Friday, November 04, 2011

ஈரோட்டில் தங்கக்கார் - கின்னஸ் சாதனைக்காக!!!!!!!!!!!!

சில வருடங்களுக்கு முன் எஸ் தாணுவின் தயாரிப்பில் கேப்டன் கூலிக்காரன் என ஒரு டப்பா படத்தில் நடித்தார் , நினைவிருக்கிறதா? அந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு தங்கக்கார் காண்பிப்பாங்க.. வில்லன் தன் சொத்து முழுவதையும் தங்கமாக சேர்த்து கார் ஆக்கி இருப்பார். அது உருக்கப்பட்டு அழியும்.. அதை பார்த்தவங்க எல்லாம் உச் கொட்டிட்டே பார்த்தாங்க.. அது போல் நிஜமாகவே ஒரு தங்கக்கார் இப்போ வந்திருக்கு.. 

கின்னஸ் சாதனைக்காகவும் , கோல்டு பிளஸ் ஜுவல்லரியின் விளம்பரத்திற்காகவும் மக்களை கவர்வதற்ககவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.. 

80 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி , மேலும் 10,000 ரத்தின கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.. இது விற்பனைக்கல்லவாம் ( நல்ல வேளை.. தப்பிச்சோம்.. )

ரூ 1 லட்சம் மதிப்புள்ள நானோ கார் வாங்கி  பின் பொற்கொல்லர்கள் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.. 

ஈரோடு  நகரில் பெருந்துறை சாலையில்  பழைய பாளையம் பஸ் ஸ்ட்ட்ப் அருகே  ஈஸ்வர மூர்த்தி மஹால் ,  திருமண மண்டபத்தில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. 

அனுமதி இலவசம்.. காரை மட்டும் பார்க்க நினைக்கறவங்க மதியம் 12 டூ 3 மணிக்கு போகவும்.. 

ஈரோடு மாநகர் ஃபிகர்களையும் பார்க்கனும் என ஆவலாக உள்ளவர்கள் மாலை 5 டூ 7 போகவும்.. 

எனக்கு ஃபிகர் பார்க்கும் ஆர்வம் இல்லாததாலும், அடிப்படையில் நான் நல்லவன் என்பதாலும் நான் 12 மணிக்குத்தான் போனேன்.. ( நம்புங்கப்பா)







டிஸ்கி -1 இந்தப்படம் என் சொந்தக்கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.. எனவே இனி நன்றி கூகுள் என ஏன் போடலை என யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க .. ( ஐ ஜாலி)

டிஸ்கி 2  - கேமரா ஏது? புதுசு!!! என கேட்பவர்களுக்கு.. அது தனி பதிவாக பின்னர் போடப்படும்..

டிஸ்கி 3 -   திருமணம் ஆன அபாக்கிய ஆண்கள் தனியாக போய் பார்த்து வரவும் என்னை மாதிரி.. மனைவியை அழைத்து வந்தால் அவர் அங்கலாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும், காரை ரசிக்க முடியாது ..