சார்.. இங்கே புரட்சிப்பதிவர் எங்கே குடி இருக்கார்? நான் அவரை பார்க்கனும்...
அதோ நேரா போனா ஒரு காஃபி கஃபே வரும் பாருங்க.. அந்த கடைக்கு எதிர்ல தான் குடி இருக்கார்..
சபாஷ், பலே ,காபி பேஸ்ட்டுக்கு எதிரானவர்ங்கறதால காஃபி ஷாப்க்கு எதிர்லயே குடி இருக்கார் போல..
அக்கா, வணக்கம்க்கா ..அண்ணன் இருக்காருங்களா?
அவர் தூங்கிட்டு இருக்காருப்பா..
என்னது? தூங்கறாரா? அவர் ஒரு விழிப்புணர்வுப்பதிவர் ஆச்சே? எதுக்கு தூங்கறாரு?எழுப்புங்க..
தம்பி.. மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு பழமொழி தெரியுமில்ல.. என் வீட்டுக்கு எதுக்கு வந்தே?
அண்ணே, அக்காவை கேட்டுப்பாருங்க.. நான் வாசப்படியை மிதிக்கலை, தாண்டித்தான் வந்தேன்..
சரி சொல்லு இன்னா மேட்டரு?
நீங்க தான்னே சொல்லனும்.. உங்க பிளாக்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன், சூப்பரா இருக்குண்ணே.. அது உங்க 25 வயசுல எடுத்ததுங்களா?
ச்சே, ச்சே அது என் சொந்த முகம் கிடையாது.. கூகுள் ல போய் காபி பண்ணி என் பிளாக்ல பேஸ்ட் பண்ணிக்கிட்டேன்.
அடடா.. என்னண்ணே.. ஓப்பனிங்க்லயே டக் அவுட் ஆகி சொதப்பறீங்க? நீங்கதான் காபி பேஸ்ட்க்கு எதிரானவர் ஆச்சே.. சொந்த முகத்தையும், உங்க ஃபோன் நெம்பர் , அட்ரஸ் எல்லாம் போடலாமே? அதானே வீரனுக்கு அழகு? இப்போ பாருங்க நான் ஒரு டம்மி பீசு.. நானே என் ஃபோட்டோ , ஃபோன் நெம்பர் எல்லாம் தில்லா போட்டிருக்கேன், நீங்க ஏண்ணே பம்பறீங்க? ஆமா, இதானே உங்க டைரி.. என்னமோ எழுதி இருக்கே?
அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு-
இது திருக்குறள் ஆச்சே.. ஆல்ரெடி திருவள்ளுவர் எழுதிட்டாரே, நீங்க ஏன் மறுபடி அதை எழுதினீங்க?
லூஸ் ,மாதிரி பேசாதேப்பா.. நம்ம முன்னோர்கள் எழுதுன நல்ல விஷயங்கள் எல்லாருக்கும் போய்ச்சேர வேண்டாமா?
என்னண்ணே, உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம்.. வேடந்தாங்கல் கருணையும், கவிதை வீதி சவுந்தரையும் திட்டி 8 போஸ்ட் போட்டிருக்கீங்களே? அது ஏன்?
ஹி ஹி எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல் தான்.. ஈசியா ஹிட்ஸ் வாங்கறாங்க..மற்ற பதிவர்கள் எல்லாம் நல்ல போஸ்ட் எழுதியும் ஹிட் ஆக மாட்டேங்குது..
சரி... இதென்ன நோட்டு?
அதுவா? எங்க மேரேஜ்க்கு சொந்தக்காரங்க மொய் வெச்சாங்க இல்லையா அந்த நோட்டு, யார் யார் எவ்வளவு மொய் வெச்சாங்க?ன்னு கணக்கு.. நான் அவங்க வீட்ல விசேஷம் நடக்கறப்ப பதில் மொய் வைக்கனும் இல்லையா? அதுக்குதான்..
ஓஹோ.. இதே ஃபார்முலாவை அவங்க ஃபாலோ பண்ணுனா மட்டும் ஏன் திட்டறீங்க? பிளாக் உலகம் ல 10 பேர் பிளாக் போய் நாம கமெண்ட் போட்டாத்தான் அவங்க நம்ம பிளாக் வருவாங்க.. நாம ஓட்டு போட்டாத்தான் அவங்க ஓட்டு போடுவாங்க.. இதுல என்ன தப்பு கண்டு பிடிச்சீங்க?
