Monday, November 28, 2011

ஒத்திகை - சாந்தி அப்புறம் நித்யா புகழ் அர்ச்சனா சர்மாவின் ஒலகமகா சினிமா - காமெடி கலாட்டா திரை விமர்சனம்

லோ பட்ஜெட் படம் தானேன்னு யாரும் அல்ப சொல்பமா நினைக்காதீங்க .. பல புது மேட்டர்களை டைரக்டர் அள்ளி தெளிச்சிருக்காரு.. இதய பலஹீனம் உள்ளவர்கள் , தாங்கு திறன் இல்லாதவர்கள் தக்க துணையுடன் வரவும் .. கும்மறதுக்கு முன்னால படத்தை பற்றி வந்த நியூஸ் பாருங்க.. இது எப்படின்னா ஆட்டை வெட்டறதுக்கு முன்னே மஞ்சள் தண்ணீர் தெளிக்கிற மாதிரி.. ஃபிகரை கரெக்ட் பண்றதுக்கு முன்னால லவ் லெட்டர் தர்ற மாதிரி..

படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னால தயாரிப்பு தரப்பு படத்தை பற்றி பிரஸ் மீட்ல குடுத்த பில்டப் பாருங்க..

டைரக்டர் ஏ.எம்.பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒத்திகை. ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்க, ஹீரோயினாக ஹாட் நாயகி (!!!!!!)அர்ச்சனா சர்மா நடிக்கிறார். ( எப்பாவும் ரொம்ப சூடாவே இருப்பாங்களா?)காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகும் செய்திகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது? என்பதை விளக்கும் படம்தான் ஒத்திகை. பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பல ஜோடிகளின் தற்கொலை தற்கொலையே இல்லை; அது கொலை என்பதை புலனாய்வு செய்து கண்டுபிடித்து படமாக இயக்கிக் கொண்டிருக்கிறார் பாஸ்கர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy6ikCVYLKRZ8QXlMPWiqMbR9XolgjUFxFyvqRQ7H9_g9xSjRpChJyJwcwFJii-BTkf3v-7qzNKels6DsiXlx3j-fMKQgoaNy6F4Mlt0aMXiUzQtjDzhLLrgmiBBZvFSQTgdnJBcxpdJk/s1600/Actress+Archana+Sharma+Stills11.jpg

மலை பிரதேசங்களில் அமைந்திருக்கிற தற்கொலை பாறைகளுக்கு வாயிருந்தால் ஓராயிரம் கதைகளை சொல்லும். இதில் பாதி கதைகள் காதல் கதைகளாகதான் இருக்கும். மலை பிரதேசங்களில் நடக்கும் இளம் ஜோடிகளின் தற்கொலை எல்லாம் நிஜமாகவே தற்கொலைதானா என்ற கேள்வியை எழுப்புவதுதான் ஒத்திகை படத்தின் அழுத்தமான கதை.


நான் சேகரித்த நிஜ தகவல்களின் அடிப்படையில் இந்த கதையை அமைத்திருக்கிறேன். சமுதாயம் தற்கொலை என்று நினைத்து கவலைப்படும் பல சாவுகள், தற்கொலையல்ல, கொலை என்ற அதிர்ச்சியை என்னுடைய ஒத்திகை கிளப்பும், என்கிறார் டைரக்டர் பாஸ்கர். ஒத்திகை படத்தின் தயாரிப்பாளரும் ஏ.எம்.பாஸ்கர்தான் என்பது கூடுதல் தகவல். ( அடடா.. ஹீரோ ரோலையும் அவரே பண்ணி இருக்கலாமே?)

படத்தோட ஓபனிங்க்ல ஹீரோ அப்போதான் முத முதலா அந்த ஊருக்கு வர்றாரு.. அவரு இந்து.. காதல் தண்டபாணியோட பொண்ணு தான் ஹீரோயின்  ,பார்த்ததுமே பத்திக்குது... அதுக்குதான் ஹாட் ஹீரோயின் பட்டம் போல.. ஹீரோயின் சைக்கிள்ள பள்ளிக்கூடம் போறப்ப ஹீரோ குறுக்காட்டறாரு... பாப்பாவுக்கு சத்தியமா 28 வயசாவது இருக்கும்.. ஆனா பாருங்க இந்த சீன்ல ஒரு செம காமெடி சீன் வெச்சிருக்காரு இயக்குநர்..

