நான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது!
கம்பிகளுக்குள் கர்ஜிக்கும் கனிமொழி
சி பி - அப்பா கிட்டே இருந்து உயிலும் வரலை, கோர்ட்டிலிருந்து பெயிலும் தரலை.
தந்தையின் தவிப்பு, தாயின் போராட்டம், கணவரின் கையறு நிலை எனக் கம்பிகளுக்குப் பின்னால் கனிமொழியின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த பாசப் போராட்டம் ஒருபுறம் என்றால், கட்சியில் அவருக்கான இடம் என்ன என்கிற போராட்டத்துக்கும் குறைவு இல்லை.
சி.பி : கணவர்தான் கைவிட்டுட்டார்னா....,
பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளைக்கூட தன்னைச் சுற்றி அனுமதிக்காத கனிமொழி, 15-க்கு 10 என்கிற சிறு அறைக்குள் இத்தனை நாட்களைக் கடந்ததே பெரிய ஆச்சர்யம். கனிமொழி அடைக்கப்பட்டு உள்ள 8-ம் எண் அறையில், ஏ.சி. வசதி இல்லை. மூன்று பக்கமும் சுவர், முகப்பில் கம்பி வலை என்பதால் எப்போதும் அந்த அறை புழுக்கமாக இருக்கும். ஒற்றைக் காற்றாடி... அதில் இருந்து காற்று வருகிறதோ இல்லையோ... கடுமையான சத்தம் வருகிறதாம். புத்தகம் படிப்பதற்கு அந்தச் சத்தம் மிகுந்த இடைஞ்சலாக இருப்பதால், காற்றாடியைப் பெரும்பாலான நேரங்களில் கனிமொழி பயன்படுத்துவது இல்லை.
சி.பி: நாட்டுக்காக போராடுன தியாகி சிறையில் ரொம்ப சிரமப்படுறாங்க! உப்பை தின்னவன் தண்ணிக்குடிக்கனும், தப்பை செஞ்சவன் களி சாப்பிடனும்.
இரவு 11 மணிக்குத் தூங்கி, காலை 5.30 மணிக்கு எழுவது வழக்கம். சில நாட்களில் மட்டும் இரவு 1 மணி வரை வாசிப்பு, எழுத்து எனக் கழிகிறதாம். மிக முக்கிய ஆட்களுக்கு இதர கைதிகளால் பாதிப்பு ஏற்படாதபடி பாதுகாக்க போலீஸார் நியமிக்கப்படுவது திகாரின் வழக்கம். கனிமொழிக்கு 24 மணி நேரமும் இந்த கண்காணிப்புத் தொடர்கிறது.
சி.பி: கனிமொழிக்கு இருக்குற கண்கானிப்பு அவங்க பாதுப்புக்காக இருக்குற மாதிரி தெரியலை. ஜெயிலுக்குள்ள அவங்களுக்கு "வேண்டியப்பட்டவங்க" யாரையும் போய் பார்த்துடக் கூடாதுனுதான் போல இருக்கு.
பக்கத்து அறைகளில் இருக்கும் பெண் கைதிகளிடம் பேச, கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் சிக்கிய உளவு அதிகாரி மாதுரி குப்தா, கனிமொழிக்குப் பக்கத்து அறையில்தான் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதற்குப் பக்கத்து அறையில் டெல்லி கவுன்சிலரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாரதா என்ற பெண்.
சி.பி - அடடா!! கொள்ளைக்கார குற்றவாளியை சுற்றி கொலைகாரக் குற்றவாளிகள்!!!!
திகாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கைதிகள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கனிமொழியுடன் பேச அவ்வளவு ஆர்வம். கனிமொழியிடம் கோரிக்கை மனு கொடுத்து கண்ணைக் கசக்கி இருக்கிறார் ஒரு பெண். இதனாலேயே, அடிக்கடி இந்தப் பெண் கைதிகளோடு உரையாடுவதும், அவர்கள் மேற்கொள்ளும் சுய தொழில் பயிற்சிகளைச் செய்து பார்ப்பதும் கனிமொழியின் பொழுதுபோக்கு!
சி.பி : அப்பாவுக்கும் ,பிள்ளைக்கும் இருக்கற தமிழ் ஆர்வம் புல்லரிக்க வைக்குதே?
ஜெயிலுக்கு வந்த புதிதில், மூன்று வேளையுமே வெளியே இருந்து வந்த உணவுகளையே சாப்பிட்ட கனிமொழி, இப்போது வெளி உணவுகளைப் பெரும்பா லும் தவிர்த்துவிடுகிறார். இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடும் வழக்கம்கொண்டவர் கனிமொழி. ஆனால், மாலை 6 மணிக்கே இரவு உணவை ஜெயிலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனாலேயே பல நாட்கள் இரவு உணவை கட் செய்துவிடுகிறார் கனிமொழி. ஆ.ராசாவின் மனைவி மூலமாக ஸ்பெஷல் சாப்பாடு எப்போதாவது வருகிறது. துணி மணிகள் சரத்தின் சகோதரி மூலமாக கனிக்குக் கிடைக்கிறது.
