Tuesday, November 15, 2011

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் - சினிமா விமர்சனம்

http://www.viduppu.com/photos/full/movies/konjamkobam_konjamsiruppu_002.jpg 

அங்காடித்தெரு ஹீரோ மகேஷ் நடிக்கும் 2 வது படம் , கவித்துவமான டைட்டில் என்பதைத்தவிர எந்த விதமான பிளஸ்ஸும் இல்லாத ஒரு படம் சத்தம் இல்லாமல் ரிலீஸ் ஆகி இருக்கிறது.. படத்தோட இயக்குநரின் மகள் புவனேஸ்வரிதான் படத்துக்கு ஹீரோயின்.. அதனால ஹீரோவை விட ஹீரோயினுக்குத்தான் அதிக ஷாட்ஸ், அதிக க்ளோஸப்..

படத்தோட கதை என்ன? ஹீரோயின் கர்நாடக சங்கீதம்  கத்துக்க விஜய் குமார்ட்ட வர்றார்..  அவரோட பையன் தான் ஹீரோ.. 2 பேருக்கும் லைட்டா பழக்கம் ஆகுது.. ஸ்ட்ராங்கா பழகறதுக்குள்ள வில்லன் வந்துடறார்.. வில்லன் வேற யாரும் இல்ல.. பீகார்ல இருக்கற ஹீரோயினோட மாமா பையன் தான்..ஃபிரண்ட்ஸா இருக்கற ஹீரோ - ஹீரோயினுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகுது.. ஆனா மாமா பையன் ஹீரோயின் மேல ஆசைப்பட்டதும் அது கேன்சல் ஆகி  பழைய படி ஃபிரண்ட்சாவே பழகுங்கன்னு ஹீரோயினோட அப்பா சொல்லிடறார்.. 

அப்புறமாதான் கதைல பயங்கர டர்னிங்க் பாயிண்ட்.. வில்லன் கெட்டவன்கறது ஹீரோயினுக்கு தெரிய வருது.. உடனே பழைய படி ஹீரோவை லவ்வறார்.. அடேய் அடேய்.. என்னாங்கடா இது..? ( இது ஆடியன்ஸ் வாய்ஸ்.)

அப்புறம் க்ளைமாக்ஸ் ல ஒரு ஒப்பந்தம் . ஹீரோ வில்லன் 2 பேரும் மோதிக்கறாங்க.. குச்சி மிட்டாய் மாதிரி இருக்கற ஹீரோவும், கடோத்கஜன் மாதிரி இருக்கற வில்லனும் ஒண்டிக்கு ஒண்டி மோதனும்.. யார் ஜெயிக்கறாங்களோ  அவருக்கு பொண்ணு.. இப்படி ஒரு கேவலமான ஐடியாவை 38 வருஷமா தமிழ் சினிமா யூஸ் பண்ணிட்டு தான் இருக்கு..


http://www.filmics.com/tamil/cache/plg_jdvthumbs/thumb137-368cc1c139e692259fafb692e5289a71.jpg

அங்காடித்தெரு மகேஷ் லவ் சீன்ல கட்ற எக்ஸ்பிரஷனைக்கூட மன்னிச்சிடலாம்... ஆனா கோபமா இருக்கறதா ஒரு ஃபீலிங்க் காட்றார் பாருங்க.. அதை பார்க்கறதுக்கு நயன் தாரா வோட இப்போதைய முகத்தையே பார்த்துக்கலாம்.. 2 வது படத்துலயே அவர் என்னமோ பெரிய ஆக்‌ஷன் ஹீரோ மாதிரி, கேப்டன் மாதிரி கொடுக்கற பில்டப் தாங்கலை.. சகிக்கல..

ஹீரோயின் புதுமுகம்..  ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருந்தாக்கூட பரவால்ல. ஆண்ட்டி மாதிரி இருக்கார்..  முற்றலான முகம்.. அப்புறம் சில  டவுட்.ஸ். 

1. அவர் வர்ற எல்லா சீனும் ஸ்லீவ் லெஸ் சுடி, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் தான் போட்டுட்டு வர்றார்.. காத்தோட்டமா இருக்கட்டும்னு நினைச்சார் போல.. 

2. அடிக்கடி ஹீரோயின் ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.. ஆனா டைரக்டர் ஹீரோயினோட அப்பாங்கறதால எனக்கு ஒரு டவுட்.. அவருக்கு சங்கடமா இருக்காதா? டீசண்ட்டா கேமரா கோணங்களை வைச்சிருக்கலாம்..

3.  ஹீரோயின் அழற சீன்லயும் சரி.. தண்ணீர்ல குளீக்கற சீன்லயும் சரி முகத்துல ரோஸ் பவுடர் மட்டும் கண்டிப்பா கால் கிலோவாவது இருக்கும்.. எதுக்கு அவ்ளவ் மேக்கப்.. ஃபிகரு சிவப்புதானே? அழகுக்கு அழகு சேர்க்கறாங்களோ?

 வில்லன் பாரதியார் படத்துல பாரதியாரா வந்த சாயாஜி சிண்டே தான் , படம் பூரா அண்ணன் ஹிந்தில தான் பேசறார். ஏன்னா கதைக்களன் வடக்கே செகண்ட் ஆஃப் ஃபுல்லா.. .அவரோட பையனா வர்றவர்தான் இன்னொரு வில்லன்.. ஆள் வாட்டசாட்டமாதான் இருக்கார்.. கில்மா படத்துல நடிக்க வாய்ப்பு வரும்..




காமெடிங்கற பேர்ல கஞ்சா கருப்பும் , சத்யனும் கொலையா கொல்றாங்க.. 

http://123tamilcinema.com/images/2011/11/konjam-sirippu-konjam-kobam.jpg

படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  பின்னால யாரோ நம்மை தம்பி தம்பின்னு கூப்பிட்ட மாதிரி இருந்துச்சே?


இருக்காதே.. நம்மளை எல்லாரும் எப்பவும் திருடன் திருடன்னுதானே கூப்பிடுவாங்க?


2.  அந்த ஆர்த்தி எனக்கு.. ஆரத்தி உனக்கு..

3.  வாம்மா.. மின்னல்././ எவ்ளவ்?

ரூ 1000

ஓ! வெயிட்.. ப்ளீஸ்.. இப்பவே வர்றேன்..

என்னமோ பொண்டாட்டிக்கு பூ வாங்கித்தர்ற மாதிரியே போறானே?
சார்.. .. செல் ஃபோன் மாடல் புதுசா வந்திருக்கு வேணுமா? ஜஸ்ட் ரூ 2000 தான்.

ஓக்கே..

இந்தாம்மா பார்ட்டி.. உனக்கு ரூ 1000, எனக்கு ரூ 1000..

அடேய்..

ஏன் மாம்ஸ்?

இப்போ நீ பண்ணிட்டு வந்திருக்கற வேலைக்குப்பேரு என்ன தெரியுமா?

சொல்லுங்க மாமா

அதான்... 

4. அப்பா.. அந்தப்பொண்ணு வர்லைங்கறதை எப்படி பார்க்காமயே சொல்றீங்க?

குயில் கூவறதையும், கோயில் மணி அடிக்கறதையும் எப்டி பார்க்காமயே சொல்ல முடியுது? அது மாதிரிதான்.. ( மிஸ்டர் விஜய குமார். நீங்க மாமனார் கேரக்டர்.. பாப்பா மருமக முறை பீ கேர் ஃபுல்)

5.  தண்ணி லாரிக்கு எதுக்கு பென்ஸ் கார்?

6.  ஒரு அழகான தேவதை..... 

ம்.. என்னாது?

சரி. சுமாரான தேவதை.. 

7.  அய்யய்யோ.. கலங்கரை விளக்கத்துல ஒரு ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சே... என்ன ஆகப்போகுதோ?

8. என்னங்க.. மேடம்.. கடைசி கடைசியா ஒரு தடவை என்னை கிள்ளிட்டு  போங்க ப்ளீஸ்..

எவனோ ஒருத்தன் என்னை அள்ளிட்டு போறான்.. கிள்ளிட்டு போனா என்ன நோ பிராப்ளம்.. ( ஆஹா .. நல்ல குடும்பத்து குத்து விளக்கு போல..)

9.தொலைஞ்சு போன எதுவுமே திரும்ப கிடைக்காது.. இந்த நெக்லஸ் உனக்கு கிடைச்சிருச்சே..  ( ஆமா. என்னமோ கற்பே ரிட்டர்ன் வந்த மாதிரிதான்.. )

10. சொந்தங்களை கடவுள் கொடுப்பாரு, நட்பை நாம தான் தேடிக்கனும்  ( இந்த எஸ் எம் எஸ் மொக்கையை ஹீரோயின் படம் பூரா கேப் கிடைக்கறப்ப எல்லாம் ரிப்பீட்டிங்க்.. அவ்வ்வ்வ் )

http://www.thedipaar.com/pictures/resize_20111113084726.jpg

11.  பொண்ணோட அம்மாவையும் தூக்கிட்டு போயிடலாமா? பின்னால யூஸ் ஆகும்.. ( அடங்கொன்னியா.. முன்னால யூஸ் ஆகாதா?)

12. தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு டாக்டர்


எத்தனை நாளா?

15 நிமிஷமா?

வாட்?

சமீபமாத்தான்னு சொல்ல வந்தேன்..