அதில்லை, 1689 பேர் பிளாக் உலகத்துல இருக்காங்க, ஆனா இந்த 3 பேர் மட்டும் டாப் 20 ல வந்துடறாங்க, அதான் வயிற்றெரிச்சலா இருக்கு.. அதுவும் காபி பேஸ்ட் போஸ்ட்டா இருக்கு..
சரி, காபி பேஸ்ட் சரியா தப்பா?ங்கற விவாதம் அப்புறம் வெச்சுக்கலாம், உண்மைத்தமிழன் அண்ணன் கூட ஜூனியர் விகடன் போஸ்ட்டை ரெகுலரா போடறார்.. ஆரூர் மூனா செந்தில் கூட ஒரு போஸ்ட் சொந்த போஸ்ட், ஒரு போஸ்ட் காபி பேஸ்ட் போடறார்.. அவங்களை எல்லாம் எதுவுமே சொல்லாம ஏன் குறிப்பிட்ட இந்த 3 பேரை மட்டும் குறி வைக்கறீங்க?
நீ லூஸாப்பா.. அவங்க 2 பேரையும் பார்க்கவே பயமா இருக்கு.. எனக்கு பயந்த சுபாவம் வேற.. ஆனா கருண், சவுந்தர் எல்லாம் புள்ளப்பூச்சிங்க.. பயந்துக்குவாங்க.. அதான்
சரி.. நீங்க இதுவரை எத்தனை போஸ்ட் போட்டிருக்கீங்க?
23
அதுல மக்கள்க்கு யூஸ் ஆகற மாதிரி போஸ்ட் எத்தனை?
ஹி ஹி எல்லாமே அடுத்தவனை குறை சொல்லி போட்ட போஸ்ட் தான்
சரி, என் போஸ்ட் இதுவரை எத்தனை தெரியுமா? 912.. அதுல ஆனந்த விகடன் , ஜூனியர் விகடன், அவள் விகடன் காபி பேஸ்ட் பதிவு மொத்தம் 230.. மீதி எல்லாமே சொந்தப்பதிவுதான் ஜோக்ஸ், சினிமா விமர்சனம் , கட்டுரைன்னு போகுது..இதுல உங்களுக்கென்ன கஷ்டம்? சொல்லுங்க?
அதாவது ஒருத்தனே நெம்பர் ஒன்னா வர்றது எனக்குப்பிடிக்கலை... எல்லாருக்கும் வாய்ப்பு வேணும்..
அண்ணே, ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வரனும்னா முதல்ல ஓடி வர்றவனை விட வேகமா ஓடனும்.. அதை விட்டுட்டு அவன் காலை வாரக்கூடாது.. எங்களுக்கும் குடும்பம் இருக்கு, ஆஃபீஸ் வேலை இருக்கு.. எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு பிளாக் வேலையையும் பண்றோம்.. சும்மா திடீர்னு யாரும் ஜெயிக்க முடியாது.. இதுலயும் உழைப்பு இருக்கு.. 2010 ஜூலை 17 ல பிளாக் உலகத்துக்கு வந்தேன்.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு எழுதிட்டு இருக்கேன்.. அடுத்தவங்க வம்பு தும்புக்கு போறதில்லை.. நீங்க ஏண்ணே இப்படி இருக்கீங்க? ஏதாவது மன வியாதியா? டாக்டரை போய் பாருங்கண்ணே?
ஆங்க்.. ஒரு குறை கண்டு பிடிச்சுட்டேன்,,.. டைட்டில் ஏன் கிளாமரா வைக்கறே?இதுக்கு பதில் சொல்லு..
அண்ணே.. ஒரு சினிமாக்கு டைட்டில் எப்படி முக்கியமோ.. போஸ்டர் டிசைன் எப்படி முக்கியமோ அதே மாதிரி ஒரு பதிவுக்கு டைட்டில் ரொம்ப முக்கியம், மக்களை சுண்டி இழுக்கற மாதிரி டைட்டில் வைக்கனும்.. இது எல்லாம் பேசிக் லெசன்.. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமாண்ணே. கருண், கவிதை வீதி சவுந்தர் 2 பேரும் ஆவரேஜ் பிளாக் ஹிட்ஸ் 1000 டூ 2000 தான், நீங்க அவங்களை தாக்கி போஸ்ட் போட்ட அன்னைக்கெல்லாம் 3000 ஹிட்ஸ் ஆகிடுச்சாம்..
