Tuesday, December 06, 2011

வெட்டிப்பயல் எழுதிய குட்டி குட்டி ஜோக்ஸ்


1.எனக்குப் பிடிச்ச கிளாமர் நடிகை நான்தான்! - நமிதா # எனக்குப்பிடிச்ச சிறந்த முதல்வர் நான் தான் - கலைஞர்


----------------------------------------

2 .டியர் டேமேஜர், நீங்க ஃபிகர்ங்க கிட்டே கடலை போடறப்ப நாங்க கண்டுக்கறோமா? ஆனா நாங்க அந்த புனிதப்பணியை செய்யறப்ப உங்களுக்கு ஏன் பொறுக்கறதில்லை?



------------------------------------------

3 கோவை , திருப்பூர் மக்கள் கிணறு, போரிங்க் பைப் போன்ற நிலத்தடி நீரை பருகுவதை தவிர்க்கவும்.என்புருக்கிநோய் அபாயம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

------------------------------------

4 நிலம் வாங்க ரூ.6.23 லட்சம் வைத்திருந்த தஞ்சை பிச்சைக்காரர் # நில மோசடி வழக்குல இவரையும் கைது பண்ணிடாதீங்கய்யா பாவம்

-----------------------------------

5  சீதையாக நடித்த ராமராஜ்யம் படம் ப்ளாப் ,  நயன்தாரா அப்செட் # நல்ல வேளை, ஹிட் ஆகி இருந்தா கண்ணகியா ஒரு படத்துல நடிக்க இருந்தாங்களாம்

-------------------------------------


6 கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை # அய்யய்யோ, அப்போ அரசியலை விட்டே விலகப்போறீங்களா? மேடம்

-----------------------------------




7. மேனேஜர் சார்! உங்களுக்கு ஒரே ஒரு சம்சாரம் தானா?

ஆமா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை

-------------------------------------


8. நம் காதல் விழாவின் முதல் பந்தியில் உன் மொத்த அன்பையும் பரிமாறி விட்டாயே!எதிர் காலத்திற்கு இருப்பு இருக்குமா?

-----------------------------------------

9. ஒரு நல்ல படைப்பை உருவாக்குவது மிக எளிது,அந்த படைப்பை நம் பெற்றோர்களிடமும் காட்டி பெருமைப்படத்தக்கதாய் இருந்தால் போதும்



---------------------------------------

10. ஒரு நகைச்சுவை எழுதுவது என்பது மிக எளிது.. யார் மனதையும் புண் படுத்தாமல் கவர வைப்பதே அரிதானது ,அழகானது

--------------------------------




11. உன்னை மறக்க நினைப்பதை மறந்துவிடுகிறேன் அடிக்கடி..


அப்டியா? உருப்பட்ட மாதிரிதான் - பாட புத்தகம்

------------------------------------------

12. உலகத்துலயே மிக அசுத்தமான சூழலில் பராமரிக்கப்படும் பிரபல கோயில் ஸ்தலம் சபரி மலை தான் # ஐயப்பா சாமியா? ஐயோ அப்பா சாமியா?
----------------------------------

13. 24 மணிநேரமும் மக்களுக்காக யோசிக்கிற ஒரே தலைவர் கலைஞர் - குஷ்பூ # ஆமா, மேடம் , பல மக்களைப்பெற்ற மகராசர் ஆச்சே?

------------------------------------

14. ஆள்மாறாட்ட அமைச்சர் கல்யாணசுந்தரத்திடம் 300 கேள்விகள்! # கடைசிக் கேள்வி! , XQS மீ! நீங்க கல்யாணசுந்தரம்தானே?!

--------------------------------------------

15. சமையல் கலையின் வெற்றி என்பது நாக்கின் துணை இல்லாமல் நாசியின் மூலம் வாசம் நுகர்ந்தே ருசியின் தரத்தை உணர்வதே

--------------------------------------




16.அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தி.மு.க. முடிவு # மானம் மிகு தமிழ் இனத்தலைவர்க்கு நன்றி!அப்புறம் தலைவரே, பொண்ணுக்கு ஜாமீன் கிடைச்சுடுச்சு போல?

---------------------------------

17 தவறான பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண்கள் தயவு செய்து மனசாட்சியுடன் செயல்பட்டு மனைவியுடன் கூடுகையில் காண்டம் உபயோகிக்கவும் # எய்ட்ஸ் தினம்

-------------------------------------

18. ஈரோடு மேயர் மல்லிகா அடியாட்களுடன் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து அராஜகம்! # NKKP ராஜா, விடாதீங்க, போட்டி ரவுடிய வளர விடாதீங்க

-------------------------------------
19 தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?-கேப்டன் # மப்புல ஓவரா உளறாதீங்கண்ணே, நீங்கதானே போடச்சொன்னிங்க?

----------------------------------------

20 மலையாள படங்களில் நடிப்பது ஈஸி : கனிகா! # ஹி ஹி எஸ் மேடம்,காஸ்ட்யூம் டிசைனருக்குக்கூட வேலை இல்லை

----------------------------------------------

funny pose dog-yoga
Dog In A Lotus Pose Meditating

21 தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தி பேசவில்லை -நடிகர் கார்த்தி #ஆமாமா, நானும் கேட்டேன், ரொம்ப கேவலமா எல்லாம் பேசலை, லேசாதான் தாக்குனாரு

------------------------------------

22  டிச.2 முதல் வித்யாபாலனின் கவர்ச்சி விருந்து!! த டர்ட்டி பிக்சர் #என்னய்யா டைட்டில் இது? பியூட்டி பிக்சர்னு வெச்சு அழகியலை கூட்ட வேணாம்?

---------------------------------------

23 முல்லைப் பெரியாறு பிரச்னையில் மக்கள் அமைதி காக்க வேண்டும்-கலைஞர் # ஆமா, நாங்க எல்லாரும் ஊமையா இருக்கோம், நீங்க ஆமையா புகுந்து கெடுங்க

------------------------------------------

24 கலைஞரும், ஜெயலலிதாவும் என் இரு கண்கள் - நமீதா. # அப்போ மொத வேலையா ஆபரேஷன் பண்ணி நொள்ள கண்ணை மாற்றி  நல்ல கண்ணா வைங்க 

-----------------------------------------

25. தீமைக்கும் நன்மை செய் - போராளி பட பஞ்ச்  # அதனாலதான் நாங்க கலைஞரையும், ஜெவையும் மாற்றி மாற்றி சி எம் ஆக்கறோம்?

--------------------------------------

டிஸ்கி - படங்கள் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்கள்