Wednesday, December 07, 2011

டீன் ஏஜ் ஜோக்ஸ் - TEEN AGE JOKS

 
1.காலைல இருந்து கஷ்டப்பட்டு உங்களுக்கு பாடம் நடத்தி இருக்கேன்.. என்ன புரிஞ்சுது?

டீச்சர்.இஷ்டப்பட்டு பாடம் நடத்தலையா? அது ஏன்?

---------------------------------------

2. டியர். நம்ம காதல் ஒரு வெங்காயம் மதிரி..

என்ன உளர்றீங்க?

கட் பண்ணி பாரு.. கண்ல கண்ணீர் வரும் ..

-------------------------------------

3. சாமி!இப்படி ஒரு மொக்கை ஃபிகரை எனக்கு லவ்வரா தந்திருக்கியே.. ஏன்?

டேய்,நாயே, உண்டியல்ல நீ போட்ட எட்டணாக்கு இதுவே அதிகம்டா!

--------------------------------------

4. கண்ணாடியை நாம் கவனமாக கையாள்வது போல மற்றவர்கள் உணர்வுகளை கையாள வேண்டும், சிறு சொல் கூட கீறலை ஏற்படுத்தி விடும்

----------------------------------

5. ஆஃபீஸ்ல எவ்ளவ் பிரஷரை மேனேஜர் என்மேல இறக்கினாலும் நான் கண்டுக்க மாட்டேன்.. ஏன்னா அதிக அழுத்தம் குடுத்துத்தானே கரி வைரம் ஆக்கப்படுது.. ?

---------------------------------

6. கடவுளிடம் நான் கேட்டுப்பெற்ற வரங்கள் நிறைய! ஆனால் கேட்காமலேயே கிடைத்த வரம் நீ!! # SMS

-------------------------------

7. நமக்குக்கிடைக்கும் சந்தோஷங்களுக்கும், நமக்கு வரும் வலிகளுக்கும் நாமே பொறுப்பு

----------------------------

funny and beautiful species pictures1

8. காதல் என்பது ஒருவரை சந்திக்கும்போது வருவதை விட அவரைப்பற்றி நினைக்கும்போதே அதிகம் வருகிறது

---------------------------------

9. அன்பில் தன் அம்மாவுடன் போட்டி போடக்கூடிய தகுதி படைத்த பெண்ணையே ஆண் தன் துணையாக அடைய நினைக்கிறான்

--------------------------------

10. உனக்கு உரிமை இல்லாததை அடைய நினைக்காதே.. முயற்சிக்காதே! உனக்கு உரியதை விட்டுத்தராதே!

---------------------------------

11. ஒரு ஃபிகரை புரிஞ்சுக்கறதுங்கறது 2 KBPS ஸ்பீடுல 1 GB  ஃபைலை லோடு பண்றப்ப 95 % கம்ப்ளீட் ஆகறப்ப கரண்ட் போகுமே அது போல!

---------------------

12.உன்னை நம்பும் இதயத்தை விட அழகானது வேறு எதுவும் இல்லை

-----------------------------------

13. ஆணின் பலவீனம் பெண்ணின் தற்காலிக அழகை நிரந்தரம் என நம்புவது, பெண்ணின் பலவீனம் ஆணின் நிரந்தர அறிவை எதேச்சையானது என நினைப்பது

---------------------------------

14. நீ ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் மரணம் உன்னை விட்டு விலகுகிறது, என் சரணம் உன்னை நோக்கி வருகிறது

-------------------------------

15. நண்பனும், எதிரியும் நமக்குள்ளே. உன் மனதை நீ அடக்கினால் அது உன் நண்பன், அடக்காவிட்டால் அதுவே எதிரி

-----------------------------------





16. அத்தை பையனை மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னேன், அதிர்ச்சில மயக்கம் ஆகிட்டான்.


ஓஹோ மாமா ஸ்டேஜ்ல இருந்து கோமா ஸ்டேஜ்க்கு போய்ட்டானா?


-------------------

17. பேங்க்ல ஒர்க் பண்ற பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன் .

