதிரி நடிக்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

-----------------------------

14.ஆண்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் ? 

ஒண்ணும் ஆகாது, பெண்களுக்கு கோபம் வந்தால்தான் பிரச்சனையே

--------------------------------

15. ஆண்களெல்லாம் வீட்டில் எலி வெளியில்  புலியாமே?

ஆமா, உண்மைதான் , ஆண்கள் வீட்டில் ஜல்லி அடிச்சுட்டு இருப்பாங்க, வெளில வந்தா கில்லி தான்

------------------------------------



16. பசங்க அதிகமா வாய் பேசுனா ஜொள் பார்ட்டினும் ,பேசவே இல்லேன்னா அமுக்கன் னும் .சொல்றாங்க,  என்ன உலகமடா!!

---------------------------------

17. என் புருஷன் சிங்கம் மாதிரி..

ஓஹோ, அப்போ நீங்க புலி மாதிரியா? 2 பேரும் ஜூ-லயா இருக்கீங்க?

---------------------------------

18. இன்று முழு சந்திர கிரணகம்: இந்தியாவில் தெளிவாக தெரியும் # நடிகை நிலா எங்கிருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கவும்- அண்ணன் எஸ் ஜே சூர்யா

------------------------------------

19. இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கியது - ஹசாரே #  தாத்தா! நீங்க காந்தியா? டிஸ்கோ சாந்தியா?

----------------------------------

20. விக்ரம்க்கு ராஜபாட்டையில் 17 கெட்டப் # அதை விடுங்க, எத்தனை செட்டப்? தமிழேண்டா!!

-----------------------------



21. 2ஜி விவகாரம்: ப சிதம்பரத்தை களங்கப்படுத்த முயற்சி - கபில் சிபல் # சிதம்பரத்தை பிடிச்ச கிரகணம் விடாது கறுப்பு, அடாது அடைப்பு


------------------------------------

22. வெளியில் கிளம்பலாம்னு நினைச்சேன், வேண்டாம் பாம்பு முழுங்கிடுச்சுன்னா என்ன பண்றது.. கேன்சல் பண்ணிட்டேன்..

ஓஹோ! ராணா ஹெக்ஸடாக்டைலாவா? நீங்க # தவளை தவளை

------------------------------------

23. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகமூடி அணிந்தே பேச வேண்டி உள்ளது.

அய்யய்யோ, அப்போ எந்நேரமும் கைல ஒரு சூட்கேஸ் நிறைய மாஸ்க் வேணும் போல

------------------------------------------

24. நான் அழுதாலும் என்னை "சிரி(sri)வித்யா"னு தான் சொல்வாங்க..

அழுதாத்தான் சிரினு குழந்தை கிட்டே சொல்வாங்க, சிரிக்கற குழந்தைட்டயா சொல்வாங்க?

--------------------------------------

25. நிருபர் - மேடம், நீங்க தனிமை கிடைச்சா என்ன செய்வீங்க?


நடிகை - என்னை தனியா இருக்க யார் விடறாங்க.. எப்பவும் என்னை சுற்றி கூட்டம்தான்

--------------------------------------



26. ஜட்ஜ் - எதுக்காக பக்கத்து வீட்டு ஃபிகரை கொலை செஞ்சே?

கைதி - ஒய் திஸ் கொலை வெறி பாட்டை 434 வது தடவையா பாடிட்டிருந்தது


------------------------------------

27. ஓட ஓட ஓட தூரம் குறையல.


. treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்


------------------------------------------

28.  டியர், காலேஜ்ல உன்னைத்தான் எலக்டிவ் பேப்பரா (elective paper ) செலக்ட் பண்ணப்போறேன்..

வேணாம் டார்லிங்க். உங்கப்பா ஒரு டிடக்டிவ் டாப்பர்





 டிஸ்கி - மேலே உள்ளதில் முதல் 3 ஃபோட்டோக்கள் ஈரோடு எஸ் கே எம் பார்க்கில் எடுத்தவை.. கோயில் கும்பாபிஷேகம், கேரளா இளைஞர்கள் ஃபோட்டோ சென்னிமலையில் எடுத்தவை, கடைசி ஃபோட்டோ நண்பரின் மழலை