Sunday, December 04, 2011

ஆ . ராசா குறுந்தகடு ( ஜோக்ஸ் )


1. ஏய் மிஸ்டர் , நடிகையோட பிறந்த நாளை கொண்டாடறியே வெக்கமா இல்ல? 

மேடம்.. நடிகையை கொண்டாடுனாத்தான் தப்பு!!! # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

---------------------------------

2. கணவனின் கறுப்புப்பக்கங்களை மனைவியால் ஜீரணித்துக்கொள்ளும் அளவு , மனைவியின் கறுப்புப்பக்கங்களை கணவனால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை

------------------------------------

3. என் மனைவியை அக்கா என அழைக்கும் பக்கத்து வீட்டு ஃபிகரே.. மகிழ்ச்சி.. நிற்க.. என்னையும் ஏன் அண்ணா என அழைத்து குழப்புகிறாய்?  # மச்சினியே

------------------------------------

4. கூகுள் பஸ் ஏன் க்ளோஸ் பண்றாங்க? 

பஸ் பயணம் பலருக்கு ஒத்துக்கறதில்லையாம், வாமிட் ஃபீலிங்க், அதனால கூகுள் ரயில் விடப்போறாங்களாம்

--------------------------------

5. கலைஞரின் ஆட்சிக்காலத்தில் கலைமாமணி பட்டம் வாங்கிய சிகாமணிகள் அனைவரும் போயஸ்-க்கு வந்து அதை ரிட்டர்ன் செய்யவும் - ஜெ அதிரடி அறிவிப்பு

----------------------------------



6. வெந்நீர்க்குளியல், காதல் இரண்டும் ஒன்று தான்.. இதமாக இருந்தாலும் சோம்பேறித்தனத்தை தருகிறது

-----------------------------------

7.பெண் குழந்தைகளே பெரியவர்கள் ஆனபின்  தன் பெற்றோரை கடைசி காலம்  வரை காக்கிறார்கள், கவனிக்கிறார்கள்

-------------------------------

8. ஒரு பெண்ணிடம் எத்தனை நகைகள் உள்ளன என்பதை  ஏதாவது திருமண விசேஷத்தின்போது அறியலாம்

---------------------------------

9. TRக்கும் STRக்கும் உள்ள வித்தியாசம்? 

டி ஆர் தாடி வெச்சிருப்பார்.. எஸ் டி ஆர்  அப்பப்ப ஒரு லேடியை வெச்சிருப்பார்

------------------------------------

10. ஆண்கள் சொல்ல வருவதை காது குடுத்துக்கேட்பதில்லை பெண்கள், அவர்கள் காதை கொடுப்பது கணவன்  கம்மல் வாங்கித்தரும்போதுதான்

-----------------------------------



11. உங்க பையனுக்கு சொம்புன்னு பேர் வெச்சிருக்கீங்களே? ஏன்?  

சிம்புன்னு பேர் வெச்சா மட்டும் நம்ம பேச்சை கேட்டு உருப்படவா போறான், விடுங்க

-------------------------------------

12. கணவன் துணி துவைத்து காயப்போடுகிறான், மனைவி கணவனை துவைக்கிறாள், சில சமயம் கணவனை காயப்போடுகிறாள்

---------------------------
13. அழகு இல்லாதவர்கள் அழகு நிலையம் போகிறார்கள். # ஆண் = இயற்கை அழகு

---------------------------

14. உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது ஊறுகாய், அதை கண்டு பிடித்தது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்.

----------------------------

15. ஜெ- நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை என்னாலே கூட மாத்த முடியாது.

.ஜட்ஜ் - மேடம், நீங்க இன்னுமா நடிகையா ?பஞ்ச் டயலாக் பேச? சி எம்!!

-----------------------------------


16. ஆண்கள் அழகு நிலையம் செல்வது முடியை திருத்த மட்டுமே ( பெரும்பாலும்)பெண்கள் அழகு நிலையம் செல்வது பர்ஸை வீக்காக்கி ஆணை வருத்த மட்டுமே

---------------------------------------

17. குழந்தைகளை நேசிப்பவர்கள், குழந்தைகள் மீது அதீத பாசம் வைப்பவர்கள் என மனிதர்களை இரு பிரிவாக பிரிக்கலாம்

----------------------------------------

18. அன்புள்ளம் இல்லாத ஆண்கள் என உலகில் யாரும் இல்லை, அன்பை வெளிப்படுத்தத்தெரியாத ஆண்கள் வேண்டுமானால் இருக்கலாம்

-------------------------------

19. திருட்டு டிவிடிக்கு ஒரு உத்தமமான தமிழ்பேரு வையுங்கப்பா..

ராசா குறுந்தகடு

-----------------------------------

20. பெண்ணைக்கண்டதும் அவளைக்கவர ஏதாவது செய்ய முற்படுவதே ஆணின் பெரிய பலஹீனம்

----------------------------------------------