அதாவது ஹீரோயின் ஹீரோ கிட்டே பேசிட்டிருக்கறப்பவே வயிறு வலிக்குதுன்னு உக்காந்துக்கறாரு.. வயசுக்கு வந்துட்டாராம் .. அடபாவமே.. சரி லேட் டிஃபக்ட் போலன்னு நினச்சா ஒரு சீன்ல பாப்பாவுக்கு 17 வயசுதான்னு கோர்ட்ல ஜட்ஜ் சொல்றாரு.. 28 வயசு ஆண்ட்டியை 17 வயசு ஃபிகர்னு சொன்னதுக்காகவே டைரக்டரை மென்மையா கண்டிக்கலாம்.. சரி விடுங்க..

லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சதும் கண்டிக்கறாங்க.. துபாய் மாப்ளைக்கு கட்டி வைக்க முயற்சி பண்றாங்க.. 2 பேரும் ஊரை விட்டு 37 கி மீ ஓடி ஒரு காட்டுக்குள்ள போறாங்க.. இங்கே தான் இடைவேளை ட்விஸ்ட்..

இப்போ பாருங்க ஹீரோயின் கால்ஷீட்டும், ஹீரோ கால்ஷீட்டும் கிடைக்கலை போல.. அதுக்கெல்லாம் அசந்தவரா டைரக்டரு? கதை போக்கையே மாத்திடறாரு.. அதாவது வில்லன் , ஹீரோ ஹீரோயினை தேடிப்போற போலீஸ் ஆஃபீசர்.. அப்டி ஆக்‌ஷன் ட்ரெண்ட்.. யாராவது கேட்டா படம் லவ் ஆக்‌ஷன் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்னு சொல்லிக்கலாமே?

அப்புறம் பார்த்தா அந்த துபாய் மாப்ளை காட்டுக்குள்ள வர்ற ஆளுங்களை கொன்னு மனித உறுப்புகளை பார்சல் பண்ணி சேல்ஸ் பண்ற ஆள்.. ஹீரோயினை சாகடிச்சடறாங்க இடைவேளைலயே .. அவ்வ்வ்வ்


 சாந்தி அப்புறம் நித்யா படத்தை ரசித்தவர்கள் அந்த மாதிரி ஏதாவது இருக்கும் என எதிர்பார்த்து போயிடாதீங்கப்பா. ( நான் அப்படி எதிர்பார்த்து போகலை)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUAZmk8k1uU2fp9fW33xu9JHlN5cwMOZh5rRg7fOzo_qFPucvuUrnOIM5hCt0uhiK_W_4KNqW4fDyCsf_MEgwR-zeyjfFpTrZEhGE2V_omEDN4OJAGv5b2Q1ybU6v89qTQf5zla67W72M/s320/Othigai%20Movie%20Stills.jpg

மொக்கை படத்தில் ரசித்த வசனங்கள்

1.  எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..

சாரி.. நீங்க நினைக்கற பொண்ணு நான் இல்ல.. எனக்கு இன்னும் அந்த வயசு வர்ல..

2.  ஒரு பொண்ணு வயசுக்கு வந்த மேட்டர் கூட இவனுக்கு தெரில.. இவன் முதல்ல மேஜர் ஆகிட்டானா?ன்னு செக் பண்ணனும், இவனை உள்ளே கூட்டிட்டு போங்க.

3. துபாய் பொண்ணு , லோக்கல் ஃபிகரு என்ன வித்தியாசம்?

ஹி ஹி அது துபாய் பொண்ணு இல்ல.. பாய் பொண்ணு தான்.

4. போஸ்ட் மேன் - கோவாலு.......

பார்த்தியா மச்சான்./. என் மேல எவனாவது கை வெச்சான்னா உடனே கவர்மெண்டே ஆள் அனுப்புது பாரு..

5.  ஐ லவ் யூ .....

,ம் ம் ஓக்கே பரவால்ல..... ( என்னமோ காய்கறி ரேட் நிலவரம் பரவால்ல சொல்றமாதிரியே இருக்கே..)

6. ஏய்.. என்னையே ஏமாத்தறியா.. இரு இரு உன்னை வெச்சுக்கறேன்..

 என்னது ?வெச்சுக்கறியா? அப்போ கல்யாணம் கட்டிக்க மாட்டியா? ( ஹி ஹி என் லைஃப்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம் தான் )

7. காயின் பாக்ஸ்ல காசை போட்டேன் .. கால் போகலை காசையும் காணோமே?

டேய் நாயே நீ காசை போட்டது அவன் வாயில.. காயின் பாக்ஸ் பக்கத்துலயே வாயை திறந்து நின்னுருக்கான் அதைக்கூடா பார்க்கலை நீ?

8. ஹல்லோ.... அல்லல்லோஓஒ

ம் சொல்லுங்க..

