Friday, August 26, 2011

வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சி.பி க்கு கொடுத்த பல்புகள்!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க 

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்


 http://www.vanakkamnet.com/wp-content/uploads/2011/08/rajkumar-140x140.jpg
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திற்க்கு நன்றி.

பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்

பல்பு:

1க்கு  முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய

2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா

3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க

4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா

5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு

6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க

7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்

8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி ய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்.


சி.பி யின் பதில் - பொதுவாக ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு பற்றிய விமர்சனத்தில் கோபம் அதிகம் வரும். ஆனால் பொறுமையாக பதில் அளித்த நண்பருக்கு நன்றி. துக்ளக் இதழில் முதலில் எல்லாம் பட விமர்சனம் போட்டு இயக்குநருக்கு ஒரு கேள்வி என கேட்பார்கள், அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பதில் அளிப்பார்கள்.. நாளடைவில் சில இயக்குநர்கள் தங்களை கேள்வி கேட்பதை விரும்பாததால் அந்த பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. இவர் பதில் கொடுத்திருப்பது நல்லதொரு ஆரம்பம்.. ஆரோக்கியமான விஷயம்!!!

டிஸ்கி - இயக்குநர் என்னை அண்ணா என அழைத்ததை மட்டும் ஆட்சேபித்து தம்பி என அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி