Monday, October 31, 2011

நாளைய இயக்குநர் - விமர்சனம்

Indian Peafowl 
 

Bird Photography


கலைஞர் டி வி ல ரொம்ப நாளைக்கப்புறமா கீர்த்தி கொஞ்சம் டீசண்ட்டான நைட் கவுனோட ,ஓரளவுக்கு சுமாரான  ஹேர் ஸ்டைலோட  வந்து ஜட்ஜூங்க கிட்டே ஒரு உருப்படியான கேள்வி கேட்டாங்க.. 


“சார்.. அந்தக்காலப்படங்களுக்கும், இந்தக்கால படங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“ டெக்னிக்கலா ரொம்ப முன்னேறி இருக்காங்க... கதை சொல்லும் விதத்துல ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க.. உலக சினிமா எல்லாம் பார்த்து பழக்கப்பட்டதால மக்கள் ரசனை உயர்ந்து இருக்கு..  க்ளிஷே காட்சிகள் எல்லாம் வேணாம்.. சீக்கிரம் மேட்டர்க்கு வா, இழுக்காதேங்கறாங்க..”

இப்போ கீழே வருவதில் ஹெட்டிங்க்ல முதல்ல இருப்பது இயக்குநர் பெயர், அடுத்து வருவது பட டைட்டில்


1. இளங்கோ - பேயாவது , பிசாசாவது

ஒரு பார்க்ல 2 ஃபிரண்ட்ஸ் உக்காந்து பேசிட்டு இருக்காங்க.. சப்ஜெக்ட் பேய் பற்றி.. ஒருத்தன் பேய் இருக்குங்கறான், இன்னொருத்தன் இல்லைங்கறான்.. அப்புறம் 2 பேரும் ரூமுக்கு போறாங்க.. நைட் தூங்கறப்ப  ஒருத்தன் பேய் பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்றான்.. இன்னொருத்தனுக்கு பயம் வந்துடுது... விழிப்பு தட்டிடுது.. பாத்ரூம் போறான்.. திரும்ப வரும்போது  இன்னொரு ஃபிரண்ட் பேய் மாதிரி மாஸ்க் போட்டு பே என பயமுறுத்துறான்.. ஹார்ட் அட்டாக்ல ஆள் அவுட்..

கொஞ்ச நாள் கழிச்சு  இறந்த நண்பன் ஃபோட்டோவை ரூம்ல மாட்டி படுத்திருக்கான்.. அந்த இன்னொரு ஃபிரண்ட்.. இந்த டைம் இவன் அதே மாதிரி பாத்ரூம் போறான்.. செத்துப்போன ஃபிரண்ட் மாஸ்க் மாட்டி அதே போல் இவனை பயமுறுத்த இவனும் மேல் லோகம் போறான்.. 

இப்போ 2 பேரும் பேயாக மாறி  பேய் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்னு ஜோக் அடிக்கறாங்க..


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. பேய் தன் செல்ஃபோன் ரிங்க் டோனாக  காக்க காக்க கனகவேல் காக்க என்ற சுப்ரபாத பாட்டை வெச்சிருக்கு.. அதெப்பிடி?வேற ரிங்க் டோன் சிக்கலை? சாமியும் பேயும் ஒண்ணாகிடுச்சா?

2. மாஸ்க் மாட்டிக்கிட்டு பயமுறுத்துவது முதல் டைம் ஓக்கே, செகண்ட் டைம் வேற ஆங்கிள்ல சொல்லி இருக்கலாம்.. 

3. திகில் எஃபக்ட் நல்லா ஒர்க் ஆகிட்டு வர்றப்ப அந்த க்ளைமாக்ஸ் கடி ஜோக் எதுக்கு? அது சீரியஸ் படத்தை காமெடி ஆக்கிடுச்சு..

Bird Photography

2. முருகப்பிரகாஷ் கணேசன் - இடைவெளி

ஒரு லவ் ஜோடி ரூம்ல .. யாரும் பயந்துடாதீங்க. சும்மா பேசிட்டு இருக்காங்க.. அவங்க ஃபிளாஸ்பேக்.. 

ஒரு கார் போய்ட்டிருக்கு.. ஹை டெக் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் அதுல ட்ராவலிங்க்..  காட் டிரைவர் தான் ஹீரோ.. அவருக்கு ஒரு ஃபோன் வருது.. அம்மா பேசறாங்க, டிரைவரோட அம்மாதான்.. கலைஞர் டி வி ல அம்மா பேசற சீன் எப்படி அலோ பண்ணாங்களோ? 1800 ரூபா அனுப்ப சொல்றாங்க.. அதுக்கு ஹீரோ முயற்சி பண்றேன் கறார்.. 


ஹீரோயின் உடனே அந்த அளவு பணம் கூட உங்க கிட்டே இல்லையா?ன்னு கேட்க ஹீரோ அவரோட சுய புலம்பலை நெஞ்சை டச் பண்ற மாதிரி சொல்றாரு.. ஹீரோயினுக்கு உடனே லவ் வந்துடுது...

பொருளாதார ரீதியா இடைவெளி இருந்தாலும் காதல்க்கு அது தடை அல்ல அப்டினு சொல்ல வர்றாரு இயக்குநர்.. ஆனா........!!!!!!


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1.   ஹீரோயின் நல்ல ஃபிரஷ் ஃபிகரா போடுங்க.. படத்துல வந்த பாப்பாவுக்கு 34 வயசு முற்றிய முகம்.. யூத் கதைக்கு செட் ஆகலை..

2. இருக்கற 8 நிமிஷத்துல டக்னு கதையை சொல்லுங்க. ஃபிளாஷ் பேக் உத்தி இந்த கதைக்கு தேவை இல்லை.. 