ஓக்கே, குடும்ப”பாங்க்”கான பொண்ணா பார்த்துடலாம்

----------------




18. நம் இருவரில் பரஸ்பரம்  யார்  யார் மீது அதீத அன்பு வைத்திருக்கிறோம் என்று பொறாமை அற்ற போட்டி நிலவுகிறது

--------------



19. பிளாக்கில் விசிட்டர்ஸ் டுடே ஜீரோ என காண்பித்தால் பிளாக் ஓனரே  அந்த பிளாக் பக்கம் போக வில்லை என்று அர்த்தம்


------------------------


20.  என் உள்ளக்காதலை அவ கிட்டே சொன்னேன், சாரி ஐ ஆம் ஆல்ரெடி மேரீடுன்னா..

அப்புறம்?


என் கள்ளக்காதலை சொன்னேன், ஓக்கேன்னுட்டா..

--------------------------

 



21.  உன் வாசம் வீசும் கர்ச்சிப் வேணும் - கல்யாணத்துக்கு முன்

ஏண்டி, ஒழுங்கா ஒரு கர்ச்சீப்பைக்கூட  துவைக்க மாட்டே? -

(கல்யாணத்துக்குப்பின்)


---------------------------

22. பிளாக்கில் உருப்படியாக பதிவை ரெடி பண்ணாமல் வாசகரை மட்டும் ரெடி பண்ணினால் அவர் எதை படிப்பார்?


----------------------------

23. லொள்ளானவனிடம் ஐ லவ் யூ சொன்னாள். ஜொள்ளானவன் ஆனான். கல்யாணம் எப்போ? என்றாள்.தில்லானவன் அல்ல என்றான் # சே! இவனும் எஸ்கேப்பா?


-------------------------

24. சுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே?

அவ தான் நக ”சுத்தி”ன்னா


-------------------------------

25.  லாடம் கட்டுனா குதிரை வேகமா ஓடும், படப்பெட்டிக்கு லாடம் கட்டுனா டப்பா படம் பிரமாதமா ஓடிடுமா? டவுட்டு


-------------------



 

26 அந்த லேடீஸ் காலேஜ்ல வாலிபால் டீம் 2 இருக்காமே?


ஆமா, வாலிப பால் டீம், வயசான பால் டீம் # ஜூனியர்  VS  சீனியர்

-----------------

27. XQS மீ சார், என் பிளாக் பக்கம் வந்துட்டுப்போக முடியுமா?

படிக்கற அளவு பிரமாதமா மேட்டர் இல்லையே ?

உங்களை யார் படிக்க சொன்னது? ஜஸ்ட் விசிட்

-------------------------


28. கலைஞர் அய்யா, எல்லாரும் கிண்டல் பண்றாங்க,இனியாவது ஊழல் பண்றதை நிறுத்துங்க.


எத்தனை பேர் கிண்டல் பண்ணினாலும் யாராலும் தடுக்க முடியாது.

-------------------------



29 பெண்ணின் கஷ்டங்களை ஓரளவுக்காவது உணர ஆண் பெண்ணாக பிறப்பெடுக்க தேவை இல்லை, பெண் உடை அணிந்து ஒரு நாள் வீட்டில் உலாவந்தால் போதும்


------------------

30. வெய்யிலிலும், மழையிலும் எனக்கு உன் நினப்பு,ப்ளீஸ் திருடிட்டுப்போன குடையை மட்டும் திருப்பிக்குடுத்துடு #  SMS


---------------------





31. எதுவுமே சுலபம் இல்லைதான், ஆனால் எல்லாம் பாஸிபிள்தான் # தேவை முயற்சி

-----------------------

32  விக்ரமை காதலிக்கிறேன்! விஷாலை ரொம்ப பிடிக்கும்!! - ஸ்ரேயா # விக்ரம் தொழில் அதிபர் அல்ல,விஷால் எழில் அதிபர் அல்ல,அப்புறம் ஏன்?


---------------------------

33  ஐஸ்வர்யா தனுஷ்இயக்கும் முதல் படமான "3"-ல் இருந்து நடிகை அமலாபால் திடீரென நீக்கம் # முதல்ல பட டைட்டிலை மாத்துங்க. நாமம்தான் நினைவு வருது

--------------------------

34 அரவக்குறிச்சி திமுக., எம்.எல்.ஏ.,கைது:காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய விவகாரம் # அனுமதி கேட்டப்ப கொடுக்காம விட்டுட்டு!!

-------------------------------

35 . தனித்திருந்தேன்,பசித்திருந்தேன்,விழித்திருந்தேன். நீ வரவே இல்லை. # மீறி வந்தா செக்யூரிட்டிக்கு உங்கம்மாவையும் கூடவே கூட்டிட்டு வந்துடறே?