13.  நடிச்சது போதும் திரும்புங்க.. 

நாங்க நடிச்சோம்கறதை எப்படி கண்டு பிடிச்சீங்க?

அதான் கூப்பிட்டதும் திரும்புனீங்களே?

14.  காதலிச்சவளை மனசுலயும், கட்டிக்கிட்டவளை பக்கத்துலயும் வெச்சுக்கிட்டு இருந்தா இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்? ( டூ இன் ஒன் அப்டினுதான்)

15. பொம்பளைங்க மனசுல என்ன இருக்குங்கறதை ஆண்டவனால கூட கண்டு பிடிக்க முடியாது.. (அப்போ ஆம்பளைங்க மனசுல என்ன இருக்குங்கறதை சாத்தானால கூட கண்டு பிடிக்க முடியாதா?). 

16. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் கூட குடும்பம் நடத்தப்போறாளா? - வில்லன் ( அடேய் மானங்கெட்டவனே.. அது தெரிஞ்சு தானே நீ ஓக்கே சொன்னே?) 

http://www.thedipaar.com/pictures/resize_20111113084925.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல டாக்குமெண்ட்ரி மாதிரி நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி எல்லாம், பாட்னாவின் பெருமைகளை எல்லாம் சொல்றாரே.. அது ஓக்கே.. 

2.  டைட்டில் , பாடல் காட்சிகளில் கொஞ்சம் கலை நயம்.. ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு.. 

லாஜிக் மிஸ்டேக்ஸ் , சில கேள்விகள் டூ டைரக்டர்

1. சார். சார்.. இது ஒரு சாதாரணகாதல் கதை சார். எதுக்கு அந்த பிஞ்சு மூஞ்சி ஹீரோவை எஸ் ஐ ஆக்குனீங்க?  இந்த லவ் ஸ்டோரில அவர் போலீஸ் ஆஃபீசரா வந்து என்ன செஞ்சாரு?

2. உலக திரைப்பட வரலாற்றிலேயே போலீஸ் ஆஃபீசராக வரும் ஹீரோ ஒரு சீனில் கூட யூனிஃபார்மில் வராத சீன் இந்தப்படம் தான்./. ஏன் சார்? ஏன்?ஏன்?

3. படம் பூரா சப் இன்ஸ்பெக்டர் ஹீரோ தாடி வெச்சுக்கிட்டே வர்றாரே? சபரிமலை சாமியா? அவரு?

4. ஒரு சீன்ல ஹீரோயின் விஜய்குமார் பற்றி யாரோ சொல்றப்ப “ இப்படி ஒரு சங்கீத வித்வானை இப்போதான் கேள்விப்ப்டறேன்” அப்டினு சொல்றார்.. அடுத்த 2 வது நிமிஷமே “ அவர் கிட்டே சங்கீதம் கத்துக்க ரொம்ப நால் ஆசை”ங்கறார்.. ஏன் சார் ஏன்ன்?

5. கர்நாடக சங்கீதம் கத்துக்க வர்ற ஹீரோயின் கூட முத நாளே ஹீரோவோட அப்பாவா வர்ற விஜய குமார் கட்டிப்பிடிச்சு டான்ஸ் ஆடறார்.. என்ன கொடுமை சார் இது..? மாமனாரின் இன்ப வெறியா?

6. ஒரு டூயட் சீன்ல ( துப்பாக்கி கண்ணால தோட்டாவை வீசறியே..)பாட்டு பூரா ஹீரோ மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை தான் போட்டிருக்கார்.. அவ்வ்வ்வ்.. ஷூட் பண்றப்ப கூச்சமா இல்ல? 4 பேரு கிண்டல் பண்ணுவாங்களேன்னு சங்கோஜமா இல்ல..

7. ஹீரோ - ஹீரோயின் ஜோடியா நிக்க வெச்சு ஃபோட்டோ ஷூட் எடுத்தப்ப உங்க கண்களை நிஜமா உறுத்தவே இல்லையா?

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Mahesh.jpg

ஈரோடு ஆனூர் தியேட்டர்ல படம் பார்த்தேன்...

எல்லா செண்டர்லயும் 10 நாட்களை தாண்டிட்டா அலகு குத்தி எல்லாருக்கும் அம்மன் கோவில்ல கூழ் ஊத்தறேன்..

 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 34

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - ம்ஹூம், தேறாது

சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


டிஸ்கி - எனது கொள்கைகளில் ஒன்றான ஆண்கள் ஸ்டில் ஒன்றுக்கு மேல் போடுவதில்லை என்பதை மீறியதற்குக்காரணம் பாப்பாவின் தனி ஸ்டில் கிடைக்கலை. மன்னிக்க