Tuesday, December 06, 2011

பிரபல பத்திரிக்கைகளின் கவனத்திற்கு.. இது நியாயமா?

வலைத்தளங்களில் ட்விட்டரின் சேவை, பங்களிப்பு மகத்தானது,,அப்பப்ப நடக்கும் உலக நடப்புகளை ட்விட்டரில் உடனுக்குடன் அறிய முடிகிறது .17.7. 2010 -ல் நான் வலைத்தளம் தொடங்கி விட்டாலும்  ஆனந்த விகடனில் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்ஸ் அப்டேட் பார்த்து 1.2.2011 -ல் தான் ட்விட்டர் உலகத்திற்கே வந்தேன். 

ஆனால் வாசகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்ற வலை பாயுதே ட்வீட்ஸ்க்கு சன்மானம் இல்லை.. இது ஏன்? வாரா வாரம் 8 லட்சம் புத்தகம் விற்கும் ஆனந்த விகடன் ட்வீட்ஸ் போட 2 பக்கங்கள் ஒதுக்குகிறது. அதில் மினிமம் 20 ட்வீட்ஸ் வருகிறது.. அதில் ஒரு ட்வீட்டுக்கு ரூ 100 பரிசு கொடுத்தால் என்ன? எழுதுபவர்களுக்கு உற்சாகமாக இருக்குமே?

அதே போல் படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்புவதில்லை.. ட்வீட் போடுபவர்களின் பயோ செக் பண்ணி பார்த்தால் அவர்கள் வலை தள முகவரி அல்லது ஃபோன் நெம்பர், அல்லது மெயில் ஐ டி இருக்கும்.. அதன் மூலம் முகவரி விசாரித்து  சன்மானமும் , காம்ப்ளிமெண்ட்ரியும் அனுப்பலாமே?

அதே போல் குமுதம் ரிப்போர்ட்டரில் ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் 2 வாரங்களாக ட்வீட்ஸ் போடுகிறார்கள்.. அதை தொகுப்பவர் குமுதத்தில் பணியாற்றும்  வந்தியத்தேவன் என்பவர்..  இவர்களும் சன்மானம், புத்தகப்பரிசு அனுப்ப பரிசீலனை செய்ய வேண்டும்.. 

தின மலர் பேப்பரில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முழுப்பக்கமும்  ஃபேஸ் புக், ட்விடர் கமெண்ட்ஸ்க்கு ஒதுக்குகின்றனர்... அவர்கள் பேப்பரை அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை.. சன்மானமாவது அனுப்ப வேண்டும்..தினமலரில் ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு தருவதால் ட்வீட்க்கு ரூ 250 தாராளமாக தரலாம்.

மல்லிகை மகள்  எனும் பெண்கள் மாத இதழை நண்பர்  திரு ம கா சிவஞானம் நடத்துகிறார்.. அவர் வலைப்பூவும் வைத்துள்ளார்...  அவர் தன் பத்திரிக்கையில் வரும் ஜோக்கிற்கு ரூ 50 பரிசு தருகிறார்.. அவர் அந்த இதழில் ட்விட்ஸ் க்கு ஒரு பக்கம் ஒதுக்குகிறார்.. அந்த புக் சேல்ஸ் குறைவு என்பதால் அவர்கள்  புக் மட்டுமாவது அனுப்பலாம்.. 

புதிய தலை முறை புக் ஆசிரியர் மாலனின் மேற்பார்வையில் நடை பெறுகிறது..ஆரம்பத்தில் 3 வாரங்கள் ட்வீட்ஸ் போட்டாங்க.. இப்போ போடறதில்லை .. ஏன்னு தெரியலை. 


இந்தியா டு டே புக்கில் ஒரே ஒரு இதழில் ட்வீட்ஸ் போட்டாங்க.. அப்புறம் போடறதில்லை.. 


பாக்யா வார இதழில் நெட்டில் இருந்து சுட்டவை என்ற டைட்டிலில் இரு வாரங்களாக ஜோக் போடறாங்க..

நிற்க.. மாறி வரும் உலகில் ட்விட்டரின் பங்களிப்பை இணைய  இணைப்பு இல்லாத மக்களிடம் கூட அதை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கைகளின் பணி மகத்தானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. ஆனால் அதே சமயத்தில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானமும், பத்திரிக்கைகளை அதாவது படைப்பு வந்த புக்கை படைப்பாளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. 

அப்புறம்.. ட்விட்டர்களில் ரெகுலராக சிலரது ட்வீட்ஸ்களே மீண்டும் மீண்டும் வருகிறது.. புது முகங்களுக்கு வாய்ப்பு அதிகம் வருவதில்லை.. இதை தவிர்க்க பத்திரிக்கைகள் பிரசுரம் ஆகும் ட்வீட்ஸ்களில் பாதி பிரபல ட்வீட்டர்ஸ்.. மீதி பாதி புது முகங்களுக்கு என ஒதுக்கலாம்.. ட்விட்டரில் இருக்கும் பிரபல ட்வீட்டர்களும் அதாவது தங்களிடம் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள ட்வீட்டர்களும் புதுமுக ட்வீட்டர்ஸ்க்கு RT செய்து அவர்களுக்கு உதவலாம்.. 

ஆல்ரெடி பலர் பலரது ட்வீட்களை ரீ ட்வீட் செய்து கொண்டு தான் இருக்காங்க.. அதை எல்லோரும் செய்ய முற்பட வேண்டும்.. 

இப்போது நான் சொன்னது எல்லாம் சுட்டிக்காட்டலே, சொல்லிக்காட்டல் அல்ல.. எனவே பத்திரிக்கைகள் இக்கட்டுரையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவில் கமெண்ட் போடும் ட்வீட்டர் நண்பர்கள் , பதிவர்கள் தங்கள் ஆதங்கத்தை, கருத்தை த்தெரிவிக்கலாம்..