1.நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! # ஆமாண்ணே, ஒரு மாதிரியாதான் நடிக்கறீங்க, நோ டவுட்டு
---------------------------
2. நடிகை பூர்ணாவுக்கு 5 தங்கைகளாம், தயாரிப்பாளர்கள் படை எடுப்பாம் # பரி பூர்ண ஃபேமிலி போல ( டைட்டில் ட்வீட்)
-------------------------------
3. கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியானதால் என் இமேஜ் எல்லாம் போயிருச்சே- நடிகை ஆண்ட்ரியா # வீடியோவே வந்தாச்சு, பாப்பா வுக்கு இன்னும் தெரில போல
-----------------------------------------
4. அத்தான், நீங்க ஆன்மீக வாதியா? நாத்திக வாதியா?
கோயிலுக்கு போவேன், ஆனா சாமி கும்பிட மாட்டேன்.. ஹி ஹி ஹி
---------------------------
5. ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளார் சிம்பு. # ஆக்டிங்க் தானே நோ? டேட்டிங்க்? - ஜீவா
----------------------------
6. டியர், என்னை லவ் பண்றதா சொன்ன இந்த 4 வருஷமும் என் கிட்டே பல்பு தான் வாங்குனீங்க, வேற என்ன யூஸ்?
அட கிறுக்கி, நான் பல்பு கடை வெச்சுட்டேன்
-----------------------------
7. டியர், எனக்கு கிரிக்கெட்ல ஏ, பி சி டி கூட தெரியாது..
அப்டியா? நீ தேவலை. எனக்கு இங்கிலீஷ்ல கூட நீ சொன்ன அந்த லெட்டர்ஸ் எல்லாம் தெரியாது
---------------------------
8. காதல் என்பது உளவியல் சார்ந்தது, கள்ளக்காதல் என்பது களவியல் சார்ந்தது
-----------------------
9..நல்லவர்கள் சின்ன வயசில் இறப்பதற்குக்காரணம் கடவுள் அவர்களை அதிகம் நேசிப்பதாலாம் # எதுக்கும் நான் கெட்டவனாகவே இருந்திடலாம்னு நினைக்கறேன்
-----------------------------------
10. . லேடி ரைட்டர் - 50 வயசு ஆனபின் தான் என் ஃபோட்டோவைவெளியிடுவேன்.
நிருபர் - மேடம்,குழப்பாதீங்க, 60க்குப்பிறகு எப்படி 50 வரும்?
-------------------------------------
-------------------------------------
11.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்
--------------------------------------
12. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு
-------------------------
13. டியர் , 11.11.11 ராசியான நாள் ,என்ன பண்ணலாம்?
சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா
-------------------------------
14. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்
---------------------------------------
15. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு..
சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?
-----------------------------------
16. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது
--------------------------------
17. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது
--------------------------------
18. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க?
30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?
------------------------------------
19. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM காதல்
---------------------------------
20. காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது
--------------------------------
Green Roses
Green Roses
21. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்
-------------------------------
22. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.
சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி
----------------------------------
23. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்
-------------------------------------
24. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க?
ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்
-----------------------------------
25. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது..
நிஜமாவா?
ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்
---------------------------------