Friday, December 09, 2011

போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் (5)

நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை திரும்பப் பெற முடியாது எனக் கூறிய சென்னை ஐகோர்ட், சாதாரண மக்களுக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.


சி.பி - போலீஸ்னா மாமூல் தான் வாங்குவாங்க, இப்போ ரேப் பண்றதையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. 


பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருக்கோவிலூர் போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


சி.பி -பழங்குடி, ஆதி திராவிடர்கள்னாலே இவனுங்களுக்கெல்லாம் கேவலமா போயிடுது.. 



கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவில், இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.



சி.பி - நல்ல வேளை, எஸ் பி யாவது நல்லவரா இருந்திருக்காரு


இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு பெண்களுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசும் உத்தரவிட்டது.

சி.பி - ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும், அப்புறம் ஆளாளுக்கு பணம் இருக்குங்கற தைரியத்துல விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. 


"இரவு நேரத்தில், பெண்களை போலீசார் அழைத்துச் சென்றது தவறு; பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 


 சி.பி - நைட்லதான் மப்புல இருந்திருக்கும் நாய்ங்க..


இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பாக, நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். 

 சி.பி - ஒரு வருஷம் சஸ்பெண்ட் பண்ணுனா ஆச்சா? டிஸ்மிஸ் செஞ்சாத்தானே மற்றவங்களூக்கு ஒரு பயம் இருக்கும்?


இதையடுத்து, நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


சி.பி - வேற மாவட்டத்துக்குப்போய் இதே வேலையைத்தான் அங்கேயும் செய்வானுங்க, கட் பண்ணி விட்டுடனும் நந்தா படத்துல வர்ற மாதிரி.. 

விழுப்புரம் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு கிரிமினல் வழக்கில் புலன் விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கான்ஸ்டபிள்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோர் ஜீப்பில், இரவு 8 மணிக்கு டி.மண்டபம் என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 சி.பி - இவனுங்களே பக்கா கிரிமினல்ஸ்.. இந்த லட்சணத்துல கிரிமினல் கேஸை விசாரிக்க இவனுங்களை அனுப்பி?

இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி, வெள்ளிக்கண்ணு உள்ளிட்ட சிலரை தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மானம்பூண்டி பை-பாஸ் வரை சென்றுள்ளனர்.

சி.பி - போலீஸ்க்கு இதே பொழப்புதான்.. கைது செய்ய வேண்டிய ஆளுங்களை தப்பிக்க விட்டுட வேண்டியது.. அப்புறம் அவங்க வீட்ல இருக்கற அப்பாவி பெண்களை மானபங்கப்படுத்தவேண்டியது, இதுக்கு சரியான தண்டனை என்னான்னா  அவனுங்க மனைவி அல்லது மகளை அவன் கண் முன்னால தான் என்ன செஞ்சோம்கறதை ஒப்புதல் வாக்குமூலம் தரச்சொல்லி, பாதிக்கப்பட்டவங்க கால்ல விழ வெச்சு, கழுதை மேல உக்கார வெச்சு நகர் வலவ் வர வைக்கனும்

சீனிவாசனுக்கு தலைமை கான்ஸ்டபிள் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உதவியதாகத் தெரிகிறது. புலன் விசாரணைக்குப் பின், அனைவரும் பகல் இரண்டு மணிக்கு வீட்டில் விடப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 சி.பி - துறை நடவடிக்கைன்னாலே ட்ரான்ஸ்ஃபர்னு அர்த்தம், இங்கே செஞ்ச அதே கேடு கெட்ட வேலையை அங்கே போய் செய்வானுங்க./.


இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றதை போலீசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.


சி.பி - மாலை 6 மணீக்கு மேல லாக்கப்ல பெண்களை வெச்சிருக்கக்கூடாதுன்னு விதி இருக்கே? அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை மீறினாங்க?




அதற்கு அரசு தரப்பில், "போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். உடன், எந்த பெண் போலீசாரும் இல்லை. இது விதிமுறை மீறல் இல்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், போலீசாருக்கு ஒரு சட்டமா? கைது செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது?' என கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது.



சி.பி - நஷ்ட ஈடுங்கற பேச்சே இருக்காக்கூடாது.. அப்புறம் ஆளாளுக்கு  கைல பணத்தை வெச்சுக்கிட்டு அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க..   அட்லீஸ்ட் 10 வருஷமாவது தீட்டனும்..


சாதாரண நபருக்கான சட்டம் போலீசாருக்கு பொருந்தாதா: "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: போலீஸ் வாகனத்தில், பழங்குடியின பெண்கள் ஐந்து பேர் மற்றும் மூன்று சிறுவர்கள், இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு பெண் புகார் அளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என, நாங்கள் கேட்டோம். அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர், "விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், அவர்களை கைது செய்ய முடியாது' என்றார்.


சி.பி - ஆமா, நீங்க எல்லாம் கிழிக்கறதுக்குள்ள அவங்க எங்கயாவது எஸ் ஆகிடுவானுங்க.. 



அரசு குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு பற்றி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு போலீசில் ஒரு பெண் புகார் அளித்தால், அந்த நபரை உடனடியாக கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, சாதாரண நபருக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் அமல்படுத்தவில்லை?

சி.பி - சட்டம்னா எல்லாருக்கும் பொதுதான், அதில் இவனுங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கு ?



அரசு இந்த விஷயத்தை கடுமையாக கருதுகிறது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாகவும், அட்வகேட்-ஜெனரல் குறிப்பிட்டார். நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிந்து விடும் என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புலன் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால், தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்கும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


சி.பி - இன்னிம் ஒரு  மாசம் போச்சுன்னா இதை அப்படியே மூடி மறைச்சுடுவானுங்க பாருங்க..  அப்புறம் அடுத்து வேற ஏதாவது பரபரப்பு வரும்.. அதை பிடிச்சுக்குவாங்க , இதை விட்டுடுவாங்க..