Thursday, November 03, 2011

KIILING ME SOFTLY - ஹாலிவுட் கில்மா சினிமா - விமர்சனம்

http://akimages.fridaymoviez.com/3/970/89135/Killing-Me-Softly.jpg 

டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ நர்ஸோட சுய சரிதைக்கதைன்னு என் ஃபிரண்ட் சொன்னான்..  எப்பட்றா கண்டு பிடிச்சேன்னா சாஃப்ட்டா கொல்றது அவங்கதானே?ன்னான்.. நல்ல இங்கிலீஷ் நாலெட்ஜ்டா உனக்குன்னு சொல்லிட்டு படம் பார்க்க போனா கதை டாபிக்கே வேற.. ஆனாலும் சீன் படம் தான்.. அதானே நமக்கு வேணும்..

அலீஸ் - இதான் ஃபிகரோட பேரு.. அமெரிக்காகாரி.. லண்டன்ல வசிக்கறா.. ( அமெரிக்கான்னா லண்டன்லதான் வசிப்பா, பின்னே ஊட்டி கிண்டர் கார்டன்லயா வசிப்பா?) இதே தமிழ் சினிமான்னா ஹீரோ கூட எப்படி முதல் சந்திப்பு நடந்தது? எப்படி லவ் வந்தது?னு காட்டவே 4 ரீல் எடுத்துக்குவாங்க.. ஆனா இது ஃபாரீன் படம் ஆச்சே.. மொத்தமே 5 ரீல் தான் (நம்ம கணக்குக்கு 10 ரீல்)

அதனால அவளுக்கு ஒரு  லவ்வர் இருக்கான்கறதை ஒப்பனிங்க்லயே சொல்லிடறாங்க.. இப்போ மேட்டர் அதில்லை.. கடை வீதில அவ போறப்ப ஒருத்தன் அவளை நோட் பண்றான்.. ( ஏன் புக் பண்ணலையா?ன்னு கடி ஜோக் அடிக்காதீங்க.. நெக்ஸ்ட் அதான் பண்ணப்போறான்).. 3 நாள் இந்த மாதிரி நடக்குது.. 4 வது நாள் அவனா வந்து கடலை போடறான்.. எந்த நாடா இருந்தாலும் பசங்க கடலை போடறதுல மட்டும் மன்னனா இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu-BOTxom9LMOoQLgmikCby-y1N0jBvjTVyEZhPoEsJTvicmoaZP5k_PBzDS9w54gtKn0tFhmvmm4lEFNa-YFVu4tMNG11R-Dp1bHjiAbu6pTjYg1nH1AxmxbZi9XyNEbZSVckAnbndWY/s400/killing+me+softly_back.jpg

அவன் வீட்டுக்கு கூப்பிடறான்.. இவளும் போறா.. பக்கத்து சீட் ஃபிரண்ட் கேக்க்கறான்.. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள் கூட அவ ஏன் தனியா போகனும்? கூட அவ லவ்வரையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே? லாஜிக் இடிக்குதே?ங்கரான்.. அடங்கோ/....அவளுக்கு அது தெரியாதா? எல்லாம் ஒரு ஆர்வம் தான்.. அவன் என்ன ராமாயணம். மகாபாரதம் சொல்லித்தரவா அவன் வீட்டுக்கு கூப்பிடறான்? அவளும் தெரிஞ்சுதான் போறா.. வெயிட்..அப்டின்னேன்.

2 பேரும் எதும் பேசிக்கலை.. பரஸ்பரம் பேர் கூட கேட்டுக்கலை.. ஆனா கில்மா மட்டும் அங்கே முடிஞ்சிடுது..  ஆனா சீன் செம சீன் தான்./. ஹி ஹி அப்புறம் அவ ரிட்டர்ன் ஆகிடறா.. ஆனா அவன் நினைப்புலயே இருக்கா.. அவன் பேரு ஆடம் அப்டினு தெரிஞ்சுக்கறா.. ( காலக்கொடுமை பாருங்க, எல்லாம் முடிஞ்ச பிறகுதான் பேரே அவ்வ்வ்வ்)

பனி மலைல ட்ரெக்கிங்க் போற ஆள்தான் ஆடம்.. இப்போ என்ன பண்றா ஹீரோயின்? காலம் காலமா பொண்ணுங்க பண்ற வேலையை பண்றா.. அதாவது பழைய லவ்வரை கழட்டி விட்டுடறா.. புது லவ்வர் கூட சுத்தறா..

இதுல என்ன கூத்துன்னா அந்த ஆடம் எனும் பாய் ஃபிரண்ட் மேட்டர்தான் முடிஞ்சுதேன்னு கழட்டி விடாம மேரேஜ் பண்ணீக்கலாம்னு கம்ப்பெல் பண்றான்... அவளுக்கு ரொம்ப சந்தோஷம்ம்.. ஆஹா, அவன் ரொம்ப நல்லவன் போலன்னு நினைக்கறா.. 


http://www.memberslog.in/files/flash/Killing-me-softly_Heather-graham_3.jpg
இப்போதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. அவளுக்கு அனாமதேய ஃபோன் கால்ஸூம், லெட்டர்சூம் வருது.. ஆடம்- மை மேரேஜ் பண்னதே , அது உனக்கும் நல்லதில்லை, அவனுக்கும் நல்லதில்லைன்னு ( அப்போ யாருக்குத்தான் நல்லது?)

