Saturday, December 10, 2011

சில்லறை ஜோக்ஸ் ( சில் அறை - ஏ சி )



1.  மிஸ்... உக்ககிட்டே  ஏகப்பட்ட  டேலண்ட்  இருக்கு...  நீங்க  ஏன்  ஒரு  வலைப்பூ  தொடக்கக்கூடாது? ( BLOG)


அப்புறம்  என்னை  எல்லாரும்  ‘பிளாக்கர்’-னு  (BLACK)சொல்லிடுவாங்களே? மீ செக்கச்சிவப்பு


----------------------------------
2. .தலைவரே!  வாட்ச்ல  மணி  பார்க்கக்கூட  உங்களுக்கு  தெரியாதாமே?


எவன் சொன்னது?  பார்ப்பேன்.  ஆனா,  டைம்  என்ன?-னு சொல்லத்தெரியாது.


-------------------------------------
3. உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டைவிட்டு எந்திரிக்கறீங்களே? ஏன் மேனேஜர் சார்?

ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க

---------------------------------------

4. என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..

அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு

---------------------------------------

5. புத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா?

ச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க

-----------------------------------------



6. சிம்புவுக்கும், அவரோட அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

அப்பா செட் போடறதுல மன்னன், பையன் செட் பண்றதுல கண்ணன் # ஆர்ட் டைரக்‌ஷன் &; ஹார்ட் டைரக்‌ஷன்

----------------------------------------

7. ஃபிகரு-  என் பின்னால பல பசங்க பைத்தியமா சுத்தறாங்க.. 

ஆல்ரெடி பைத்தியமா? சுத்த ஆரம்பிச்ச பின் பைத்தியமா?

----------------------------------------

8. ஏய் மிஸ்டர்! பொண்ணுங்களை உரசுறதுக்காகவே டவுன் பஸ்ல வருவீங்களா?

இல்லையே? அப்பப்ப எலக்ட்ரிக் ட்ரெயின்லயும் வருவனே? # யார் கிட்டே?

----------------------------------

9. Mr, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.

மிஸ், கண் எரிஞ்சா ஐ ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க, வயிறு எரிஞ்சா அல்சர் ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க

------------------------------------

10. நான் ஒரு புதுமுகம்னு அலட்சியம் ஏதும் பண்ணாம டைரக்டர் நல்லா என்னை கவனிச்சுக்கிட்டார்.. 

“புதுசு”ங்கறதால தான் “கவனிச்சிருப்பார்”

---------------------------------------


11. வேல்முருகன் பிஞ்சில் பழுத்த பழம் தூக்கி எறிந்து விட்டேன்-டாக்டர் ராமதாஸ் # என்னாது? பிஞ்சுலயே பழுத்துட்டாரா? அவர் என்ன சிம்புவா?

-----------------------------------

12. பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழகஅரசு # டாக்டர் ராம்தாஸ் எங்கிருந்தாலும் வந்து தாம் தூம் என குதிக்கவும்

-----------------------------------

13. டேய் லூஸு, சொந்தமா எதுவும் யோசிக்கமாட்டியா? 

ஹலோ மேடம் , அந்தளவு மூளை இருந்தா நாங்க ஏன் ட்விட்டருக்கு வாரோம்? கதை எழுத போயிருப்போமே?

---------------------------------

14. அதிமுக கூட்டணி இருக்கிறதா?இல்லையா?- ஜெவுக்கு கிருஷ்ணசாமி கேள்வி# யோவ், நாங்க எல்லாம் ஜட்ஜ் கேட்டாலே கண்டுக்காத ஆளுங்க, யார் கிட்டே?

------------------------


15. நீ எழுதறதை எவனும் படிக்க மாட்டான்.. 

அது எங்களுக்கும் தெரியும்.. தன் கையே தனக்கு உதவி, நாங்களே எழுதி நாங்களே படிச்சுப்போம்

----------------------------------------


16. நீங்களே கவிதை எழுதிட்டு நீங்களே நல்லாருக்குன்னு சொல்லிக்கறிங்களே? வெட்கமா இல்ல? 

ம்ஹூம்.. வேற யாருமே சொல்லலைன்னா வேற என்னா பண்ண?

-----------------------------------------


17. நாமகல்லில் பஸ் 'பாடி பில்டிங்' தொழிற்சாலை: அரசு அறிவிப்பு # கூகுள் பஸ் மாதிரி மூடாம நடந்தா சரிதான்

------------------------------------

18. என் மனைவிக்கு ரொம்ப இறக்க சுபாவம்.. 

இரக்கமா? இறக்கமா? 

அதாவது என்னை, எங்கம்மாவை இறக்கி இறக்கி பேசுவா

-------------------------------------

19. மாப்ள படு சில்லறை பார்ட்டினு சொல்றீங்களே, பார்த்தா டீசண்ட்டா இருக்கார்? 

அட நீங்க வேற ஏ சி ரூம்ல தான் இருப்பாரு( சில் அறை)

------------------------------------------

20. படத்துல ஜோடியா நடிக்கறப்ப எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சு.

ஓஹோ, அப்புறம் எப்டி மாசமா இருக்கீங்க? பிசிக்ஸ்ம் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

-------------------------------------------

A

டிஸ்கி - மேலே உள்ள ஃபோட்டோக்கள் அனைத்தும் என் சொந்த ஊர்ல , என் சொந்த கேமராவுல எடுக்கப்பட்ட சொந்த ஃபோட்டோக்கள் ஹி ஹி