மரணபயம் இல்லாத மனிதர்கள் ரொம்ப கம்மி. இறக்கப்போறது முன் கூட்டியே தெரிஞ்சிட்டா அவனோட மனசு என்ன பாடுபடும்?தன் உயிரைக்காப்பாத்த என்ன வெல்லாம் செய்வான்? என்பதுதான் படத்தோட ஒன் லைன்.. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவு செம சஸ்பென்ஸோட கதை , திரைக்கதை அமைஞ்சிருக்கறது படத்தோட பிளஸ்..
ஒரு குரூப் பஸ்ல ஒரு விழாவுக்கு போறாங்க, ஒரு பாலத்தை கடக்கறப்ப ஹீரோவுக்கு ஒரு உள்ளுணர்வு அல்லது கனவு மாதிரி ,விபத்து ஏற்படற மாதிரியும் அதுல எல்லாரும் இறப்பது மாதிரியும்.. உடனே அவன் தன்னோட கேர்ள் ஃபிரண்டை கூட்டிட்டு கீழே இறங்கறான், அவன் கூட அவனோட ஃபிரண்ட்சும் இறங்கறாங்க.. என்ன ஆச்சரியம்? அடுத்த நிமிஷமே பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எல்லாரும் ஸ்பாட் அவுட்.. சாவிலிருந்து தற்காலிகமா தப்பிச்ச அவங்க எப்படி வரிசையா சாகறாங்க என்பதுதான் பட படக்கும் திரைக்கதை..
எது கிராஃபிக்ஸ், எது நிஜம்னு கண்டு பிடிக்காத அளவு அந்த பால விபத்து 2 வெவ்வேறு சூழல்ல படமாக்கப்பட்டது செம..
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஏய்.. செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காளே!! ஏய், அந்த பர்கரை சாப்பிடாதே.. குண்டாகிடுவே!
2. உடனே அவ கிட்டே சாரி கேளு..
ஏன்? நான் என்ன தப்பு செஞ்சேன்?
நாம தப்பு பண்றமோ இல்லையோ அடிக்கடி லேடீஸ்ட்ட சாரி கேட்கனும்..
3. எந்த விஷயம் போனா திரும்ப வராது? சொல் பார்க்கலாம்?
நேரம்!!!!
4. ஹாய்.. ஸ்வீட்டி.. நான் வெளியூர்ல இருக்கேன், பார்த்துக்கம்மா,, நான் இல்லாதப்ப எவனாவது முழுகி முத்தெடுத்துடப்போறான்.!
5. என்னது? எனக்கு இவங்க இரங்கல் தீர்மானம் போடறாங்க..? டேய்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..
சத்தம் போட்டு சொல்லாதே.. பேய்னு நினைச்சுக்கப்போறாங்க..
6. டியர், நான் கூட இருந்தா உன் லட்சியம் செத்துடும்.. எனக்கு உன்னை விட நம்ம காதலை விட உன் லட்சியம் தான் பெரிசு..
7. ஆஹா. ஃபோட்டோலயே கலக்கறாளே? கடிச்சுத்தின்னுடலாம் போல தோணுதே..
8. போன தடவை நீ என் பிளாட்க்கு வந்தப்ப என் பர்ஸ் காலி ஆன பின்புதானே என்னை விட்டே?
9. ஆஹா!!!!!!!! இவளுக்கு என்ன ஒரு நடை, ! இதுக்கே போட்டுத்தரலாம் போல இருக்கே!!
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஜிம்னாஸ்டிக் லேடி பாரில் எக்சசைஸ் பண்ணிக்கொண்டே இருக்கையில் இறக்கும் காட்சு பயங்கர கொடூரம், தியேட்டரில் கை தட்டல் ஒலி அடங்கவே 4 நிமிஷம் ஆகுது யப்பா!!!!!!!!!!
2. மசாஜ் லேடி யங்கா இருப்பானு பம்மிட்டு ஒருத்தன் போறப்ப வயசான லேடி - அதைப்பார்த்ததும் எஸ்கேப் ஆகப்பார்க்குறான், முடியல.. அக்குபஞ்சர் மாதிரி ஏகப்பட்ட ஊசிகளை குத்தி வைக்க அவன் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து எல்லா ஊசிகளும் ஏறி இறப்பது த்ரில்...
3. லேசர் சிகிச்சைக்கு டாக்டரிடம் வரும் ஃபிகரை ஆபரேஷன் பொசிஷனுக்கு வைத்து விட்டு வெளியே யாரோ அழைப்பதால் டாக்டர் செல்லும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து விடுகிறது.. மார்வலஸ் சீன்..
4. சக நண்பனையே போட்டுத்தள்ளி அவன் ஆயுளை இவன் எடுத்துக்கொள்ள நினைக்கும் லாஜிக் புதுசு.. .. ( நம்ம ஊருக்கு பழசு.. விட்டலாச்சார்யா, அம்புலிமா உபயத்தில் )
5. இந்த சீன் ரொம்ப போர்.. அப்டின்னு ஒரு சீன் கூட சொல்ல முடியாத அளவு செம விறு விறுப்பு..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. முன் பின் அறிமுகம் இல்லா ஒரு பெண்ணை பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக , முயல நினைத்ததாக வில்லன் ஏன் ஹீரோவிடம் உண்மையை சொல்கிறான்? அவன் உஷார் ஆகி விட மாட்டானா?
2. தான் இறப்பதை தவிர்க்க வேண்டுமானால் வேறொரு உயிரை கொலை செய்ய வேண்டும் என்ற கான்செப்ட் ஓக்கே, ஆனால் அது நீண்ட ஆயுள் உள்ள உயிரைத்தானே? அல்ப ஆயுசில் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஹீரோ உயிரை ஏன் வில்லன் எடுக்க நினைக்கிறான்.. அப்படி எடுத்தா அவனுக்கு மீறி மீறி போனா 10 நாள் ஆயுள் தானே வரும்?
3. பெரும்பாலும் பஸ் , ரயில் பயணங்களில் தான் மரணம் நிகழ்கிறது. அப்படி இருக்கும்போது ஹீரோ , ஹீரோயின் ஏன் விமானப்பயணம் தேர்ந்தெடுக்கிறார்கள்?
4. ஃபேக்டரியில் தற்செயலாக நடக்கும் நீக்ரோவின் மரணத்துக்கு தான் தான் முழு காரணம் என ஹீரோவின் ஃபிரண்ட் சொல்றானே? அது எப்படி?
5. காலன் அல்லது எமனின் தூதன் மாதிரி காட்டப்படும் கேரக்டர் ஒவ்வொரு மரணத்திற்கும் அட்டெண்டென்ஸ் போட வந்துட்டு க்ளை மாக்ஸ் டெத்துக்கு மட்டும் வரவே இல்லையே , எப்படி?
படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங்க் கன கச்சிதம்..
ஆங்கிலப்படங்களுக்கு விகடனில் நோ மார்க்..
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி. பி, கமெண்ட் - கர்ப்பிணிப்பெண்கள், இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்
ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்...