1.டீக்கடைல எதுக்கு இங்க் பில்லர்?
இனிமே இதுதான் மில்க் பில்லர்.. டீ-ல பாலை இதன் மூலமாத்தான் 2 சொட்டு விடுவோம்
--------------------------------------
2. நகைக்கடைல கொள்ளை அடிச்சவன் கே டி -னு எப்படி சொல்றே?
கே டி எம் நகைகளை மட்டும் தான் கொள்ளை அடிச்சிருக்கான்..
------------------------------------
3. நான் பஸ்ல பயணம் பண்ணும்போது-ங்கற லைனை அவர் ஏன் அடிக்கடி சொல்றாரு?
எல்லாம் பணத்திமிர்தான், வேறென்ன?
------------------------------------
4. ஜட்ஜ் - அந்த பெண்ணை ரேப் அட்டெம்ப்ட் செஞ்சதா உன் மேல கேஸ் இருக்கு.
கைதி - முயற்சி மட்டும்தான் செஞ்சேன் யுவர் ஆனர்
-------------------------------------
5. எதுக்காக மினிஸ்டரை அறைஞ்சே?
ரூம் போடுன்னாரு.. ரூம்னா அறை தானே? விட்டேன் ஒண்ணு பளார்னு
--------------------------------------
6. சாமியாரை பார்க்கனும்..
அவர் மோன நிலைல இருக்காரு ..
. ஓஹோ யார் கூட?
---------------------------------------------
7. டைரக்ட் ஸ்பீச்,இன்டைரக்ட் ஸ்பீச் என்ன வித்தியாசம்?
டைரக்டர் என்ன பேசுனாலும் அது டைரக்ட் ஸ்பீச், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் பேசுனா அது இன்டைரக்ட் ஸ்பீச்
------------------------------------------
8. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எதுக்கு ஸ்ட்ரைக் பண்றாங்க? சம்பள உயர்வு கோரியா?
ம்ஹூம், இனி மாமூல் தொகை -அடிக்கற கொள்ளைல சதவீத அடிப்படைல இருக்கனுமாம்..
-------------------------------------------
9. டாக்டர்க்கும் , தலைவருக்கும் என்ன வித்தியாசம்?
சர்ஜரி செஞ்சு ஆளை க்ளோஸ் செஞ்சா டாக்டர், ஃபோர்ஜரி செஞ்சு சொத்துக்களை கபளீகரம் செஞ்சா தலைவர்
------------------------------------------------
10. மனைவி கூட லாட்ஜ்ல தங்கி இருந்தப்ப போலீஸ் ரெயிடு வந்துட்டாங்க..
அடடா.. அப்புறம்?
2 பேரும் சண்டை போட்டுக்காட்டிய பிறகுதான் தம்பதிகள்னு நம்புனாங்க..
--------------------------------------
11. மாப்ளை ஒரு மாதிரி டைப்னு எபடி சொல்றீங்க?
அவரோட புக் செல்ஃப்ல விருந்து, திரைச்சித்ரா , சினி மித்ரன் புக்ஸ் எல்லாம் இருந்ததே?
--------------------------------------------------
12. தலைவருக்கு லொள்ளு ஜாஸ்தி -னு எப்டி சொல்றே?
கோவை கே ஜி ஆர்ட்ஸ் - தானம் தியேட்டரை எனக்கு தானம் செய்ய முடியுமா?னு கேட்டாராம்..
-------------------------------------------
13. பேங்க் மேனேஜரை ஏன் டிஸ்மிஸ் பண்ணீட்டாங்க?
நோ லோன்,. லீவ் மீ அலோன் -னு அவரோட சேம்ப்பர்ல எழுதி வெச்சிருந்தாராம்..
-----------------------------------------------
14. தலைவர்க்கு தண்ணி அடிக்கற பழக்கம் ஜாஸ்தின்னு எப்டி சொல்றே?
தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு குடுத்தா போதாது.. உற்சாக பான வரவேற்பும் குடுக்கனும்கறாரே?
----------------------------------------------
15. ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொன்னதும் ஹீரோயின் இஞ்சியை சுத்தியலால உடைக்கறாரே? ஏன்?
காதலை சுக்கு நூறா உடைக்கறாராம்..
-----------------------------------------------
16. சந்தர்ப்ப சூழ்நிலையால மேரேஜ்க்கு முன்னரே ஒரே கட்டில்ல படுக்க வேண்டியதாகிடுச்சு.. நம்ம 2 பேருக்கிடையே ஒரு புக் வைக்கிறேன்.. அதை தாண்டி நீங்க வரக்கூடாது,..
ஓஹோ நூல் வேலியா?
-------------------------------------------------