சி.பி : ஸ்பெஷல் மீல்ஸ் ஃப்ரம் ஸ்பெசல் பர்சன்
டெல்லியில் இப்போதுதான் மழை சீஸன் தொடங்குகிறது. அதனால், அந்த அறைக்குள் அநியாயப் புழுக்கம் நிலவுகிறதாம். ஆனால், அதிகாலையில் கடுமையாகக் குளிர் அடிக்கிறதாம். இந்த சூழல் மாற்றமும் கொசுக் கடியும் கனிமொழியைப் படுத்தி எடுப்பதாகச் சொல்கிறார்கள்.
சி.பி : எத்தனையோ இலங்கைத்தமிழர்கள் வாழ்வு புழுக்கத்தில் இருக்க காரணமாக இருந்த குடும்பத்தில் இருந்தவர் இப்போது செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு?
கோர்ட் விசாரணை நடக்கும் நாட்களில்தான் கனிமொழியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறதாம். திகாரில் இருந்து பாட்டியாலா வரும் வழியில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் இருப்பதால், குறைந்தது 45 நிமிடங்கள் ஆகும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸார்தான் கனிமொழியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களோடு மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்தபடி கோர்ட்டுக்கு வரும் கனிமொழி, அங்கே காத்திருக்கும் உறவினர்களைப் பார்த்ததும் உற்சாகமாகிறார். பல நாட்கள் டெல்லியிலேயேதங்கி இருந்த கனிமொழியின் தாய் ராஜாத்தி அம்மாள், உடல் நலக் கோளாறால் சென்னைக்குத் திரும்பிவிட்டார். தி.மு.க- வின் மகளிர் அணி நிர்வாகிகளும் எம்.பி-க் களும்தான் அடிக்கடி கனிமொழியைச் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்கள். பாட்டியாலா கோர்ட் அறைகளில் முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டு இருப்பதால், விசாரணை இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என ஏக்கமோடு பார்ப்பார்களாம் கனி உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் புள்ளிகள்.
சி.பி : ஸ்பெக்ட்ரம் புள்ளிகளா? கரும் புள்ளிகளா?
ஆரம்பத்தில் கருணாநிதி தொடங்கி சகோதரி செல்வி வரையிலான அத்தனை சொந்தங்களும் டெல்லிக்கு வந்து கனிமொழியைச் சந்தித்தார்கள்; கட்டித் தழுவிக் கதறினார்கள். ஆனால், இப்போது மனைவி காந்தியுடன் டெல்லியிலேயே இருக்கும் அழகிரிகூட, கனிமொழியைக் காணச் செல்லவில்லை.
சி.பி : யாரெல்லாம் கனிமொழியை சந்திக்கறாங்களோ, அவங்களை எல்லாம் நோட் பண்ணி வை, அவங்களையும் உள்ளெ தள்ளிடலாம்னு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததோ என்னவோ?
'கட்சி நினைத்திருந்தால், நிச்சயம் என்னைக் காப்பாற்றி இருக்கலாம்’ என ஆரம்பத்தில் ஆதங்கப்பட்ட கனிமொழி, இப்போது தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அது குறித்துப் பேசுவதே இல்லை.
சி.பி : கட்சியையே காப்பாற்ற முடியாம கிடக்கு, இதுல கட்சி எப்படிம்மா உங்களை காப்பாற்றும்?நீச்சல் தெரியாதவன் முழுகிட்டு இருக்கறப்ப அவன் அவனையே காப்பாத்த முடியாது, அவன் மற்றவர்களை காப்பாற்றுவான்னு எப்படி எதிர்பார்க்க முடியும்?
மாறாக, தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறார். தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி இழுபறி, அதிரடிக் கைதுகள்பற்றி எல்லாம் பேசி, 'அம்மையார் ஆட்சியில் இதெல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்’ எனச் சிரிக்கிறார்.
சி.பி : தமிழ்நாட்டு நிலவரங்களை ஆர்வமாகக் கேட்கிறாரா? அதாவது நாட்டு மக்கள் எப்படி இருக்காங்கன்னு எல்லாம் கேட்டிருக்க மாட்டார்,, கோவை பொதுக்கொழுவுல என்ன முடிவாச்சு? ஸ்டாலின் , அழகிரி 2 பேர்ல யார் இப்போ லீடிங்க.. அப்டி விசாரிச்சிருப்பாரு.. நாம எந்தக்காலத்துல மக்களை நினைச்சு கவலைப்பட்டோம்?
''பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தபோதுதான் கனிமொழியைப் பார்த்தேன். ஆதங்கம், வேதனை, குற்றச்சாட்டு என அவரிடம் இருந்து சிறு வார்த்தைகூடப் புலம்பலாக வெளிப்படவில்லை. சில விஷயங்கள் குறித்துப் பேசியபோது, சத்தம்போட்டுச் சிரித்தார். 2ஜி விவகாரம் குறித்துக் கேட்டபோது, 'கலைஞர் டி.வி-க்காக 200 கோடி வாங்கப்பட்டதுபற்றி எனக்கு அறவே தெரியாது. அதுபற்றி எல்லாம் நான் சொன்னால், இப்போ யார் நம்புவாங்க? ஸ்பெக்ட்ரம்பற்றி நான் வாய் திறந்தால் நிச்சயம் யாராலும் தாங்க முடியாது.