அய்யய்யோ.. எனக்கு வயிறு எரியுதே.. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் அவங்களை தாக்கியே இருக்க மாட்டேனே..
இன்னும் சொல்றேன் கேளுங்க . ஒரு பிரபல பதிவர் தன்னோட பஸ்ல என் போஸ்ட் லிங்க் குடுத்து எவ்வளவு மோசமா விமர்சனம் எழுதி இருக்கான் பாருங்க.. அப்டினு கமெண்ட் போட்டாரு.. உடனே அதுல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க அவரோட ஃபாலோயர்ஸ் 2000 பேரும் வந்து என் ஹிட்ஸ்ஸை ஏத்துனாங்க.. ரொம்ப நன்றிண்ணே அப்டின்னு நான் கமெண்ட் போட்டேன் , உடனே உங்களை மாதிரியே அவரும் பதறி அந்த லிங்க்கை அவர் பஸ்ல இருந்து தூக்கிட்டார்..
என் நல்ல எண்ணத்தை புரிஞ்சுக்காம பேசாதே.. நல்ல நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படாமலேயே இருக்கு.. உன்னை மாதிரி குப்பை ஆளுங்கதான் திரும்ப திரும்ப சூடான இடுகைல வர்றீங்க.. அதை தடுக்கனும்..
ரைட்டு.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. உங்களூக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. நீங்க நல்ல இடுகைகளை மக்களூக்கு அடையாளம் காட்டுங்க.. எதெல்லாம் நல்ல இடுகையோ அதுக்கு லிங்க் கொடுத்து வலைச்சரம் மாதிரி செயல்படுங்க, 4 பேருக்கு நல்லது நடக்கும், அவங்களூக்கும் ஹிட்ஸ் கிடைக்கும்..
சாரி , அது என் வேலை இல்லை.. எனக்கு யாரையாவது ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கனும்.. இப்போ உன் பிளாக்ல சினிமா விமர்சனம் போடறப்ப எதுக்கு கூகுள்ல போய் நடிகைங்க ஃபோட்டோவை போடறே?
அண்ணே, இதுக்காக நான் சென்னையோ, மும்பையோ போயா ஃபோட்டோ எடுக்க முடியும்.. கூகுள்ல தான் எடுக்க முடியும்..
சரி.. எல்லாரும் வாரம் 5 போஸ்ட் போடறாங்க, நீ மட்டும் ஏன் டெயிலி 2 போஸ்ட் போடறே? உன்னால பல தரமான பதிவர்கள் வெறுத்துப்போய் பிளாக் எழுதறதையே விட்டுட்டாங்க..
அண்ணே.. லூஸ் மாதிரி பேசாதீங்க.. ராமநாராயணன் மாசம் ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்றதால ஷங்கரோ, மணி ரத்னமோ சினி ஃபீல்டை விட்டு போய்ட்டாங்களா? அவங்கவங்களுக்கு உள்ள மரியாதை அப்படியே தான் இருக்கும்.. டெயிலி 2 போஸ்ட் போடறதால ஒருத்தன் நல்ல பதிவர்னு பேர் வாங்கிட முடியாது.. குறிஞ்சி மலர் போல் அரிதாக பதிவு போடுவதால் ஒரு நல்ல பதிவரை யாரும் குறை சொல்லவும் முடியாது
ஓஹோ, இத்தனை வியாக்கியானம் பேசறியே.. அப்புறம் ஏன் தமிழ்மணம் ரேங்கிங்க் வேணும்னு அலையறே.. அதை விட்டுட்டு நீ பாட்டுக்கு இருந்தா எனக்கு வயிறு எரியாதுல்ல?
அண்ணே.. ஸ்கூல்ல படிக்கறப்பதான் ஒழுங்கா ரேங்க் எடுக்க முடியல.. இங்கயாவது எடுக்கலாம்னுதான் , இதெல்லாம் ஒரு ஜாலிதான்.. இதுனால யாருக்கும் 10 பைசா லாபம் இல்ல.. அப்படி ஏதாவது வருமானம் இருந்தாலாவது உங்க குய்யோ முறையோ அரற்றலுக்கு ஒரு காரணம் சொல்லலாம்..
சரி.. என் பிளாக்ல ஒரு எதிர் பதிவு போடறேன்.. அங்கே சந்திக்கலாம்..