3. ஹைடெக் கேர்ள் அந்த டிரைவரை லவ் பண்றது நம்பற மாதிரி அழுத்தமா சொல்லலை

மனம் தொட்ட வசனம்


1. ஏய்.. நீ சொல்ற கதை எல்லாம் என் கனவுல 100 நாள் படமா ஓடிடுச்சு.. 



Bird Photography

3. சரவணா - அப்பா

ஃபாரின்ல 4 வருஷங்களா சம்பாதிக்க வேலைக்கு போற அப்பா.. ரிட்டர்ன் வர்றார்.. ஆனா மனைவி கிட்டே சொல்லலை.. திடீர்னு சர்ப்பரைஸ் விசிட்டா வர்றாரு.. ஃபோன் பண்ணி பேசறார்.. மனைவிக்கு செம சந்தோஷம்.. பையனை கூப்பிட்டு பேசச்சொல்றா.. ஆனா பையன் மெஷின் மாதிரி அம்மா சொல்லிக்குடுத்த மாதிரி விட்டேத்தியா பேசறான்.

அவனுக்குள்ள ஏக்கம்.. அப்பா தன் கூட இல்லையேன்னு.. ரோட்ல போற ஒரு அப்பா மகன் ஜோடி அந்நியோன்யமா கொஞ்சிட்டு போறதை ஏக்கமா பார்க்கறான்.. 

. இப்போ அந்தப்பையனோட அப்பா வீட்டு வாசல்ல வந்து நிக்கறாரு.. தன் மகனுக்காக வாங்கி வந்த பொம்மையை எல்லாம் அவன் கிட்டே எடுத்து காட்றாரு.. 

ஆனா அந்தப்பையன் உள்ளே திரும்பி “ அம்மா, பொம்மைக்காரர் வந்திருக்காரு, வாம்மா, பொம்மை வாங்கித்தாம்மா” ந்க்கரான்.. வேதம் புதிதுல  பளார் வாங்குவாரே சத்யராஜ் அந்த எஃபக்ட்.. அப்போத்தான் அவருக்கு புரியுது.. நம்ம பையன் நம்ம முகத்தையே மறந்துட்டான்னு.. இனி எப்பவும் குடும்பத்தை விட்டு பிரியக்கூடாதுன்னு  உணர்ந்து பையனை தோள்ல வெச்சு வாக் போறாரு.. முதல்ல ஏக்கமா பையன் பார்த்தானே ஒரு அப்பா பையன் ஜோடி அவங்களை இஅவ்ங்க கிராஸ் பண்றப்ப இந்தப்பையன் எங்கப்பாவும் வந்துட்டாருன்னு பெருமிதமா ஒரு பார்வை பார்க்கரானே அடடா.... டச்சிங்க்.. 

இந்தப்படம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல.. பணம் சம்பாதிக்க நாம் வெளிநாடு சென்றால் குடும்ப பாசம் காணாமல் போகும்.. 

2. மழலைக்கு மகிழ்ச்சி தந்தை தாயின் அருகாமை மட்டும் தான்.. 

3. குடும்பம் இருப்பதற்கும், குடும்பத்துடன் இருப்பதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன..

இந்தப்படம் சிறந்த படம் விருது வாங்கியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி..




Bird Photography
4. ஆண்டனி - GOD'S MISTAKE 

 ரோட்ல ஒருத்தன் செல் ஃபோன்ல பேசிட்டே நடந்து போறான்..  லாரி வந்து அடிச்சுடுது.. ஆள் ஸ்பாட் அவுட்.. இப்போ அதிசியப்பிறவி படத்துல வர்ற மாதிரி மேல் லோகத்துல கதை.. கடவுளும், கணக்குப்பிள்ளையும் பேசிக்கறா மாதிரி..

மனிதர்கள்க்கு நல்ல பூரண ஆயுளை நான் குடுத்தேன்.. அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலமா அவன் தான் தன் அழிவைத்தேடிக்கறான், ஆயுளை குறைச்சுக்கறான்..  அப்டின்னு ஒரே அட்வைஸ் மழை.. ஆனா எல்லாமே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.. பிரச்சார நெடி இல்லாம இன்னும் சாஃப்டா சொல்லி இருக்கலாம்.. 


அவனுக்கு இன்னொரு சான்ஸ் தர்றாங்க.. . இந்த டைம் லாரிக்காரன் அவனை அடிச்சானா? அவன் தப்பினா? என்பது சஸ்பென்ஸ்..

 மனம்  கவர்ந்த வசனங்கள்

1. அங்கே பாரு, செல் ஃபோன்ல குடும்பம் நடத்திட்டே வர்றான் பாரு.. 

விடுங்க, புதுசா மேரேஜ் ஆனவன்.. மனைவிட்ட பேசிட்டு வர்றான்

2. எல்லோரும் நல்லா வாழனும்னு நான் தலை விதியை எழுதறேன், அனா மனிதர்கள் விதியை மதியால் வெல்வதாக நினைத்து தங்கள் ஆயுளை சீக்கிரம் முடித்துக்கொள்கிறார்கள்.


3.  எல்லாத்துலயும் லிமிட் வெச்சு படைச்ச நான் மனிதனோட அறிவுல மட்டும் லிமிட் வைக்க மறந்துட்டேன்.. அதான் நான் செஞ்ச தப்பு..

ரொம்ப அமெச்சூர்த்தனமான டைரக்‌ஷனா இருந்தாலும் சொல்ல வந்த கருத்து செம. வெல்டன் டைரக்டர்..