நீங்க சூப்பர் ஃபிகரா? சுமார் ஃபிகரா?

9.  பெரிய முரளி இவரு.. ஃபோன்லயே லவ் பண்றாரு..

10.  டியர்.. ஃபோன்ல நான் தான் கிஸ் பண்றேன்கறதை எப்படி நீ கண்டு பிடிச்ச?

ஹீரோயின் - ஹி ஹி கிஸ் கூட ஒழுங்கா குடுக்கத்தெரியாத மரமண்டை நீன்னு எனக்கு தெரியும்

http://reviews.in.88db.com/plugins/content/plugin_jw_sig/showthumb.php?img=Othigai-movie/Othigai-movie-stills.jpg&width=200&height=200&quality=80

11. ஹீரோ - நீ என்ன யூஸ் பண்றியோ அதான் நானும் யூஸ் பண்றேன்.. சோப்.. பவுடர்... ( தம்பி.. பாப்பா ஃபேரன் லவ்லி , லிப்ஸ்டிக் யூஸ் பண்ணுதாம், என்ன செய்யப்போறே நீ என்ன செய்யப்போறே? )


12. வில்லன் - நான் ஏதோ சம்திங்க்ராங்க்-னு நினைச்சேன், இப்போதான் தெரியுது சம்திங்க் ராங்க்-னு ( 2ம் 1 தானே குழப்பறானே?)


13. டேய்.. வில்லனே இப்போ யார் வயசுக்கு வந்துட்டாங்கன்னு கார்லயே எங்களை ரவுண்ட் அடிக்கறே?

14. இப்போ எதுக்கு வில்லன் கார்ல இருந்து இறங்கி வர்றான்? மொத்தம் எத்தனை ரவுண்ட் அடிச்சேன்னு கேட்க வர்றானோ?அய்யய்யோ எண்ணாம விட்டுட்டேனே?

15. அப்பாடா, அவனுக்கு மெயில் செண்ட் பண்ணிட்டேன்..

அவன் மெயிலை எப்போ பார்ப்பான்?

ம்.. ரயில்வே கேட்  ஓப்பன் பண்ணூனதும் ரயில், மெயில் எல்லாம் பார்ப்பான்..

16. வில்லன் - டேய்.. சூர்யா மெயில் ஐ டி சொல்லு

சூர்யா மெயில் ஐ டி சொல்லிட்டேன் சார்..


http://www.filmics.com/gallery/d/112083-1/Othigai-Movie-Stills33.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ஹீரோவுக்கு ஓப்பனிங்க் ஃபைட் சீன் வெச்சப்ப ஹீரோ பைக்ல ஒரு கம்பெனி ஓனரை பார்க்க வர்றாரு.. வாசல்ல பைக்கை நிறுத்திட்டு அப்படியே போறாரே? சைடு லாக் பண்ணமாட்டாரா? அட்லீஸ்ட் சாவியை கூட எடுக்காமயா போவார்?

2. ஹீரோ + ஹீரோயின் ஒரு காட்டுக்குள்ள ஒதுங்கி இருக்காங்க.. அப்போ அந்த வழியா வந்த ஹீரோயினுடைய அப்பா பாத்ரூம் போக ஒதுங்கறாரு.. கொலுசு சத்தம் கேட்டு யார்றா அது?னு கேட்டுட்டு காட்டுக்குள்ள போறாரு.. இதுவரை ஓக்கே.. பொதுவா இந்த மாதிரி போறப்ப 1 பர்லாங்க் போய் பார்ப்பாங்க, ஆள் இல்லன்னா அவர் வேலையை பார்த்துட்டு அவர் போயிடனும்.. இவர் என்னடான்னா 12 கிமீ நடந்தே துரத்திட்டு தேடறாரே? ஏன்? அவர் பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தாக்கூட லாஜிக் இருக்கு..

3. அவர் சேஸ் பண்ணக்காரணமே கொலுசு சத்தம்தான்னு 20 நிமிஷம் கழிச்சு கண்டு பிடிக்கற ஹீரோ தன் கால்ல கொலுசை மாட்டிக்கறார்.. எதுக்கு அவ்ளவ் கஷ்டம்? சும்மா பாக்கெட்ல வெச்சாலே போதாதா? சலக் சலக் சத்தம் கேட்குமே.. ஏன்னா பாப்பா கால் சின்னது, ஹீரோ கால் 3 மடங்கு பெரிசா இருக்கு, எப்படி கொலுசு மேட்சா போட முடிஞ்சுது??

