1.தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
மனிதர் குல மாணிக்கமே-ன்னு வர்ணிக்காம ஒரு ஆள் மனிதர் குல மாணிக் பாட்ஷாவே அப்டினு வர்ணிச்சுட்டாராம்
--------------------------------------------
2. கறுப்பா இருக்கற நான் சிவப்பா இருக்கற பொண்ணை ரசிக்கறது ஓக்கே, சிவப்பா இருக்கற பசங்களும் ஏம்ப்பா சிவப்பா இருக்கற பொண்ணையே ரசிக்கறீங்க? #Y Y
-----------------------------------------
3. அத்தான், நான் இப்போ சண்டை போடற மூடுல இருக்கேன், நீங்க ஃபிரீயா இருக்கீங்களா?
ராம்சாமி - சாரி டியர்.. இப்போதான் சரக்கடிச்சென் செம டைட், குட் நைட்
-----------------------------------------------
4. ஐ ஹேட் யூ ( I HATE YOU) என்றாள்.. ஒண்ணும் பிரச்சனை இல்லை , ஐ ஹேடு யூ ( I HAD YOU ) என்றேன் # காதல் ஜாலம் @ வார்த்தை ஜாலம்
----------------------------------------
5. சி.பி - டியர், உன் உதடு மட்டும் எப்படி இவ்வளவு ரத்தச்சிவப்பா இருக்கு?
டேய், லூஸு.. சிவப்புக்கலர்ல லிப்ஸ்டிக் போட்டா அப்டித்தான் இருக்கும்
-----------------------------------
6. நீ தான் கைப்புள்ள அப்டிங்கறதை நான் எப்டி நம்பறது?
விக்கி தக்காளி - என் கூட எந்த ஃபிகர் பழகுனாலும் கைல ஒரு புள்ளயை குடுத்துடுவேன்
-------------------------------------
7. லேப் டாப் மனோ - மாமா, உங்க பொண்ணுக்கு சீரா என்ன தருவீங்க?
மாப்ள.. உங்களுக்குப்பொண்ணு தர்றதே பெரிசு.. இதுல சீர் செனத்தி வேற வேணுமா?
---------------------------------------
8.தலைவரோட பையன் ஜொள்ளு பார்ட்டி போல..
ஏன்?
மகளிர் அணிக்கு தலைவர் ஆகிடவா?ன்னு கேட்கறாராம்.
-----------------------------------------
9. இன்னும் 10 வருடங்கள் மட்டும் தான் அரசியலில் நான் இருப்பேன்னு தலைவர் சொல்லிட்டாரே?
ம்க்கும், ஆல்ரெடி அவருக்கு 98 வயசாகுது...
---------------------------------------------
10. தமிழ்வாசி பிரகாஷ் - என் காதலிக்கு சிரிச்ச முகம்..
அடடே.. ம் ம் ..
ஃபேஸ் பிக் அட்ரஸ் கேட்டாக்கூட [email protected] -னு அட்ரஸ் சொல்றாளே?
----------------------------------
11. அவர் எடக்கு மடக்கு ஏகாம்பரம்னு எப்டி சொல்றே?
காக்காவுக்கு சோறு வைக்கறப்ப காகா-னு கத்தறோம், ஆனா பூனைக்கு பால் வைக்கறப்ப ஏன் மியாவ் ம்யாவ்-னு கத்தறதில்லை?னு கேட்கறாரே?
---------------------------------------------------
12. எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மன்னர் நோக்கு வர்மம் கற்றும் பயன் இல்லை..
அப்போ அவர் ஒரு பேக்கு வர்மர்-னு சொல்லு
--------------------------------------
13. சதீஷ்.. தள்ளி உக்காருங்க.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கும்..
ம்க்கும்.. பயந்து நடுங்க நான் ஒண்ணும் நெருப்பு இல்ல.. பருப்பு..
-------------------------------------
14. பர்ச்சேஸ் மாலா ,சிங்கப்பூர் - காய வைக்கறதுல என் புருஷன் கில்லாடி..
அட.. உன்னையா?
ம்ஹூம்.. என் டிரஸ்ஸை... துவைச்சு காய வைச்சுடுவார்..
-----------------------------------------
15. நிரூபன் - லவ் பண்றப்ப என் ஆளு கவரி மான் மாதிரி இருந்தா.....
அடாடா.. இப்போ..?
கவரிங்க் மான் மாதிரி ஆகிட்டா.. அவங்கப்பன் போட்ட 30 பவுனும் போலி..
-------------------------------------------
16. டியர்.. 24 மணி நேரமும் எனக்கு உன் நினைப்புத்தான்..
கருண் -நீ என்ன மெடிக்கல் ஷாப்பா?
-------------------------------------------------
17. கவிதை வீதி சவுந்தர் - மிஸ்.. நீங்க அசைவம், நான் சைவம்.. சரி வருமா?
டேய்.. லூஸு... நாம லவ் தானே பண்ணப்போறோம்? ஹோட்டலா கட்டப்போறோம்?
---------------------------------------------------------
18. சிங்கப்பூர் சாந்தி - அத்தான்... இதோ என் கிஃப்ட்.. வீடிடோ அட்டாச்டு திசை காட்டும் கருவி..
புரியலையே.. எதுக்கு?
நீங்க எங்கே போனாலும் இது காட்டி குடுத்துடும்..
----------------------------------------------
19. சின்ன வயசுல இருந்தே நான் எறும்பு புற்று, பாம்பு புற்று பக்கம் போக மாட்டேன்..
ஏன்?
புற்று நோய் வந்துட்டா?
--------------------------------------------
20. மேடம், நீங்க எழுதற கவிதைகளை உங்க வீட்டுக்காரர் படிப்பாரா?
சோனா - நோ நோ.. மாசம் ஆனா வாடகை மட்டும் வாங்குவார்.. ஹவுஸ் ஓனர். அவர் ஏன் படிக்கனும்?
---------------------------------------
20. உணவு உலகம் ஆஃபீசர் - மேரேஜ் ஆகி 8 வருஷம் ஆகுது.. என் மனைவிக்கு ஒரே ஒரு டைம் தான் கோபம் வந்திருக்கு..
அடடே..
அந்த ஒரு டைம் வந்த கோபமே இன்னும் தீரலை..
-----------------------------------