1. நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ உண்டு # ஒரு தலை அன்பு!
---------------------------------------
2. ஒப்பனை இல்லாத என் உள்ளத்தை உன்னிடம் ஒப்படைத்தேன்!
கட்டுப்பட்டி என்று நீ அதை எட்டி உதைத்தாய்!
--------------------------------------
3. நான் சந்தித்த முதல் காதலி நீ! நீ சந்தித்த கடைசி ஏமாளி நான்!
---------------------------------------]]
4. என் ஜாதகத்தின் ராசி பலனை நான் பார்ப்பதே இல்லை
நீதான் என் ராசி, நீ எனக்கு சாதகம் ஆனால் அதுவே என் பலா பலன்கள்
---------------------------------
5. என் வீரங்கள் , வாய்ச்சவடால்கள் , எள்ளல்கள் அனைத்தும் நிர்மூலம் ஆகி உறைந்து மறைந்து விடுகிறது , உன் சமீபங்களில்
-----------------------------------
Spring Collection
Spring Collection
6. வரலாறு காணாத தோல்வி - சொல்லாத காதல்!
----------------------------------------------
7. கூடன் குளம் அணு உலை போல் என் இதயம்!
உனக்கான அன்பை ப்பொழிய விடாமல் தடை செய்தால் வெடித்து விடும் அபாயம்!
-----------------------------------------
8. பெண்ணின் அழுகையில் சில சமயம் உள் நோக்கங்கள் உண்டு, ஆனால் ஆணின் அழுகையில் இயலாமை மட்டுமே எதிரொலிக்கும்..
------------------------------------------
9.பெறும் தன்மை பெண்ணின் அணிகலன், பெருந்தன்மை ஆணின் மகுடம்
----------------------------------
10. ஆளத்தெரியாதவர்கள் நாட்டிலும், வாழத்தெரியாதவர்கள் வீட்டிலும் அதிகார மமதையுடன் ஆர்ப்பரிக்கிறார்கள் # “ஸ்டேட்”டஸ் அப்டேட்
----------------------------------
11. நீ நடக்கும் பாதையில் பூக்களை தூவ குனிந்தேன்.. உன் காலுக்கு செருப்பாக மாற என்னை நீ பணித்தாய்!!
------------------------------------
12. மற்றவர் மனதைப்புண்படுத்தாமல் பகடி செய்வது கத்தி மேல் நடக்கும் நத்தையின் பயணம்
---------------------------------------
13. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்போது அதை கடந்து வர மனிதனுக்கு அதிக மனோபலம் தேவைப்படுகிறது
-----------------------------------
14. நீ ஒரு விசித்திரமான தொட்டா சிணுங்கி, நான் தொடவே இல்லை.. சிணுங்குகிறாய்!!
------------------------------------
15. நிறைவேறாத காதல்கள் அந்தந்த ஊர் மலைக்கோயில்களில், பாழடைந்த மண்டபங்களில் அடையாளம் காட்டப்பட்டு பெயர்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன
-----------------------------------
Super Saree Collections Fashion 2011
16.அரை குறை உடையில் தங்கள் மகள் நடிக்க நேர்வதை எல்லா அம்மாக்களும் அரை குறை மனதுடன் தான் சம்மதித்து இருப்பார்கள்
---------------------------------
17. அறிமுகம் இல்லாத பெண்ணின் ஆடை விலகலை சுட்டிக்காட்ட, திருத்த சொல்ல ஒரு பெண் குழந்தையின் அப்பாவாக மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்
----------------------------------------
18. கவிதையை எழுதும்போதே இதை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்று கணக்குப்போட்டு விடுகிறது கவிஞனின் உள்ளம்
-----------------------------------
19.பிரச்சனை வெள்ளம் தலைக்கு மேல் போகும்போது வேறு வழி இல்லாமல் மனிதன் கடவுளை நம்புகிறான்
------------------------------------
20. விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு, உள்ளுணர்வு இவற்றின் வழி காட்டல்கள் பெண்களுக்கு ஆண்களை விட மிக அதிகம்
------------------------------------