ஆனா எதை வேண்டாம்னு சொல்றோமோ அதை வேணும்னு செய்யறதுதானே பொண்ணுங்க சைக்காலஜி? அவ அவனை மேரேஜ் பண்ணிக்கறா.. ஆனா அதுக்குப்பிறகும் அதே மாதிரி மிரட்டல் தொடருது.. இப்போ புதுசா ஒரு மேட்டர், அவ கணவனின் கடந்த கால பயங்கரம் ஒண்ணு பற்றி..

பாப்பாவுக்கு டவுட் ஆகிடுது.. கணவன் வீட்ல இல்லாதப்ப அவன் பர்சனல் ரூமை தேடறா.. ஷாக்.. அவளோட பழைய லவ்வர் எழுது லவ் லெட்டர்ஸ் எல்லாம் பத்திரமா கணவன் வெச்சிருக்கான்.. அப்போ லவ் மேட்டர் அவனுக்கு ஆல்ரெடி தெரிஞ்சிருக்கு..

இப்போதான் பாப்பவுக்கு டவுட் வருது.. அப்புறம் சி ஐ டி வேலை செஞ்சு தன்னை லெட்டர் மூலமா மிரட்னது ஒரு பொண்ணூ என தெரிஞ்சுக்கறா.. அவ தன் கணவனின் பழைய காதலி....

http://cf1.imgobject.com/backdrops/6ca/4bc94298017a3c57fe01c6ca/killing-me-softly-poster.jpg

மேட்டர் சிக்கல் ஆகறதை உணர்ந்து  பாப்பா போலீஸ்ட்ட போகுது... அவங்க ஆதாரம்  வேணும், அதில்லாம ஒண்ணூம் பண்ண முடியாதுங்கறாங்க.. இதே நம்ம ஊரா இருந்தா அவனை பிடிச்சு லாக்கப்ல போட்டு 4 கும்மு கும்மி இருப்பாங்க..

அப்புறம் பாப்பா ஹீரோவை விட்டு பிரிஞ்சிடறா.. அவளே தனியா அந்த கேஸை டீல் பண்றா.. ( ஒரு கேஸே ஒரு கேஸை டீல் பண்ணிதே அடடே..!!!!!)

ஆடம்க்கு ஒரு சிஸ்டர் இருக்காங்க.. சின்ன வயசுல அறியாத வயசுல ஆடம் தன் சிஸ்டர் கூடவே....  அதுக்குப்பிறகு சிஸ்டர் ஒருத்தனை லவ் பண்றா.. பொஸசிவ்நெஸ் காரணமா  ஆடம் சிஸ்டரோட லவ்வரையே கொலை பண்ணிடறான்.. 


http://abreakingnews.com/newsimages/killing-Me-Softly.jpg

இந்த மேட்டரை எல்லாம் ஆதாரத்தோட கண்டு பிடிச்சு போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்கறா,,
படம் பார்த்திட்டு இருக்கும்போதே இதை எங்கேயோ பார்த்த கதை மாதிரி தெரியுதேன்னு யோசிச்சா விஷால் நடிச்ச முதல்  படமான செல்லமே இந்தப்படத்தை பார்த்துத்தான் சுட்டு இருக்காங்க. ஆடம் கேரக்டர்ல பரத்.. அடம் தங்கை கேரக்டர்ல ரீமா சென்.. 

ஆஹா.. நம்ம ஆளுங்க கதைக்கருவை எப்படி எல்லாம் உருவறாங்க பாருங்க.. அவ்வ்வ்வ்வ். 2002 ல இந்தப்படம் ரிலீஸ்டு.. நம்ம ஊருக்கு 2003 ல வந்துச்சு.. 1 மணி நேரம் 40 நிமிஷம் ஓடுது படம்.. 

5 சீன் இருக்கு .... ஆமா,, ஒரே ஹீரோயின் எத்தனை சீன் வந்தாலும் 1 தானே கணக்கு என அங்கலாய்ப்பவர்கள்க்கு ஒரு வார்த்தை சீன் இருக்குன்னு சொன்னா அதை போய் பார்த்து ரசிக்கனும், ஆராயக்கூடாது, கேள்வி கேட்கப்படாது.. 2 வெவ்வேற ஃபிகர்கள்ப்பா.. எஞ்சாய்

http://s11.allstarpics.net/images/orig/j/0/j0ji068jb2d586bj.jpg

டிஸ்கி - கிராமங்கள்ல தறிக்கு பாவு ஓட்டுவாங்க , பார்த்திருக்கீங்களா? கைத்தறிக்கு..... பார்க்காதவங்க இந்தப்படத்துல ஹீரோயின் கழுத்துல நீண்ட பாவு மாதிரி துணியால சுத்தி என்னமோ போஸ்ல ஹா ஹா செம காமெடி .. 4 வது  ஸ்டில் அதுதான் ஹய்யோ ஹய்யோ..