1. டைரக்டர் சார் , ஹீரோ , ஹீரோயின் எல்லோருமே 16 ஆம் வாய்ப்பாடு ஒப்பிக்கறாங்களே , ஏன்?
இது ஒரு மல்ட்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே--ன்னு சொன்னேனே? அதான் மல்ட்டிப்ளிகேஷன் மேட்டர் வருது...
--------------------------------------
2. சார் , உங்க பட ஹீரோயினுக்கு ஏன் நடிப்பே வர்லை?
என்னைக்கேட்டா? அதை அவங்க கிட்டே தான் கேட்கணும்..
-------------------------------------------
3. படத்தின் ஆரம்பக்கட்ட காட்சியை காணத்தவறாதீர்கள் -னு விளம்பரம் பண்றீங்களே,, எதுக்கு?
அப்போதானே டைட்டில்ல என் பேரு வருது?
-------------------------------------------
4. படத்துல செகண்ட் ஆஃப் ரொம்ப ஸ்லோவா போகுது சார்..
தியேட்டர் ஆபரேட்டர்கிட்டே சொல்லி இடைவேளைக்குப்பிறகு வேகமா ஓட்ட சொல்லவா?
-----------------------------------------
5. என் படத்துல 3 சூப்பர் ஹிட் பாட்டு இருக்கு.. அதுக்காகவே படம் ஓடிடாது?
லூஸா சார் நீங்க? யூ டியூப்லயே அதை நாங்க பார்த்துக்க மாட்டோமா?
----------------------------------------
Excellent Weekly Shots pictures
Excellent Weekly Shots pictures
6. டைரக்டர் சார் , உங்க சம்சாரத்துக்கு ஏன் மொட்டை போட்டீங்க?
இல்லையே?
டைட்டில்ல தயாரிப்பு -னு உங்க சம்சாரம் பேருதானே வந்தது?
---------------------------------------------------
7. மேடம் , தமிழ்க்காலாச்சாரத்துக்கு பங்கம் விளைவிக்கற மாதிரி இந்தப்படத்துல நடிச்சிருக்கீங்களே , ஏன்?
அப்டியா? கலாச்சாரம்னா என்ன?
----------------------------------------------------------
8. போராளி பாண்டி-ன்னு தலைவர் பட்டப்பேரு வெச்சுக்கிட்டாரே, ஈழப்போராளியா?
அட நீங்க வேற.. போராளி படத்துல தலைவர் ஒரு சீன்ல வர்றாராம்..
----------------------------------------------------------------
9. சி.பி ஐ இவ்ளவ் கெடுபிடியா இருப்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலை..
ஏன்?
டெயிலி ஆஃபீஸ்க்கு 2ஜி பஸ்ல போனவங்களைக்கூட விசாரிக்குதே?
------------------------------------------
10. டாக்டர் .. சீக்கிரம் என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. நான் வாயைத்திறந்தா பல பேரு கேஸ்ல மாட்டுவாங்க..
டோண்ட் ஒர்ரி.. ஆபரேஷனுக்குப்பிறகு நீங்க கண்ணையே திறக்க மாட்டீங்க..
------------------------------------------
11. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
ஓ +VE ரத்தம் எடுக்கனும், இந்தாங்க ஏ டி எம் கார்டு , போய் எடுத்துட்டு வாங்கங்கறாரே?
-------------------------------------------
12. டாக்டர்.. எனக்கு நாளம் இல்லா சுரப்பிகள் ஃபெயிலியர் ஆகிடுச்சு.....
சுத்தம்.. நலம் இல்லா சுரப்பிகளா.. எல்லாமே ? அவ்வ்வ்
---------------------------------------------------
13. ஈரோடு ரயில்வே ரிசர்வேஷன் கவுண்ட்டர்ல என்ன கலாட்டா?
லோயர் பர்த் கிடைச்ச பொண்ணு “ நான் ஹை கிளாஸ் ஃபிகர்.. அப்பர் பர்த் -தான் வேணும்” -னு கேட்குதாம்..
--------------------------------------------------
14. டாக்டர்.. கை முறிஞ்சிடுச்சு-னு மாவுக்கட்டு போட்ட பேஷண்ட்க்கு இப்போ இடுப்பு முறிஞ்சிடுச்சு
அடடா... மாவு கிராக்கி இப்போ சாவு கிராக்கி ஆகிடுச்சா?
-------------------------------------------------------
15. தலைவர் அரிச்சந்திரனோட கொள்ளுப்பேரன் போல..
ஏன்?
தனக்குப்பொய்யே பிடிக்காதுங்கறதுனாலதான் டிரைவிங்க் (LIE )லை சென்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்லி சமாளிக்கறாரே?
-------------------------------------------------