4.  ஹீரோயின் பிரஷ்ஷால பல் துலக்கறா. மாமனாக வர்ற வில்லன் அந்த பிரஷை வாங்கி தான் துலக்கறான் உவ்வே.. வேற நல்ல கற்பனையே வராதா?

5. ஒரு சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ண வேண்டியதுதான், நீங்க பண்ணுனது ரொம்ப ஓவர்.. ஹீரோயின் அப்பா லவ் ஜோடியை பிரிச்சு வில்லனான மாமன் கிட்டே நீங்க என்ன வேணா செய்ங்க, என் பொண்ணை மனசு மாத்துனா சரிங்கறார்.. உடனே வில்லன் ஹீரோயினை கூட்டிட்டு ரூமுக்குள்ளே போறார்.. ஆ அப்டினு ஹீரோயின் சத்தம் போடறார்.. எந்த அப்பாவாவது இதுக்கு ஒத்துக்குவங்களா?அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு வில்லன் ரேப் எல்லாம் செய்யலை சிகரெட்டால ஹீரோயின் கைல சுட்டான்னு ஒரு விளக்கம்.. எந்த மட வில்லனாவது கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ணுவானா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmtEKFe9qcSrBly-8LtaZKqMujLvvl4PO32TBNcnCVnwkQuJ-RVqEwBfgBapahFmg1lotBaTxcRrPIeameZo5XL-GW_gTr8HEXZKph3Hj5AhEsM5GYErjvGxClBDHxO-sX55610G7unRw/s1600/archana_sharma_01.jpg
6. அடுத்த ஷாட்லயே வில்லன் 300 ரூபாய்க்கு வாங்குன டேப் ரிக்கார்டர் எடுத்துட்டுப்போய் ஹீரோயின் ஆ என அலறிய சத்தத்தை போட்டுக்காட்டி ஹீரோயினை கெடுத்துட்டேன்கறார் .. அட போங்க சார்.

7. அடுத்த ஷாட் செம காமெடி.. ஹீரோயினோட தோழி கிட்டே தூது விட்டு ஹீரோயின் கிட்டே குற்றம் நடந்தது என்ன? அப்டினு ஹீரோ விசாரிக்க சொல்றார்.. ஹீரோயின் அப்டி எதுவும் நடக்கலைங்கறார்.. அட ராமா.. அப்டியே நடந்திருந்தாலும் எந்த போண்ணாவது ஆமாங்கோவ். அவர் என்னை கெடுத்துட்டாருங்கோவ்னு சொல்லப்போவுதா?

8. இடைவேளைக்குப்பிறகு வில்லனோட அடி ஆட்கள் 4 பேர் ஹீரோயின் கண்ணை ஆபரேஷன் எதுவும் பண்ணாம கத்தியாலயே எடுக்கறாங்க.. அப்புறம் உடல் உறுப்புகளை எல்லாம் என்னமோ ஆட்டுக்கறி எடுக்கற மாதிரி உவ்வே.. ஹாஸ்பிடல்லதானே அதெல்லாம் எடுக்க முடியும்? எந்த மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸூம் இல்லாம எப்டி அதெல்லாம் எடுக்க முடியும்?

9. இன்ஸ்பெக்டர் லாட்ஜ்ல ஒரு கேஸ் சம்பந்தமா விசாரிக்கறார்.. என்கொயரி முடிஞ்சதும் லாட்ஜ் மேனேஜர் தாங்க்ஸ் சொல்றார்.. அதெப்பிடி? அவனவனுக்கு விசாரணை முடிஞ்சா போதும்னு தான் இருக்கும்.. தாங்க்ஸ் பொருந்தவே இல்லையே?

10. ஹீரோ, ஹீரோயின் 2 பேரையும் வில்லனோட ஆளுங்க தள்ளிவிடறாங்க, மலை உச்சில இருந்து.... அது எதுக்கு? இவங்க தேவை உடல் உறுப்புகள் தான்னா அங்கேயே அடிச்சுப்போட்டுட்டு எடுக்கலாமே?மலை உச்சில இருந்து தள்ளி விட்ட பிறகு டேமேஜ் ஆகின உறுப்புகளை எடுத்து என்ன யூஸ்?

http://www.lateststills.com/wp-content/uploads/2011/05/archana_sharma_6_0-300x300.jpg

 சி,பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்க முடியாது

ஆனந்த விகடன் விமர்சனம் எதிர்பார்ப்பு மார்க் - 32 ( விமர்சனமே போடமாட்டாங்க)

குமுதம் எதிர்பார்ப்பு கமெண்ட் - ம்ஹூம், தேறாது

ஈரோடு சங்கீதா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்