ரஜினியின் ராணா படம் எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதால் ரஜினி அதுவரை என்ன செய்யலாம்னு யோசிச்சிருக்கார்..என்ன தான் ரஜினி குணம் ஆகி விட்டாலும் அவரது பழைய உடல் பொலிவு இல்லை.. ரொம்ப இளைச்சுட்டார்.. இந்த கெட்டப்பில் வீரமான கேரக்டரும், குதிரை சவாரி செய்யும் மன்னர் கேரக்டருமான ராணா கேரக்டரில் நடிக்க அவருக்கு தயக்கம் ஏற்பட்டதில் வியப்பு இல்லை..
இந்த சமயத்துல தான் ரஜினிக்கு ஒரு ஐடியா , அவரோட பொண்ணு எடுத்த படமான சுல்தான் தி வாரியர் பிஸ்னெஸ் ஆகாம பொட்டில தூங்குது.. காரணம் அது ஒரு அனிமேஷன் படம்.. ஆனானப்பட்ட டின் டின் கூட தமிழ் நாட்டில் பிரமாதமாக ஓடலை.. ஜூராசிக் பார்க் எடுத்து ஹிட் ஆக்குன ஸ்பீல்பெர்க்காலயே முடியாதது சவுந்தர்யா ரஜினியால முடியுமா?னு ஒரு கேள்விக்குறி..
அதனால எப்படி எம் ஜி ஆர் நடிச்ச கடைசி படத்தோட சில காட்சிகளை வெச்சு கே பாக்யராஜ் அவசர போலீஸ் 100-னு ஒரு படம் குடுத்தாரோ அந்த மாதிரி சுல்தான் த வாரியர் படத்தோட கொஞ்சம் காட்சிகள் ரஜினி நடிச்சா ஒரு படம் ரெடி ஆகிடும்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. ராணா ரெடி ஆவதற்குள் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் ஆச்சு.. மகளோட படத்தை முடிச்சுக்கொடுத்த மாதிரியும் ஆச்சு..
இது நம்ம ஆளு படம் பாலகுமாரன் டைரக்ஷன் என இருந்தாலும் டைரக்ஷன் மேற்பார்வை கே பாக்யராஜ் என போட்டால் தான் வாங்குவோம்னு விநியோகஸ்தர்கள் அடம் பிடிச்ச மாதிரி மகள் படத்துக்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்று ரஜினி கே எஸ் ரவிக்குமார் பெயரை கதை வசனம் டைரக்ஷன் மேற்பார்வை என போட ஐடியா செஞ்சிருக்காங்க..
ஹீரோயின் அனுஷ்கா, தங்கை கேரக்டர்ல சிநேகா என பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு..
ஹீரோயின் அனுஷ்கா, தங்கை கேரக்டர்ல சிநேகா என பேச்சு வார்த்தை நடந்துட்டிருக்கு..
அந்த கோச்சடையான் படத்துல ரஜினி என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்? கற்பனை
1. கோச் (COACH) ச்சை பகைச்ச ப்ளேயர் கூட டீம் ல இருந்துடலாம், இந்த கோச்சடையானை பகைச்சுக்கிட்டா பூமிலயே இருக்க முடியாதுடா கண்ணா!
-----------------------------------
2. டானா (DON) இருந்தவன் தான் இந்த ராணா! அந்த ராணாவுக்கே நைனாடா இந்த கோச்சடையான்
-------------------------------------
3. கால தேவனுக்கே டைம் குடுத்தவன் நீ.. மரண தேவனுக்கே டேக்கா கொடுத்தவன் நான்
-----------------------------------------
4. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது ஸ்டைலு.. இரண்டெழுத்தில் என் பேச்சிருக்கும் - ராணா
------------------------------------------------
5. என் பேரு ராணா…. என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா? என்னை பகைச்சுக்காதே வீணா…என் பேரை கேட்டாலே பேதி ஆகிடும் தானா
-------------------------------------
6. அரசாங்கமே எனக்கு எதி”ரானா.”லும் … அரசியல் வாழ்வு ஒரு புதி”ரானா”லும் …கலங்க மாட்டான் இந்த ராணா.
-----------------------------------------
7. சபரி மலை போனா தமிழர்களை தாக்கறாங்க.. இந்த அண்ணாமலை மறு அவதாரம் எடுத்து வரனும்னு ஆளாளுக்கு கேக்கறாங்க
---------------------------------
8. அரசியலுக்கு வந்தவங்க சாதிக்காததை அரசியலுக்கு வராம சாதிக்கறவன் தான் நாட்டுக்கு தேவை
--------------------------------------
9. இகழ்ச்சி அடையான் ஒரு முயற்சி உடையான்.. வீண் புகழ்ச்சி விரும்பான் இந்த கோச்சடையான்
------------------------------------------
10. என் இமேஜ் டேமேஜ் ஆனாலும் எனக்கு கவலை இல்லை, முல்லை பெரியாறு டேம் ஏஜ்டு-னு சாக்கு சொல்லி இடிக்க விட மாட்டேன்
---------------------------------------
11. இரட்டை இலைக்குத்தான் ஜனங்க ஓட்டு போட்டாங்க.. இரட்டை விலைக்கு இல்ல
------------------------------------
12. கோர்ட்டுக்குப்போறதுக்கே நேரம் இல்லாதவங்க கோட்டைக்கு வந்து என்ன செய்யப்போறாங்க?
----------------------------------------------