சி.பி : ஆமா, ஏற்கனவே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி தொகையை கேட்டே பலரால் தாங்க முடியலை, இதுல இவர் வேற புதுசா எதையாவது உளறி பிரச்சனையை கொண்டாந்திடப்போறாரு.. கண்டு பிடிச்சது கடுகளவு, கமுக்கமா அமுக்குனது கடல் அளவுன்னு.. சொல்லிடப்போறாரு..
ஆனால், அது மீடியாக்களுக்குத்தான் தீனியாக இருக்குமே தவிர, கட்சிக்கு நல்லதா இருக்காது’னு சொன்னார். இந்த அளவுக்குப் படுபக்குவமான பேச்சை கனியிடம் இருந்து நான் இது வரைக்கும் கேட்டது இல்லை!'' என்கிறார் சமீபத்தில் கனியைச் சந்தித்துத் திரும்பிய தமிழக அரசியல் புள்ளி.
சி.பி : அடிங்கொய்யால.. இதுதான் பக்குவமான பேச்சா?பச்சோந்தித்தனமான பேச்சு..
''ஸ்பெக்ட்ரம் வழக்கில் பலரை நோக்கியும் கை காட்டச் சொல்லி தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே கனிமொழியைத் தூண்டினார்கள். இது தெரிந்துதான் திடீரென இரண்டாவது முறையாக டெல்லி வந்து கனிமொழியைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். 'கட்சிக்கு எதிராக நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்’ என ஸ்டாலினிடம் உறுதி சொன்னார் கனிமொழி.
சி.பி : ச்சே.. அண்ணன் , தங்கை 2 பேரும் கூடி காட்டிக்கொடுக்கறதைப்பற்றித்தான் பேசுனாங்களா? அது சரி..
அந்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் சாதாரணமானவை அல்ல. ராஜ்யசபா எம்.பி. என்கிற பதவியைத் தவிர, கட்சியில் கனிமொழிக்கு வேறு பதவி இல்லை. கனியின் இடம் இது தான் எனக் கட்சியில் சிறப்பு அங்கீகாரத்தை அவருக்கு ஸ்டாலினே வாங்கிக் கொடுப்பார் பாருங்கள். கனியோடு மோதல் போக்கைக் கடைப்பிடித்த செல்வி, இப்போது அடிக்கடி தங்கையின் நிலையை நினைத்து அடிக்கடி தழுதழுக்கிறார். இந்தத் தலைகீழ் மாற்றங் களைவைத்தே மகளுக்கான மகுடத்தை கருணாநிதி கச்சிதமாகச் சூட்டுவார்!'' என்கிறார்கள் தி.மு.க-வின் டெல்லி புள்ளிகள்.
சி.பி : பெரிய பதவி இல்லாதப்பவே இவ்வளவு அமுக்குனவரு, பதவி கொடுத்துட்டா எவ்வளவு அமுக்குவாரு?
சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமீபத்தில் அழைத்து வரப்பட்டார் கனிமொழி. அன்றைய தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய, நீதிபதியோடு அதிகாரபூர்வமற்ற முறையில் தனியாக மனம் திறந்து பேசுகிற சந்தர்ப்பம் கனிமொழிக்குக் கிடைத்தது. ''கலைஞர் டி.வி-க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அங்கே என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது!'' எனச் சொன்னார் கனிமொழி. நீதிபதியின் நெஞ்சில் அந்த வார்த்தைகள் எத்தகைய விளைவை உண்டாக்கினவோ?!
சி.பி : நல்ல வேளை , கலைஞர் டி விக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னாரு, அந்த ஸ்டேட்மெண்ட்ல டி வி மட்டும் கட் ஆகி இருந்திருந்தா..!!!!!!!?????
கலைஞர் டி.வி. முடக்கம், இன்னும் சில கைதுகள் என்றெல்லாம் அரங்கேறிய பிறகே, கனிமொழி வெளியே வருவது சாத்தியம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
கனிமொழி கைது செய்யப்படப்போவதாக மீடியாக்களில் பரபரப்பு கிளம்பிய வேளையில், அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சொன்ன விளக்கம்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
''நடக்காது என நினைத்த எல்லாமும் நடக்கிறது. நான் கைதாகப்போவதாகக் கிளம்பும் பரபரப்பும் அப்படியே அமையட்டும். ஆரம்பத்தில் அரசியல் ஆர்வமே இல்லாமல் இருந்த என்னைச் சுற்றி இன்றைக்கு இவ்வளவு பெரிய அரசியல் நடக்கிறது. இந்த விசித்திரத்தை நினைத்துச் சிரிப்பதா... அழுவதா?''
சி.பி : நீங்க அழுங்க, மக்கள் உங்களைப்பார்த்து சிரிக்கட்டும்..
தன் - vikatan