1. தலைவரே! கான்ஃபிடன்ஸ், கான்ஃபிடன்சியல் என்ன வித்தியாசம்?
எலக்ஷன்ல நாம தான் ஜெயிப்போம்னு நினைக்கறது கான்ஃபிடன்ஸ், அதுக்கான முன்னேற்பாடா கள்ள ஓட்டு போடறது கான்ஃபிடன்சியல் ..
எலக்ஷன்ல நாம தான் ஜெயிப்போம்னு நினைக்கறது கான்ஃபிடன்ஸ், அதுக்கான முன்னேற்பாடா கள்ள ஓட்டு போடறது கான்ஃபிடன்சியல் ..
-------------------------------------
2. மன்னா! உங்களைப்பார்க்க மகத நாட்டு இளவரசி திவ்யா ஸ்பந்தனா வந்திருக்கிறார்....
அமைச்சரே! குத்து ரம்யா என த்தெளிவாக கூறுங்கள்..
----------------------------------
3. வேலாயுதம் படத்துல விஜய் குடிக்கற மாதிரி சீன் எதுவும் இல்ல, ஆனாலும் டாக்டர் ராம்தாஸ் அந்தப்படத்தை எதிர்க்கறாரே, ஏன்?
டைட்டில்லயே “தம்” இருக்கே?
----------------------------------------
4. என் கணவர் என்னை அழகிங்”கறார்” , குணவதிங்”கறார்”.. ஒத்தை நாடி ஃபிகர்ங்”கறார்”....
ஓஹோ அவர் ரொம்ப ”கறார்” பேர்வழின்னு சொன்னியே, இந்த அர்த்தத்துலதானா?
--------------------------------------
5. லைப்ரரி - சிறு குறிப்பு வரைக
ஃபிகருக்கு நூல் விடறதுக்காக கண்டு பிடிக்கப்பட்ட அமைதியான இடம்தான் லைப்ரரி எனப்படும் நூலகம்
-----------------------------------------------------
New Day by Brin .
6. ஜெயில் பயம் தலைவருக்கு இன்னும் போகவே இல்லை போல்..
ஏன்?
கட்டுச்சோறு விருந்துக்குக்கூப்பிட்டாக்கூட வளை “காப்பு” நிகழ்ச்சியா?அய்யய்யோ, நான் வர்லைங்கறாரே?
---------------------------------------
7. வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்..
அதெப்பிடி? GAS ட்ரபுள் வந்தா வாயு உள்ள பிள்ளை ஹாஸ்பிடல் போக வேணாமா?
----------------------------------------
8. நீ வீரனா? கோழையா?
நாங்க எல்லாம் மேரேஜ் ஆன அன்னைக்கே மனைவி கால்ல விழுந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணுன ஆளுங்க ..
---------------------------------------------
9. டாக்டர், மேரேஜ் ஆகி 8 மாசம் ஆகியும் இன்னும் எங்களுக்கு பேபி பிறக்கலை,ஆனா பக்கத்து வீட்ல 2 ஜோடிகளுக்கு 6 மாசத்துலயே பிறந்துடுச்சு.. எப்டி?
விடுங்க, அவங்க லவ் மேரேஜா இருக்கும்..
---------------------------------
10. சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே?ஏன்?
ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?
-------------------------------------------
Arm Raised